Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1756
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by P.S.பிரபா

  1. உண்மை!!! அதனால்தான் சில இடங்களுக்கு எப்பொழுது போனாலும் போவதுண்டு, கட்டடங்கள் மாறி இருக்கலாம், காலங்களும் போகலாம் ஆனாலும் நடந்தவற்றை மறக்கமுடியாது!!!
  2. ஒரு இரவுப்பொழுதில் ஆரியகுளத்திற்கு ஒரு நடை!! யாருமற்ற அந்த இரவு நேரத்தில் மணிக்கூட்டு கோபுரத்தை காவல் செய்யும் இந்த மூன்றுமன்னர்களுடன் ஒரு பொழுது!!! உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களின் நினைவுதூபியில் தன் கண்களை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்து உறங்கும் பூணை.. புதிதாக கட்டப்படும் யாழ்ப்பாணத்திற்கான Town Hall. புதிதுபுதிதாக, வித்தியாசமான வடிவமைப்புக்களுடன் கட்டடங்கள் இருந்தாலும் பழையகட்டடங்களின், வீடுகளின் அழகில் மனதை பறிகொடுத்து சில நிமிடங்கள்! தொடரும்…
  3. இந்த ஊர்கள்( மாவிட்டபுரம், மயிலிட்டி, ஊறனி etc) இப்ப கொஞ்ச காலங்களிற்கு முன்புதான் இரானுவத்தால் மக்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுக்கொண்டு வருகிறது.. இன்னமும் பல பகுதிகள் விடுவிக்கப்படவில்லை அங்கிள். எங்கள் தோட்டத்தை செய்பவரின் காணி கூட பலாலி முகாம் உள்ள பகுதிகளில்தான் உள்ளது..வேதனையான விடயம்!! நான் இம்முறைதான் இந்தளவு உட்பகுதிகளுக்கு சென்றுள்ளேன்.. சிவந்த மண்.. இந்த மண்ணில் வெறுங்காலுடன் நடப்பது மிகவும் பிடித்த ஒன்று.. ஏனெனில் காலில் ஒட்டிய மண்ணின் நிறம் போக நீண்ட நாட்கள் எடுக்கும்.. சாதி தொடங்கி சமயம், சமூகம், மாதாந்த வருமானம், சொத்து எவ்வளவு?, துணையாக வரவேண்டியவர் இருக்கவேண்டிய பிறந்த திகதி🙄, அசைவம் உண்பவருடன் கூடி வாழ முடியுமா இல்லையா!!!🤦🏽‍♀️கிட்டதட்ட 50ற்கு😵‍💫😵‍💫😵‍💫 மேற்பட்ட கேள்விகள் அங்கிள்!!
  4. பஸ்தியன் சந்தியில் ஒரு காலைப்பொழுது!! மாவிட்டபுரத்தில் ஒரு மாலைப்பொழுது!! தலசிட்டி வைரவர் கோவில் - நந்தி இருக்கவேண்டிய இடத்தில் நாய் இருக்கும் ஒரு கோவில்!!. விலங்குகளை பலி கொடுப்படுதை தடுத்தாலும் பலிக்கொடுப்பதற்காக இருந்த சாதாரனமாக இருந்த கோவில் இன்று 4 பக்க கோபுரங்களுடன் கட்டப்படுகிறது!! மயிலிட்டி - மீன்களுடன் படகுகளும் தென்பகுதி மீன் வியாபாரிகளும் ஊறனி- கடந்து போக முடியாமல் பல கதைகள் கூறும்!!! தொடரும்…
  5. கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!! கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் எழுதப்படுமா என்பது சந்தேகமே!! ஆனாலும் கொழும்பின் சூட்டை தணித்தது இந்த மண்ணின் குளிர்மை.. கிட்டதட்ட 27/28 வருடங்களாக மனிதர்களின் காலடி படாமல் காடு போல கிடந்த இடத்தை மாற்றிபயனுள்ள தோட்டமாக்கியதைப் பார்த்து ஒரு சந்தோஷம்!! தொடரும்…
  6. எனது தனிப்பட்ட வேலை ஒன்று காலதாமதமாகிக்கொண்டே வருவதால் இந்த Bitcoinல் கவணம் செலுத்த முடியவில்லை.. ஆனால் செய்திகளை மேலோட்டமாக பார்க்கும் பொழுது நிதானித்து செயல்படுவது நல்லது போல தெரிகிறது.. https://www.news.com.au/finance/markets/world-markets/deadly-bitcoin-drops-to-nearly-45k-after-horror-five-weeks/news-story/46485589da3625574019ed5b7e9013fb?amp
  7. வெற்றி பெற்ற வாதவூரானிற்கு வாழ்த்துக்கள். கடைசி நிமிடத்தில் வந்து சேர்ந்த என்னையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்குவித்த மற்றும் அனுமதித்த கள உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் நன்றிகள் பல..
  8. புட்போட்டில தொத்திக் கொண்டு வந்து ஒருமாதிரி ஒரு சீட்டை பிடிச்சாச்சு.. பார்ப்போம் காளியின் கடாச்சம் இனி எப்படி போகும் என்று😁 உண்மைதான்..
  9. எனக்கும் Kiwis cup தூக்கவேண்டும் என்றுதான் விருப்பம் ஆனால் 👇🏼 41 முட்டைகளில் ஒரு முட்டை குறைந்திட்டுது.. அவ்வளவுதான்🤣 இது நல்லா இருக்கே.. ஆனால் கடைசில இப்படித்தான் முடியும்
  10. கடவுளே முருகா!! மறப்பேனா அதை!!!🤣 பத்திரம், பத்திரமாக உள்ளது.. இப்ப double alert 🚨..
  11. இல்லை uncle… இனி இந்த semi final லிருந்து புள்ளிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை. அதனால, கடைசியாக வந்தால் “ முதலே சொல்லிட்டேனே” என சொல்லத்தான்!!!
  12. உண்மையில் 22 அல்லது 21 எனது இடம் என இந்த போட்டியில் சேரும் பொழுதே சொல்லிக்கொண்டுதான் சேர்ந்தது சுவி அண்ணா!! உங்களுக்கும் பையனுக்கும் கொஞ்ச நாளுக்கு வாடகைக்கு தந்திருக்கு.. so 👇🏼
  13. இதைப்பார்த்திட்டு ஒருக்கா திருப்ப சொல்லுங்க uncle..
  14. ஒரு பிரச்சனையும் இல்லை uncle.. ஆனால் score பார்த்தால் உங்களது எண்ணம் நிறைவேறுமோ தெரியவில்லை 😁
  15. ஒரே omelette???? எல்லோருக்கும் நாளைக்கு யாழ்பாணத்தில முட்டையை அவித்து ரோல்ஸ் மாதிரி செய்வார்கள் மிதிவெடி என கூறுவதாக நினைவு.. அதைக்குடுப்பம்..
  16. சான்ஸே இல்ல uncle.. அவுஸ்ரேலியாவிடமும் வாங்கினார்கள்.. இங்கிலாந்திட்டையும் வாங்குவார்கள்..
  17. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுவி அண்ணா!! நீங்கள் இணைத்த சலாட் வகைகளில் இரண்டு செய்முறைகளை செய்து பார்த்தேன்(படங்கள் இணைத்திருந்தேன்).. மிகவும் சுவையானதும் சத்தானதுமான சலாட் வகைகள்..அதிலும் அந்த சிகப்பு கோவாவும் சிக்கன் சலாட்.. 👌 இதில் ஒரு பிரச்சனை உள்ளது.. என்னவென்றால் உருளைக்கிழங்கு.. பார்ப்போம் உருளைக்கிழங்கிற்கு மாற்றீடாக வேறு எதையாவது போட்டு செய்து பார்ப்போம்..
  18. ஆப்கான் நாளைக்கு வென்றால் ஜேர்மன் தாத்தா 👴 உங்களை விட்டு போயிடுவார் பிறகு உங்களுக்கு துணை கோஷான்தான்…!!!!
  19. @vaseeஇதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், இன்றுவரை அதிகம் ஆபத்தில்லாத முதலீடு என கருதுவது காணி,வீடு போன்றவற்றில் மட்டும், ஆனால் அதிலும் உடனடி இலாபம், அதிக இலாபம் தரும்செயல்களில் ஈடுபடுவதில்லை. இப்பொழுது கொஞ்ச காலமாகத்தான் இந்த பங்கு சந்தை பற்றியும் ஈடுபடுவதிலும் ஒரு ஆர்வம், என்பதால் இது தொடர்பான புதிய தகவல்கள் வரும் பொழுது அறியமுற்படுகிறேன்.. நீங்கள் இணைக்கும் தகவல்கள் மூலம் தெரியாத விடயங்களை அறிய முடிகிறது, மிக்க நன்றி..
  20. Momentum Investmentம் Momentum tradingம், இரண்டும் ஒன்றா இல்லை வேறுபாடுகள் உள்ளதா?
  21. இன்னமும் வரும் uncle..😁 7 எப்போதும் தமிழன் 39 8 பிரபா சிதம்பரநாதன் 39 9 நீர்வேலியான் 38 இங்கே பாருங்கள்!! ஒருவர் சத்தமில்லாமல் 🐢 🐢 முன்னேறிக்கொண்டிருக்கிறார்.. கடந்த World Cup போல இந்த முறையும் இடத்தைப்பிடித்திடுவார்கள்!!!
  22. அட சும்மாஇருந்த பிரபாவை கூப்பிட்டுவிட இப்போ 4 வதாக வந்துட்டாவே. எனக்கு ஒன்றும் தெரியாது uncle.. நானே திகைச்சுப்போய் நிற்கிறேன் எப்படியும் இன்றைக்குப்பிறகு புட் போட்டிலயோ அல்லது சீட் இன்னமும் இருக்குமோ என்பது தெரிந்துவிடும்
  23. இப்பவே எடுக்கிறது நல்லம்! சுப்பர் 12 இல் எகிறும் என்று எதிர்பார்ப்பது gambling 🎰 machine இல் இன்னும் கொட்டும் என்று கிடக்கிற எல்லாக் காசையும் விட்டெறியிற மாதிரி!! 😂🤣 நான் இன்னமும் எனது இடத்தில்தான் நிற்கிறேன்..இன்னமும் கொஞ்சம் நாள் இப்படியே நிற்கலாம்.. பார்ப்போம்😁 நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நந்தன் 34 2 ரதி 34 3 முதல்வன் 33 4 ஏராளன் 33 5 வாதவூரான் 33 6 சுவைப்பிரியன் 33 7 எப்போதும் தமிழன் 33 8 பிரபா சிதம்பரநாதன் 33 9 கறுப்பி 32 10 ஈழப்பிரியன் 31
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.