Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1,184
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

  1. நான் ஒரேயொருக்காகதான் எனது தையல் teacherடம் செமஅடி வாங்கியிருக்கிறேன்.. இடது கையால் ஒழுங்காக தைக்கமுடியாதமையால் மற்றபடி எனக்கு கிடைத்த அதிக தண்டனைகள் பெரும்பாலும் வகுப்பறைக்கு வெளியே என்னை நிற்கவிட்டதுதான் ஈழப்பிரியன் uncle .. கிருபன் வாத்தியாரும் disqualify என்றுதான் சொல்வார் தடியோடு வரமாட்டார்..
  2. @கிருபன் எனக்கு edit செய்யமுடியாதமையால் எனது பதில்களை திரும்பவும் quote செய்துள்ளேன்.. போட்டி விதிமுறைகளை மீறவில்லை என நினைக்கிறேன்
  3. நிர்வாகத்தினருக்கு வணக்கம், யாழ் இணையத்திற்கு கடந்த வாரங்களாக வரமுடியவில்லை.. எனக்கு மீண்டும் edit செய்யும் வசதியை தரமுடியுமா? நன்றி.
  4. Edit செய்யமுடியவில்லை.. ஆகையால் மீண்டும் பதியலாம் என நினைக்கிறேன்.. 20 நிமிடங்கள் இன்னமும் உள்ளது..
  5. ஒரு மாதிரி நேரத்திற்குள் வந்துவிட்டேன். சீட் கிடைக்காட்டிலும் பரவாயில்லை நின்றுகொண்டே ஊருக்கு போயிடலாம் நன்றி .. தமிழ்சிறி அண்ணா.. உங்களைப்போலவே நானும் இந்த முறைதான் போட்டியில் பங்குபற்றுகிறேன்..எப்படியும் கடைசிக்கு முதலிடத்தில் எனது பெயர் வரும்.. அவ்வளவுதான்..
  6. அத்துடன் cutoff timeற்குள் போட்டியில் பங்குபற்றியுள்ளேன் என நம்புகிறேன்( Australian 8am = UK 10pm)
  7. ள்விக்கொத்து முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை: 1) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் OMA 2) முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் BAN 3) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி IRL 4) முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி SRI 5) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் SCO 6) முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட் BAN 7) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி NED 8 ) முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி SRI 9) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட் BAN 10) முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட் SCO 11) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா IRL 12) முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா SRI முதல் சுற்று பிரிவு A: 13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்) சிறிலங்கா - SRI அயர்லாந்து -IRL 14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - SRI #A2 - IRL 15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! SRI முதல் சுற்று பிரிவு B: 16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்) பங்களாதேஷ் - BAN ஸ்கொட்லாந்து - SCO 17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - BAN #B2 - SCO 18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! BAN சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை: 19) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி AUS 20) சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய் ENG 21) சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக்கொடுக்கவேண்டும். BAN 22) சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் IND 23) சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று AFG எதிர் SRI 24 ) சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய் WI 25) சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா NZL 26) சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று ENG எதிர் BAN 27) சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக்கொடுக்கவேண்டும். B1 எதிர் A2 BAN VS IRL 28) சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய் * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று AUS V SRL 29) சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று WI V BAN 30) சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய் PAK 31) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று RSA எதிர் SRL 32) சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய் ENG எதிர் AUS 33) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று AFG எதிர் IRL 34) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய் IND 35) சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று ENG எதிர் IRL 36) சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று RSA எதிர் SCO 37) சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று PAK எதிர் SRI 38) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று NZL எதிர் BAN 39) சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி IND 40) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று AUS எதிர் BAN 41) சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று WI எதிர் SRL 42) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று NZL எதிர் IRL 43) சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய் * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று IND எதிர் SCO 44) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி AUS 45) சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா ENG 46) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி NZL 47) சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று PAK எதிர் BAN 48) சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய் * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று IND எதிர் SRL சுப்பர் 12 பிரிவு 1: 49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்) 1- அவுஸ்திரேலியா - AUS 2- இங்கிலாந்து - ENG 50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி A1 - AUS #அணி A2 - ENG 51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! SCO சுப்பர் 12 பிரிவு 2: 52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்) இந்தியா -IND நியூஸிலாந்து -NZL 53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி B1 - IND #அணி B2 - NZL 54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! IRL அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்டவிடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவதுஇடம்) 7:30 PM AUS V NZL 56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல்இடம்) 7:30 PM ENG V IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில்உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல்வெற்றி பெறும் அணி 7:30 PM AUS உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) AUS 59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) OMN 60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு4 புள்ளிகள்) Virat Kohli 61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டியஅவசியமில்லை! ) AUS 62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு4 புள்ளிகள்) Rashid Khan 63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டியஅவசியமில்லை! ) AUS 64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியானபெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) David Warner 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியைசேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில்இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Glen Maxwell Pat Cummins 67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்தஅணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கானஅணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக்குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Glen Maxwell 69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டியஅவசியமில்லை! ) IND மூன்று கிழமைகளாக யாழுக்கு வராமையால் edit முடியவில்லை..கேள்விக்கொத்தில் “கே” யை காணவில்லை.. அதே போல கேள்வி 66ல் Glen Maxwellலை நம்ப முடியாது.. முதன்முதலாக பங்குபற்றுவதால் கடைசியில் வந்தாலும் பரவாயில்லை
  8. நன்றி துல்பன் அண்ணா! பழைய காலத்தில் கணவனை இழந்துவிட்டால் குங்கும பொட்டு வைக்க கூடாது என்றார்கள்.. பின்பு கறுப்பு பொட்டு வைக்கலாம் என்றார்கள்.. ஆனால் “பொட்டு” பெண்களாகிய எங்களுடன் சிறுவயதில் இருந்து வரும் ஒரு விடயம்.. கணவன் இழந்துவிட்டால் அதை வைக்ககூடாது என்பது என் உரிமையை மறுக்கும் விடயம் .. இதை ஒவ்வொரு பெண்ணும் உணரவேண்டும்.. அப்பொழுதுதான் மாற்றம் நிகழும்.. கணவனை மனைவியை இழந்துவிட்டால் முன்பு போல நடத்தப்படுவதில்லை என்றாலும் கூட எங்கோ ஒரு இடத்தில் இந்த மாதிரி விடயங்கள் நடந்துகொண்டுதான் உள்ளது என்பதுடன் எங்களுக்கு என வரும்பொழுது மட்டுமே அதைப்பற்றி பெரும்பாலானவர்கள் நினைப்பார்கள் என்பதுதான் நடைமுறையில் உள்ளது..
  9. நாம் சம்பந்தப்படாத ஒன்று ஏனெனில் அது எங்கள் வீட்டில் நடைபெறவில்லை.. ஆனால் இதுவே நாளை உங்கள்/எங்கள் வீட்டில் நடந்தால்? இந்த சமூகம் எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கு இங்கே எழுதிய கருத்துக்களே போதும்.. இங்கே இந்த செய்தி பதியப்பட்டதன் நோக்கம் தனியே வம்பு பேசுவதற்கு அல்ல, இது எங்கள் சமூகத்திற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் உலகில் இவர்கள் ஒரு அங்கம், இனி பேசாமல் இருக்கமுடியாது.. விளக்கங்களும் அறிவூட்டலும் இருக்கவேண்டும் என்பதற்காகவே என நான் நம்புகிறேன்.. மரபணு, உணர்வுகள், உரிமைகள், சட்டம் சமூகம், குழந்தைகள் என பலவிடயங்களில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதியப்பட்டன. எங்களது சமூகத்தின் போக்கையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. பலவிடயங்களை அறியவும் முடிந்தது.. அதே போலவே மற்றைய ஊடகங்களிலும், அவை வந்துள்ளன.. ஆனால் ஊடக சுதந்திரம், தனிமனித கருத்து சுதந்திரம்..நாட்டின் சட்டதிட்டங்கள் இவைபற்றி வழக்கறிஞரான இந்த பெண்ணுக்கு தெரிந்தல்லவா இருக்கவேண்டும்..இவர் எடுத்த முடிவுகளுக்கு இவர்தானே பொறுப்பு.. அதைவிடுத்து உற்சாகம் கொடுத்தோம் உத்வேகம் கொடுத்தோம் என மற்றவர்களின் மேல் பழியைப்போடுவது என்பது சரியா என தெரியவில்லை.. என் மனதில் பட்டது எழுதுகிறேன் அவ்வளவுதான். இதனை இன்னொரு விவாவதமாக்குவதற்காக இல்லை. நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பிண்ணனிகளை கொண்டு வளர்ந்தவர்கள். ஒவ்வொருவரின் கருத்துக்கள், அனுபவங்களிலிருந்து எங்களது அறிவை வளர்த்துக்கொள்கிறோம்..இந்த திரியும் அது போன்றதே..
  10. மன்னிக்கவேண்டும் அண்ணா!, உங்களை குறிப்பபிட்டு சொல்லவில்லை “ மறுக்கிறார்கள், எப்படி என்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என்ற கருத்தின் மூலம்” என எழுதியிருக்கவேண்டும்..
  11. மறுக்கிறீர்கள் எப்படியென்றால் அவர்கள் தயக்கத்துடனும் பயத்தைடனும் வாழ வேண்டும் என்ற கருத்தின் மூலம். இதற்கான பதில், இருக்காது ஏனெனில் இவை இங்கே இந்த சமயசடங்குகளிற்கு போய்தான் அறியவேண்டுமென்பதில்லை.. பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள், தொலைகாட்சிகள், பத்திரிக்கைகள், ஏன் சனத்தொகை வாக்குஎடுப்பு பத்திரத்தில் கூட கேள்விகள் உள்ளது.. அவர்களுக்கு முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளது..ஆகையால் இதையெல்லாம் பார்த்துதான் அவர்கள் மாற வேண்டும் என்பதில்லை.. seriously அண்ணா! how do you know? ஏதாவது தரவுகள்? இங்கே நிறையவே இதைப்பற்றி கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. உங்களுக்கும் எனக்கும் எங்களது எதிர்பாலினத்தில்தான் ஈர்ப்பு வருகிறது.. இது இயற்கையாகவே ஏற்படுகிறது.. யாரும் என்னை வற்புறுத்தவில்லை, உங்களையும் வற்புறுத்தவில்லை இல்லையா! இயற்கையாகவே வருகிறது.. அதை ஏற்றுக்கொள்ளும் உங்களால் ஏன் இன்னொரு மனிதர் தனக்கு தன்னினத்தை சேர்ந்தவருடன் இயற்கையாகவே வரும் உணர்வை ஏற்க முடியவில்லை..ஏனெனில் வழமைக்கு மாறானது என நீங்கள் நினைப்பதனால் ஏற்கமுடியவில்லை.. இது உங்களது தனிப்பட்ட கருத்து, அதை எல்லோரும் மதிக்கிறோம். உங்களை மாறவேண்டும் எனக்கூட கேட்கவில்லை.. ஆனால் நாங்கள் அவர்களும் எங்களைப்போன்ற சகமனிதர்கள் என்பதால் அவர்களது உணர்வுகளை மதிக்கிறோம்.. என்ற கருத்தை மதிக்க ஏன் உங்களால் முடியவில்லை? உங்களுக்கு வாழ்த்த விருப்பமில்லை எனக்கு வாழ்த்த முடிகிறது.. அவ்வளவுதான்.. உங்களில் உள்ள மரியாதை, மதிப்பு காரணமாகவே இவ்வளவையும் எழுதுகிறேன்.. இல்லாவிடில் உண்மையில் எழுதியிருக்கமாட்டேன், ஏனெனில் - இது இயற்கையானது ஆனால் வழமைக்குமாறானது.. - இது அடிப்படை தனிமனித உரிமை. ஒப்பிட்டளவில் சிறுபாண்மை என்பதால் அவர்களுக்கான உரிமையை மறுப்பது தவறு - இதற்கும் பெற்றோரின் வளர்ப்பிற்கும் சம்பந்தமில்லை.. இயல்பாக ஏற்படும் உணர்வு/விருப்பம்/desire ..அதை சமூகத்திற்காக அடக்க சொல்வது தவறு - கிட்டதட்ட 30 நாடுகளில் சட்டரீதியாக அங்கரிக்கப்பட்டுள்ளது.. குழந்தைகளின் நலன் கருதி சட்டரீதியாக கொண்டுவரப்பட்டுள்ளது - சகல இடங்களிலும் இதைப்பற்றிய விளக்கங்கள் உள்ளன - எங்களது இந்து சமயத்தில் இதைப்பற்றி மெளனமாகவே இருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம் - விலங்களிலும் உள்ளன.. - இதில் புரட்சியாக செய்வது, முற்போக்காக காட்டுவது என்பதை விட ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிப்பதும் அவர்களது உணர்வுகள் உரிமைகளை மதிப்பது என்ற அடிப்படை உணர்வு - யாரையும் வாழ்த்த சொல்லி கட்டயாப்படுத்தவில்லை. - கட்டாயம் sexual pleasureதான் இருக்கவேண்டியதில்லை என்பதால் அவர்களது sexual satisfaction பற்றி கவலைப்படத்தேவையில்லை. - sexual consent இதைவிட வேறு ஏதாவது? Did I miss anything? இப்படி பல தரவுகள் கிட்டதட்ட 13 பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.. இதற்கு மேல்.. முடியவில்லை.. இன்னொரு விடயம், இதைப்பற்றி பெரிதுபடுத்த தேவையில்லை என்றால் இதை இங்கே கடந்து போகும் மற்றைய செய்திகள் போல கடந்து போயிருக்கலாம் வாழ்த்துபவர்கள் மனமார வாழ்த்தினால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன! பெரிதுபடுத்தவேண்டிய விடயம் இல்லை என்றால் கடந்து போயிருக்கலாம் தானே.. உங்களைப்போன்றே மற்றைய சக கருத்தாளர்களும் தங்களது கருத்தை எழுதுகிறார்கள்.. நீங்கள் எழுதுவது வகுப்பெடுப்பதில்லை என்றால் நான் எழுதுவதும் பாடம் எடுப்பதில்லை அண்ணா!!
  12. இவற்றை தடுப்பது என்பதைவிட நாங்கள் இந்த செயல்களை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரிக்கிறோம் என்பது பற்றி BBC தமிழில் வந்த கட்டுரையின் சில கருத்துகளையும் அதன் இணைப்பையும் இணைக்கிறேன்.. இந்த கட்டுரை வந்த ஆண்டு 2018 ஆனாலும் இன்னமும் மாற்றங்கள் வரவில்லை என்பதைவிட அதிகமாகிக்கொண்டுதான் போகிறது.. கட்டுரை பாலியல் வன்முறைகளுக்கு ஒரு சமுதாயம் துணை போகிறதா? பாலியல் வன்முறை செய்தவர் மீது ஏதாவது ஒரு விதத்தில் அனுதாபம் காட்டுகிறோமா? பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம் சுமத்த முயல்கிறோமா? இந்த கேள்விகளுக்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்? உண்மையான பதில் ஆம் என்பதாகவே இருக்கும். 'நேண்டோஸ் சிக்கன்' விளம்பரம் "எங்கள் இடுப்பையோ மார்பகத்தையோ அல்லது தொடைகளையோ தொட்டால் நாங்கள் கவலைப்படமாட்டோம். நேண்டோஸின் உணவை நீங்கள் விரும்பியவாறு உங்கள் கைகளால் ருசிக்கலாம்." 'நேண்டோஸ் சிக்கன்' என்ற உணவு குறித்து வந்த விளம்பரம் இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த விளம்பரம் இந்திய பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியது. நிர்வாணமான ஒரு பெண் தனது கால்களை அகல விரித்துக் கொண்டு இருப்பது போல் வடிவமைக்கப்பட்ட ஒரு சிகரெட் ஆஷ்ட்ரே-வும், விமர்சனங்களையும் கிளப்பியது. இது அமேசான் இந்தியாவின் வலைதளத்தில் வெளியான ஒரு விளம்பரம். பாலியல் வன்முறையைப் பற்றி பேசத் தொடங்கிய நான் விளம்பரங்களைப் பற்றி பேசுவது ஏன் என்ற கேள்வி எழுகிறதா? 'ரேப் கல்சர்' அதாவது 'வல்லுறவு கலாசாரம்' என்பது உலகில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் வெவ்வேறு விதங்களில் தொடர்கிறது. இந்த வார்த்தையை கேட்பதற்கே விபரீதமாக தோன்றுகிறதா? கலாசாரம் என்ற சொல் பொதுவாக புனிதமானதாக, நேர்மறையான விஷயமாக பார்க்கப்படுவதால் 'ரேப் கல்சர்' என்ற வார்த்தை வித்தியாசமானதாக தோன்றும். ஆனால் கலாசாரம் என்ற வார்த்தை அழகையோ அல்லது செழுமையானதையோ மட்டுமே குறிப்பதில்லை. பல்வேறு வகையிலான மரபுகள் மற்றும் பழக்கங்களையும் குறிப்பிடுவது. சமூகத்தில் ஒரு பிரிவை அழுத்தி, நசுக்கிவிட்டு, மற்றொன்றை முன்னோக்கி நகர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சியும், அதற்கான மனோபாவமும், நடைமுறையையும் உள்ளடக்கியதே கலாசாரம். கலாசாரத்திலேயே பாலியல் வன்முறை கலாசாரமும் மறைந்துள்ளது. அதன் நுட்பமான விஷயம் பல நேரங்களில் நமது கோணங்களை மாற்றி பார்வையை குறுக்கி, விஷயத்தையே திசை திருப்பிவிடுகிறது. ஆனால் சில நேரங்களில், இந்த இழிந்த நோக்கம் நமக்கு வெளிப்படையாக தெரிந்துவிடும். ரேப் கல்சர் என்றால் என்ன? * 'ரேப் கல்சர்' என்ற வார்த்தை 1975-ம் ஆண்டு அமெரிக்காவில் தயாரான ஒரு திரைப்படத்தின் பெயராக வைக்கப்பட்டது. அமெரிக்காவில் எழுபதுகளில் தொடங்கிய பெண்ணிய இயக்கம், அந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியது. * 'ரேப் கல்சர்' என்பது, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணையே, அதற்கு பொறுப்பாக்கும் நடைமுறையை குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல். * 'ரேப் கல்சர்' என்ற குறியீடு, பாலியல் வன்முறை செய்தவரை தண்டிப்பதற்கு பதிலாக, சிறு அளவிலான தண்டனையை கொடுத்து குற்றத்தை சிறிய தவறாக காண்பிக்க செய்யப்படும் முயற்சி. 'ரேப் கல்சர்' உள்ள நாடுகளில், பாலியல் வன்முறை நடந்ததை நிரூபிப்பது கடினம். இந்தியாவில் அனைவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராடுவதாக சொல்லிக் கொண்டாலும் அது மேலோட்டமான பார்வை. உண்மையில் இந்த விவகாரத்தில் தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதாகவும், பெண்களின் பாதுகாப்புக்காக போராடுவதாகவும் கூறுவது எந்த அளவு உண்மை? இந்த கருத்துகளை முற்றிலுமே நிராகரிக்க முடியாவிட்டாலும், இதன் மறுபக்கம் சற்று கறைபடிந்ததாக இருப்பதையும் மறந்துவிடக்கூடாது. பெண்களுக்காக பச்சாதாப்ப்பட்டுக் கொண்டே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல பாதிக்கப்பட்டவர்களையே பதம் பார்க்கும் போக்கு இல்லை என்றும் மறுத்துவிடமுடியாது. இதுபோன்ற நாமும் எதாவது ஒருவிதத்தில் பாலியல் வன்முறை செய்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து, 'ரேப் கல்சர்' என்ற மோசமான விஷயத்திற்கு துணை நிற்கும் தவறை செய்கிறோம். 'ரேப் கல்சர்' என்பதை வெவ்வேறு உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம். 1. பாலியல் பலாத்காரத்தை இயல்பாக்குவது - ஆண்களின் மனோபாவத்தை எப்படி மாற்றுவது? (Men will be men) - கூடப் பிறந்தவனோட என்ன போட்டி? பொம்பளை புள்ளைன்னா கொஞ்சம் அடக்கமா இருக்கனும். எட்டு மணிக்குள் வீட்டுக்கு வந்திரு. (பெற்றோர் மகனுக்கும் மகளுக்கும் இடையில் வித்தியாசம் காட்டுவது தவறாக பார்க்கப்படுவதில்லை) - உலகத்திலேயே உனக்கு மட்டும்தான் இப்படி நடக்குதா என்ன? இந்த மாதிரி சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் பெரிசுபடுத்தக்கூடாது என்று அறிவுறுத்துவது. - பலாத்காரம் என்ற வார்த்தைகளுக்கு பதிலாக ஊடகங்களே 'சீண்டல்' மற்றும் 'பாலியல் துஷ்பிரயோகம்' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, தவறின் வீரியத்தை குறைப்பது. - பலாத்காரம் தொடர்பான நகைச்சுவைகளும், மீம்சுகளையும் உருவாக்குவது. இந்த விஷயங்களைப் பற்றி பேசி சிரித்து, எள்ளி நகையாடுவது. -திரைப்படங்கள், பாடல்கள், பாப் இசைகளில் பெண்களை சீண்டுவதை காதலாக சித்தரிப்பது, பெண்களின் உடலை 'பாலியல் பொருளாக' காண்பிப்பது. 2. பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குவது - பெண் சிறிய/கவர்ச்சியான உடை அணிந்திருந்தார். - இரவு நேரத்தில் வெளியே போனது ஏன்? - மது அருந்தியிருந்தார், இளைஞர்களுடன் இருந்தார். - அவர் பாலியல் விருப்பம் கொண்டவர், நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. -ஆண்களுடன் சிரித்து சிரித்து பேசுவார், அனைவருடனும் மிகுந்த நட்பு பாராட்டுவார். - இளைஞர்களுடன் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்றாள். அவள் கண்டிப்பாக ஆண்களுக்கு 'சமிக்ஞை' கொடுத்திருப்பார். இது போன்ற சொல்லாடல்கள் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குகிறவை. 3. பாதிக்கப்பட்டவர் மீது சந்தேகம் - இருவரும் நட்புடன் இருந்தநிலையில், அவன் எப்படி இவளை பாலியல் பலாத்காரம் செய்திருப்பான்? (அனுமதி/விருப்பம் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் பேசுவது) - கணவன் எப்படி மனைவியை பலாத்காரம் செய்வான்? திருமணமாகிவிட்டால், தம்பதிகளுக்கிடையே பாலியல் உறவு என்பது இயல்பானதுதானே? மனைவியின் கடமை கணவனின் பாலியல் விருப்பங்களை பூர்த்தி செய்வதுதானே? இல்லாவிட்டால் அவன் வேறு தவறான வழிக்கு போய்விடுவான் (திருமண வல்லுறவு/பாலியல் உறவில் பெண்ணின் அனுமதி தேவை இல்லை என்று கருதுவது/கணவனின் விருப்பதை மனைவி கட்டாயம் பூர்த்தி செய்யவேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மை) - அவலட்சணம்/வயது முதிர்ந்தவள்/பருமனாய் இருப்பவள். இவளை யார் பலாத்காரம் செய்வார்கள்? (பாலியல் பலாத்காரத்தை பெண்ணின் உருவத்துடனும், வயதுடனும் தொடர்புபடுத்தி, பாதிக்கப்பட்டவர்களை வார்த்தைகளால் மேலும் துன்புறுத்துவது) - அவள் உடலில் காயமோ, ரத்தமோ வரவில்லை. பலாத்காரம் செய்தது உண்மை என்றால் அவள் ஏன் எதிர்க்கவில்லை? - உடனே ஏன் புகார் செய்யவில்லை? இவ்வளவு காலம் கழித்து தற்போது பெரிதுபடுத்துவது ஏன்? - கவன ஈர்ப்புக்காக குற்றம் சாட்டுகிறார். மற்றவர்களின் அனுதாபத்தை பெறும் முயற்சி என விமர்சிப்பது. - ஏற்கனவே ஒருவர் மீது இவள் புகார் சொல்லியிருந்தாளே? அவளுக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்குமா? இப்படியெல்லாம் எழுப்பப்படும் கேள்விகள் பாதிக்கப்பட்டவர் மீது சந்தேகத்தை எழுப்புகிறவை. 4. ப்ரோ கலாசாரம் 'ப்ரோ கல்சர்' என்பது ஒரு ஆண், மற்ற ஆணை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது. பரஸ்பரம் ஒருவரை மற்றவர் காப்பாற்றும் முயற்சியில் வெகுளியாக காட்டிக் கொள்வது. 'அட, எவ்வளவு நல்ல பையன் இவன் போய் அப்படி செய்திருக்கவே மாட்டான், அவனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்…' என்பது போன்ற ஆதரவு வார்த்தைகளை சொல்வது. 'ப்ரோ கல்சர்' என்பதற்கு சிறந்த உதாரணம் #NotAllMen என்ற ஹேஷ்டேக். #MeeToo என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசினால், #NotAllMen என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி பெண்களின் இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆண்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் எழும் மிகப்பெரிய கேள்வி என்றால், பெண்களின் புகார்களை, தங்கள் மீதான புகார்களாக ஆண்கள் ஏன் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்? ஆண்களின் ஒரு பெரிய பிரிவு, இத்தகைய குற்றங்களில் சில நேரங்களில் ஈடுபடுவது இயல்பானது என்பதால், அவர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு வழங்க விரும்புகிறார்கள். அதுமட்டுமல்ல, பொதுவாக பாலியல் பலாத்கார புகார்களில் 90% பொய்யானது என்றும், பெண்களை சீண்டுவதாக கூறப்படும் புகார்களில் 99% தவறானது என்று ஆண்கள் கூறுகின்றனர். இதுபோன்ற தரவுகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதே தெரிவதில்லை. 5.சில்மிஷ பேச்சு "டேய், அவ சூப்பர் பிகரு, ஒரு நாளைக்காவது அவளோட இருக்கனும்…" என்பது போன்ற எண்ணங்கள் ஆண்களின் அந்தரங்க உரையாடல்களில் இடம்பெறுவது இயல்பானதாக கருதப்படுகிறது. மூடப்பட்ட அறைக்குள் வெளிவரும் ஆண்களின் இதுபோன்ற பாலியல் விருப்பங்கள் பேச்சாக வெளிப்படுவது தவறானது என்று பெரும்பாலும் சுட்டிக்காட்டப்படுவதில்லை. இது இளமையின் இயல்பான வேகம் என்று கருதப்படுகிறது. இது போன்ற உரையாடல்களை பெண்களிடம் வெளிப்படையாக பேசாவிட்டாலும், பெண்களுடன் இயல்பாக பேசும்போது இந்த எண்ணம் மனதில் தோன்றுவது தவறாக பார்க்கப்படுவதில்லை. 6. பெண்களின் சுயசார்பு பற்றிய அச்சம் - பொருளாதார மற்றும் சமூகரீதியாக பெண்களின் தற்சார்பு ஆண்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது. - பெண்களை வீட்டிற்குள்ளே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது, வெளியுலகத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை மறுப்பது. - 'கற்பு' என்பதை பெண்களின் தலையாய கடமை என்றும் கலாசாரம் என்றும் திணிப்பது. பாலியல் விருப்பங்கள் பெண்களுக்கு இருக்கக்கூடாது, அதை கட்டுப்படுத்த வேண்டும்; ஆனால் திருமணமானால் கணவனுக்கு பாலியல் விருப்பம் இருந்தால் அதற்கு ஈடு கொடுக்க வேண்டும் (பெண்ணுக்கு இயல்பிலேயே விருப்பம் இல்லாவிட்டாலும்கூட) என்று திணிக்க முயற்சிப்பது. - காதலை வெளிப்படுத்துவது பெண்ணாக இருந்தால் அவளை தரக்குறைவாக நினைப்பது, பண்பற்றவள் என்று முத்திரை குத்துவது, வில்லியாக சித்தரிப்பது. - மதம், கலாசாரம், பரம்பரை, குடும்பம் என அனைத்தையும் காப்பாற்றும் பொறுப்பு பெண்ணுடையது என்ற பெயரில் அவர்களை கட்டுப்படுத்துவது. 7. பொறுப்பில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு - நிர்பயா கூட்டு பாலுறவு பலாத்கார வழக்கில், குற்றவாளிகளின் வழக்குரைஞர் ஏ.பி.சிங்கின் கருத்து இது: "எனது மகளோ அல்லது சகோதரியோ திருமணத்திற்கு முன் யாருடனாவது தொடர்பு வைத்து களங்கம் ஏற்படுத்துமாறு நடந்தால், அவரை எங்களுடைய பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, குடும்பத்தினர் அனைவரின் முன்னால் பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன்." - நிர்பயா வழக்கில் மற்றொரு குற்றவாளியின் வழக்குரைஞர் எம்.எல் ஷர்மா சொன்னது என்ன தெரியுமா? "பெண்கள் வேறொரு நபருடன் இரவு 7:30 அல்லது 8:30 மணிக்கு மேல் வீட்டில் இருந்து கிளம்பினால், அவர்களிடையில் இருக்கும் உறவு எப்படிப்பட்டது? மன்னிக்கவும், நமது சமூகத்தில் இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. நமது கலாசாரம் மிகவும் சிறந்தது. அதில் பெண்களுக்கு எந்தவித இடமும் இல்லை''. - 'ஆணும்-பெண்ணும் ஒன்றாக சுற்றுகிறார்கள். பிறகு ஏன் தேவையில்லாமல் பலாத்கார குற்றச்சட்டுக்களை பெண்கள் முன்வைக்கிறார்கள்?' என்ற பொன் மொழியை அண்மையில் உதிர்த்தார் ஹரியாணா முதலமைச்சர் மனோஹர் லால் கட்டர். 8. பழிவாங்குவதற்காக பலாத்காரம் பழிவாங்குவதற்காக பலாத்காரம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது. பலாத்காரத்தை அவமானமாக கருதுவது, சம்பந்தப்பட்ட குடும்பத்தை சமூகமே புறக்கணிப்பது, குற்றவாளிகளை தண்டிப்பதில் அலட்சியம், அரசியல் சமூக காரணங்களுக்காக பலாத்காரம் மற்றும் போரின் போது பழிவாங்குவதற்காக பெண்களை பலாத்காரம் செய்வது என பலாத்காரத்திற்கான காரணங்களின் பட்டியல் நீள்கிறது. பாலியல் பலாத்கார குற்றசாட்டு சுமத்தப்பட்டவர்கள் நாட்டின் உயர் பதவிகளில் இருப்பதும், ஏன் அவர்கள் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படும் நிலையும் இருக்கிறது. மற்றொரு புறம், மதகுருக்களின் பின்னால் மக்கள் கண்மூடித்தனமான பக்தியுடன் சென்றால், அங்கும் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவை சிலருக்கு பெரியதாகவோ, பலருக்கு சிறிதாகவோ தெரியலாம். ஏனெனில் இது தினசரி நாம் கேட்டுக் கடக்கும் சம்பவங்களாக மாறிவிட்டன. ஆனால் உண்மையிலேயே இந்த 'பாலியல் பலாத்கார கலாசாரம்' என்பதை கட்டமைத்து, பராமரிப்பதில் நாம் அனைவருக்கும் பங்கு உள்ளது. https://www.google.com.au/amp/s/www.bbc.com/tamil/india-46403657.amp
  13. நீங்கள் யாழ் இணையத்தில் இந்த இணைப்பை இணைத்திருந்தீர்கள்.. நன்றாக ஆராய்ந்து பல விடயங்களை கூறியிருக்கிறார்கள்.. இதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன? பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவ சங்கங்கள் தொடங்கி சில பொறுப்புகளை உணர்ந்து செயல்களை செய்வதற்கு எது தடைபோடுகிறது?
  14. சர்வதேச சமூகம் கண்களை திறக்கவேண்டும் என்றால் இந்த மாதிரியான படங்கள் தனியே தமிழில் மட்டும் வந்தால் போதாது… ஆனால் இந்த மாதிரியான படங்களை எங்களது சமூகத்திடம் கொண்டு போய் சேர்ப்பதே கஷ்டமாக உள்ளது.. எனது தமிழ் பேசும் நட்பு வட்டத்தில், இரண்டுவிதமான போக்கு உள்ளது 1- ஈழத்தமிழர் சம்பந்தமான படங்களைப்பார்த்தால் வேதனை ஆகையால் பார்ப்பதில்லை 2- பார்த்து என்ன செய்வது?
  15. உண்மைதான் துல்பன் அண்ணா.. எனக்கும் அது கவலையாகவே உள்ளது..
  16. நாங்கள் எப்படி எந்தவித தயக்கமும் பயமுமின்றி எங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்கிறோம், அதை செய்ய தன்னினசேர்க்கையாளர்களுக்கும் உரிமையுண்டு.. அவர்கள் தன்னினச்சேர்க்கையென்பதால் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என எதிர்பார்ப்பது பிழை எனக்கூறினால் தனிப்பட்ட முறையில் நீங்கள் அப்படி செய்வீர்களா? இப்படி செய்வீர்களா.. அல்லது அந்த மாதிரி ஆட்கள் etc என வகைப்படுத்துகிறார்கள்.. இந்த மனநிலைகள் எனக்கு விளங்குவதில்லை.. இரண்டாவது பெற்றோர்கள் சரியான முறையில் வளர்த்தால் இந்தமாதிரி தன்பாலின கவர்ச்சியுடைய பிள்ளைகள் இருக்கமாட்டார்கள் எனவும் எழுதப்பட்டது.. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சகல அத்தியாவசிய தேவைகளுடன் கல்வி, கலாச்சாரம், பழக்கவழக்கங்களையும், உணர்வுகளையும் உரிமைகளையும் கற்றுக்கொடுத்தும் மதிக்கவும் சொல்லி கொடுத்து வளர்க்கையில் பிள்ளைகள் தங்களது உணர்விற்கு மதிப்பளித்து துணையை தேர்ந்தெடுப்பதை எவ்வாறு பெற்றோர் சொல்லிவளர்த்தால் இப்படி செய்யமாட்டார்கள் என கூறமுடியும்? இரு மனிதர்கள்(ஆண்-ஆண், பெண்-பெண்) தங்களுக்குள் ஏற்பட்ட இயற்கையான உணர்வை மதித்து சேர்ந்து வாழ்வதையும் தங்களுக்கு பிடித்த சமயத்திலும், சட்டரீதியாகவும் செய்யமுற்படுவதையும் பிழையென கூறமுடியாது..ஏனெனில் திருமணம் என்பது தனியே உடலுறவை மட்டும் சார்ந்தது இல்லை.. அதேபோல கட்டாயம் சந்ததி பெருக்கமாகவும் இருக்கவேண்டியதில்லை.. இரு பெண்கள்/இரு ஆண்கள் விரும்புகிறார்கள், திருமணம் செய்கிறார்கள். குழந்தைகள் வேண்டுமென்றால் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், அல்லது சமூகத்தின் கண்களில் தகாத உறவினால் பிறந்த பிள்ளைகளை தத்து எடுத்துவளர்கிறார்கள்..இல்லை வாடகைதாய், விந்து/முட்டை தானம் போன்றவற்றின் மூலம் பிள்ளைகளை பெறுகிறார்கள்.. குழந்தை வளர்ப்பும் சட்டசமூக பிரச்சனைகளும் - இதற்காகவே இதை சட்டமாக்கினார்கள்.. நாங்கள் எப்படி கணவனோ மனைவியோ இறந்தால் தனியாகவோ, இல்லை மறுமணம் செய்து, குழந்தைகளுடன் வாழ்கிறோமோ அதுபோலவே அவர்களும் இருக்கிறார்கள்.. குழந்தையும் அதனை வளர வளர தன் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுகிறது. குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பு முன்பே ஒழுங்காக இருந்திருக்குமாயின் ஏன் foster cares உருவானதே தெரியவில்லை.. child abusers எல்லா வகையிலும் இருக்கிறார்கள். சட்டமும் சமூகமும் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இந்த செயல்கள் நடந்துகொண்டுதானே உள்ளது.. தற்போது இந்த குடும்ப அமைப்புகளைப்பற்றி பாடசாலைகள் தொடங்கி அலுவலகங்கள் விளங்கப்படுத்தப்படுகிறது, தொலைகாட்சி நிகழ்ச்சிகள், பத்திரிக்கைகள் வரை எல்லா சமூக ஊடகங்களிலும் வருகிறது ஏனெனில் இந்த உறவுகள் எங்கள் சமூகத்தில் ஒரு அங்கம் என்பதால்தான், எல்லா சமூகங்களுக்கும் இதை ஏற்றுக்கொள்ள கடினம் என்றாலும் ஏற்றுக்கொண்டு போகிறார்கள், அரசும் தன்னலான நடவடிக்கைகளை எடுக்கிறது.. மக்கள் எதிர்ப்பையும் ஆதரவையும் காட்டுகிறார்கள்.. என்னைப்பொறுத்தவரை இந்த திருமணங்கள், உறவுகள் சமூகத்தில் உள்ளன.. ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரவர் தனிப்பட்ட விடயம். அதற்காக தன்னினசேர்க்கை என்பதால் தயக்கத்துடனும் பயத்துடனும் வாழவேண்டும் என எதிர்பார்ப்பது பிழையான ஒன்று, மனித தன்மையற்றது அவ்வளவுதான்..
  17. மன்னிக்கவேண்டும், நான் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என இருப்பதில்லை. எனக்கு தெரிந்ததை இங்கே எழுதுகிறேன், மற்றவர்கள் எழுதும் கருத்துகளில் இருந்தும் என் அறிவை வளர்த்துக்கொள்கிறேன்.. யாருக்கும் வகுப்பெடுப்பதுமில்லை.. இங்கே பலர் பலவிதமாக எழுதிவிட்டார்கள், எனது கருத்துக்களை முன்பே எழுதிவிட்டேன் திரும்பவும் அதையே எழுதி அவுஸ்ரேலியாவிலிருந்து வகுப்பு எடுத்து ஏன் மற்றவர்களின் நேரத்தை வீணாக்கவேண்டும்.. என நினைத்தே நீக்கினேன்.. அப்படி செய்தது யாரையும் மனம் நோகடித்திருந்தால் மன்னிக்கவும்..
  18. தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தும் என உணர்வதாலும், திரும்ப திரும்ப ஓரே விடயத்தை கதைப்பதால் ஒரு பயனும் இல்லை.. எனது கருத்தை நீக்கிவிட்டேன்.. அவரவர் வாழ்க்கை அவரவர் இஷ்டம்
  19. எனக்கும் முழுபேட்டியையும் கேட்கமுடியவில்லை..இறுதி நிமிடங்களில் ரதன் என்பவரின் கருத்துகளையே கேட்க முடிந்தது
  20. இல்லை நானில்லை அத்துடன் அந்த Aunty ஐயரை வறுத்து எடுத்தா என்பதால் கட்டாயம் நானாக இருக்கமாட்டேன் தமிழ்சிறி அண்ணா!!
  21. அப்படி நான் கூறமாட்டேன் ஏனெனில் அவர்கள் அப்படி மறைக்க நினைத்திருந்தால் இந்த செய்தியை கூட இணைக்கவிட்டிருக்கமாட்டார்கள்.. இது பேசாபொருள் என்ற நிலையை கடந்தமையாலேயே கருத்துகளை(பாடம் எடுப்பதற்கு அல்ல) அறியவேண்டிய நிலையில் இருப்பதாலேயே இந்த செய்தி 9 பக்கத்திற்கு அனுமதித்துள்ளனர்.. https://www.google.com.au/amp/s/www.aljazeera.com/amp/news/2021/9/27/switzerland-say-big-yes-to-same-sex-marriage சுவிஸ்லாந்து நாட்டில் நடைபெற்றது
  22. எங்களது வீட்டில் ஒரு மரமே உள்ளது.. இப்பொழுதுதான் இரண்டாவது மரத்தையும் நட்டு வைத்திருப்பதாக எனது தங்கை கூறினா..பார்ப்போம் அடுத்த முறை போகும் பொழுது
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.