Jump to content

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1193
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Posts posted by பிரபா சிதம்பரநாதன்

 1. 8 minutes ago, Nathamuni said:

  இந்த வீட்டை விற்ற பத்திரத்தில் பாதிரியார் சம்பந்தப்படவேயில்லை, கையெழுத்து போடவில்லை என்று தெரிந்த மறுகணமே..... தனது பத்திரம் பிரச்சணைக்குரியது..... பிரயோசனம் இல்லாதது.... I have some problem with this purchase….. தானும் ஏமாந்து போனதை புரிந்திருப்பாரே.....

  அப்படி இருந்தும்...புரியாத மாதிரி நடித்தால்... he is a party to a fraud.

  அப்படி சொல்ல முடியாது நாதமுனி அண்ணா!!

  வாங்கியவர் ஒழுங்கான முறையில் நடைமுறையில் உள்ள விதிகளுக்கமைய வீட்டை வாங்கியிருந்தாலும் ஏமாற்பட்டதாக உணர்ந்தாலும் வாங்கியவர்தான் rightful title owner 

 2. 42 minutes ago, உடையார் said:

  இங்கும் இப்படி பல மோசடிகள் நடக்கின்றான வீட்டு கடன் முழுவதையும் அடைத்தபின்.

  நல்ல வழி வீட்டு கடனை முழுவதும் அடைக்காமல் வங்கியிடம் பத்திரத்தை விட்டு வைப்பதே, அவர்கள் தான் முழ பொறுப்பும்,

  அத்துடன் காலாவதியான வங்கி அட்டைகள், ஓட்டுனர் உரிம பத்திரங்களை தூள் தூளாக வெட்டி ஏறிவதுதான் நல்லது

  அப்படி முழுவதும் வங்கிகளின் மேல் போடமுடியாது உடையார் அண்ணா!!

 3. 20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

  உண்மைதான்.. நானும் இதை எல்லாம் எதிர்கொண்டேன் முன்னர் பாங் திறக்க..குறிப்பாக நீங்கள் வெள்ளைத்தோல் இல்லை என்றால் இவ்வளவும் வேணும்.. வெள்ளைதோல் என்றால் இலகு.. ஆனால் எனக்கு தெரிந்த ஒரு கள்ளமட்டை கோஸ்டியை சேர்ந்த தமிழ் ஆழ் கிழக்கு ஜரோப்பிய நாடுகளின் போலி பாஸ்போர்டை நானூறு ஜநூறுபவுனுக்கு போலி பாஸ்போர்ட் செய்பவரிடம் வாங்கி போட்டோசொப்பில் பேரை வெட்டிபோட்டு கரண்ட்பில்லும் சரி செய்து பாங் எக்கவுண்ட் திறந்து அதை கொஞ்சகாலம் ரண்பண்ணிட்டு லோன் எடுத்துகொண்டு இருந்தவர்.. ஆனா இதுக்கு வங்கியில் வேலைசெய்பவரும் பாட்னர் எண்டால்தான் சரிப்படும்..

  கொஞ்ச காலத்திற்கு முன்பு வங்கிகளின் customer identification திறமானதாக இருந்திருக்கவில்லை. நிறைய சின்னச்சின்ன fraudகள்.. சில வங்கி ஊழியர்களும் இதற்கு உடந்தை.. இப்பொழுது நிறைய கொள்கை மாற்றங்கள், நடைமுறைகள் என்பதால் வேறு வழிகளில் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

  இரு வாரங்களுக்கு முன்பும் இங்கே உள்ள வங்கி ஒன்றின் ஊழியர் இந்த மாதிரி fraudல் ஈடுபட்டு கைதாகியுள்ளார்

 4. 6 minutes ago, goshan_che said:

  இல்லை காணிக்கு அப்படி இல்லை. யாரிடம் title, possession உள்ளதோ அவர்தான் தொடர்ந்தும் உரிமையாளராய் இருப்பார் - வழக்கு மறுவழமாக தீர்ந்து பதிவு மாறும் வரை.

  correct..ஆனாலும் இதில் வாங்கியவரின் பெயரில் தப்பில்லை என்பதுதான் எனது கருத்தும்..

  இரண்டு தரப்பு solicitorsம் சேர்ந்துதான் நடந்திருக்கவேண்டும்

 5. Just now, பெருமாள் said:

  பாதிரியாரின் உண்மையான கையெழுத்து இல்லையே ?

  பாதிரியாரின் கையெழுத்தைப்போல signature fraud செய்திருக்கலாம் இல்லையா? 

 6. 4 minutes ago, Nathamuni said:

  அதுதான் பார்தீர்களா, கோசன்..... சொல்கிறார்; திருட்டு கோஸ்டிகள் பத்திரம் வைத்திருந்தால்...... சட்டபூர்வமான உரிமையாளர் ரோட்டில நிக்கவேணுமாம்.....

  இதில் land registryயில் பிழை கூற முடியாது. ஏனெனில் பலர் வீட்டு கடனை அடைத்தபின் land registryயால் சென்று update செய்வதில்லை. இதனால் ஒரு காணி/வீடு விற்பனை நடந்தபின் வாங்கியவரின் சார்ப்பில் வங்கி அல்லது solicitor land registryயில் அதனை பதிவிடுவார். ஆகையால் சட்டப்படி வீட்டை வாங்கியவருக்கே உரித்து

 7. 1 minute ago, goshan_che said:

  பாஸ்போர்ட் இல்லாவிடில் வங்கிகளில் வதிவிட உரிமை அத்தாட்சி கேட்ப்பார்கள். ஆனால் தான் ஒரு பிரிதானியர், இந்நாட்டில் பிறந்தவர், ஆனால் பாச்போர்ட் இல்லை, என வேறு ஏதோ ஒரு டாக்குமெண்டை  கொடுத்து சரி கட்டி இருப்பார்கள்.

   

  நான் அறிந்த வரையில் இங்கே வங்கிகள் மூலம் ஒரு சொத்து வாங்குதல்/விற்றல் என்றாலும் சரி ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு refinance செய்வது என்றாலும் கூட சில விடயங்கள் கட்டாயம்.. எல்லா நாடுகளிலும் அப்படித்தான் என  நினைக்கிறேன்..

  ஒரு customer profile முன்பு மாதிரி dummy profile செய்து திறந்துவிட்டு பின் identification செய்ய முடியாது.. என்பதால்தான் கொஞ்சம் அதியசமாக இருந்தது

 8. 4 minutes ago, Nathamuni said:

  ஆம்..... கடவுச்சீட்டு இல்லாமல் பலர் இருக்கிறார்கள்....

  மேலும் அடையாள அட்டைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் என்பதால் வாகண அனுமதி பத்திரம் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

  நான் அறிந்த வரையில் இங்கே அப்படியில்லை.. passport, driver’s license, Medicare card, birth certificate இவ்வளவும் கட்டாயம்.. பின் உங்களது பெயர், விலாசம்(driver’s license or passport உடன் ஒத்துவரவேண்டும்) இவை சரியாக இருந்தாலே வங்கியில் உங்களுக்கு ஒரு கணக்கை திறக்கமுடியும். Anti Money Laundering சட்டத்திற்கு பின் இவை கட்டாயம் கவணிக்கப்படுகிறது..

  அத்துடன் ஒரு purchase என்றால் title தொடங்கி, credit check, விற்பனை ஒப்பந்தம், copy of transfer என சகலதும் solicitor மூலம் சரிபார்க்கப்படும். மேலதிகமாக வங்கிகளில் கூட quality assurance team or document preparation team இவற்றை சரிபார்க்கும்..

  நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் பாதிரியாரின் வீட்டிற்கு mortgage இருந்திருக்கவில்லை போலுள்ளது.. இருந்திருந்தால் வங்கி இதனை சரி பார்த்திருக்கும்.. 

   

 9. // அதே வாகண லைசன்ஸை பயன்படுத்தி வங்கிக் கணக்கை திறந்துள்ளனர் //

  எனக்கு ஒரு சந்தேகம்!, தனியே லைசென்ஸை மாத்திரம் அடையாளமாக காட்டி UKயில் வங்கிக்கணக்கை திறக்க முடியுமா? 100 pointsற்கான identification documents கேட்கமாட்டார்களா?  

 10. 4 minutes ago, ஈழப்பிரியன் said:

  பையா விளையாட்டு தொடங்க முதலே முடிவெடுக்காதீர்கள்.

  இன்று சுவிக்கும் ரதிக்கும் மட்டுமே புள்ளிகள் போகலாம்.

  ஆஆஆஆ என்னடா இவன் ஆடறுக்க முதலே ………………

  இப்படியான படங்களைப் போட்டு கோசானை கடுப்பேத்தாதீங்க சுவி.

  சான்ஸே இல்ல uncle.. அவுஸ்ரேலியாவிடமும் வாங்கினார்கள்.. இங்கிலாந்திட்டையும் வாங்குவார்கள்.. 

 11. 18 minutes ago, suvy said:

  சூப்பரான இறைச்சி சலாட் ......... விளக்கீடு வர முதல் செய்து சாப்பிடவும்.......!   👍

  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுவி அண்ணா!!

  நீங்கள் இணைத்த சலாட் வகைகளில் இரண்டு செய்முறைகளை செய்து பார்த்தேன்(படங்கள் இணைத்திருந்தேன்).. மிகவும் சுவையானதும் சத்தானதுமான சலாட் வகைகள்..அதிலும் அந்த சிகப்பு கோவாவும் சிக்கன் சலாட்.. 👌

  இதில் ஒரு பிரச்சனை உள்ளது.. என்னவென்றால் உருளைக்கிழங்கு.. பார்ப்போம் உருளைக்கிழங்கிற்கு மாற்றீடாக வேறு எதையாவது போட்டு செய்து பார்ப்போம்.. 

   

 12. 17 hours ago, பெருமாள் said:

   

  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பெருமாள் அண்ணா!!. 

  அவர் தன்னிடம் உள்ள வளத்தைக்கொண்டு நல்ல திட்டமிடலுடன் இருக்கிறார் என்பதை அவரது பேட்டியில் காணலாம்..எடுத்தவுடனே அதிக லாபம் வேண்டும் என்று அகலக் கால் பதிக்காமல் தன்னுடன் இருக்கும் வளத்தைக்கொண்டு முன்னேற நினைத்துள்ளார்..

  பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அவருக்கு உரித்தாகட்டும்..

  • Like 1
 13. On 27/10/2021 at 06:50, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

  பெண்களும் சரி ஆண்களும் சரி தாம் கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணமே இல்லாது சும்மா இருக்க ஆர் காசு தருவார்கள் என்று எண்ணுவது கூட பல பெண்களை இன்னும் வறுமை நிலைக்குத் தள்ளியிருக்கிறது. நாம் வெளிநாட்டவர்களிடம் கற்றுக்கொண்ட சுறுசுறுப்பும் வீடா முயற்சியும் இருந்திருந்தாலே பலர் வாழ்வு இன்று மேம்பாட்டிருக்கும்.

  உங்களது கவிதைக்கு நன்றி அக்கா!!, ஆனால் அவர்களை அந்த நிலைக்கு கொண்டு வந்ததில் பணத்தை எதற்கு கொடுக்கிறோம், ஏன் கொடுக்கிறோம் என தெரியாமல் கண் மூடித்தனமாக கொடுத்துவிட்டும், உண்மையான தேவைகளில் முதலிடாமல் பெயர் வரவேண்டும் என்பதற்காக செய்யும் புலம் பெயர்ந்த தமிழர்களும் அடங்குவார்கள் என நினைக்கிறேன்.. 

  On 26/10/2021 at 20:22, கிருபன் said:

  பெண்களின் வாழ்வை முன்னேற்ற இருக்கும் அமைப்புக்களின் போதாமைகளினால்தான் ஏதிலி வாழ்வு தொடர்கின்றது. அது தொழில், வருமானம் குறைந்த இக்காலத்தில் இன்னும் மோசமாக மாறியுள்ளது. சமூகச் சிந்தனை உள்ளவர்கள் சேர்ந்து வேலை செய்யாமல் இருப்பதும் ஒரு காரணம்.

  உண்மைதான்..அமைப்புகள் பல இருந்தாலும் அவை ஒற்றிணைந்து இயங்காததுதான் காரணம் என நான் நினைக்கிறேன்..அதனால்தான் பல அமைப்புகள் இருப்பதை விட ஒன்றிரண்டு அமைப்புகள் இருந்தால் அவை அதிகளவு பயனைத்தரலாம் என நினைப்பதுண்டு. 

  அதே போல ஓரளவிற்கு சிறு கைதொழில் செய்பவர்கள் அதிகரித்து இருந்தாலும், சிறு கைத்தொழில் செய்யும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கூட குறையவில்லை. சில ஆண்கள் அதிகம் கொண்ட துறைகளில் கூட ஈடுபடுகிறார்கள், ஆனால் அதற்கான வரவேற்பு எதிர்பார்த்த அளவில் கிடைப்பதில்லை. மேலும், உள்ளூர் உற்பத்திகளை இவர்கள் மேற்கொண்டாலும் போதிய சந்தைப்படுத்தல் வசதிகள் இல்லாதும் கஷ்டப்படுகிறார்கள்.. இப்படி பல. 

  • Thanks 1
 14. இந்த செய்தியை வாசிக்கும் பொழுது The Trials of Gabriel Fernandez நினைவிற்கு வருகிறது.. என்னை இன்றுவரை வேதனைப்படுத்தும் ஒரு சம்பவம்.. 

  Gaberiel கூட ஒரு 7 வயது சிறுவன், அரச உதவிப்பணத்தை பெறுவதற்காக தாயின் பெற்றோர்களினால் பாராமரிக்கப்பட்ட Gabriel தன்னுடன் கூட்டிச்சென்று, பின் தாயினாலும் தாயின் partnerனினாலும் தொடர்ச்சியாக 7 மாதங்கள்(சாகும் வரை) கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குழந்தை. இந்த வழக்கு Los Angels County children’s welfare systemத்தையே கேள்விக்கு உட்படுத்திய வழக்கு.. 

  அதே போல இந்த பெண் கூட தனது குழந்தைகளை கொல்லும் அளவிற்கு தூண்டியது என்ன? அதுவும் பெண்கள் காப்பகத்தில் வாழ்ந்து வருகையில்.. 

  பிள்ளைகளை பாராமரிக்க முடியாவிட்டால் பெறக்கூடாது என நம்புவதற்கு இவையும் ஒரு காரணம்.. 

   

  • Like 1
 15. 14 hours ago, பையன்26 said:

  அப்கான் நாளைக்கு பாக்கிஸ்தானுக்கு அடிக்க‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்..................😁😀
   

  ஆப்கான் நாளைக்கு வென்றால் ஜேர்மன் தாத்தா 👴 உங்களை விட்டு போயிடுவார் பிறகு உங்களுக்கு துணை கோஷான்தான்…!!!!

  • Like 1
 16. 3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

  Momentum Investmentம் Momentum tradingம், இரண்டும் ஒன்றா இல்லை வேறுபாடுகள் உள்ளதா?

   

   

  @vaseeஇதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், இன்றுவரை அதிகம் ஆபத்தில்லாத முதலீடு என கருதுவது காணி,வீடு போன்றவற்றில் மட்டும், ஆனால் அதிலும் உடனடி இலாபம், அதிக இலாபம் தரும்செயல்களில் ஈடுபடுவதில்லை. இப்பொழுது கொஞ்ச காலமாகத்தான் இந்த பங்கு சந்தை பற்றியும் ஈடுபடுவதிலும் ஒரு ஆர்வம், என்பதால் இது தொடர்பான புதிய தகவல்கள் வரும் பொழுது அறியமுற்படுகிறேன்..

  நீங்கள் இணைக்கும் தகவல்கள் மூலம் தெரியாத விடயங்களை அறிய முடிகிறது, மிக்க நன்றி.. 

 17. On 24/10/2021 at 04:59, vasee said:

  இந்த Benchmark விட கூடுதலாக வருமானம் ஈட்ட முயல்வதே Momentum Investment எனப்படுவதாக கூறப்படுகிறது.

  Momentum Investment இல் Investment உத்தியை கடைப்பிடித்தால் நட்டம் ஏற்படலாம்.

  Momentum Investmentம் Momentum tradingம், இரண்டும் ஒன்றா இல்லை வேறுபாடுகள் உள்ளதா?

   

   

 18. இது இரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட விடயம் அதே நேரம் உண்மையில் இந்த பெற்றோரைத்தான் கைது செய்திருக்கவேண்டும்..ஆனால் ஒரு ஆதங்கம்.  ஏற்கனவே குறைந்து கொண்டு வருகிறோம்(அதற்காக  தன் பொருளாதார நிலையை மீறி பல பிள்ளைகளை பெறவேண்டும் என கூறமாட்டேன்).. ஆனால் இவை அதிகரிப்பதற்கான காரணங்கள்? 

  - சீதனம்?

  - சாதி?

  - தமிழ் இளைஞர்களின் பழக்கவழக்கங்கள்?

  - வேலைவாய்ப்பு, கல்வியறிவு வீதத்தில் ஆண்களை விட பெண்கள் படித்து முன்னேறி வருவதும், அவர்களுக்கு சம மான ஆண்கள் இல்லாமை? 

  - ஊர், பிரதேச பிரிவினைகள்? 

  - இல்லை ஓரிரண்டு சம்பவங்களை ஊடகங்கள் பெரிதுபடுத்தி ஒரு trend உருவாக்கி திட்டமிட்ட முறையில் ஊக்குவிக்கப்படுகிறதா? 

  ஒன்றில் இனம் மாறி திருமணம் செய்கிறார்கள் இல்லை திருமணம் செய்யாமல் தனித்து வாழ்கிறார்கள். 

  • Thanks 1
 19. 12 hours ago, ஈழப்பிரியன் said:

  @பிரபா சிதம்பரநாதன் என்னம்மா உங்க சொல் கேட்டு வார்னர் நல்லா விளையாடுறாரே.

  இன்னமும் வரும் uncle..😁

  BE9902-E2-CFCF-4-AAF-8-AF2-3-C9302-EA30-

  7 எப்போதும் தமிழன் 39
  8 பிரபா சிதம்பரநாதன் 39
  9 நீர்வேலியான் 38


  இங்கே பாருங்கள்!! ஒருவர் சத்தமில்லாமல் 🐢 🐢 முன்னேறிக்கொண்டிருக்கிறார்.. கடந்த World Cup போல இந்த முறையும் இடத்தைப்பிடித்திடுவார்கள்!!!

  • Haha 1
 20. 19 hours ago, shanthy said:

  கணவனை இந்த மாதிரி நிலைக்கு தூண்டுவது என்பது பற்றி விளக்கமாக சொல்லுவீங்களோ?

  57-D9-BE30-A066-47-C1-9475-9304-EBB78-FC
   

  Insecure Women.

  ஒரு insecure பெண் தன்மீதும் தன் எண்ணங்கள்/பண்புகள் மீதும் நம்பிக்கை இல்லாத ஒரு பெண், அவள் தன் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைக் கட்டுப்படுத்த ஆசைப்படுவாள். அவளுடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம் அவளுடைய துணையாக இருக்கும். பெரும்பாலும் இந்த மாதிரியான பெண்கள் தங்களது துணை கொண்டு பிள்ளைகள் வரை அதீத கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இவர்களுடைய துணைக்கு தனிமனித சுதந்திரமே இருக்காது..தனித்த விருப்பு வெறுப்புகள் தொடக்கம் சம்பளம் வரை இந்த மாதிரியான பெண்களின் கட்டுப்பாட்டிலேதான் இருக்கும். இவற்றை மீறும் பட்சத்தில் குடும்பத்தில் உள்ளவர்களை குற்றவாளிகளாக காட்டியும் தன்னை பாதிக்கப்பட்டவளாக காட்டியும் மற்றவர்களின் அனுதாபத்தை பெறுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். 

  ஆரம்பத்தில் இவர்களது துணை இவர்களை அனுசரித்தாலும் உறவில் விரிசல் வந்துவிடும், நாளடைவில் இவர்களது துணை ஒன்றில் தற்கொலை
  செய்வார்கள் அல்லது வீட்டை விட்டு வெளியேறியோ அல்லது ஒரு affairலோ தங்களது வாழ்க்கையை கழிப்பார்கள்.. 

  இந்த மாதிரியான பெண்களைப்பற்றி அதிகம் கேள்விப்படமாட்டோம் காரணம், இவர்களால் பாதிக்கப்படும் ஆண்கள் தங்கள் கவலைகளை வெளியே கூறுவதில்லை ஏனெனில் அதற்கு அவர்களது சுய கெளரவம் இடம் கொடுக்காது. 

  இந்த insecure மனநிலை உடைய பெண்களை கவனிப்பீர்களேயானால் பெரும்பாலும் பணம், சமூக அந்தஸ்து போன்ற விடயங்களே மனிதர்களை அளவிடும் அளவுகோலாக இருக்கும். பணம், சமூக அந்தஸ்து இவற்றை எப்பாடுபட்டாவது அடைய நினைப்பார்கள், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை குடும்பத்தின் சந்தோஷம், நிம்மதி. இவர்களது துணையும் தன் நிம்மதி சந்தோஷத்திற்காக வெளியே ஒரு உறவை நாடும்.. இவர்களை மனதில் வைத்தே நான் உங்களுக்கு எழுதினேன். 

  ஆகையால் இந்த மாதிரியான பெண்களின் நிலையை ஆரம்பத்திலேயே உளவியல் ஆலோசகர்களின் உதவியுடன் குணப்படுத்தினால், அவர்களது குடும்பமும் மற்றவர்களும் பாதிக்கப்படமாட்டார்கள்.. 

  மேலே நான் கூறிய உதாரணம் தனித்து insecure மனநிலை உடைய பெண்களின் துணைக்கு மட்டுமே.. 

  இரண்டாவது வகை பெண்கள், 
  சில பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றவுடன் தன்னையும் கவனிப்பதில்லை, தன் துணையையும் கவனிப்பதில்லை. இது பொதுவாக ஆண்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இந்த நிலையிலும் ஆண் இன்னொரு உறவை தற்காலிகமாக தேட முனையலாம். இந்த ஆண்களைப்பற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.. ஏனெனில் இவர்களைப்போன்றவர்களுக்கு பெண்கள் தனியே சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி.. வேறு எந்த valueம் இருக்காது.. 

  இதனால்தான் பெண்கள் குழந்தை பெற்றபின்பும் தங்களது ஆரோக்கியத்திலும் மற்றைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.. 

  மூன்றாவது, என்னைப்பொறுத்தவரை, பெண்கள் எல்லாவற்றிற்கும் ஆண்களின் முகவாயை பார்ப்பதை குறைக்கவேண்டும்.. எதிர்பார்ப்புகள் அதிகமானால் விட்டுக்கொடுப்புகளும்/sacrificeம் அதிகரிக்கும். பின்பு குறை கூறுவதால் பயனில்லை. 

  அதேசமயம் ஒரு கணவன் தன் மனைவி, குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமல் முழு நேரமும் தன் வேலை, தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்கும் இடங்களில்.. மனைவி சில நேரங்களில் தன்னிடம் அன்பாக கதைக்கும் ஒருவருடன் உறவை நாடலாம்.. பணம் வாழ்க்கைக்கு முக்கியம் ஆனால் தன்னை நம்பி ஊர்விட்டு தேசவிட்டு வந்த துணைக்கு சிறிதளவு நேரத்தை ஒதுக்காமல் பணம் மட்டுமே முக்கியம் என 24/7 வேலை செய்துவிட்டு வந்து மனைவிக்கு என்ன தேவை என்பதை அறியாமல் தன் தேவையை மட்டும் பார்த்துவிட்டு உறங்கும் கணவனிடம் இருந்து நாளடைவில் மனைவி ஒதுங்கலாம்.. அப்பொழுது தன்னிடம் அன்பாக பேசும் நபரிடம் உறவை ஏற்படுத்துகிறார்கள்.. இதில் தவறு யாருடையது!

  சில கணவர் இருக்கிறார்கள் “ நான் வளர்ந்த விதம் இப்படி, எனது வட்டம் இப்படி, இதை மீறி நான் வரமாட்டேன்” என்பவர்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க விருப்பமில்லாமல் தானும் வாழாமல் தன் மனைவி, பிள்ளைகளையும் வாழவிடாமல்.. இவர்களின் துனையும் விவாகரத்தும் எடுக்க முடியாமல் சில சமயங்களில் இன்னொரு உறவை நாடலாம்.. 

  இயல்பாகவே மனைவி இருக்கும் பொழுதே மற்றைய பெண்களை நோட்டம் விட்டு கைகூடினால் காரியம் நடத்தும் கணவர்மார்.. sex drive அதிகம் உள்ள துணைகள் கூட திருப்தி ஏற்படாதவிடத்து ஒருவருக்கொருவர்  ஏமாற்றலாம்..ஏனெனில் ஆணோ பெண்ணோ இருவரும் உணர்வுகளை கொண்டவர்கள்.. 

  எந்த உறவிற்கும் அடிப்படை பரஸ்பர நம்பிக்கை, அன்னியோன்யம், இது கலையும் இடத்து போலியான வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமில்லை. சமூகத்தின் மீதான பயம், பிள்ளைகளின் எதிர்காலம் என்பதற்காக இன்னொருவரின் வாழ்க்கையை கலைப்பது சரியல்ல. 

  அதே போல காதல் என்ற உணர்வு எந்த வயதிலும் வரலாம், கட்டாயம் அது காமம் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்பதுமில்லை..அந்த உணர்வு உண்மையானது என்றால் அவரவர் பாதையில் போவதே சிறந்தது.. 


  ஆனால் இதில் துல்பன் அண்ணா கூறியது போல கணவனின் பிழைகளை மன்னித்து ஏற்கும் மனைவி, இந்த குற்றத்திற்கு முதல் காரணம் எனக்கூறுவது  தனது கணவன் தேடிப் போன பெண்னைத்தான்.. 
  அதே சமயம் மனைவியை கணவனால் ஏற்கமுடியாதவாறு சமூத்தின் வாய்கள் தடுக்கிறது.. அதனால்தான் வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியால் பெண்ணை சார்ந்த குடும்பம் கலைகிறது.. பெண்களையும் கற்பு அவர்களுக்கு மட்டும்தான் என்ற எண்ணத்தை ஊட்டி தன்னைத்தானே நொந்து உருக்குலைந்து போகவும் தற்கொலையை நாடவும் இந்த சமூகமே தூண்டுகிறது.. 

  இதில் மாற்றம் வரவேண்டும், இந்த உறவில் இருவருக்குமே சம பங்கு உண்டு என்பதால் இருவரையும் ஒரே விதமாகத்தான் நடத்த வேண்டும் என நான் நினைப்பதுண்டு. 

  ஆகையால் பிரச்சனைகள், விரிசல்கள் வருமிடத்து உரிய ஆலோசனைகளை நாடினால் இரு குடும்பங்களின் வாழ்க்கை தடங்கலில்லாமல் பயணிக்கும். 
   

  • Like 9
  • Thanks 2
 21. 7 hours ago, shanthy said:

  திருமணத்திற்கு பிறகுபெண்களின் வாழ்வில் குறுக்கிடும் முகநூல் காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் ... முறிந்த காதலை முகநூலில் புதுப்பித்தலால் வரும் சிக்கல்கள்.இடையில் ஏற்பட்ட காதலில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல். மெய்வெளி தொலைக்காட்சியில் ரஜிதாவும் நானும் பேசியிருக்கிறோம்.
   

   

  சாந்தி அக்கா! எனக்கு இதனைப்பற்றி சில கேள்விகள் உண்டு ஒன்று

  இன்னொன்று இந்த உரையாடலில் நீங்கள் இன்னமும் சில விடயங்களை அழுத்தி கூறியிருக்கலாம் என நினைக்கிறேன்..

  இந்த வாரம் முழுவதும் வேலை அதிகம் என்பதால் நான் நினைப்பதை எழுத முடியுமா தெரியவில்லை, ஆனாலும் இந்த மாதிரியான சம்பவங்களில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் என்றாலும் கூட இந்த மாதிரியான நிலைக்கு கணவனை தூண்டுவதும் பெண்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

   

  • Thanks 1
 22. On 26/10/2021 at 12:03, புங்கையூரன் said:

  . அவுஸில் ஒரு நிலக்கரி அகழ்வுத் திட்டம் ஒன்றைப் பொறுப்பெடுத்திருக்கிறார். இவரது கொம்பனியை ஒரு ட்ரஸ்ற் அமைப்பாக அமைத்துள்ளார். உலகின் மிகப் பெரிய பவளப் பாறைத்தொடர் இவரது கப்பல் கழிவுகளால் பாதிக்கப் பட்டால், இவரது கம்பனியைச் சட்டத்தால் குற்றவாளியாக்க இயலாது.

  இன்னமும் இது தொடர்பான வழக்கு நடந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.. சுற்றுபுற சூழல் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அமைப்பான ACF (Australian Conservation Foundation) Suttor ஆற்றிலிருந்து இந்த coal mineற்கு தண்ணீர் எடுப்பது சம்பந்தமான வழக்கில் வெற்றி பெற்றுள்ளது. Traditional owners வழக்கிலும் பிரச்சனைகள்.. 

  இவருடைய இந்த Carmichael coal mine பற்றிய விபரங்களை அறியும் பொழுது, இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு செய்யும் செயல்களை பார்க்கும் பொழுது ஆபத்தான ஒருவர் என்பது தெரிகிறது.. 

   

  @குமாரசாமிஅண்ணா இவரை ஏன் நெடுந்தீவிற்கு எல்லாம் போகசொல்கிறீர்கள்.. இருப்பதையும் அழிப்பதற்காகவா? 

  • Like 2
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.