Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  539
 • Joined

 • Last visited

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

 1. உண்மைதான் .. ரோம, கிரேக்க, மொகலாய இராச்சியங்களில் நடந்த சதிகளைவிட எங்களது மூவேந்தர்களின் இராச்சியங்களின் நடந்த சதிகள் பரவாயில்லை எனக்கூறலாம்.. அதனால்தான் இந்த ரோம, கிரேக்க பேரரசர்கள் உலகை ஆண்டார்கள்.. அதே போல இப்பொழுதுள்ள வல்லரசுகள் கூட பழைய பேரரசுகளுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதைபோல செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது..
 2. நீங்கள் கூறுவது சரியே.. காலவோட்டத்திற்கேற்பவும், தனிமனித இரசனைகளுக்கு ஏற்பவும் இலக்கியங்களை திறனாய்வு செய்து அனுபவிப்பதும் மற்றவர்களுடன் ஆரோக்கியமான முறையில் பகிர்வதும் நன்மை தரும் எனலாம்.. விளக்கத்திற்கு நன்றிகள் ஐயா..
 3. உண்மைதான்.. யாழ் இணையத்தில் கூட ஆதித்தய இளம்பிறையன் என்பவரால் 2015 & 2018 வழக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.. ஆனாலும் வழக்கு முடியவில்லை.. இனி மணிரத்தினம் அல்லது ஜஸ்வர்யா தனுஷ் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்ப்போம்..
 4. அவதாரத்தின் நோக்கம் மானிடரை நல்வழிப்படுத்துவது என்றால் இராமாயணம்/இராம அவதாரம் மானிடரை நல்வழிப்படுத்தவில்லை என்று கூறினால் தவறா? ஏனெனில் சீதைகளும், முகமூடி அணிந்த இராமன் பலரும் இன்னமும் வாழ்கிறார்கள்.. ஆனாலும் உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா..
 5. நான் பொன்னியின் செல்வனை முதன்முதலாக வாசித்த பொழுது குந்தவையை எனக்கு அதிகம் பிடிக்கவில்லை, காரணம் சோழ ராச்சிய வளர்ச்சிக்காக அருண்மொழியை அதிகமாக கட்டுப்படுத்தியதும் கொடும்பாளூரின் மகள் வானதியை அதிகளவில் தாங்கிப்பிடித்ததும் .. ஆதித்த கரிகாலனை வெறுத்ததும்.. சங்கதாராவை வாசிக்க இன்னமும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..பார்ப்போம் ..
 6. Taylor Swiftன் பாடல்களை முன்பு அதிகம் கேட்பதில்லை.. இப்பொழுது கேட்கிறேன். Adeleன் பாடல்களை விரும்பிக்கேட்டாலும் Someone Like you மற்றும் Set Fire to the rain பாடல்களில் நான் என் வலிகளை மறக்கமுயற்சிக்கிறேன்.. Khalidன் Don’t Pretend மற்றும் Vertigo பாடல்களையும் விரும்பி கேட்பதுண்டு. உங்களது இந்த ஆங்கில பாடல்கள் திரியில் இன்னமும் பல இனிமையான பாடல்களை எதிர்பார்க்கிறேன்...
 7. எங்கே இன்னமும் Adele வரவில்லை என்று நினைத்தேன்.. நான் Adeleன் பாடல்களைதான் அதிகம் விரும்பிப்கேட்பது.. அதிலும் “Someone like you & Set Fire to the rain “ மிகவும் பிடித்த பாடல்கள்.. Sky fall பாடல்வரிகளும் அழகானவை..
 8. LBGTi பற்றிய எனது கருத்து. LBGTi என்பது இன்றைக்கு தோன்றிய ஒன்று இல்லையே. புராண இதிகாசங்களில் இவர்களை பற்றி உள்ளது. உதாரணமாக அரவான், கூவாகம் திருநங்கைகள் திருவிழா பற்றிய கதைகள். அதே போல பல பேரரசுகளில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உதாரணத்திற்கு ஒன்று: மொகலாய பேரரசின் அரண்மனை, அந்தபுர காவலர்களாக இந்த அரவானிகள் இருந்துள்ளது பற்றிய குறிப்புகள். மற்றும் வாத்சாயணர் நூலின் படி பண்டைய இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் உறவுகள் இருந்ததை வைத்தே மீரா நாயர் காம சூத்திரவை படமாக எடுத்தார். அதே மாதிரி 20 வருடங்களுக்கு முன்பு தீபா மேத்தா சாதரண இரு பெண்களுக்கிடையான உறவை தனது Fire எனும் திரைப்படத்தின் கருப்பொருளாக
 9. நீங்கள் கூறியது போல தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் திறைசேரி சேமிப்பை அதிகரிக்க செய்வதற்காக வரி அதிகரிப்பு, negative gearing சலுகையை இல்லாமல் செய்வது, franking credits cash back திட்டத்தை இல்லாமல் செய்வது போன்ற கொள்கைகள்தான் அக்கட்சியின் தோல்விக்கு காரணங்கள் என்று. அத்துடன் பெருமளவு சுற்றுலாத்துறை மற்றும் கனிமவளத்துறையில் தங்கியிருக்கும் Queenslanders, Adani Coal Mine ஒப்பந்தம் தொடர்பான தொழிற்கட்சியின் மதில் மேல் பூனை போக்கால், அவர்களின் வாக்குகளை லிபரலை நோக்கி திரும்பியதும் பெரியளவிலான வாக்கு சரிவிற்கு காரணம் எனவும், Pauline Hanson’s One Nation மற்றும் Clive Palmer’s United Australia
 10. இந்த பொன்னியின் செல்வனும் சரி , பெரும்பாலான சரித்திர நாவல்களும் சரி உண்மையான சம்பவங்களே. அதே சமயம் கதைக்கு மெருகூட்டுவதற்கு சில கற்பனை கதாபாத்திரங்களையும் உருவாக்கி இந்த கதைகளில் உலாவ விடுவதும் உண்டு. அத்தோடு சரித்திர நாவல்களை எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள், அவை பற்றிய ஆதாரங்கள், கல்வெட்டு குறிப்புக்கள் ஆகியவற்றையும் கற்பனை கதாபாத்திரங்களையும் முன்னுரையிலும் அத்தியாங்களின் இடையிலும் குறிப்பிடுவது வழமை. இந்த கதை இப்பொழுதானே ஆரம்பித்துள்ளது, ஆகையால் இந்த தொடரை தொடருங்கள் உங்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்...
 11. எனக்கு மிகவும் பிடித்த பாடல்... பாடல்வரிகள் அழகானவை.. The Twilight Saga- Breaking Dawn.. நன்றிகள் லாரா..
 12. வித்தியாசமான பதிவு.. goshan_che போலவே எனது சந்தேகமும் Irony- நகைமுரணா? முரண்நகையா?
 13. ஆதித்த கரிகாலன் படுகொலைவழக்கு ... இதற்கவே மீண்டும் ஒரு முறை பொன்னியின் செல்வனை படிக்க ஆரம்பித்துள்ளேன்.. தொடருங்கள்..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.