Jump to content

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1456
 • Joined

 • Last visited

 • Days Won

  6

Posts posted by பிரபா சிதம்பரநாதன்

 1. 1 hour ago, vasee said:

  மறுநாள் செவ்வாய்கிழமை வட்டி விகித அறிவிப்பு வெளிவர உள்ளது, 0.50 விகித அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது

  அப்படித்தான் சொல்கிறார்கள்.. பார்ப்போம்.

  மிக்க நன்றி vasse.. 

 2. 1 hour ago, ரஞ்சித் said:

   

  மிக அண்மைக் காலம்வரை, அவுஸ்த்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தகமை மூலமே குடிபெயர்ந்திருக்கிறார்கள்( இப்படிச் சொல்வதால், இங்கே இருக்கும் அனைவருமே அப்படி வந்தவர்கள் என்றோ அல்லது வேறு வழிகளில் வந்தோர் தகமையற்றவர்கள் என்றோ நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல). இப்படி வந்தவர்கள் தமது பிள்ளைகள் ஒரு வைத்தியராகவோ அல்லது ஒரு கணக்காளராகவோ வரவேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருக்கிறார்கள். இவ்வேலைகளால் தம்மையொத்த காலத்தில் இங்கே குடியேறிய ஏனைய "படித்த" தமிழர்கள் மத்தியில் தமக்குக் கிடைக்கும் அந்தஸ்த்து மற்றும் இவ்வேலைகள் மூலம் தமது பிள்ளைகள் ஈட்டப்போகும் பெருமளவு வருமானம் ஆகிய இரண்டையும் குறியாக வைத்தே எப்படியாவது தமது பிள்ளைகள் இவற்றுள் ஒன்றிற்காவது செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

  வெளிப்படையாகப் பார்த்தால், எந்தவொரு அக்கறையுள்ள பெற்றோரும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எடுக்கும் முயற்சிகள் என்று இவற்றைப் பார்க்கும்போது தோன்றும். ஆனால், அங்கேதான் பிரச்சினையும் இருக்கிறது. 

  சிட்னியில் குறைந்தது மூன்று முறையாவது பிள்ளைகள் தமது கல்விகற்கும் காலத்தில் கடுமையான பரீட்சைகளுக்கு தயாராவதில் தமது பள்ளிப்பருவத்தை கழிக்கிறார்கள். நான்காம் வகுப்பில் நடக்கும் ஒப்பர்சுனிட்டி பரீட்சை, 6 ஆம் வகுப்பில் நடக்கு செலெக்டிவ் பரீட்சை மற்றும் 12 ஆம் ஆண்டில் நடக்கும் பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சை . இவை மூன்றுமே மாணவர்கள் மேல் மிகக் கடுமையான கற்றல்ப் பழுவையும், உடல் உள ரீதியான சுமையினை ஏற்றிவிடுகின்றன. 

  இவற்றுள் முதலிரு பரீட்சைகளும் இந்நாட்டில் இயல்பாகவே கெட்டித்தனம் உள்ள பிள்ளைகளை இனம்கண்டு அவர்களுக்கான சிறப்புப் பாடநெறியினை பெற்றுக்கொடுப்பதற்காக என்று அரசாங்கம் சில பாடசாலைகளை நடத்திவரும் வேளையில், தமது பிள்ளைகளை கட்டாயப்படுத்தி, அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் கடுமையாக உழைக்கப் பண்ணி எப்படியாவது இப்பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளையும் சேர்ப்பதில் எம்மில் பல பெற்றோர்கள் வெற்றியும் கண்டுவிடுகின்றனர். 

  இவ்விசேட வகுப்புகள் அனுமதிக்கப்படும் பிள்ளைகள் பாடசாலையிலும், தனியார் வகுப்புகளிலும் கொடுக்கப்படும் சிறப்புப் பாடங்கள் மற்றும் அவற்றுக்கான பயிற்சிகளில் தமது விருப்பத்திற்கு மாறாக ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்படுவதோடு, பெற்றோர், பாடசாலை ஆகிய இரு தரப்பினரிடமிருந்தும் மிகக் கடுமையான அழுத்தங்களையும், சுமையினையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விடுகிறது.

  பணம் கட்டி ஓடவிடும் குதிரைகள் போல் இக் கல்விப் பந்தயத்தில் ஓடவிடப்படும் பிள்ளைகளில் ஒரு சிலர் இலக்கினை அடைந்தபோதும், பலர் பாதிவழியில் சோர்வடைந்து, மன உளைச்சலாலும், விரக்தியினாலும் கடுமையான பாதிப்புக்களை சந்திக்கின்றனர்.

  வைத்தியர் , கணக்காளர் ஆகிய துறைகள் தவிர்ந்த ஏனைய துறைகளை ஏறெடுத்துக் கூடப் பார்க்க மறுக்கும் பெற்றோர், தமது பிள்ளைகளைத் தாம் கட்டாயப்படுத்தி இவற்றுள் ஒன்றில் அமுக்கிவிடுவதை தாம் தமது பிள்ளைக்குச் செய்யும் ஒரு நற்காரியமாகவே பார்க்கத் தலைப்படுகின்றனர். இதனால், இந்த நோக்கினை அடைவதற்கு எந்த எல்லைவரைக்கும் சென்றுவர பெரும்பாலான பெற்றோர் ஆயத்தமாகவே இருக்கின்றனர். அந்த இலக்கினை அடைவதற்கு பிள்ளைகள் கூறும் காரணங்கள, சங்கடங்கள் குறித்த முறைப்பாடுகள் இவர்களைப்பொறுத்தவரையில் முட்டுக்கட்டைகளாக இருப்பதால், அவற்றை முற்றாக உதாசீனம் செய்வதோடு, தமது பிள்ளைகள் மீதான அழுத்தத்தினை இன்னொரு மடங்கு அதிகரிக்கவும் இதன்போது இவர்கள் தவறுவதில்லை. 

  ஈற்றில் வீட்டிலும் பாடசாலையிலும் தனது பிரச்சினைகள் குறித்து எவரும் அக்கறைப்படாத நிலையில் பிள்ளை ஒன்றில் தவறான நட்பு வட்டத்தில் சிக்கிக் கொள்கிறது அல்லது தன வாழ்வினை முடித்துக்கொள்ள எத்தனிக்கிறது.

  இவற்றுக்குப் பல உதாரணங்கள் எமது ஈழத் தமிழ்ச் சமூகத்திலேயே இங்கு இருக்கின்றன. 

  ஈற்றில், ஏதோ ஒருவகையில் பிள்ளையின் மனநிலை புரிந்தோர் பெற்றோரைக் கட்டாயப்படுத்தி மனோதத்துவ நிபுணர்களை அணுக வைக்கும்போது, தவறு எங்கே இருக்கின்றது என்பதை இலகுவாகக் கண்டுகொள்ள முடிந்துவிடுகிறது. ஆனால், அந்தக் கட்டத்தில் பிள்ளையின் மனதில் மாற்றமுடியாத காயமோ அல்லது நிலையான தக்கமோ ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் ஐய்யமில்லை. 

  தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் செல்வச் செழிப்புடனும், அந்தஸ்த்துடனும்  வாழவேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக பிள்ளைகளை கட்டாயப்படுத்தி, இயலாத பந்தயத்தில் ஓடவிடும் பெற்றோர் இன்னமும் எம்மில் இருக்கின்றனர். தமது பிள்ளை தாம் விரும்பும் துறைக்குச் செல்வதை உறுதிப்படுத்த எந்த எல்லைவரைக்கும் செல்லத் தயாராக இருப்பவர்கள் இவர்கள். இதனை அடைவதற்காக பிள்ளை எந்தவிதமான உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்பட்டாலும் கூட, அதனை விலையாகக் கொடுத்து இலக்கை அடைவதில் இவர்களுக்குப் பிரச்சினை இருக்கப்போவதில்லை. 

  இப்படியான பெற்றோருக்கு இவ்வகையான விளக்கங்கள் நிச்சயம் தேவை. ஆனால், அவர்களை இந்த புரிதலுக்கு எப்படி வரப்பண்ணப்போகிறோம் என்பதே சவால்தான். 

  எங்களது அவுஸ்ரேலிய தமிழ் சமூகத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள்.. அது மட்டுமல்ல இங்கே உங்களது கருத்தினை பகிர்ந்தமைக்கும் நன்றிகள்.

  நீங்கள் கூறியபடி பெற்றோருக்கு விளங்க வைப்பது ஒரு சவால்தான். அதனால்தான் இந்த தடம் உறுப்பினர்கள கூட பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பிழையென ஒரு போதும் கூறவில்லை, ஆனால் அவர்கள் கூற வருவது பெற்றோரது அனுகுமுறை, இளையோரின் எதிர்பார்ப்பினை விளங்கிக் கொள்ளல், பிரச்சனைகள் வருமிடத்து எப்படி உதவிகளை நாடி ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க முயல்வதே.. 

   

  1 hour ago, ரஞ்சித் said:

  தாயகத்தில் இருக்கும்வரை சிறுவர்களின் அல்லது இளவயதினரின் உளவியல் பிரச்சினைகள் குறித்து எம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? அல்லது எத்தனைபேர் இதுகுறித்து உதவிகள் கோரியிருக்கிறோம்? "விசர்" என்று நாம் பொதுப்படையாக விளிக்கும் சொல்லுக்கு அப்பால், இதற்கான தேவை குறித்தோ, அல்லது இதன் உண்மையான அர்த்தம் குறித்தோ சிந்தித்திருக்கிறோமா? இல்லையே? 

  இல்லை.. அதனால்தான் அங்கே உருவாகிக்கொண்டிருக்கும் பல உளவள சம்பந்தமான பிரச்சனைகளை இலகுவில் விட்டுவிட முடியாது என நம்புகிறேன். அவர்களுக்கும் ஏதோவொரு வகையில் இந்த மாதிரியான உதவிகள் கிடைக்கவேண்டும் என விரும்புவதாலேயே தடம் பற்றி இங்கே பதிந்துள்ளேன். 

  • Thanks 1
 3. 1 hour ago, ரஞ்சித் said:

   

  பலரும் பேச விரும்பாத தலைப்பைத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பரவாயில்லை, உங்கள் துணிச்சலைப் பாராட்டவே வேண்டும்

   

  துணிச்சலா???

  எனது தந்தை அடிக்கடி கூறுவார் “பிள்ளை நீயொரு பயந்தாங்கொள்ளி, உன்னை நினைத்துதான் எனக்கு கவலை என்று” 

  நீங்கள் என்னவென்றால் நான் துணிச்சல் உடையவள் என்கிறீர்கள்.. நல்ல பகிடிதான்

  • Haha 1
 4. 3 hours ago, vasee said:

  ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளை விட புதிதாகக்கட்டப்படும் வீடுகள் தற்போதய விலையினை விட 40% அதிகரித்த விலையிலேயே கட்டமுடியும்.

  Westpac கணிப்புபடி சந்தை விலையில் 10 - 20 விகிதம் சரிவடைதல் என்பது நடைமுரையில் புதிதாகக்கட்டப்படும் வீட்டின் விலைகளுக்கு 50% விகிதத்தில் இலிருந்து 60% வரை குறைவடையும் (புதிதாகக்கட்டப்படும் வீடுகள் தற்போதய விலையினை விட 40% அதிகரித்த விலை) அதற்கு வாய்ப்பில்லை எனக்கருதுகிறேன்.

  இந்த காரணங்களினாலேயே விலை இறங்க வாய்ப்பிருப்பதாக நான் நம்பவில்லை, மற்றது 2020 முதல் காலாண்டில் அவுஸ்திரேலிய அரசு மொத்த தேசிய உற்பத்தி -7% சரிந்த போது, அவுஸ்ரேலியா பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் என்று அவுஸ்ரேலிய அரசு கூறியிருந்த போது அப்படி நடக்காது என்று நான் எதிர்வு கூறியிருந்தேன்😀

  புதிதாக வீடு கட்ட தொடங்குபவர்கள் நீங்கள் கூறியபடி பல பிரச்சனைகளை எதிர்வுகொள்கிறார்கள். ஆனாலும் எத்தனை வீதமாக குறைந்துள்ளது என்ற தரவை நான் கவனிக்கவில்லை. விலை அதிகரித்துள்ளது அது மட்டுமல்ல கட்டட துறையிலும் வீழ்ச்சி உள்ளது. 

  இங்கே நான் இணைத்துள்ள செய்தி இணைப்புகளில் கூட வீட்டின் பெறுமதி குறைந்து வருகிறது எனவும் இன்னொரு வட்டி வீத உயர்வையும் கூறியுள்ளார்கள்.. 

  பார்ப்போம்..

  https://amp.smh.com.au/property/news/home-values-drop-as-interest-rates-costs-of-living-squeeze-buyers-20220630-p5axxh.html

   

  https://7news.com.au/politics/borrowers-set-for-another-big-rate-rise-c-7387520.amp

   

  3 hours ago, vasee said:

  நான் அவதானித்த வகையில் நீங்கள் ஒரு துறைசார் பொருளாதார கல்வி பின்புலம் கொண்டவர் என கருதுகிறேன்.

  உங்களைப்போல ஆழமாக விஷயங்களை அறிவதில்லை, ஆனாலும் அடிப்படை அறிவு கொஞ்சம் உள்ளது. அவ்வளவுதான். மற்றப்படி இவற்றை வாசிப்பது ஒரு ஆர்வத்தினால் மட்டுமே. 

  • Like 1
 5. On 30/6/2022 at 21:37, கிருபன் said:

  தமிழ் தெரிந்தும் உங்களுக்கு நான் எழுதியது புரியவும் இல்லை, விளங்கவும் இல்லை! 

  நான் என்னைக் குறை சொல்வதாக நினைக்கவும் இல்லை. எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

  பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டி வளர்க்க நேரமும், சூழ்நிலையும் இருக்கவில்லை. தமிழ் எப்போதும் இரண்டாம் மொழியாகவே அவர்களுக்கு இருக்கும் என்பதால் அவர்களுக்கு  விருப்பம் இல்லாததை திணிக்கவும் முயலவில்லை. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிக்கூடம் போனார்கள், எழுதப் பழகினார்கள். யானை என்று எழுதுவார்கள் ஆனால் அது என்னவென்றால் தெரியாது. 

  எந்த மொழியையும் படிக்கவேண்டும் என்றால் அதில் பிரதானமானமான  விடயங்கள் இருக்கின்றன.

  பேசுதல்

  கேட்டல் (கிரகிப்போடு)

  வாசித்தல் (கிரகிப்போடு)

  எழுதுதல்

  இதில் வாசித்தல், எழுதுதலைத் தவிர்க்கவேண்டும் என்றால் பாடசாலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் தமிழ் தெரிந்தவர்களுடன் பேசினாலே போதும். ஆனால் மொழியைக் கற்பது பேசவும், கேட்கவும் மாத்திரம் இல்லை.

  புலம்பெயர் நாடுகளின் தமிழில் சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் மொழிபெயர்ப்பு முக்கியமான ஒரு விடயம்.  @மெசொபொத்தேமியா சுமேரியர் இதைப் பற்றி தெளிவாகச் சொல்லக்கூடும். 

  ஆகவே, ஏன் தமிழ் வேண்டும் என்று கேட்டால் தமிழை அன்றாடம் பாவிக்கவேண்டியவர்களுக்கு தமிழ் வேண்டும். பாட்டன், பூட்டியோடு பேச மட்டும்தான் தமிழ் தேவை என்று நினைக்கும் பழசுகள் மற்றைய மொழிகளை படிப்பது நல்லது!

  @கிருபன்.. மிக்க நன்றி.. 

   

 6. 7 hours ago, ஈழப்பிரியன் said:

  பிள்ளைகள் பிறந்து 3-4 மாதங்களிலேயே தனியறைக்குள் தள்ளிவிடுகிறார்கள்.

  இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம்.

  நான் நினைக்கவில்லை, பிள்ளைகள் பிறந்து 3 - 4 மாதங்களிலேயே தனியறைக்குள் விடுவது ஒரு காரணம் என்று. அதிலும் எங்களது சமூகத்தில் இதற்கான சாத்தியங்கள் குறைவு என்றே நினைக்கின்றேன். தரவுகளும் என்னிடம் இல்லை.

  சரி அப்படி பிறந்து  3 - 4 மாதங்களிலேயே தனியறைக்குள் விட்டாலும் கூட வளரும் பெற்றோர் பிள்ளைகளின் உறவு, இவர்களுக்கிடையேயான தொடர்பாடல் நெருக்கம், பிள்ளைகளின் தன்மைக்கு ஏற்ப, அவர்களின் செயல்திறனிற்கு ஏற்ப வழி நடத்துவது போன்றனவும் தாக்கம் செலுத்தும் என நம்புகிறேன். 

  • Like 1
 7. 44 minutes ago, ஈழப்பிரியன் said:

  நல்லதொரு பதிவு.
   

  நன்றி அங்கிள்.. கடந்த சில மாதங்களாக பதின்ம வயதினரின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. பதின்ம வயதினருக்கு ஏற்படும் சில சிக்கல்களை பெற்றோரிடம் வந்து கூறுவதில்லை, அதற்கான சூழலையும் பெற்றோர்கள் கொடுப்பதில்லை (விதிவிலக்கான பெற்றோரும் உள்ளனர்). இந்த பிள்ளைகள் போக்கிடம் தெரியாமல் தவறான நட்புடன் சேரல் இல்லாவிடில் முழுமையாக ஒதுங்குதல் போன்ற நிலைகளை அவதானிக்க முடிகிறது. அதனால்தான் இதனை இணைத்தேன்.
   

  எங்களது சமூகத்தில் மனவள சம்பந்தமான பிரச்சனைகளை வெளியே கதைக்க இன்னமும் தயங்குகிறார்கள். இது சம்பந்தமான வேலைகளில் ஈடுபடுவோரை சுட்டிகாட்டி அந்த psychologistற்கு தான் பிரச்சனை, இந்த பிரச்சனைகளை பெரிது படுத்த தேவையில்லை, வெளியே சொன்னால் அவமானம் என blackmail செய்வது etc என ஏதாவது காரணங்களை கூறி தட்டிக் கழித்து விடுவார்கள். பிறகு ஏதாவது நடந்த பின் வேதனைப்படுவார்கள். இந்த நிலை மாறவேண்டும். எங்களுக்கு இருக்கும் வசதிகளை நாங்கள் பயன்படுத்தவேண்டும். அவ்வளவுதான்

   

  • Like 2
 8. 25 minutes ago, Kadancha said:

   

  1 விடயத்தில், எப்போதும் சொத்துக்களை ஆறுதலாக, நிதானமாக அணுகுவதே நல்லது. உரியவருக்கு சேரும் வாய்ப்புகள் மிக அதிகமாகும்.  
    
  நீங்கள் இதை சொல்லத்தான் தெரிகிறது, உரிமை கோரப்படாத  அரச நில சொத்துக்களை அல்லாத சொத்துக்களை  (சிங்களவருக்கு ) எடுப்பதற்கும் வசதியாக இருக்கும் நோக்கில் மாற்றப்படுகிறதோ என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

  நன்றி கடஞ்சா!

  2வது நிலை இலகுவில் மாறப்போவதில்லை. ஆனாலும் நகரப்புறங்களில் கொஞ்ச மாற்றம் உள்ளது.

  1வது நிலை. காணியினை விற்று வாழ்வாதாரத்தை கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கும் இதனால் ஏதும் பிரச்சனைகள் இருக்கலாம் என்பதால்  இந்த சட்டத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார நிலைக்கு ஏற்ப அணுகுவதே சரி என சில சமயங்களில் நினைக்க தோன்றுகிறது.  

  2018/2019ல் நான் குறிப்பிட்ட வக்கீல் கூறியபொழுதுதான் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஆனாலும் அதன் உள் நோக்கம் இந்த மாதிரி சிங்களவருக்கு வசதியாகத்தான் இது மாற்றப்படுகிறது என அப்பொழுது நினைக்கவில்லை. இப்பொழுது அதற்கான சாத்தியங்கள் இருப்பதை அறியமுடிகிறது. 

   

 9. 'தடம்' அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓர் அரசு சாரா நிறுவனமாகும். இவர்கள் இங்கு வாழும் தமிழ் சமூகத்தின் மன ஆரோக்கியம் சம்பந்தமான வழிகாட்டல்களை வழங்க தயாராக உள்ளனர். 

  தடம் என்ற பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்தமைக்கு காரணத்தை பின்வருமாறு கூறுகிறார்கள்👇🏽

  “நம் ஒவ்வொருவரின் தடமும் வேறுபட்டவை. நாம் தனித்தோ அல்லது நமது குடும்பங்கள், நண்பர்களுடன் இணைந்தோ நமது தடங்களை பதித்திருக்கலாம். எந்த வகையை நாம் தேர்ந்து எடுத்திருந்தாலும் நமது வாழ்வின் பயணங்கள் நீண்டவைகளாவும், நெளிவு சுளிவுகள் நிறைந்தும், பல சவால்கள் உடையனவாகவும், மிகவும் கடினமாகவும் இருந்திருக்கலாம்.” 

  அவர்களின் நோக்கம்👇🏽

  //'தடம்' மனநலம் பற்றிய கலந்துரையாடல்களை இயல்பாக்கி உதவிகள் தேடும் வழிமுறைகளை சுலபமாக்கி உதவி தேவைப்படுவோர்க்கு உதவிகள் செய்து ஓர் சிறந்த மாற்றத்தை எங்கள் சமூகத்தில் ஏற்படுத்துதை நோக்கமாக கொண்டுள்ளது.//  

  இந்த தடத்தில் உங்களோடு, உங்களுக்கு உதவியாக பயணிப்பவர்களில் அனேகர் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழ் இளைஞர் யுவதிகள். அவர்களுக்கு எங்களுடைய சமூகத்தைப் பற்றி எங்களது வேர்களைப் பற்றி தெரிந்துள்ளமை குறிப்பிடதக்கது. 

  நான் இதனை இங்கே இணைத்தமைக்கு காரணம், இன்று எங்களது சமுதாயம் அதிலும் பாடசாலை மாணவர்கள் 
  எதிர் கொள்ளும் மனவள நெருக்கடிகளில் இருந்து வெளியேற, மன நலனை பாதுகாக்க உதவும் என்ற நோக்கத்தில் மட்டுமே ஆகும்.. 

  இவர்களது கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றியிருந்தேன், அவர்களுக்கு எங்களது சமூகத்தைப் பற்றி நன்கு தெரிந்துள்ளார்கள் என்பதையும் விளங்கிக்கொண்டேன். இவர்கள் Facebook, Instagram போன்றவற்றிலும் இருப்பதால் இவர்களைப் பற்றி மேலும் அறிய உதவும்.. இவர்களது தளத்தில் நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் உளவளம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வழிகாட்டல்கள், கட்டுரைகள் என பல தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உண்டு. வாசித்து பயன் பெறவும்.

   

  https://thadam.com.au/


  நன்றி.. 

  • Like 5
  • Thanks 3
 10. 12 hours ago, vasee said:

  முக்கிய 4 வங்கிகளும் தமது வீட்டு விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக் சிட்னி மோர்னிங் கேரல்டில் கட்டுரை வந்திருந்தது.

  அதில் குறிப்பாக வெஸ்ட்பக் வங்கி ஆய்வாளர் 10% இலிருந்து 20% வரை விலை வீழ்ச்சி அடையலாம் என எதிர்பார்க்கிறார்.

  பணவீக்கம் ஆண்டிறுத்க்குள் 6% எட்டும் எனவும் அதனால் ஏற்படப்போகும் வட்டி விகித அதிகரிப்பினடடிப்படையிலேயே வீட்டு விலை தொடர்பான எதிர்வு கூறியிருந்தனர்.

  அதே நேரம் மே மாதத்தில் கடனட்டையில் செய்யப்படும் செலவு குறைவடைந்துள்ளது (கடனட்டை வட்டி வீதம் பெரும்பாலும்  இந்த வட்டி விகித அதிகரிப்பால் மாற்றம் ஏற்படாதது என நினைக்கிறேன் ஏனெனில் ஏற்கனவே அதிகரித்த வட்டியில்தான் கடனட்டை உள்ளது ( என்னிடம் கடனட்டை இல்லை அதனால் விபரம் தெரியாது).

  சில்லறை வர்த்தக செலவீடு இந்த வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தது, அதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

  RBA  புள்ளி விபரப்படி கட்டுமான விலைகள் அதிகரித்துள்ளது, பொருள்களை எடுத்து செல்லும் செலவு 2019 இலிருந்ததை விட 5 மடங்காக அதிகரித்துள்ளது அத்துடன் 35% காலவிரயம் பொருள்களை நகர்த்துவதில் ஏற்பட்டுள்ளது.

  வீடுகள் காலியாக உள்ள நிலை குறைவடைந்துள்ளதுடன் வீட்டிற்கான வழங்கல் குறைவடைந்துள்ளது.

  இவற்றினடிப்படையில் பார்க்கும்போது வீட்டின் விலைகள் 10% இலிருந்து 20% வரை வீழ்ச்சியடையுமா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. 

  வீட்டு விலைகள் குறையும் என்றுதான் நம்புகிறேன். கடந்த நிதியாண்டு(21/22) கடன் வழங்கல் நடவடிக்கைகளில் பாரிய மாற்றங்கள் இல்லை. எதிர்பார்த்த அதிகரிப்பும் இல்லை. மேலும் நேற்று காமன்வெல்த் வங்கி வீட்டுக் கடனிற்கான fixed rate 1.4% சடுதியாக உயர்த்திவிட்டது. இனி மற்ற வங்கிகளும் இதனை பின் தொடரலாம். கடந்த சில வாரங்களாக வணிக கடன் வீதங்களும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

  மேலும் நீங்கள் கூறியபடி கட்டுமான விலைகள் அதிகரித்துள்ள அதே நேரம் Metricon போன்ற பிரபல்யமான கட்டிட நிறுவனத்தின் நிலையும், வேறு சில விக்டோரியா கட்டிட நிறுவனங்களும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றன. இதனால் வங்கிகளும் சில புதிய விதிகளை கொண்டுவருகிறது. எல்லாமே சிக்கலாக உள்ளது.. 

  அத்துடன் விலைவாசி ஏ்ற்றத்திற்கு ஏற்ப சம்பள அதிகரிப்பும் இல்லை. Inflation rate விட minimum wage rate மிகவும் குறைவாகவே உள்ளது. Inflation rate சரியாக minimum wage rate கூட்டினாலும் பிரச்சனைதான்

  இவையெல்லாம் சேர்ந்து வீட்டின் விலையில் தாக்கத்தை செலுத்தும் என நினைக்கிறேன். 

  இங்குள்ள 4 முக்கிய வங்கிகளின் பொருளியல் வல்லுனர்களில் Westpacன் Chief Economist Bill Evans தான் இந்த துறையில் மிக நீண்டகால அனுபவம் உடையவர்(30 வருட காலம்), இன்று வரை அவரது எதிர்வுகூறல்கள் பிழையானது இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்😊.. 

 11. 21 hours ago, Kadancha said:

  உண்மையில், கிராம புறங்களில், இது காணி  சொந்தம் கொண்ட சாதியினர் மற்ற சாதியினர் (காசு இருந்தாலும்) வாங்குவதை தடுப்பதத்திற்கு சட்ட பூர்வமாக உதவுகிறது.

  இதை நான் அப்பின்மையில் தென்மராட்சி பகுதிகளில் நடை பெறுவதாக கேள்விப்பட்டேன்.   இது உண்மையில, அந்த சட்டத்தை துர்பிரோயோகம் செய்வது

  இரண்டு வருடங்களிற்கு முன்பு, தனிப்பட்ட விடயம் ஒன்றிற்காக வக்கீல் ஒருவருடன் கதைத்த பொழுது, இந்த தேச வழமை சட்டம் தற்போதைய நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட/காணாமல் போன குடும்ப தலைவனின் குடும்பத்திற்கு நன்மை தரவில்லை என்றார்.. ஆனால் அது இருப்பதுதான் நல்லது என்கிறீர்கள்.. உண்மையில் இந்த தேச வழமை சட்டம் எனக்கு விளங்காத ஒன்று.. 

  On 30/6/2022 at 17:18, ரஞ்சித் said:

   

  எத்குக்கும் உயிலை எழுதி வைக்கச் சொல்லுங்கோ. எதுக்கு தேவையில்லாத பிரச்சினையெல்லாம்? என்ன நான் சொல்லுறது?

  ஒரு பிரச்சனையும் இல்லை, எழுதிடலாம்.. 

 12. 10 hours ago, ஏராளன் said:

  19. தந்தை சொத்துக்களை தமது பிள்ளைகளுக்கு கையளிக்காது உயிரிழக்கும் பட்சத்தில், அந்த சொத்து மூத்த ஆண் பிள்ளைக்கு சேரும் என்ற சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, மூத்த பிள்ளைக்கு சொத்துக்கள் சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  நான் நினைத்திருந்தேன் பிள்ளைகளுக்கு சமமாக பகிரப்படும் என்றும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் சொத்துக்கள் இருக்குமாயின் அது நீதிமன்றிற்கு போய்(உயில் இல்லாத பட்சத்தில்), அதன் உத்தவரவின் படி பிரிக்கப்படும். இந்த காலகட்டத்தில் பத்திரிக்கையில் கூட இது பற்றி அறிவிக்கப்படும், ஏனெனில் வேறு யாராவது உரிமை கோரி வரக்கூடும், அப்படி வந்தால் அவர்களுக்கும் பிரிக்கப்பட்டு நீதி சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவை இருப்பதாக..

  இவர்கள் என்ன வேற மாதிரி சொல்கிறார்கள்

 13. 16 minutes ago, goshan_che said:

  எனக்கு இலங்கை மக்களை இதற்கு படிபடியாக “பிச்சை வேண்டாம் நாயை பிடி” என்ற வகையில் தயார் செய்வதாகவே படுகிறது.

  இரு நாட்களுக்கு முன், எனது தந்தையுடன் கதைத்த பொழுது, இலங்கையில் இந்திய நாணயத்தை உபயோகிக்கும் சாத்தியம் பற்றி கூறிவிட்டு அப்படி போனாலும் பரவாயில்லை எனக் கூறினார் ஏனெனில் சனம் சொல்லமுடியாத கஷ்டங்களை அனுபவிக்கிறது என்று.. ஆனால் கடஞ்சா இங்கே எழுதியதுதான் நினைவிற்கு வந்தது, அதனைப்பற்றி மெதுவாக அவரிடம் கூறிய பொழுது.. கொஞ்சம் யோசித்தார்.. ஆனால் பொதுவாக சாதாரண மக்கள் இந்த பிரச்சனையில. இருந்து மீள அதுதான் வழி என யோசிக்க தொடங்கிவிட்டார்கள் போல உள்ளது.. அரசாங்கத்தில் நம்பிக்கை அறவே போய்விட்டது..

 14. 34 minutes ago, ரஞ்சித் said:

  இன்று நீங்கள் செய்த கணக்கைக் காட்டுங்கள் பார்க்கலாம் ?" என்று கேட்டார். கொப்பியில் கணக்கை எழுதியதைத் தவிர பதிலளிக்கும் எண்ணமே இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்த எங்கள் இருவரையும் அவர் பார்த்த பார்வையிலேயே  கூணிக் குருகிப் போய்விட்டேன். அதுவும், பாடசாலையின் மிகவும் பிரபலமான (அழகுக்காகத்தான்) சின்னையா டீச்சர் உங்களை ஒரு ஜந்துவைப் பார்ப்பதுபோலப் பார்த்தால் வேறு எப்படியிருக்கும்?

  மண்ணுக்குள் புதைந்து போயிருந்திருக்கமாட்டோமோ என தோன்றியிருக்கும்..😂..

  நான் படித்தது பெண்கள் கல்லூரி ஒன்றில்(நல்லகாலம்).. அங்கே ஆண் ஆசிரியர்கள் இல்லை😞.. ஒருதரம் அருமையாக ஒரு ஆண் ஆசிரியர் வந்திருந்தார்(குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும்).. அப்பொழுது நாங்கள் பதின்ம வயது மாணவிகள் .. இப்படித்தான் ஏதாவது குளறுபடி செய்து பிடிபட்டால் மிகவும் அவமானமாக இருக்கும்(அப்பொழுது).. இப்ப நினைத்தால் sillyயாக தெரியும்.. 

  சில ஆசிரியர்கள் எங்களது எண்ணங்களை விட்டு இலகுவில் மறைய மாட்டார்கள். கல்லூரி நினைவுகளை மீட்டும் ஒரு கதை.. 

  தொடருங்கள்..

   

  • Thanks 1
 15. 5 hours ago, goshan_che said:

  என்னது cheeky யா? 

  சீரியல் கில்லர்🤣.

  பசிக்காக இன்றி fun க்கு கொலை செய்யிற ஆள் 🦷🧛‍♂️🐲🩸

  எனக்கென்னவோ முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு மற்ற பிராணிகளை கொலை செய்கிறது போல தெரிகிறது.. 

  சரி போகட்டும் Weasel- The Night Stalker !!😊

  B619688-D-F338-4-A52-BEDB-F7-CA076-E0057

   

  • Haha 1
 16. அதானி குழுமம் இயற்கையை, வளங்களை பற்றி கவலை கொள்ளாது கொள்ளையடிக்கும் நிறுவனம். அவுஸில் இவர்களுக்கு எதிராக வழக்கு உள்ளது. வடபகுதியில் கொடுத்தால் கேட்க ஆளில்லை தானே, என்பதால் இலகுவாக deal முடியலாம்.

 17. 23 minutes ago, goshan_che said:

  பரியோவான் ஏனைய உள்ளூர் அமெரிக்கன் மிசன் பள்ளிகளுக்கும்,

  சம்பத்தரிசியர் ஏனைய ரோமன் கத்தோலிக்க பள்ளிக்கும் மாறுவார்கள் என நினைக்கிறேன்.

  முக்கிய பாடங்களை  zoom மூலம் செய்யலாம்.

  இருக்கலாம்.. பாவம் பிள்ளைகள்.. 2019ல் பாடசாலையை தொடங்கியவர்களுக்கு ஆரம்ப கல்வியே முறையாக நடக்கவில்லை.. மிகவும் தடுமாறுகிறார்கள்.

 18. இது ஒரு நல்ல முடிவு என்றுதான் தெரிகிறது.. ஆனால் நேட்டோவின் விஸ்தரிப்பு EUவிற்கு பிரச்சனையாக அமையுமா?

 19. 9 hours ago, ஏராளன் said:

  90-92(போக்குவரத்து நெருக்கடி) வரை நாங்கள் கொஞ்சப் பேர் யாழ் இந்துவில் தவணைப் பரீட்சை எழுதுவது, அருகில் இருக்கும் விக்ரோறியாவில் கல்வி கற்பது என ஒழுங்கு படுத்தி இருந்தவை. அப்ப பஞ்சலிங்கம் சேர் யாழ் இந்துவின் அதிபர், விக்ரோறியா கல்லூரியில் சந்திரபாலன் சேர். இருவரிடமும் கதைத்து எமது கல்வி தொடர வாய்ப்பளித்தனர். இரு அதிபர்களும் எனது வாழ்வில் மறக்க முடியாதவர்கள்.

  அப்படித்தான் ஏதாவது செய்யவேண்டும். ஆனால் St.Patrick’s,  St.Johns போன்ற கல்லூரிகள் என்ன செய்வார்களோ தெரியாது.. 

 20. 50 வருட கால உரிமையை மாற்ற தனியே மத நம்பிக்கை மட்டும் காரணமாக இருக்காது என நினைக்கிறேன்

 21. என்ன பிரச்சனை என்றால், ஒரு விருப்பத்தில் பச்சை குத்திவிட்டு(tattoo), பிறகு அதை அழிப்பது மிகவும் கடினம் என நினைக்கிறேன். 

  தமிழர்களிடம் மட்டுமல்ல, அவுஸ்ரேலிய பூர்வீக குடிகள், islanders எல்லோரிடம் இந்த பச்சை குத்துதல் உள்ளது என்பதால் தமிழர்களிடமிருந்து பரவியது என கூறுவது சரியா?

 22. நகர பாடசாலைக்கு வரும் பிள்ளைகளை, அந்தந்த கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க சொல்லியதாக கேள்விப்பட்டேன், நிலமை வழமைக்கு திரும்பிய பின்(?) பழையபடி ஆரம்பத்தில் படித்த பாடசாலைகளுக்கு போக முடியுமோ என்ற தயக்கம் பெற்றோருக்கு இருக்க கூடும்..எல்லாமே குழப்பமாக உள்ளது.. 

 23. இந்த திரியில் எழுதிய என் கருத்து தேவையற்றது என கருதி நீக்கிவிட்டேன்.

  மன்னிக்கவும்.

 24. New Zealand's Hakaவிற்கு சற்றும் சளைக்காத Tonga நாட்டினரின் Sipi Tau, இதுவும் பார்வையாளர்களை பரவசப்பட வைக்கும்!! 3.56ல் இருந்து பார்க்கவும்!!!

   

   

  • Like 2
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.