Jump to content

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1477
 • Joined

 • Last visited

 • Days Won

  6

Posts posted by பிரபா சிதம்பரநாதன்

 1. //அக முக நக கள்ளாடிட தள்ளாடிட    வாடா தோழா
  இக பர சுகம் எல்லாமிதா
  இன்னாதிதா
  ஆசை தீதா //

  இதனை இப்படியும் பொருள் கூறலாமா?👇🏽 

  “அகமும் முகமும் நக(மலர/சிரிக்க), சோமரசம்(கள்) அருந்தி, தள்ளாடி வாடா தோழா!!
  பூலோக வாழ்க்கை(இக), மேல் உலக{சொர்க்கம்/நரகம்(?)} வாழ்க்கை(பர) சுகம் எல்லாமே இதுதான் இவற்றில் ஆசை வைத்தல் தீதா/பிழையா? (ஆசை தீதா)
  இன்னல் தருமா??(இன்னல் இதா)”

  எனவும் கூறலாமா?

  இந்த YouTubeல் கூறுவதை முழுமையாக ஏற்க முடியாது என தோன்றுகிறது ஆனால் இந்த அக முக நக வரிகளுக்கு கொஞ்சம் சரியாக உள்ளது என நினைக்கிறேன்

 2. 20 hours ago, goshan_che said:

  என்மனதில் ஆதித்த கரிகாலன் இராஜராஜன், இராஜேந்திரனை காட்டிலும் சமரசம் இல்லாமல் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பும் ஒருவராகவே தெரிகிறார்.

  இவரும் இன்னுமொரு பாண்டியனுமே எதிரி மன்னன் தலை கொய்தவர்கள் என்கிறார்கள்.

  அதாவது சோழத்துக்குகான பகைவரை, பரம்பரையோடு அடியோடு அழிக்கும் முனைப்பு.

  பட்டத்து இளவரசனாக ஆகியபின் அவர் ஒரு இணை-சக்கரவர்த்தி (co-regent) ஆகவே செயல்பட்டாராம்.

  அவர் கொல்லப்படாது அரியணை ஏறி இருந்தால் - பாண்டிய, அவர்கள் கூட்டாளிகளான சிங்கள அரச வம்சங்கள் இனி தலையெடுக்கா வண்ணம் துடைத்தழிக்கப்பட்டிருக்கலாம்.

  அப்படி நடந்திருந்தால் - அதன் பின் வரலாறு எப்படி திரும்பி இருக்கும்? என்பது சுவாரசியமான கற்பனை.

  ஆதித்த கரிகாலனை அவசரக்காரனாகவும் மூர்க்கனாகவும் தான் சித்திரிக்கிறார்கள்.. அதனால்தான் சமரசம் இல்லாமல் பகைவர்களை அடியோடு அழிக்கும் ஒருவர் என நினைக்க தோன்றும்.. 

  மேலும், நீங்கள் இணைத்த காணெளி 2 மற்றும் காணெளி 3 அருமை..

  அதே போல ஏராளன் இன்னொரு திரியில் இணைத்திருந்த ஆதித்த கரிகாலனை கொன்றது யார என்ற காணெளியும் அருமை.. 

  மற்றையவற்றை இனித்தான் பார்க்கவேண்டும்.

 3. அந்தக் காலத்தில் பிள்ளைகள் இல்லாவிட்டால் முதல் மனைவி உயிரோடு இருக்கையிலேயே இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி பிள்ளைகளை முதல் மனைவி வளர்த்த சம்பவங்களுடன் பார்க்கையில் இந்த குப்பன், வித்தியாசமானவர்தான்..

   

 4. காஷ்மீரில் செய்த அடாவடித்தனம், கட்டாய ஹிந்தி திணிப்பு, இந்து மதத்திற்கு மட்டுமே முன்னுரிமை, மாநிலங்களிற்கான அதிகாரங்களை குறைத்தல்/தலையீடு, ஒரு குறிப்பிட்ட பணக்கார வர்க்கத்திடமே தொழில் முயற்சிகள் போய் சேரும் வகையில் நடத்தல்.. இப்படி பல செய்திகளை பார்க்க முடிகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் மோடி அரசும் கிட்டதட்ட சர்வாதிகார ஆட்சியில் போவதாகவே தோன்றுகிறது.. 

  சோவியத் ஒன்றியம் பல நாடுகளாக பிரிந்ததைப் போன்று இந்தியாவும் உடையும் நாள் விரைவில் வருமா? 

  • Like 1
 5. On 21/8/2022 at 02:52, goshan_che said:

  எங்கே “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வீரன்” ஆதித்த கரிகாலனை “கள்ளடிக்கும் வெறி குட்டி”யாக, பெண்பித்தனாக காட்டிவிடுவார்களோ என்ற பயமும்தான் இந்த திரியை ஆரம்பிக்க வைத்தது.

  ஓரளவிற்கு பல சோழ, சேர பாண்டிய மன்னர்கள் தொடக்கம் சில வடநாட்டு அரசர்களைப் பற்றி எழுதிய நாவல்களை வாசித்திருக்கிறேன், ஆனால் சோழ சிரஞ்சீவியான ஆதித்த கரிகாலனைப் பற்றி தனியே ஒரு கதையை காணவில்லை. 

  இப்பொழுது இந்த படத்தில் ஆதித்த கரிகாலனை படமாக்கியிருக்கும் விதம், வேண்டும் என்றே ஆதித்த கரிகாலனை மறைக்கப் பார்க்கிறார்களோ என தோன்றுகிறது. 

  வடநாட்டவர், அக்பரையும், அசோகரையும், சிவாஜியையும் புகழ்ந்து எழுதியதை பாடசாலைகளில் வரலாற்றுப் பாடத்தில் படிக்கும் பொழுது எங்களிலும போற்றத்தக்க தமிழ் மன்னர்கள் இருந்தார்கள் என்பதை கூற வருவதுதான் இந்தப் பொன்னியின் செல்வன் என பாரதி பாஸ்கர ஓரிடத்தில் கூறுகிறார். ஆனால் இது முழுவதும் உண்மை சொல்லும் வரலாற்றுப் படமாக அமையுமா? வரலாற்றுப் படங்கள் ஒரு பொழுதும் முற்றுமுழுதாக உண்மையை கூறியதாக இருந்ததில்லை என்றே நினைக்கிறேன்

  “ ஆதித்த கரிகாலன் “ இந்த பெயரை கூறும் பொழுது ஏற்படும் உணர்வே வித்தியாசம்.. 

  • Like 1
 6. இந்த கடைகளினது எண்ணிக்கை மட்டுமல்ல, வில்வம் பழம், இலைகளுடன் சிவனை தரிசிக்க வரும் சிங்கள பக்தர்களின் எண்ணிக்கை முன்னரை விட அதிகமாக இருந்ததை 2018ல் போன பொழுது காண முடிந்தது. கதிர்காமம் போல இதையும் மாற்றிவிடுவார்களோ என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. 

   

  • Like 1
 7. E8-DBB63-F-9-C77-460-C-ADA0-6-C287-BD487

  வாழ்க்கை ஒரு வட்டம் இந்த சைக்கிள் சில்லைப் போல!! 
  ஆனால் - உயிர் அந்தரத்தில் ஊசாலடும் இந்த விளக்கு போல!!!

  • Like 1
 8. On 20/8/2022 at 18:05, vasee said:

  உண்மைதான்

  பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடாதா? அவர்களும் மனிதர்கள்தானே? 

  உங்களுக்கு தெரிந்திருக்கும் எங்களுடைய முன்னாள் PM Bob Hawkeம் அதிக குடிப்பழக்கமும் ஒரு womaniser என்றும் ஆனாலும் அவருடைய அரசாங்கமே அவுஸ்ரேலிய பொருளாதாரத்தை நவீனமயக்கியதில் அதிக பங்கு வகித்தது என்றும் பல சீரத்திருத்தங்களை கொண்டு வந்தது கூட Bob Hawkeதான் என்று. 

  இங்கே இவர் இளவயதினராகவும் பெண்ணாகவும் இருப்பதால்தான் சாதரான பிரஜையும் பிரதமரும் ஒன்றா எனத் தொடங்கி பெரிதுபடுத்துகிறார்கள்

  • Thanks 1
 9. 18 hours ago, பெருமாள் said:

  இதுதான் ஓசி விசுகோத்து படிப்பு என்பது

  பெருமாள் அண்ணா, இந்த ஓசி விசுகோத்து படிப்பை வைத்துத்தான் பலர் இன்று பொருளாதார ரீதியில் ஏதோ சமாளித்து வாழ்கிறார்கள். எல்லோராலும் தந்திரமாகவும், அரசியல்வாதிகளுக்கு கும்பிடு போட்டும் வாழத் தெரியாது..

  இதுவே லண்டன், அவுஸ் போன்ற நாடுகள் என்றால் கூட பரவாயில்லை ஏதோ அரசு social money/Centrelink allowance கொடுக்கும் மிகுதியை பகுதி நேர வேலை பார்த்து படித்து முடிக்கலாம். பல்கலை கழகத்திற்கு HECS எடுத்து படித்து பின்பு சம்பளத்தில் கழிக்கலாம். 

  ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இந்த இலவசப் படிப்பும் இல்லை என்றால் எங்கட பல பிள்ளைகள் பள்ளிக்கூட வாசலையோ, பல்கலைகழகத்திற்குள்ளோ போயிருந்திருக்க மாட்டார்கள். இன்றும் வறிய, நடுத்தர வருமான குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த மகாபொல கொடுப்பனவு மட்டும் வைத்து படிப்பை தொடர முடியாது. அவர்களுக்கு தொலைநோக்கும் சமூக நலனில் அக்கறையுள்ள விரிவுரையாளர்கள் சிலர் கொடைவள்ளல்கள்(உள்நாடு, வெளிநாடு), அறக்கட்டளைகளின் உதவிகளை பெற உதவி செய்கிறார்கள். உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும் ஆனாலும் ஏதோவொரு கோபத்தில் ஒசி விசுக்கோத்து படிப்பு என்று கூறிவிட்டீர்கள்!!

  • Like 1
 10. 48 minutes ago, ஈழப்பிரியன் said:

  ஆசிரியர்கள் பெற்றேர்கள் நாங்கள் இருந்த காலத்தில் இல்லை.

  எல்லோருமே வெறும் பார்வையாளராக மாறிவிட்டார்கள்(மாற்றிவிட்டார்கள்)இது வேதனையான உண்மை.

  அங்கிள், மானிப்பாயில் என நினைக்கிறேன் குடும்பத்திலுள்ள ஆண்களாலும் வேறு ஆண்களாலும் பாலியல் ரீதியாகவும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டு கருவுற்ற பெண்கள்,சிறுமிகள் மற்றும் காதலர்கள் ஏமாற்றப்பட்டு கருவுற்ற பெண்கள், சிறுமிகளை பாராமரித்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை உரிய முறையில் தத்தெடுக்கும் வசதி, மற்றும் அந்த பெண்களுக்கான சுய தொழில் ஒன்று etc..செய்கிறார்கள் என எனது நண்பி கூறினார்.. அவர் கூறிய சம்பவங்களை கேட்டபொழுது.. மனதில் பாறாங்கல்லை வைத்தது போன்ற ஒரு உணர்வு, வேதனை. அந்தளவிற்கு எங்களது சமூகத்தின் நிலை. அங்கே போகும் பொழுதெல்லாம் எப்பொழுது எங்கள் சமூகம் இந்தப் போதையில் இருந்து வெளி வரும் என்ற எண்ணமே ஏற்படுகிறது.  

  அதே போல பாடசாலைகள் தனியே பெறுபேறுகளில் மட்டூமே கவனம் செலுத்துகின்றனவோ என அங்கே போகும் சமயங்களில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து நினைப்பதுண்டு.. பெற்றோர்களுக்கும் மாணவர்களும் சமூகத்தில் நடைபெறும் சீரழிவுகளை பற்றிய விழிப்புணர்வுகள், ஆலோசனைகள் பெரிதளவில் பேசப்படுவதில்லை. 

   

  • Like 1
 11. 8 minutes ago, nunavilan said:

  17 வயது சிறுமிகள் வீட்டால் வெளிக்கிட்டு தனியாக செல்வதில் அவர்களின் பெற்றோருக்கும் பொறுப்பு உண்டு.


   

  இந்த பதின்ம வயது பிள்ளைகள் எதற்காக வீட்டில் இருந்து வெளியேறினார்கள் என்பது தெளிவில்லை. பெற்றோர்களின் அனுமதியுடன் போனார்களா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. அவர்களுக்கு வெளி உலகம் எப்படியானது என்ற விழிப்புணர்வு கூட இருந்திருக்காது. ஏன் பெற்றோருக்கும் தெரிந்திருக்கவில்லை போலுள்ளது. ஆனால் அரைகுறை செய்தியை வெளியிட்டு அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு பட்டம் கொடுத்தாயிற்று.. 

  அவர்களாக விரும்பி இதற்கு உடன்பட்டிருந்தால் மற்றையவர் இடையில் தப்பிப் போய் உதவி கேட்டிருக்கமாட்டார், அந்த ஆண்களின் territory என்பதால் பயத்தில்/மனப்பயத்தில் இருந்திருக்கலாம். எதுவாக இருந்திருந்தாலும் தனியே பெற்றோர், பிள்ளைகளை மட்டும் குறை கூற முடியாது. சமூகப்பொறுப்புணர்வு கூட இல்லை என்பதைதான் இது காட்டுகிறது. 

   

  • Like 6
 12. வரியை வேண்டுமென்றே தாமதமாக கட்டுவது, COVID recovery loanனை அதன் உண்மையான நோக்கங்களிற்கு எதிராக பாவிப்பது, COVID relief payments பொய்யான காரணங்களை காட்டி எடுப்பது இங்கேயும் நடந்தது.. இது எல்லாம் privilege misuse அவ்வளவுதான். 

  இப்படி தங்களுக்கு கிடைத்த/ தங்களது தொழில் முயற்சிகளுக்கு கிடைத்த நன்மை/சலுகைகளை தவறாக பயன்படுத்துபவர்களால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் கூட சரியான சமயத்தில் போகவில்லை, மேலும் வங்கிகள் கூட இது தொடர்பான தங்களது விதிகளை மாற்ற வேண்டி வந்தது. சிறிய நடுத்தர முதலீட்டாளர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். 

  நாங்கள் குறுகிய கண்ணோடத்திலேயும், மற்றவர்கள் செய்கிறார்கள் நாங்கள் செய்தால் என்ன என்ற நோக்கிலுமே நடக்கிறோம். மற்றைய விளைவுகளை யோசிப்பதில்லை. மனசாட்சியையும் தேவைக்கு ஏற்ப மாற்றிவிடுவோம். அவ்வளவுதான். 

  இதையெல்லாம் எடுத்துக் கூறினால் உலகம் மாறுது, அதற்கேற்ப நடக்கவேண்டும், தந்திரமாக வியாபாரம் செய்யவேண்டும் என விரிவுரை தருவார்கள். அவர்களைப் பொறுத்த வரை எப்படியாயினும் இலாபம் வந்தால் சரி.. இன்று உலகம் இந்த மாதிரி பல அழிவுகளை சந்திப்பதே மனிதனால் வந்த greedyதான். 

   

  • Like 4
 13. ஏற்கனவே யாழ்ப்பாணமும் இயந்திர கதியில் போகும் வாழ்க்கையாக மாறி வருகிறது.. அப்படியானவர்களுக்கு இது உதவும். ஆனால் இன்றைய நிலையில் இதனை நடைமுறைப்படுத்தி நட்டத்தில் போகாமல் இருப்பது மட்டுமல்ல பழுதான மீன்களை விற்காமல் இருந்தாலே போதும்.. 

  இனி ஒரு வீதியில் போட்டிக்கு கட்டப்பட்டிருக்கும் இரண்டு மூன்று கல்யாண மன்டபங்கள், புதிய கடைத்தொகுதிகள் போல வேறு பலரும் இந்த முயற்சியில் இறங்குவார்கள். கடைசியில் ஒருவருமே பலனை அடைய மாட்டார்கள்.. 

 14. 22 hours ago, Nathamuni said:

  இல்லை. அவர்கள் சொல்லும் காரணம், கோழி தீவனம், போக்குவரத்து செலவு, முட்டையை இறக்குமதி செய்வதிலும் அதிகம்.

  இது இன்றய பிரச்சனை இல்லை. இலங்கையில் சிறிமாவோ காலத்தில் இறக்குமதி தடை இருந்தது. அப்போது, யாழில், தோட்டம் செய்த்தவர்கள், துணி ஆலை வைத்திருந்தவர்கள் பெரும் கோடீஸ்வரர் ஆனார்கள்.

  ஜேஆர் எல்லாத்தையும் திறந்து விட, இந்திய விலைகளுடன் போட்டியிடமுடியாது பல தொழில்கள் முடங்கின.

  இன்று, உலகளாவிய புலம் பெயர் தமிழர்களுக்கு, ஆணைக்கோட்டை நல்லெண்ணெய், அரிசிமா எல்லாம் இந்தியாவில் இருந்து வருகிறது. மக்கள் அதிகம் இருப்பதால், கூலி குறைவு.

  இலங்கையில் இருந்து வரும், லீலா, கிங்ஸ் மிளகாத்தூள் கூட, தேவையான மிளகாயினை, இந்தியாவில் இருந்து இறக்கின்றன. லோக்கல் விலை அதிகமாம்.   

  இலங்கையில் தற்போது எல்லாப் பொருட்களுமே விலை அதிகம், அவை எல்லாவற்றையும் இறக்குமதி செய்ய முடியுமா? இல்லைத்தானே!

  உள்ளூர் மக்களின் தொழில்கள் குறைந்து வருமானம் குறையும் பொழுது, மக்களால் அதிக பொருட்களை வாங்க முடியாது.. ஏற்றுமதியும் இல்லை.. பிறகு எப்படி இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை சமாளிப்பது? அதிக வரிகளை விதித்தா? 

  அதைவிட உள்ளூர் மக்களின் உற்பத்திகளை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கலாம்.. 

  எதிர்காலத்தில் நாங்கள் இன்னொரு நாட்டில் எல்லாவற்றிற்கும் தங்கியிருக்கவேண்டியதையும் பொருட்படுத்தாமல், இலகுவான வழியில் பிரச்சனையை தீர்க்க நினைக்கிறார்கள். அவ்வளவுதான்.

  JR திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட நாடு சில உற்பத்திகளில் தன்னிறைவை கொண்டிருந்தது என நினைக்கிறேன். இந்த நிலைக்குப் போனதில்லை. 

 15. On 4/2/2022 at 06:00, ரதி said:

  ஏதாவது புத்தக கடைக்கு போயிருந்தீர்களா?...ஏதாவது புது நூல்கள் வந்திருக்கா ?  
   

  ரதி.. எதிர்பாராத விதமாக இந்த ஆடிக் கடைசியில் யாழ்ப்பாணம் போயிருந்தேன். அப்பொழுது எனக்கு கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் நான் போன இடம் இந்தப் புத்தகசாலைதான்(குயின்சி புத்தக சாலை- KKS வீதியில் உள்ளது)

  48485010-4-A1-D-425-B-9508-685-F5-B5-E45

  உங்களது ரசனை எனக்கு தெரியாது ஆனால் வெளிநாட்டில் இருந்து எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் தொடங்கி, உள்ளூர் எழுத்தாளர்கள், வேற்று மொழி எழுத்தாளர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள்(தமிழ் மொழி பெயர்ப்பு), வேற்று மொழியில் பலராலும் போற்றப்பட்ட நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் என நிறைய உள்ளது. என்னைப் பொறுத்த வரை, இப்போதைக்கு இது நல்லதொரு புத்தகசாலை. 

  • Like 1
 16. தேஜாவூவை உணராமல் இருந்திருக்கமாட்டார்கள்.. ஆனால் பிரமை/குழப்பநிலை/மாய உணர்வு என்றுவிட்டு போயிருப்பார்கள் என நினைக்கிறேன். 

   

  On 1/8/2022 at 05:44, goshan_che said:

  கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த மொழி - இவ்வளவு காலமாக தேஜாவூவை உணராமல் இருக்க முடியாது? அப்போ அதன் பெயர் என்ன?

 17. ஊழலும் சமூக விரோத செயல்களும் எல்லாவகையான இடங்களிலும் ஏதோவொரு வடிவில் தொடர்வதற்கு இலங்கையின் இன்றைய நிலை உதவுவதைத் தான் அங்கே போகும் சமயங்களில் உணர முடிந்தது. 

 18. 16 hours ago, Nathamuni said:

  இலங்கையில இலவச கல்வியில் அனாவசிய செலவு அதிகம்.

  இலங்கை போன்ற நாடுகளுக்கு கட்டாயம் இலவசக் கல்வி O/L வரையாவது அவசியம். ஏற்கனவே படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.  இந்த COVID மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாடசாலைக்கு போக முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள்.. நிலமை அப்படியிருக்க இலவசக் கல்வி முறையையும் நிறுத்திவிட்டால் பாதிக்கப்படப்போவது கஷ்டப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களே..

  • Like 2
 19. அவுஸ் திரும்புவதற்காக 9ந் திகதி கொழும்பில் நின்றிருந்தேன், எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்றே தோன்றுகிறது. 

  Gas விநியோகம் திரும்பவும் வழமைக்கு திரும்புவது போல தெரிகிறது. QR code மூலமான எரிபொருள் விநியோகத்தால் வீதிகளில் வாகனங்களுடன் நிற்போர் வரிசை முன்னைப் போல இல்லை. 

  பொறுத்திருந்து பார்ப்போம்

 20. நான் பொன்னியின் செல்வன் கதையை வாசித்து, அவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என உருவகப்படுத்தி வைத்திருக்கிறேன்.. எனது கற்பனையில்/மனதில் எந்த சோழ மகளிரும் ஐஸ்வர்யா மாதிரியோ இல்லை த்ரிஷா மாதிரியோ இல்லை.. ஏன் ஆதித்த கரிகாலன், வந்தியதேவன் கூட இந்த நடிகர்கள் மாதிரி இல்லை.. ஆகையால் படத்தை பார்ப்பேன் என தோன்றவில்லை.. 

  ஜோதா அக்பரில், அக்பராக ஹீர்திக் ரோஷன்😰😰, ஆனால் அக்பர் உயரம் குறைவானவர் என்பது கூட தெரியாமல் படம் எடுத்திருக்கிறார்கள்🤦🏽‍♀️

 21. //சரியான வாசிப்பு என்பது புனைவும் புனைவல்லாதவையும் இணைந்து உருவாகும் ஒரு வெளி. புனைவல்லா நூல்கள் நமக்குச் செய்திகளையும் பார்வைகளையும் அளிக்கின்றன. புனைவு நமக்கு அனுபவங்களை அளித்து அவற்றினூடாக நம் அறிதல்திறனை வளர்க்கிறது// - உண்மைதான்..

  புனைவிலக்கியங்கள் வானமே எல்லை போல பரந்து விரிந்து கற்பனை வளத்தை அதிகரித்துக்கொண்டு போகும்.. 

   

   

 22. இப்பொழுது கூட உள்ளூர் இசைக்கலைஞர்களை கொண்டு நடாத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு கூட அதிக முக்கியத்துவம் கொடுக்க தயங்குகிறார்கள். இந்த மனநிலை எப்பொழுது மாறுமே தெரியாது

  இவரைப் பற்றி அறிந்ததில்லை. ஆகையால் இங்கே பதிந்தமைக்கு நன்றி!

  • Like 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.