Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  539
 • Joined

 • Last visited

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

 1. முதலில் இந்த தகவலை இங்கே இணைத்த தமிழ்சிறி அண்ணாவிற்கு நன்றிகள்.. நான் இதை இன்னமும் முழுமையாக(சில links) வாசித்து முடியவில்லை ஆனாலும் விஷயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது.. அதே நேரம் எல்லாவற்றையும் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்க முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.. ஆனாலும் இங்கே கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்..
 2. விரும்புவர்கள் மாத்திரம் பரீட்சை எடுப்பதா? இது மேலும் பிரச்சனைகளை கொண்டு வராதா? ஏற்கனவே ஆசிரியர்களின் ஊகத்தில் கொடுத்த முடிவுகள் என்பதால் எல்லோருமே பரீட்சை எடுத்தால்தான் பாராபட்சமின்றி இருக்கும்.. ?
 3. உண்மைதான் அடுத்த முதலமைச்சர் தேர்தலில் வெல்லவேண்டும் என்றால், பொருளாதார வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. தற்போதைய PM Scott Morrison பற்றி கடந்த வருடம் இடம்பெற்ற காட்டுதீ விஷயத்திலும், COVID ஆரம்பித்தபொழுது அதை கையாண்டவிடயத்திலும், பின்பு Jobseekers, Jobkeeper திட்டத்திலும் பல எதிரான கருத்துகள் உண்டு.. அடுத்த கோடைகாலமும் வர இருக்கிறது ஆனால் இன்னமும் கடந்த வருட பாதிப்பிலிருந்து மீளவில்லை.. இப்பொழுது இந்த 3 மாநில எல்லைகளும் மூடியுள்ளதால் பொருளாதாரத்தில் கணிசமான வீழ்ச்சி .. ஆகையால் Scott Morrisonனின் Liberals வெல்லவேண்டுமாயின் பழையபடி பொருளாதாரத்தை ஏதாவது வகையில் முன்னேற்றவேண்டும்.. அதற்கு
 4. நாட்டைவிட்டு மட்டுமல்ல, ஒரு Stateலிருந்து இன்னொரு Stateற்கு கூட போகமுடியாது.. அனுமதிபெற்றே போகமுடியும்.. விக்டோரியா, குயின்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்ரேலியா ஆகிய மூன்று States borders இன்னமும் திறக்கவில்லை.. Commonwealth government எவ்வளவு அழுத்தங்களைக்கொடுத்தும் இந்த 3 Statesம் எல்லைகளை திறக்க மறுத்துவிட்டார்கள்.. இந்த 3 Statesலும் எதிர்கட்சியான தொழிற்கட்சியை சேர்ந்தவர்களே அதிகாரத்தில்( Premier) இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 5. கவிஞர் மு.மேத்தாவின் “ அவளுக்கு ஒரு கடிதம்” என்ற கவிதை தொகுதியே எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது.. அந்த தொகுப்பில் “ சூரியனைத் துப்பாக்கி துளைப்பதில்லை” கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.. கடைசிவரை சூரியனை துப்பாக்கி துளைக்கவில்லை என்பதும் உண்மைதான்.. கவிஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
 6. “ தேவதாசி நடைமுறையானது உடன்கட்டை ஏறுதலைவிட மிக மோசமானது என்றும் மதத்தின் பெயரால் நடைபெறும் குற்றச்செயல்” என்றும் கூறி போராடியவர் இந்த Dr முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் .. BBC தமிழ் இணையத்தில் நவீன இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட 10 இந்தியப்பெண்களின் கதைகளை இணைத்துள்ளது. இன்றைய தேதியில் 7 பெண்களைப்பற்றிய கதைகளை நீங்கள் வாசிக்கலாம்.. அவர்களில் ஒருவர் இந்த Dr முத்துலட்சுமி ரெட்டி.
 7. அப்படி கோணல்மானலாக, எழுந்தமானதாக, கீறினால் modern art என இப்பொழுது கூறுவார்கள்..ஆகையால் முயற்சிசெய்து பாருங்கள்
 8. உங்களது மகளிற்கு பாராட்டுக்கள்.. அவரது இந்த திறமை மேலும் வளர வாழ்த்துக்கள்.. எனக்கு கடைசியாக வரைந்த படத்தைவிட முதல்படமே மிகவும் பிடித்திருக்கிறது.. தம்புராவை பூரணப்படுத்தி, பிள்ளையாரின் இருமருங்கிலும் சிறிய உருண்டைதலையனைகளை(கடைசிப்படத்தில் உள்ளது போல), வரைந்திருந்தால் அழகான எளிமையான பிள்ளையாராக இருந்திருப்பார்.. அத்தோடு கடைசிப்படத்தைவிட முதற்படத்தில் இருக்கும் வர்ணக்கலவைகளால் பிள்ளையார் பிரகாசிப்பது போல உள்ளது.. அவருக்கு பின்னாளில் நேரம் கிடைத்து, விருப்பமும் இருந்தால் முறையான பயிற்சிக்கு அனுப்பினால் உங்களது மகள் இன்னமும் பிரகாசிப்பார்..
 9. ஏழ்மையின் இலை உதிர் காலத்தில் இங்கே பூ வேது காயேது நினைத்தால் எட்டாத தூரம் எனக்கேன் உன் மீது மோகம்...
 10. உண்மைதான்.. எனக்கும் அது கொஞ்சம் கவலையாகவே இருந்தது.. தான் நினைத்த வழியிலேயே எல்லாம் நடக்கவேண்டும் என்பதில் எவ்வளவு பிடிவாதம்.. சோதிட காட்சிகள் என இல்லாமல் மகளிடம் யார்யார் என்னவெல்லாம் அதிகம் கேட்பார்கள் என்று வருகிறதே!! சோதிடம் பற்றிய நூலா? “ The World Of Homosexuals“ தானே வருகிறது.. அரசியலில் கூட போட்டியிட்டு இருக்கிறார்.. அரசியல்வாதியாகும் ஆசை பெருமளவான பிரபல்யங்களுக்கு ஏனோ வந்துவிடுகிறது..
 11. மிகவும் அருமையான விமர்சனமும் கலந்துரையாடலும்.. நான் Black Panther படத்தை இங்கே releaseசெய்த நாளன்று போய் பார்த்தேன்..அந்தளவிற்கு Marvel & DC themeல் ஒரு ஆர்வம். சில சமயங்களில் Avengers endgameல் பிரபஞ்சத்தினை பாதியாக சிதைப்பதுதான் என்பது COVID வடிவத்தில் வந்துவிட்டதோ என யோசிப்பதுண்டு.. விமர்சனத்தையும் கருத்துக்களையும் பார்த்தபின்பு இன்னுமொரு பார்க்க வேண்டும் போல உள்ளது.. இணைத்தமைக்கு நன்றிகள்.
 12. எனக்கு இந்த கதையை வாசித்தபொழுது நினைவிற்கு வந்தது எனது Fijianநண்பியின் கருத்தே..” மரணப்படுக்கையில் எனது மனதில் என்ன தோன்றவேண்டும் என்றால் mortgage கட்டி முடித்தது மட்டும்தான் சாதனை என்ற நினைவு வருவது போன்று வாழந்திருக்ககூடாது” என்று..அது எவ்வளவு உண்மை.. வாழ்க்கையில் சொத்துகள் இருந்தும் அனுபவிக்கமுடியாதவர்களும்.. ஓடி ஓடி உழைத்து வாழ்க்கையை இழந்தவர்களும் எத்தனைபேர்.. நல்லதொரு கதை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்
 13. இவரது மற்றைய படங்களை விட Black Panther கதாபாத்திரமே இவரை அதிகம் நினைவுகூறும்.. அந்தளவிற்கு King T’Challaவும் சரி Black Pantherம் சரி இவருக்கு நன்றாக பொருந்தியிருந்தன.
 14. இந்த சம்பவமும் படத்தில் உள்ளது.. ஆனால் அந்த நபரைப்பற்றி, எப்படி அவரை விரும்பினார் என்றெல்லாம் இல்லை.. சிறுவயதிலிருந்தே அந்த வெறுப்பு இருந்துள்ளது. அதைவிட தாயாரின் மேல்தான் கோபமும் வெறுப்பும் அதிகமாக இருந்ததாக படத்தின் இறுதியில் கூறுவார்... வித்யா பாலன் showதான்.. அவரது திறமை இதிலும் நன்றாக தெரிகிறது.
 15. Shakuntala Devi - Human Computer.. இந்தப்படம், "மனித கணினி" என பிரபல்யமாக அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி (4 நவம்பர் 1929 - 21 ஏப்ரல் 2013) பற்றிய ஒரு இந்தி மொழி வாழ்க்கை வரலாற்று நகைச்சுவை-நாடக படமாகும் தாயைப்பற்றிய மகளின் உணர்வுகள், அறிந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம். ஒரு மகளுக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பை, அவர்களின் வித்தியாசமான எண்ணங்களை அவரது மகள் இந்தப்படம் மூலம் பகிர்ந்துகொள்கிறார். 2001 ஆம் ஆண்டில், அனுபமா பானர்ஜி (சன்யா மல்ஹோத்ரா) தனது கணவர் அஜயுடன் தனது தாயார் சகுந்தலா தேவி (வித்யா பாலன்) மீது வழக்குத் தொடுப்பதற்காக லண்டன் வரும் பொழுது அவரது நினைவுகள்
 16. அழகான இடங்கள்...அந்த ஏரி எவ்வளவு அழகாக உள்ளது!!! பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. எனக்கு இந்த மலைப்பாதை கார் drive, bushwalking, எல்லாமே பிடிக்கும்.. இங்கே அனேகமாக நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் car drive போவது வழமை.. மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் இந்த இயற்கையோடான பயணங்கள் தரும்.
 17. நல்லினக்கத்தை ஏற்படுத்தவேண்டுமாயின் கடந்த காலத்தை ஒப்புகொள்ளவேண்டும்!!! அதற்கு ஏதாவது சந்தர்ப்பங்கள் தென்படுகிறதா???? கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
 18. யதார்த்தமான கதை.. எங்களது சமூகத்தில் பல்வேறு வழிகளில் துணையை இழந்தவர்கள், இன்னொரு துனையை தேடுவது என்பது அதிலும் ஒரு பெண் இன்னொரு துணையை தேடுவதற்கு பல்வேறு தடைகள்( வெளியே தெரியாத மற்றும் வெளிப்படையான) அதை மீறி வெளியேறுவது என்பது கஷ்டமே. அதே போல எல்லா உறவிலும் தவறுகள் ஏற்படுவதுண்டு, ஆனால் நம்பிக்கையை முறித்துக்கொள்வவதை விரும்பமாட்டார்கள், ஏனென்றால் மன்னிப்பது எளிதானது, ஆனால் மறந்து மீண்டும் நம்புவது சில சமயங்களில் எல்லா உறவிலும் சாத்தியப்படுமா?
 19. ஆகஸ்ட் 26- 2020: அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமை கிடைத்து 100 வருடங்களாகிறது ஆனாலும் இற்றைவரை ஒரு பெண், ஜனாதிபதியாக அந்நாட்டை ஆளவில்லை என்பது அமெரிக்க அரசியலில் பெண்கள் முன்னேற இன்னமும் எத்தனை தடைகளை தாண்டவேண்டும்?? The 19th Amendment, a century later: 'I’m surprised we are not further along' August 21, 2020 Photograph by Saul Loeb, AFP/Getty Images By Rachel Hartigan On August 26, 1920, the 19th Amendmentbecame law. Citizens of the United States could no longer be barred from voting based on their sex. The culmination of many decades
 20. அதைவிட இன்னொரு செய்தியும் உள்ளது.. Northern Territoryயில் அதிகமான Aboriginesற்கு தேர்தலில் வாக்குகளை எப்படி போடுவதென்றோ, அல்லது வாக்காளர் பட்டியலில் பதிவது எப்படி என்பது கூட தெரியாதளவிற்கு வைத்திருக்கிறார்கள்.. உண்மையிலேயே இந்த பழங்குடிகளை எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். A day before the NT election, thousands of Indigenous Australians remain unenrolled Updated 4 days ago There are calls for "systemic change" in the Northern Territory to make sure elections have higher numbers of remote voters. According to the Australian Electoral Commission, 25,00
 21. இது சம்பந்தமான வானெலி பேட்டிகள்(ABC RN Breakfast) இரண்டை இன்று காலையில் கேட்டேன்.. 1- Rio Tinto chief executive and two senior executives stripped of their bonuses 2- A day of reckoning for corporate Australia - The shock departure of insurance giant AMP chairman David Murray. Rio Tinto's non-executive board director Michael L’Estrange கருத்துப்படி இந்த Juukan Gorge தகர்க்கப்பட்டது கடந்த தசாப்தங்களின் வழியாக வந்த நடைமுறைகளின் தவறு என்பதால்தான் தலைமைப்பொறுப்பதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கப்படவில்லை என்று.. ஆனால் அதேநேரம், AMPயின் தலைமைப்பொறுப்பதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்
 22. உண்மைதான்.. மழை நின்ற பின்னர், மழைத்துளிகள் எங்களில் படும் போது.. மூன்று கிழமைகளுக்கு முன்பும் இந்த அனுபவம் கிடைத்தது.. அது ஒரு தனிசுகம்.. பொதுவாக மலைப்பாதைகள் வழியாக, கிராம்புறங்களுக்கு செல்லும் போது, அதன் காற்றை, வாசத்தை சுவாசிப்பது மிகவும. பிடித்த ஒன்று..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.