Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1,121
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

 1. நன்றி கோஷான்.. எனக்கு உங்களைப்போல தைரியமாக எல்லாம் நான் நினைப்பதை எழுத முடிவதில்லை.
 2. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது சமூகத்தில், இந்த உலகில் இவர்களும் ஒரு அங்கம். முன்பு அதிகம் பேசப்படவில்லை அவ்வளவுதான். இரண்டாவது, இன்று இந்த குருக்கள் செய்யாவிட்டால் இன்னொருவர் வருவார், அதுவும் தவிர்க்க முடியாத ஒன்று. அதைவிட இனி அர்ச்சகர் இல்லாதோரும் பூசை செய்யலாம் என்றால் குருக்கள் இல்லாத ஒருவரும் இவர்களைப்போன்றவர்களின் திருமணத்தை நடத்திவிட்டு போகப்போகிறார்கள்.. மன்னிக்கவேண்டும் விசுகு அண்ணா இங்கே ஓரின சேர்க்கையாளர்களை பற்றிய கதைப்பதால் குருக்களை பற்றி கதைத்து என்ன பிரயோசனம் என நினைக்கிறேன். மேலதிகமாக தலைப்பிற்குள் கதைக்கும்படி பெருமாள் அண்ணா வேறு கூறியதால் தலைப்புடன் சம்பந்தமாக எழுதலாம் இல்லையா?
 3. நீங்கள் பண்பான முறையில் கருத்தாடுவது சிறந்தது எனக்கூறுகிறீர்கள், ஆனால் இங்கே அவர்களது தோற்றத்திலிருந்து அவர்கள் தனிப்பட்ட பாலியல்உறவு/திருப்தி வரை எழுதுகிறார்கள்.. ஆண் யார் பெண் யார்? இது எல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம்.. இப்பொழுது குருக்கள் வரை வந்துவிட்டது.. கவலைக்குரிய விடயம் பிந்திய வயது கல்யாணம் மட்டுமல்ல, எங்களது சமூகத்தில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள், நடைமுறைகளாலேயே எங்களது சமூகத்தில் திருமணமாகமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.. அதை முதலில் திருத்த முடியுமா என சிந்தியுங்கள்.
 4. பொதுவாக கூறுவது என்றால் வங்கிகள் கம்பனிகளுக்கு கடனை வழங்கும் பொழுது அவர்களிடம் இருக்கும் சொத்துகளை collateral securities ஆக எடுத்து கடனை வழங்கும். கடனை கட்டமுடியாது போனால் சொத்துகளை தன்வசப்படுத்தி விற்கமுடியும். இந்த அடிப்படையில் சொத்துகளின் பெறுமதியை கணிப்பிட்டு(Loan to Value Ratio) கடனை வழங்கியிருக்கும். அத்துடன் கம்பனிகளுக்கான கடன் தனிநபர் கடனை விட வித்தியாசம் என்பதால் அவற்றிற்கான securitiesம் வேறு. இதுவும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.. முன்னேரே எழுதியிருந்தீர்கள் //பொதுவாக வங்கிகள் தமது வீட்டுக்கடன் மூலம் ஏற்படும் இழப்பை முன்னரகாவே கணித்து அதற்கேற்பசெயற்படுவார்கள்தான் EL (Expected loss)=PD (probability of default) X LGD (loss given default) X EAD (exposure at default) // அதே போலவே கம்பனிகளுக்கான கடன்களிற்கும் கணித்து வைத்திருப்பார்கள்தானே இந்த Evergrande சம்பந்தமாக Adam Khoo தனது காணெளியில் கூறியுள்ளதைப்பார்த்தால் பெரியளவிலான வங்கிகளுக்கு பாதிப்பில்லை, இந்த கம்பனியின் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்களுக்கே அதிக தாக்கம் ஏற்படும் என்கிறார். நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை எழுதியிருக்கிறேனோ தெரியவில்லை. ஆனால் நான் விளங்கி வைத்திருப்பது இதுதான்.
 5. இந்த விளக்கத்தை எழுதியவருக்கும் இணைத்த @கிருபன் உங்களுக்கும் நன்றிகள்.. இன்னுமொரு விடயம், அடிக்கடி இஸ்லாமியர்களை உதாரணம் காட்டுவதால், இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கு எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் அவர்களைப்போல தனியே பெண்களை விளைநிலங்களாக மட்டும் எங்களது குடும்பங்களில் பார்ப்போமா? முடியாது என நம்புகிறேன்..
 6. நல்லதொரு இணைப்பு.. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவர்களுக்கான golden ruleஆக இதை கூறலாமா? “ Don’t invest(buy shares) in companies with the higher debt “..
 7. நான் நேற்று இந்த படத்தைப்பார்த்தேன்.. என்னைப்பொறுத்தவரையில் இந்த மாதிரியான படங்கள் அதிகம் வெளிவரவேண்டும்.. போருக்கு பின் எத்தனை வகையான துன்பங்களிற்குள்ளாக மக்கள் அதிலும் காணாமல் போனவர்களின் வலியை மட்டுமல்ல புனர்வாழ்வு(?) அளித்துவிடுவிக்கப்பட்ட போராளிகளின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் தொட்டு செல்கிறது.. அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக அதே நேரம் சொல்லவந்த விடயத்தை கூறிச்சொல்கிறது. கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாகவே வந்துபோகிறார்கள்..படப்பிடிப்பு இடம்பெற்ற இடங்களை பார்க்கும் பொழுதும், பிண்ணனி இசையும் எல்லாமே வேதனையை தந்தாலும் இவை போன்ற படங்கள் வரவேண்டும். அதுமட்டுமல்ல எனக்கு கவிதா என்ற கதாபாத்திரம் மறைமுகமாக சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வையும் கூறுகிறது. இந்த வேலையில் இருப்பவர்கள் எத்தகைய பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதை கூறுகிறது (படத்தைப்பார்த்தால் இது விளங்கும்). இந்த படத்தை தயாரித்தவர்கள், நடிகர்கள் மற்றும் மற்றைய கலைஞர்களுக்கு நன்றிகள்..
 8. Stefan Christmann won the Collective Portfolio Award. Here, one image shows a family of huddled penguins Collective Portfolio Award, Stefan Christmannன் அந்தாட்டிக்கா emperor பென்குயின் colonyற்கு கிடைத்துள்ளது.. எல்லாமே பிரமிக்கவைக்கும் அழகு https://www.google.com.au/amp/s/www.thenationalnews.com/arts-culture/art/2021/09/22/ocean-photography-awards-2021-winners-stunning-deep-sea-images-unveiled/%3foutputType=amp
 9. மற்றைய நாடுகளை விட அவுஸ்ரேலியாவை அதிகம் பாதிக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அவுஸ்ரேலியாவின் Iron Oreனினை அதிகளவில் இறக்குமதி செய்வது சீனா. இந்த மாதிரி சரிவினால் சீனா இறக்குமதி செய்யும் Iron Oreல் அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது பெருமளவில் அவுஸ்ரேலியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான அரசியல் நிலைப்பாடுகள் பிரச்சனையில் உள்ளது.
 10. உண்மைதான், ஆனால் எல்லா இடங்களிலும் என்று கூறமுடியாது. செலவுகளைப்பற்றி உங்களது கணக்காளரிடம் கேட்டால் அவற்றை எப்படி மீள எடுப்பதை பற்றி கூறுவார்.
 11. நீங்கள் இருவர் கூறுவது சரியே.. ஆனால் இந்த முறையில் இரண்டாவது வீட்டினை(Investment ppty) வேண்டுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு உங்களது வீட்டின் தற்போதைய பெறுமதி Aus$800,000 என்றும் மீதமுள்ள கடன் Aus$300,000 என்றால் உங்களது equity Aus$500,000. இதை வைத்து South Australiaவில் ஒரு unit வேண்டி வாடகைக்கு விட்டால் அது இலாபமா இல்லையா? இவ்வளவும் உங்களுடைய affordability, மற்றும் வங்கிகள் உங்களது வருமான நிலை, வயது, உங்களில் தங்கியிருப்பவர்களின் வயது போன்ற பல காரணிகளை வைத்தே அனுமதிக்கும் ஆனால் உங்களது equityயை பங்குகளில் முதலீடு செய்யும் பொழுது உங்களது பங்கிலாபம் இதனை சரி செய்யமாட்டாதா? நான் நினைப்பது தவறாக இருந்தால் சரியாக விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும்.. நன்றி.
 12. இங்கேயும் 5%மாக இருந்தாலும் 20% deposit போடுவீர்களோயானால் Lending Mortgage Insurance(LMI) தவிர்க்கலாம்.. இதன் காரணமாக first home buyers சில உதவிகளை அரசு செய்கிறது(காலத்திற்கு ஏற்ப மாறுபடும்). அதே போல சில தொழிற்தகமைகள், தொழிகளுக்கு 10% இருந்தால் போதுமானது( வங்கிகளுக்கு வங்கி சில சமயம் இந்த கொள்கை மாறுபடலாம்). நீங்கள் கூறும் Part buy, part rent என்றால் அரசு கூறும் low-income tenants(government housing support allowance)ற்குள் வரும் tenantsற்கு வாடகைக்கு விட்டால் வாடகையை tenant ஒரு பகுதியும் அரசு மிகுதியையும் தருவதா?
 13. இது எனது தனிப்பட்ட கருத்து. அவுஸ்ரேலியாவில் 2011ற்கு பின் வட்டி வீதம் ஏறவில்லை என்பதையும் 2010 ஆண்டின் இறுதி காலப்பதகுதியில் வீடு ஒன்றை வாங்கிய பொழுது இருந்த மதிப்பை விட இன்று வீட்டின் பெறுமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதையும் காணலாம். அத்துடன் என்னைப் பொறுத்தவரை வீட்டின் பெறுமதி சடுதியாக குறைய வாய்ப்பில்லை என்பதால் வீட்டின் மீது முதலிடுவதுதான் எப்பொழுதும் முதலாவது தெரிவாக இருக்கும். அதுவும் owner occupied ஆக வேண்டாமல் investmentஆக வேண்டுவது சில சமயங்களில் நன்மையாக இருக்கும்(இது முற்றிலும் எனது தனிப்பட்ட அபிப்பிராயம், life circumstancesஏற்ப) ஆனால் உங்களது affordabilityற்கு ஏற்ப வேண்டுவது சிறந்ததாக இருக்கும்.. அதே நேரம் இரண்டு வாரங்களிற்கு முதல் WBC Chief Economist Bill Evansன் பேட்டி ஒன்றை வாசித்த பொழுது அதில் அவர் கூறியிருந்தார் “ 2023 ஆண்டின் முதலாவது காலாண்டில் வட்டி வீதம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று கூறுகிறார்.. ஆனால் அதுவும் அதிகளவில் அதிகரிக்காது” என்கிறார்.. https://www.google.com.au/amp/s/amp.theaustralian.com.au/business/bill-evans-westpac-chief-economist-still-getting-the-big-calls-right-after-30-years/news-story/c0cc4db6a1b3e0d8300710a38cf07d9b
 14. நல்லதொரு இணைப்பு.. “Don’t try to predict the future” என்றதற்கு அவரின் உதாரணம் ஆனால் அதிகம் ஆபத்துவிரும்பிகள் அற்றவர்களுக்கு Housing marketல் முதலீடு செய்வது ஆபத்து குறைவானது. அதுவும் இப்பொழுது இங்கே(அவுஸ்ரேலியாவில்) எப்பொழுதும் இல்லாதவாறு குறைந்த வட்டி வீதம் காணப்படுவதால் வீட்டுக் கடன்களை பெருமளவில் குறைக்கலாம்.. வீட்டுகடனிலிருக்கும் மிகையான equityயை வைத்து பங்குகளிலும் சொத்துகளிலும் முதலீடு செய்வது கூடுதலாக உள்ளது.. ஆனால் எப்பொழுது இந்த வட்டி வீதம் ஏறுமுகமாகும் என்பது தெரியவில்லை.. ஏனெனில் இப்பொழுதான் இந்த செய்தியையும் பார்த்தேன் “Australia's biggest bank sounds the alarm on rapid surge in house prices over fears borrowers will struggle to repay their debt” https://www.google.com.au/amp/s/www.dailymail.co.uk/news/article-10023295/amp/The-Commonwealth-Bank-CEO-Matt-Comyn-rising-Australian-house-prices-debt-levels.html குறுகிய கால வீழ்ச்சி மற்றும் ஏற்ற இறக்கங்களுக்கு தயாராகவும் இருந்தால் ஏமாற்றங்களையும் நட்டத்தையும் குறைக்க முடியும்.. உண்மை..
 15. இங்கே பொதுவான சமூகப்பிரச்சனை அதுவும் எங்களது சமூகத்தை பெரிதளவு பாதிக்கும் குடிப்பழக்கம், வறுமை, பிள்ளைகளின் நலன் என்ற விடயத்தைப்பற்றி கருத்தில் கொள்ளாமல், வளமான நாடுகளில் உள்ளவர்களையும் வறுமையில் வாடுபவர்களையும் ஒப்பிட்டும் தவறான எடுத்துக்காட்டுகளையும் கொண்டு எழுதுகிறார்கள்.. இதுவே கணவனின் குடிபோதையும் அடிகளையும் தாங்காத மணைவி கணவனை அடித்திருந்தாலோ இல்லை உயிருக்கு ஆபத்தை விளைவித்திருந்தாலோ இல்லை கணவனின் குடி, வறுமை காரணமாக பிள்ளைகளை வளர்க்கமுடியாமல் பிள்ளைகளை விற்று இருந்தாலோ, தத்து கொடுத்திருந்தாலோ கருத்துக்கள் வித்தியாசமாக அமைந்திருக்கும். அவ்வளவுதான்.. நன்றி.
 16. மிகவும் சரியாக கூறியிருக்கிறீர்கள் சிலர் எங்கள் இனம் அழிகிறது சனத்தொகை குறைகிறது என்பதோடு சரி.. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது வேறுவிடயம். இன்னொன்று சுதந்திரம், சுகாதார சமூக பொருளாதார வசதிகள் உள்ள மேற்கத்தைய நாட்டிலேயே எங்களவர்கள் 3 அல்லது 4 பிள்ளைகளுக்கு மேல் பெறுவதில்லை..அரசும் உதவி தொகை(daycare allowances) கொடுத்துமே 4ற்கு மேல் போகாது.. இந்த நால்வரும் கூட 2 அல்லது 3 மேல் பெறமாட்டார்கள்.. இது யதார்த்தம், ஆனால் அதைப்பற்றி கதைக்கமாட்டார்கள்.. ஆனால் ஊரில் வறுமையில் வாடுவதுடன் விரும்பியோ விரும்பாமலோ பிள்ளை பெற்றும், குடிகார கணவனால் பலாத்காரப்படுத்தபட்டும்,கலைக்கவும் முடியாமல் பெற்று வளர்க்கவும் முடியாமல் கஷ்டப்படும் குடும்பங்களின் நிலையை பார்த்து அவர்கள் நடைமுறையில் சாத்தியமானவற்றை சிந்தித்து இருக்கலாம் எனக் கூறினால் மட்டும்தான் எங்கள் சனத்தொகை குறைகிறது.. இனம் அழிகிறது.. ஓரளவிற்கு பொதுவான/ஸ்திரமான நிலையிலிருந்து பார்த்திருந்தால் - ஒழுங்கான வருமானமும் இல்லை, குடிகார கணவனுடன் வாழும் ஒரு பெண் மனநிலையில் இருந்து பார்த்திருந்தால்- நான் கூறுவது விளங்கும். வருமானமும் இல்லை, குடிக்கு அடிமையான கணவன்.. பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்ப்பது எப்படி என கட்டாயம் யோசித்திருப்பார்கள். ஆனால் குடிகார கணவனுக்கு இதெல்லாம் தலையில் ஏறியிருந்தால் இந்தளவு நிலையும் வந்திருக்காது.. இப்பொழுது தாயினதும் நீங்கள் கூறுவது போல மூத்த ஆண்பிள்ளையிலும் தான் பொறுப்பு வந்துவிழுந்துள்ளது.. அந்த மூத்த பிள்ளையின் வயதினைப்பொறுத்து அந்தப்பிள்ளை எதிர்நோக்கப்போகும் கஷ்டங்களின் சுமையும் வலியும்.. இதுவே மூத்தபிள்ளை பெண்ணாக பிறந்திருந்தால்? இவர்களைப்போல பல குடும்பங்கள் வாழ்கிறது, இல்லையென்பதை மறுக்கவில்லை.. அதற்காக அவர்களது வாழ்க்கையும் இப்படி வறுமையுடன் போகவேண்டும் என விரும்பவும் இல்லை.. தந்தை குடிகாரன் பிறகு கொஞ்ச நாட்களில் மகன்/மகள் சிறுவயதில் திருமணம், சிலசமயங்களில் சட்டரீதியான திருமணங்களும் இல்லை. வாழ்வாதாரத்திற்கு தினக்கூலி என்ன வருகிறதோ அது, பின் உடம்பு அலுப்பு தீர குடி, பின் பிள்ளைகள். அவர்களின் வாழ்க்கை படிப்பு? வேலை? திரும்பவும் அதே வாழ்க்கைவட்டம். பின் தங்கிய கிராமங்களில் நிகழும் கதைகள் .. சில வருடங்களுக்கு முன் ஏழாலையில் உள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்(சிறு வயது திருமணம், கசிப்பு கஞ்சா பாவனை, சுகாதார பழக்கவழக்கங்கள்) அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளைப்பற்றி செய்திகள் வந்ததை கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியாது.. எனது நண்பர்கள் சிலர் field officers ஆக இந்த மாதிரியான இடங்களில் பணியாற்றி உள்ளார்கள்.. சில இடங்களில் விதிவிலக்குகள் இருந்தாலும் இந்த வறுமைக்கோட்டுக்கும் சாதியாலும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை பாருங்கள்.. எத்தனை வீதம் முன்னேறியுள்ளார்கள்? அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லை. அதிலும் இந்த COVID பாதிப்பினால் வருமானமும் இன்றி படிப்பையும் கைவிட்ட பிள்ளைகள் எத்தனை! உதவி கோரி வந்திருக்கும் தகவல்களைப்பார்த்தால் தெரியும்.. அவர்களது வாழ்க்கைதரம் இன்னமும் பின்னோக்கி போயுள்ளது.. வருமானமில்லை, கடன் தொல்லை, குடும்ப சுமை அதனால் தற்கொலை. இந்த செய்தியில் உள்ள குடும்பமும் இதற்குள் அடங்கும்.. வருமானத்திற்கு ஏற்பவே பிள்ளைகளை பெறவேண்டும் என்பதில்லை ஆனால் சிந்தித்து நடந்திருக்கலாம்.. அதனால்தான் பிள்ளை மட்டும் பெற்றால் போதாது அவர்களை பாதுகாப்பாகவும் அவர்களுக்கான சாதராண அடிப்படை வசதிகளான (உணவு, உடை உறையுள் மற்றும் கல்வி) கொடுக்கவேண்டும் இல்லாவிடில் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் சமூகத்தின் பாராட்டுக்காகவும் பிள்ளைகளை பெற்றுவிட்டு, அவர்களை விற்பதால் அல்லது கொல்வதால், அவரகளது உரிமைகளை மறுப்பதாலும் குற்றமே செய்கிறார்கள்.. நான் அவுஸ்ரேலிய வருமுன் வறுமையாலும் குடிகார கணவனாலும் துன்புறுத்தப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், குடும்ப தலைவன் காணாமல் ஆக்கபட்ட பெண்கள் வரை, அவர்கள் உடல்உளவள தாக்கங்கள் அவர்களது பிரச்சனைகள் வரை கருத்துகளை கேட்டும் அவர்களுடன் பழகிய அனுபவங்கள் உள்ளது.. இன்னமும் அவர்களது வாழ்க்கையில் அதிகளவு மாற்றங்கள் இல்லை.. சமூகத்தின் எண்ணங்களிலும் மாற்றமில்லை.. உங்களுக்குதான் ஊர் நிலவரம் என்னைப்பற்றி அதிகம் தெரியும் ஆனாலும் எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.. அந்தப்பிள்ளைகளை நினைத்து மட்டும் மனம் வருந்துகிறேன்.. பிள்ளைகளின் உலகம் வண்ணத்துப்பூச்சியை போன்றது.. அவ்வளவுதான்..
 17. உண்மை.. எப்படியும் கரையில் நின்று பார்க்காமல் கொஞ்சம் கடலுக்குள்ளும் போகலாம்( எப்படியும் lifeguard காப்பாற்றிவிடுவார்கள்) என்பதுதான் நிலைப்பாடு.. இவ்வளவு விடயங்களையும் நேரமெடுத்து இங்கே இணைத்தமைக்கு.. Rogue Trader தொடங்கி Charles Ponzi scams வரை தகவல்களை அறிய முடிந்தது மிக்க நன்றி..
 18. ஏழைதான் கணக்கு பார்க்காமல் பிள்ளையாவது பெற்றுக்கொள்கிறார்கள் என சந்தோசப்படமுடியாது ஏனெனில் அந்தப்பிள்ளைகளின் வாழ்க்கைதான கஷ்டத்தில் உள்ளது உதாரணத்திற்கு இந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டால் 10 பிள்ளைகளில் எத்தனை பிள்ளைகள் விருப்பத்துடன் பிறந்திருக்கும்? அது போகட்டும் அது நடந்து முடிந்த விடயம் ஆனால் இவர்கள் பிள்ளைகளை பெற்றுவிட்டு ஒருவர் இறந்துவிட்டார் .. தாயின் நிலை என்னவாகும் என தெரியாது .. பிள்ளைகளின் கதி? இதில் சந்தோசப்பட எதுவும் இல்லை.. பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா?
 19. இங்கே நீங்கள் கூறும் இடைத்தரகர்கள், வங்கிகள் இல்லாமல் செய்யப்படும் பரிவர்த்தனை.. இது எத்தனை வீதம் நடைமுறையில் உள்ளது? இதனால் வரும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? .. எல்லாவற்றையும் பார்த்தால் இன்னமும் நம்பிக்கை வரவில்லை .. ஆனால் மக்களின் வாழ்க்கையை மாற்றும்.. cryptoவையே நாடுகள் நடைமுறைப்படுத்த யோசிக்கும் பொழுது இன்னமும் இந்த Defi பற்றி நம்பிக்கை ஏற்படவில்லை.. on the note இன்றும் கூட Bitcoin 8% dropped.. இன்றுவரை நான் பாதுகாப்பான முதலீடு என நம்புவது அசையா சொத்துகளையே.. அது ஒரு license ஆக அல்லது காணியாக கூட இருக்கலாம்.. ஆனால் என்னளவில் என் முதலுக்கு மோசம் வரமாட்டாது. அதனால்தான் Shaquille O’Nealன் முதலீட்டு முறைகளை நம்புகிறேன் என்றேன். @Elugnajiru எனது nephew இந்த Bitcoin investment ல் உற்சாகமாக ஈடுபடுவதை அறிந்துகொண்டேன்.. அவர் மூலம் முயற்சித்து பார்க்கலாம்.. நன்றி.
 20. உண்மைதான் கடந்த 2 வருடங்களில் பட்டமளிப்பு போன்றவை நடக்கவில்லை.. ஆனால் மாணவர்களை கேட்டுப்பாருங்கள் அவரகளது பதில் வித்தியாசம்.. ஏனெனில் அவர்கள் இழந்தது வாழ்க்கையின் ஒரு நிலையில் வரும் நினைவுகளை.. சில அனுபவங்கள் எத்தனை பணம் இருந்தாலும் ஈடு செய்ய முடியாதவை.. எல்லாவற்றையும் செலவு/பணம் என்பதுடன் ஒப்பிடுவது சரியல்ல என்பது எனது எண்ணம்.. அவர்கள் என்னதான் படித்து முடித்து வேலையில் அமர்ந்தாலும் இந்த மாதிரியான நிகழ்வுகளை இழந்தது அவர்களுக்கு கவலை தரும் விடயம்.. Paperless, உண்மைதான்.. ஆனால் பட்டமளிப்பு என்பது தனியே paper மட்டும் சார்ந்ததில்லை ..
 21. இந்த Bitcoin உள்ள இன்னொரு பிரச்சனை, இதன் விளங்கமுடியாத பெயர்கள்.. முழுமையாக acronymsம் jargonம் கொண்டதால் பெயர்களை இலகுவில் விளங்கிக்கொள்ளவது கடினம்.. .. மிகவும் தளம்பலான சந்தையை கொண்டதால் நம்பி முதலீடு செய்வது இலாபம் என கூறமுடியாது.. ஆகையால் என்னைப்பொறுத்தவரை பாதுகாப்பான முதலீடு என்பதில் Shaquille O’Neal கூறிய கருத்துடன்தான் உடன்படமுடிகிறது.. “O'Neal says his investing style is simple: He invests only in assets that he believes can change people's lives. "I heard Jeff Bezos say one time [that] he makes his investments based on if it's going to change people's lives” https://www.google.com.au/amp/s/www.cnbc.com/amp/2021/09/10/why-nba-legend-shaquille-oneal-hasnt-invested-in-crypto.html NBA legend Shaquille O'Neal explains why he hasn't invested in crypto Published Fri, Sep 10 2021 8:59 AM EDTUpdated Fri, Sep 10 2021 3:36 PM EDT Jade Scipioni @JADESCIPIONI
 22. அரைகுறையான கருத்தை எழுதியதற்கு மன்னிக்கவேண்டும் ஏராளன்..பெரும்பலான சமயங்களில் நான் நினைப்பதை முழுமையாக எழுதுவதில்லை, வீண் விவாதங்கள்-கல்லெறி படக்கூடாது என்பதற்காக.. ஆனாலும் சில சமயங்களில் எழுத நினைப்பதை எழுதாமலும் இருப்பதில்லை.. அப்படியான ஒரு நிலைதான் இந்த கதையில் என் கருத்து.. முதலில் இந்த கதைபற்றிய எனது எண்ணத்தை எழுதிவிட்டு பின்பும் மனத்திருப்தி ஏற்படாதமையாலேயே மீண்டும் எனது கருத்தை பதிந்தேன்.. அப்பா-மகள் பாசம் என்பதை அழகாக எழுதியிருப்பதாக கூறினாலும் எந்த பெற்றோரும் செய்யக்கூடாத விடயத்தை , குழந்தையை தனியே விடுவது - கற்பனை என்றாலும் கூட நல்ல எடுத்துக்காட்டு இல்லை என்பதால் இந்த கதையே நல்லதொரு கதை என கூறமுடியாது..
 23. நல்ல விஷயம் இந்த COVID நேரத்தில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தேவையில்லை.. ஆனால் முழுமையாக இல்லாமல் செய்வது என்பது கேள்விக்குறியே.. அதேபோல உள்நாடு, வெளிநாடு என்ற பாரபட்சம் இல்லாமல் சகல பல்கலைகழகங்களிலும் இந்த பட்டமளிப்பு வெட்டி நிகழ்வுகளை அடியோடு இல்லாமல் செய்வது நல்லது என்றுதானே கூறுகிறீர்கள், இல்லையா?
 24. இந்த கதை கற்பனை கதையாக இருந்தாலும் கூட எனக்கு இந்த கதையில் வரும் சம்பவம்/செயல் சந்தேகத்தையும் வேதனையையும் தருகிறது.. என்னதான் பணம் உயிர் வாழ தேவை என்றால் கூட இந்த மாதிரி குழந்தையை தனியே விட்டு போவார்களா? கற்பனை என்றாலும் கூட ஏன் இந்த மாதிரி செயல்களை எழுதவேண்டும்? சமூகபொறுப்புணர்வு எழுத்தாளர்களுக்கு வேண்டாமா? இல்லை கற்பனைக்கு பஞ்சம் ஏற்பட்டு எதை எழுதுவது என தெரியாமல் எழுதுவது, நியாயப்படுத்துவது!!!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.