Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  536
 • Joined

 • Last visited

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

 1. உங்கள் கருத்துடன் 100% உடன்படுகிறேன்( ஆனால் இளங்குமரன் வேண்டவே வேண்டாம்).. ஒரு பல்கலைகழகத்தின் துனைவேந்தர் என்பது அந்த பல்கலைகழகத்தை மேன்மேலும் தரம் உயர்த்தவும், காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை உள்வாங்கி செயல்களை செயற்படுத்தக்கூடிய ஆளுமைமிக்கவராக இருக்கவேண்டும்.. நல்லவர் என்பதும் மட்டும் துனைவேந்தர் பதவிக்கு சரியான தகமைகள் இல்லை.. வேல்நம்பி சேரிடம் படித்திருக்கிறேன்.. அப்பொழுதும் போலவே இப்பொழுதும் இருப்பாராயின்... சரியான தெரிவா என்ற சந்தேகம் எழுகிறது..
 2. நானும் அதே போலவே..என்ன கொஞ்சம் நாகரீகமாக “ டீச்சர் மாற்றிவிட்டா” என எழுதினேன்.. இப்பொழுது பேனா, பென்சில் பயன்படுத்தி எழுதும் வழக்கம் குறைவு என்பதால்.. இடது கை, வலது கை பிரச்சனை குறைவு.. உண்மைதான்.. ஊரில் நிறைய இடங்களில் அனுபவப்பட்டிருக்கிறேன்.. ஆனால், விளையாட்டு போட்டிகளில்( table tennis, badminton etc) எனக்கு இடது கை பழக்கம் நிறைய நன்மைகளை தந்துள்ளது.. இதற்காகவே, நான் எங்கேயாவது எங்கள் சமூகம் சார்ந்த நிகழ்வுகளிற்கு போகும் போது, வீட்டிலேயே சிறியளவில் snacks ஏதாவது சாப்பிட்டு, அங்கே போய், spoonலால் இலகுவாக சாப்பிடக்கூடிய உணவுவகைகளை எடுப்பது வழமை. இந்த ஆய்வுகள
 3. என்னை Montessoriயில் சேர்த்த பொழுது எனது அம்மா கூறாமலே டீச்சர் இடது கையால் எழுதிய என்னை வலது கையிற்கு மாற்றிவிட்டா.... ஆகையால் எழுதுவது மட்டும் வலது கை. இப்பொழுது நினைத்தாலும் கோபம்தான்் வருவதுண்டு. எங்களுடைய சில நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களை விளங்கிகொள்ளமுடியவில்லை..
 4. உண்மைதான்.. சிந்திக்கவேண்டிய விடயம்..நாங்கள் வெளிநாட்டு பிரஜையோ இல்லையோ பிரச்சனைகள் தரவேண்டும் என நினைத்தால் தந்துதான் தீருவார்கள்.. உங்கள் இருவரது கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி..
 5. எங்களிற்கு இது ஒன்றும் புதிதல்லவே... அனுபவமிக்க அரசியல் தலைமைகள், உலக அரங்கில் நடைபெறும் மாற்றங்களை அவதானித்து, அதற்கேற்ப எங்களது நடவடிக்கைகளை செய்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.. எங்களிடம் வளங்கள், ஆளுமைமிக்கவர்கள் இருந்தும், ஒற்றுமையின்மையால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம்.. இது எல்லோருக்கும் நன்கு தெரிந்தவிடயம்.. ஆனால் அதற்காக போரினால் வாழ்வாதாரங்களை இழந்தும், போதைமருந்து போன்ற பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, ஒரு சுயமாக சிந்தித்து முன்னேறாமல் இருப்போரை அப்படியே இருக்கவிடலாமா? பின் அவர்கள் சலுகைகளுக்காக மாறுகிறார்கள் என எப்படி குறை கூறமுடியும்? என்னைப்பொறுத்தவரை கல்விய
 6. மனதை வருத்தினாலும் சில உண்மைகளை கூறிவிட்டு செல்லும் கதை.. இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிகள். சில கதைகள், சித்திரங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என்பன சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏதோவொரு வழியில் வழங்கும் சாதனங்கள் என்பதால் நான், எனது தனிப்பட்ட கருத்தை கூறவிரும்புகிறேன். யாருடைய மனதையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை.. ஆதவனுடைய பெற்றோர் போன்றவர்களை அடிக்கடி எங்கள் வாழ்க்கையில் பார்ப்போம். அவர்கள் ஒருதரம் சிந்தித்து இருந்தால் இன்று அபிராமியின் வாழ்க்கை இப்படி ஆகியிருக்காது. திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. பிள்ளையில் நம்பிக்கை வைக்காது வேறு யாரிடம் நம்பிக்கை வைப்பீர்கள்?. அவர்கள் தங்களது நிலை
 7. எனது தெரிவு கஜேந்திரகுமாராக இருந்தாலும், இப்போதைய சூழ்நிலையில் கஜேந்திரகுமாரிடம் உள்ள தலைமைத்துவ பண்புகளையோ, மக்களிடம் அவருக்குள்ள நம்பிக்கையோ வளர்க்குமட்டும் அவரால் தனியாக ஒரு சிறிய டேவிட்டாக போராடமுடியாது.. அதேநேரம், கூட்டமைப்பில் சில சுத்திகரிப்புகளை செய்து இளையதலைமுறைக்கு கொஞ்சம் வழிவிடவேண்டும், ஏனெனில் இன்னமும் மக்கள் அவர்களை நம்புகிறார்கள், அந்த நம்பிக்கையை வீணாக்காது அவர்கள் கட்டாயம் செயற்படவேண்டும்.. ஆகவே விரும்பினாலும் விரும்பவிட்டாலும் கஜேந்திரகுமார் இன்னொரு அணியுடன் சேர்ந்தே செயலாற்றவேண்டும்.. மனோ கணேசனின் மீதும் மக்களுக்கு ஒரளவு நம்பிக்கை உண்டு.. ஆனாலும் அவரைப்பற்
 8. இரட்டைகுடியுரிமை உள்ளவர்களையும் இது பாதிக்குமா?..ஏனெனில் இந்த அரசாங்கத்தை நம்பமுடியாது ஆகையால் இரட்டை குடியுரிமை எடுத்தால் சில விஷயங்களிற்கு இலகுவாக இருக்கும் என என் தந்தை அடிக்கடி கூறியபடி...
 9. அரசியல் நோக்கங்களுக்காகவே தடுப்பு ஊசியை அவசரமாக வெளியிட்டு பரிசோதிக்கப்படவிருப்பதாகதான் இந்த வானெலி உரையாடலில் சொல்கிறார்கள்.. Image: Pexels (Retha Ferguson) Russia first in the world to officially register a coronavirus vaccine On RN Breakfast with Fran Kelly Share Facebook Twitter Mail Download Russia first in the world to officially register a coronavirus vaccine (7.68 MB) Download 7.68 MB Russia has become the first country in the world to officially register a coronavirus vaccine and declare it ready for use. The vaccine dev
 10. அலைகள் உரசும் கரையில் இருப்பேன்... உயிரை திருப்பி தந்துவிடு!!!!!!
 11. கூட்டமைப்பிற்கும் சாதிப்பார்கள் என்றுதானே வாக்களித்தோம்.. ஆனால் இன்று என்ன செய்துள்ளார்கள்? அவர்களும் “ முன்பு போல ஒன்றுமே இப்போ செய்யமுடியவில்லை” என்று எத்தனை வருடங்களுக்கு பிறகு கூறினார்கள்..அவர்களும் ஏமாந்தார்கள், அவர்களை நம்பி வாக்குப்போட்ட மக்களும் ஏமாந்து போனார்கள்.. மக்களுக்கும் தெரியும் முன்னாள் நீதியரசரும் ஒன்றும் செய்ய முடியாது.. கஜன்கள் கூட்டணியும் 5 வருடங்களிலும் ஒன்றும் சாதிக்கமுடியாது என்று... ஆனால் மாற்றம் ஒன்று வேண்டும் என்பதுதான் மட்டும் நன்றாக விளங்கியிருக்கிறது.. வயிறு காய்ந்திருக்கும் பொழுது மற்ற பிரச்சனைகள் பெரிதாக தோன்றாது என்பதைதான் டக்ளஸிற்கும் அங்கயனிற
 12. கட்டாயம் தேவை... மரியாதையை கொடுத்துத்தானே மரியாதையைப்பெற முடியும் இல்லையா? என்னைப்பொறுத்தவரை, நீங்கள் கூறிய மூவரும் வயதில் மூத்தவர்கள்.. அரசியலில் பழுத்த அனுபவங்களைக்கொண்டவர்கள்(?)... அவர்கள் பிழைவிடும் பொழுது, அவர்கள் மீது கோபம் வருவது இயற்கை.. ஏனெனில் அவர்கள் விட்ட தவறால் கஷ்டப்படுவது சாதாரண மக்கள். அதற்காக அவர்களை மரியாதையின்றி நடத்தவேண்டிய அவசியமில்லை. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் பிரவீனா வயதில் சிறியவர், அனுபவங்களும் மிக மிக குறைவாகவே இருக்கும்.. அவரை முறையாக வழி நடத்தவேண்டியது, அவரை இதற்குள் இழுத்துகொண்டுவந்தவர்களின் கடமை(கூட்டமைப்பு). அதே போல, அவரைப்பற்றி விமர்சிப்பவர்களும், அவர்
 13. இவருடைய மரணத்திற்கான காரணம் எதுவென்று தெரியாது ஆனால் நீங்கள் ஆண்களுக்கும் மன உளைச்சல் இருக்கும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்..ஆனால் அவர்கள் அதனை குணப்படுத்துவதற்காக நாடும் வழிகளிலேயே பெண்களும் ஆண்களும் வேறுபடுகிறார்கள்.. அவர்கள் பெண்களைப்போல வெளியே சொல்வதில்லை..அதனால் அவர்களின் பாதிப்புகள் வெளியே அட்டவனைப்படுத்தப்படுவதில்லை. தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை வெளியே கூறினால், சமூகத்தின் பார்வையில் அவர்கள் எவ்வாறு நோக்கப்படுவார்களோ என்ற பயத்தில் வெளியே கூறாமல், ஒன்றில் அதிக குடிபோதை பழக்கத்திற்கு அடிமையாகி அல்லது மனதிற்குள்ளே வைத்து புழுங்கி இளவயதிலேயே மரணமடைந்துவிடுவார்கள், இல்லை வேறு வகையான உற
 14. துரோகம் என்பதை நீங்கள் நாங்கள் என்றில்லாமல் தமிழராய் எல்லோரும் நிறையவே கண்டுவந்திருக்கிறோம், இன்னமும் அனுபவதித்துவருகிறோம் ரதி. கடந்த முறை கிழக்கு மக்கள், கருணாவை நம்பாமல் கூட்டமைப்பை நம்பி ஏமாந்து போனார்கள். ஆனால் இந்தமுறை சரியான(?) முடிவை எடுத்திருக்கிறார்கள் என நம்புகிறோம், ஆனால் திருகோணமலை மக்கள் ஏன் இன்னமும் நம்பிக்கை வைத்து சம்பந்தன் ஐயாவை தேர்தெடுத்தார்களோ தெரியவில்லை.. தேசியபட்டியல் வாய்ப்பை அம்பாறை பிரதிநிதிக்கு கொடுத்து தங்களது பிழைகளை உணர்ந்து அதற்கான திட்டங்களை வகுப்பாளர்களா தெரியவில்லை. வடக்கு மக்கள் இன்னமும் கொஞ்ச நம்பிக்கை இருப்பதால் கூட்டமைப்பிற்கும் ஆசனங்களை கொடுத்த
 15. இது தேவையில்லாத கருத்து என்பது எனது தாழ்மையான எண்ணம்.கட்சியின் சுயநலத்திற்காக பலிகாடாக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவார். மாமனிதர் ரவிராஜின் மகள் என்றும் ஒரு பெண் என்றும் கொஞ்சம் மரியாதை இருந்தால் நல்லது என நினைக்கிறேன். அத்துடன் அரசியலிற்கும் இவர்கள் புதிது.. இந்த தேர்தலுடன் இவர்களும் நிறைய அனுபவங்களை பெற்றிருப்பார்கள்..அது இனிவரும் காலங்களில் அவர்களுக்கு கைகொடுக்கும்.. இதில் பிரவீனாவின் பேச்சு உள்ளது.. தயவு செய்து ஒரு முறை கேட்கவும். நன்றி.
 16. @ரதி நான் நீங்கள் எழுதிய “ அவரோடு ஒன்றாக யாழ் யூனியில் படித்தவர்களும் சொன்னார்கள்...அங்கு படிக்கும் போது கூட படித்த மாணவிகளை வெருட்டி தனக்கு தேவையானதை எழுதி வாங்கிக் கொள்வாராம்” என எழுதியதற்கே எனது கருத்தை உங்களுக்கு எழுதியிருந்தேன்.. மற்றபடி குதிரையோடி கருத்து பொதுவாகவே எழுதினேன்.. முறையான வழியில் பல்கலைகழகம் சென்று அரசியலில் நுழைந்தவர்கள் தங்களது சாணக்கியத்தால் மக்களுக்கு என்ன செய்தார்கள், அவர்களை நம்பி வாக்கு போட்டவர்களுக்கு என்ன செய்தார்கள்? இன்று எங்களது வாக்குகள் பிரிக்கப்பட்டு சிதறுண்டு போவதற்கு வித்திட்டார்கள் அவ்வளவுதான். ஆனால் கஜனிற்கு பதவியை கொடுத்தவுடன் மட்டும் ஏன் இந்த குத
 17. நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் நாங்கள் இன்னமும் எவ்வளவு தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது என்பதை நன்றாக சொல்லிவிட்டு சென்றுள்ளது.. ஆக மொத்தம் 8 பெண் வேட்பாளர்களே மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் தென்னிலங்கையை சேர்ந்த பெண்மணிகள் என்பதும் ஒரு தழிழ் பெண் வேட்பாளர்கூட தெரிவு செய்யப்படவில்லை என்பதும் கசப்பான உண்மை. எங்களது சமூகத்தில் பெண் என்பவள் மட்டுமே குடும்பம், பிள்ளைகள் என்பதை கவனிக்கவேண்டும் என்பது எழுதாத சட்டமாக இருந்து வருகிறது.. ஆனால் இன்றைய நிலையில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகும் நிலை என்பதால் குடும்பம், பிள்ளைவளர்ப்பு என்பது இருவரது(கணவன்/மனைவி) சேர்ந்
 18. உருவம் இல்லையென்றால்... உண்மை இல்லையா... ஒரே முறை உன் தரிசனம்...
 19. குதிரையோடி: அதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ஒரு அறையில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாக அல்லது மெதுவாக கூறி அதை மற்றவர்களுக்கும் கூற சொன்னால் 10வது நபரிடம் போய் கேட்கும் போது நாங்கள் முதலாவது நபரிடம் கூறிய விஷயத்தில் ஒரு சதவீதம் கூட சரியாக வந்திருக்காது..ஆகையால் இந்த மாதிரி விஷயங்களில் ஆதாரம் இல்லாமல் ஒருவரின் வாய்பேச்சை எப்படி நம்பமுடியும்? நிற்க.. அப்படி குதிரையோடித்தான் கஜன் வந்திருந்தால் கூட, நன்றாக படித்த அப்புகாத்துகள் மட்டும் மக்களுக்கு நல்லதைதான் இவ்வளவுகாலமும் செய்தார்களா? நான் கூட்டமைப்பு படுதோல்வியடைய வேண்டும் என விரும்பியிருந்தேன். அவர்களுக்கு இது ஒரு நல்லபாடம்.. இனியாவது ம
 20. நீங்கள் நகைச்சுவையாக கூறினாலும் உங்களுக்கு தெரியும் ஆண்கள் பெண்களைப்போல தமக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே கூறுவது மிக மிக குறைவு என்று. ஆண்களுக்கு இந்த சமூகம் கொடுத்திருக்கும் தனித்துவமான அந்தஸ்தினால் அவர்கள் தாங்கள் பெண்களால் கொடுமைப்படுத்தப்படுவதை வெளிகொணர தயங்குகிறார்கள்.. தனது பெற்றோர்/மனைவி/காதலியினால் தான் கொடுமைப்படுத்துவதை வெளியே கூறினால் தன்னை கோழை என சமூகம் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவும், egoவினாலும் கொடுமைகளை வெளியே சொல்லாமல் தனது வலிகளிருந்து தப்புவதற்காக வேறு வழிகளை நாடுகிறார்கள். சமூகமும் அதை கண்டும் காணாதது போல இருந்து கொள்கிறது.. இதைப்பற்றி யாழ் இணையத்தில் கூட இரு
 21. நான் இந்த வருடம் சித்திரையில் ஊருக்கு போகும் பொழுது இதைப்பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருந்தேன்.. இந்த COVIDஆல் எல்லாம் மாறிவிட்டது.. எங்களில் பலர்( உள்நாடு/வெளிநாடு), பல்கலைகழகம் தெரிவான மாணவர்களில் கல்வியை பணபற்றாகுறையால் தொடரமுடியாமல் உள்ளவர்களுக்கு உதவுவது உண்டு.. அது ஒரு வழிப்பயணமாக மட்டுமே இருக்கும்.. ஆனால் கிளிநொச்சியில் இந்த அறக்கட்டளை செய்வது வித்தியாசமானதாக பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்குவதாகவும் தேன்றுவதால் இங்கே இதை இணைக்கிறேன்.. முழுவிபரங்களையும் அறிந்து இணைக்கமுடியாமைக்கு மன்னிக்கவும், ஆனால் இது ஒரு சிந்தனைக்குரிய விடயம். கிளி
 22. நன்றாக கூறியுள்ளீர்கள் சுமோ அக்கா. பெண்களை அவர்களுடைய உடல் அமைப்பை கொண்டும், உணர்வுகளை கொண்டும், சமூக அந்தஸ்தை, பொருளாதார நிலையை கொண்டும் அடக்கி வைத்திருக்கும் போது, அவற்றில் இருந்து தானாகவே விரும்பி தனக்கான பாதையை அமைத்து வெளியேறாதவரை, உண்மையான பெண் சுதந்திரம் என்பது பத்தோடு பதினென்றாக வரும் செய்தியே.
 23. எனது தனிப்பட்ட கருத்து இதுதான்: நாம் எமது நம்பிக்கைகளை/செயற்பாடுகளை பயமுறுத்தி, கட்டாயப்படுத்தி, மற்றையவர்களின் மேல் திணிக்க கூடாது. அப்படி செய்தால் கூட அது உண்மையான ஒன்றாக இருக்காது.. மனம் ஒன்றுபட்டு நம்பிக்கை வைத்து செய்யும் வழிபாடு/செயலுக்கும், விருப்பமில்லாது ஏனோதானோ என செய்யும் வழிபாடு/செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை எல்லோரும் அறிவார். நீங்கள் பின்பற்றும் ஒரு செயல்/நம்பிக்கை மீது, கேள்விகள் எழுப்பப்படும் பொழுது உங்களால் சரியான விளக்கத்தை தரமுடிகிறதா? , அப்படியானல் அதை செய்யுங்கள்.. நீங்கள் மாறவேண்டிய அவசியமில்லை. இல்லை உங்களுக்கே உங்களது செயல் மீது கேள்வி எழுந்தா
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.