Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1743
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by P.S.பிரபா

  1. உதயநிதி ஸ்டாலின்  சனாதனம் என்பதை டெங்கு, காலரா, கொரோனா கிருமிகளை அழிப்பது போல அழிக்க வேண்டும் என்று கூறியதன் பின் இரண்டு நல்ல கட்டுரைகளைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒன்று சாவித்திரி கண்ணன் எழுதியது இன்னொன்று இந்தக் கட்டுரை.. 

    பகிர்ந்தமைக்கு நன்றி

  2. 17 hours ago, விசுகு said:

    இந்த திரியை ரகு திறந்தது ஒரு கருத்து கணிப்பு போன்றது. எனவே உங்கள் கருத்துக்களை மட்டும் வையுங்கள் உறவுகளே. எதிர் போர் வேண்டாமே??

    விசுகு அண்ணா நான் நினைப்பது இதுதான்

    தமிழக அரசியலில் அவர் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம், தலைவரைப் பற்றிப் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் சென்றார். முன்பை விட எங்களது போராட்ட வரலாற்றை இன்று வரை மேடைகளில் பேசுகிறார். குரல் கொடுகிறார். அதற்காகவே புலம்பெயர்ந்த தமிழர்கள் அவருக்கு உதவுவதும் (உ+ம் அவருடைய தொகுதி ஒன்றிற்கு தேர்தல் சமயம் புலம்பெயர்தமிழர்கள் உதவியிருந்தார்கள் என அறியமுடிந்தது}.  என்றெல்லாம் இருந்தாலும் கூட விஜயலட்சுமி விடயத்தில் அவரது நடவடிக்கைகள் அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தவில்லை.

    - சீமான் ஒரு வளர்ந்து வரும் அரசியல்வாதி/தலைவர் என்றால் அவர் தன்மீது இந்த மாதிரி ஏற்படும் அவதூறுகளை சரியான முறையில் கையாளவேண்டும். அதுவே ஒரு நல்ல தலைவனுக்கான அம்சம். அதை விட்டுவிட்டு தூதுவர்களை அனுப்புவதும், டீல் போடுவதும் சரியான செயலா? 

    - ஒரு வளர்ந்துவரும் அரசியல்வாதியான அவருக்கெதிராக இந்த மாதிரி அவதூறு பரப்புவதை அவர் ஏன் முறையாக கையாளவில்லை?. 

    - மற்றப்படி இந்த அரசியல்வாதிகள் இன்று அடிபடுவார்கள் நாளை காலைத்தொட்டு கும்பிடுவார்கள். இவர்களுடைய அரசியலுக்காக எங்களது வரலாற்றை கொச்சைப்படுத்த விடமுடியாது இல்லையா? 

     -  ஆகவே தமிழ் நாட்டு அரசியலில் நாங்கள் எட்டவே நிற்கவேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மக்களுடன் அல்ல.
    அவ்வளவுதான். 

    இன்னொன்றையும் சொல்ல நினைக்கிறேன், யாழ்களத்தில் சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அவதானித்தது, வளர்ந்து வரும் தமிழ்நாட்டு அரசியல்வாதி சீமானை குற்றம் நிரூபிக்கப்படாமல் பாலியல் குற்றவாளி எனக் கூறியது தவறு என கள உறவு யாரோ எழுதியிருந்தார், ஆனால் அவருக்கு விளங்கவில்லையா அதே போல விஜயலட்சுமியை மனநோயாளி என கூறுவது தவறு என்று?? 
     

    நன்றி. 

    • Thanks 1
  3. இந்த வாக்கெடுப்பில் அவுஸ்ரேலிய பூர்வீககுடியின மக்களின் சில பிரிவுகளுக்கிடையிலும் ஒரு தெளிவின்மை உள்ளதைக் காணலாம்.   இதைப் பற்றி யாழ்கள அவுஸ் உறவுகள் என்ன நினைக்கிறார்கள்?? 🤔

     

    • Like 1
  4. 16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

     

    மாமா! மாமா! ஆரும் இல்லையோ வீட்டில...... ஓம் ஓம் நிற்கிறம் என்ன தம்பி? மாமா இல்லையா மாமி? இல்ல அவரு தோட்டத்துப்பக்கம் போயிருக்காரு ஓ அப்படியா வந்தால் சொல்லுங்க மகளுக்கு சாமத்திய கல்யாணம் வச்சிருக்கன் எல்லோரும் குடும்பத்தோட கட்டாயணம் வரணூம் வரச்சொல்லி சொல்லுங்க சரி அவரு வந்தால் சொல்லுறன் ம் உள்ள வாங்க வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு போங்க இல்ல மாமி ஆயிரம் வேலை கிடக்கு நான் வந்து போனத சொல்லுங்க மாமாகிட்ட சரி சொல்லுறன் தம்பி

    இஞ்சாருங்கோ உங்க மருமகன் இப்பதான் வந்து போகிறார் யாரு ? மதிமோகனா? ஓமோம் அவர்தான் என்னவாம் இஞ்சால பக்கம் காத்து அடிச்சிரிக்கி அவங்க எல்லோரும் நாட்டுக்கு வந்திருக்காங்களாம் பிள்ளைக்கு சாமத்திய வீடு செய்ய ஓ!!! அதுவா செய்தி ம் என்ன மாதிரி உங்க வீட்டுப்பக்கத்தால பல வருசம் கழிச்சி இப்பதான் கண் தெரிஞ்சிருக்கு போல என மனைவி மெதுவாக குத்திக்காட்டினாள். ம் பின்ன உன்ன கல்யாணம் கட்டவேணாம் என்று எல்லோரும் சொல்ல கல்யாணம் கட்டினத்துக்கு தண்டனைதான் அது . என்ற அம்மாவுக்கு உன்ற அம்மாவை பிடிக்காது ஆனால் உன்னை எனக்கு பிடிச்சி போக அம்மா சொல்லியும் அத கேட்காம உனக்கு மாப்பிள்ளை பார்த்தவுடன் நீ என்னத்தான் கல்யாணம் கட்டவேணும் என்ற ஆசையில் ஓடிவர இருவரும் வீட்ட விட்டு ஓடி கல்யாணம் பண்ணுனம் பாரு அதுதான் எல்லோருக்கும் பிரச்சினை . ம்கும் அப்ப ஓடிப்போனவங்க ஒருத்தரும் கல்யாணமும் கட்டல பிள்ளையும் பெறல அவங்கள சேர்த்தும் எடுக்கல உங்க குடும்பம மட்டும் தான் புதுனமாக குடும்பம் என்றாள் மனிசி.

     

    நீங்கள் உரையாடல் வரும் பகுதிகளை அதற்கேற்றவாறு எழுதினால  வாசிக்க இலகுவாக இருக்கும். 

    சிந்திக்க வைக்கும் கதை. நன்றி. 

     

    7 hours ago, ஏராளன் said:

    ஓம் இப்ப யார் கூட செலவளிக்கிறது என்றதில போட்டி தான்!
    ஆனால் அடிப்படைத் தேவைகளுக்கு செலவளிக்க முடியாது அல்லாடுபவர்களுக்கு உதவிகள் குறைவு.

    நாங்கள் எங்களுக்காக வாழ்வதில்லை, சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயத்தில் சமூகத்திற்காகத்தான் வாழ்கிறோமோ  என நான் நினைப்பதுண்டு. 

    உற்றார் உறவினர என்ன சொல்வார்களோ என்று தொடங்கி அடுக்கடுக்காக அதற்கு ஏற்ற வகையில் காரணங்களைக் கூறி தங்களை நியாயப்படுத்திக் கொள்வார்கள். அதனைக் கேட்டு எனக்குள் சிரித்துக்கொள்வதுண்டு. 

     

  5. On 16/9/2023 at 14:30, ரஞ்சித் said:

    , இவரது அரசியலை ஆதரிக்கும் எந்த ஈழத் தமிழனும் இதுகுறித்துச் சிந்திப்பது நல்லது.

    நீங்கள் இந்த பதிவை எழுதியது ஒரு வகையில் நல்ல விடயம். என்னுள் இருந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது ஒன்று. அதே நேரம் இங்கே எழுதுவோரின் நோக்கங்களையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. இங்கே இவ்வளவு பக்கம் பக்கமாக ஒரு சிலர் எழுதுவது நேரத்தைப் போக்க யாழை ஒரு பொழுது போக்கும் இடமாகப் பயன்படுத்துகிறார்கள். சிலர் சரியான விதத்தில் விளங்கப்படுத்த முயற்சி செய்கிறார்கள். சிலர் உணர்ச்சி வேகத்தில் முதல் பக்கத்தில் எழுதியவற்றை மறந்து போய் வேறு விதமாகஎழுதுகிறார்கள். ஆகையால் இப்படியான பதிவுகளை வாசிக்கும் என் போன்றவர்களுக்கும் எதனைக் கருத்தில் எடுக்கவேண்டும் என்பதும் புரியும். 

    மனிதர்கள் பலவிதம்.. 

    உங்களுடைய பதிவிற்கு நன்றி. 

    • Like 1
    • Thanks 2
  6. 12 hours ago, satan said:

    இந்தகுண்டுத்தாக்குதலின் பின்னால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவ கலவரத்தை உருவாக்கி அதிலே இந்த குண்டுத்தாக்குதலை மூடிமறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் காத்த பொறுமை அதற்கு இடம் அளிக்கவில்லை, ஆகவே தாங்கள் ஒரு வலிந்த தாக்குதலை ஏற்படுத்தி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்து, அவர்களை பேச விடாமல் அடக்கினர். மனித உயிர்களை கொன்று அவற்றின்மேல் அரசியலமைத்தவர் நெடுங்காலம் அதை அனுபவிக்கவில்லை, மாறாக அவரை தெரிந்தெடுத்தவர்களே அரச கதிரையிலிருந்து இழுத்து விழுத்தினர். அப்பாவி மக்கள் காரணமின்றி சிந்திய குருதி வீண் போகவில்லை. காதோடு காதாக பேசிய ரகசியம், இப்போ உலகெல்லாம் கசிந்தது எப்படி? அன்று அவர்கள் மௌனமாக வடித்த கண்ணீருக்கு கிடைத்த வெற்றி! 

    அப்பாவி மக்கள்தான் 14 வருடங்களுக்கு முன்பும் சிந்திய குருதிக்கும் கண்ணீருக்கும் இன்னமும் விடிவு கிடைக்கவில்லை…கடவுள்மாரும் பாராபட்சம் பார்க்கிறார்களோ?

    தங்களுக்கு தேவையான பொழுது  இந்த மாதிரி காணெளிகளை வெளியே விடுவது.. பின் ஒன்றுமே நடவாதது போல அவர்களுக்கே அதிகாரங்களைக் கொடுப்பது. இப்படியான விடயங்கள் எத்தனை நடந்துள்ளது. அவ்வளவுதான். 

  7. 21 hours ago, goshan_che said:

    தேவை ஓட்டை இல்லாத கூடையை பின்னும் தூரநோக்குடைய தலைமை

    அதற்கிடையில் இலங்கையை ஆளும் அரசு எங்கட வளங்களை வைத்தே எங்களை இன்னமும் கீழே தள்ளிவிடுவார்கள். 

    எத்தனை அறிவாற்றல் இருந்தாலும் பணபலம் இருந்தாலும் எங்களுக்கு இன்னமும்(2009ற்குப் பின்) ஒரு ஒழுங்கான கூடையை பின்னமுடியவில்லை. ஆனால் நிறைய கதைக்கிறோம். அவ்வளவுதான்

  8. சமூகத்தில் இப்படி 4 வகையான மனிதர்களைப் பார்க்கலாம். எனக்கு இந்தத் திரியை வாசித்த பொழுது இதனைப் இங்கே பதிவது சரியென தோன்றியது என்பதால் இணைத்துவிடுகிறேன். 

  9. 23 hours ago, Nathamuni said:

    நன்றி: கூடை, முட்டை..... அப்படியே கருத்தை எடுக்கிறீர்கள் போலுள்ளது.

    அது முதலீடு செய்பவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை உவமானம். அதாவது உங்களிடம் இருக்கும் பணத்தை ஒரே இடத்தில் முதலிடாமல், பல இடங்களில் முதலிட்டால் ஒன்று பிழைத்தாலும் ஏணையவை கைகொடுக்கும்.

    லைக்கா உள்பட சகலரும் இலங்கைக்கு வெளியே பல உறுதியான கூடைகளையும் இலங்கையில் சின்ன கூடையையும் வைத்திருப்பார்கள்.

    இலங்கையில் வங்கிகளில் பணத்தை கடன் வாங்கியே தொழில் செய்வர். காப்புறுதியால், வன்செயல் வந்தால் நட்டம் இலங்கைக்கே.

    மேலும் இலங்கை BOI எனும் அரசஅமைப்பு வெளிநாட்டவர் முதலீடுகளுக்கு உத்தரவாதம் தருகிறது.

    ஆக, புலம் பெயர் முதலீட்டாளர்கள், அளந்தே காலை வைப்பார்கள். பணத்தை அங்கே கொட்டி இழக்கும் முட்டாள்களாக நான் கருதவில்லை.

    இதே திரியில்தான் நீங்கள் எழுதியிருந்தீர்கள் அரசியல் ஸ்திரதன்மை இல்லாதமையால் கேரளாவிலிருந்து இலங்கை ரொட்டியை இறக்குமதி செய்வதாக.. அவருக்கு விளங்கியது ஏன் இந்த அல்லிராஜாவுக்கு விளங்கவில்லை? அவரைப் போன்ற நீங்கள் கூறும் மற்றைய முதலாளிகளுக்கு விளங்கவில்லை?

    பொன்னியின் செல்வனில் முதலிடமுதலே வேறு படங்களில் தயாரிப்பில் ஈடுபட்டு அவர் அங்கே பிரபல்யமான தயாரிப்பாளராகத்தான் இருந்திருக்கிறார் ஆனால் பொன்னியின் செல்வனின் இலங்கை காட்சிகள் இலங்கையில்தான் எடுக்கப்பட்டதா? இல்லை பின் எவ்வாறு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வரும்? 

    நாங்கள் தமிழர் இடங்களில் முதலிடமுடியாமைக்குப் பல காரணங்களைக் கூறுகிறோம், அங்கே உள்ள இளையோரையும் குறை கூறுகிறோம்  ஆனால் அதில் ஒன்றைத்தன்னும் இந்த புலம்பெயர் முதலீட்டாளர்களால் மாற்றமுடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கான எல்லை மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. 

    இப்படிப் பல கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அது தேவையற்றது. ஏனெனில் இங்கே  பலர் அதனை தெளிவாக விரிவாக விளங்கப்படுத்தியுள்ளர்கள். 

    ஆனாலும் எனக்கு வர்த்தகத்தின்/வியாபாரத்தின் விதிமுறைகளை விளங்கப்படுத்தியதற்கு நன்றி. 

  10. 20 hours ago, Nathamuni said:

    எமது பொருளாதார பலம் காரணமாக, கொள்பிட்டி முதல், கல்கிசை தாண்டி பாணந்துறை வரை கடற்க்கரை பகுதி வீடுகள், காணிகள் தமிழர் வசம்.

    இதோ லைக்கா போய் இறங்கி விட்டார். யாழ்ப்பாணத்தில், ஐபிசி பாஸ்கரன், கனடா இந்திரன் முதலே புகுந்து விட்டார்கள். 

    அட, நம்ம லண்டன் Tilco ரியல் எஸ்டேட் போஸ் அங்கே எப்போவோ போய் விட்டார்.

    அது மட்டுமல்ல, தென் பகுதியில், பல ஹாலிடே இடங்களிலும், ஹோட்டல் களிலும் நம்மவர்கள் புகுந்து விட்டார்கள்.

    அதுமட்டுமல்ல, எமக்கு தெரியாத பல முத(லை)லாளிகள் அங்கே போய் இருக்கிறார்கள்.

     

    இந்தளவு முதலீட்டார்களின் முதலீடுகளால் யார் அதிகம் நன்மையடைந்தார்கள் என்பதை ஊர்  நிலவரம் தெரிந்தவர்கள் ஓரளவிற்கு புரிந்துகொள்வார்கள் மற்றப்படி நாங்கள் எங்களது பொருளாதார பலம் என சொல்லப்படும் விடயத்தில் அதீத பெருமை கொள்கிறோம் என்று மட்டும்தான் தெரிகிறது.

    Justin அண்ணா கூறியது போல கூடை ஒன்றில் எல்லா முட்டைகளை சேர்த்து வைத்து கூடை உடைந்த பொழுது எல்லாவற்றையும் இழந்தவர்கள் நாங்கள் என்றால்  என்னைப் பொறுத்தவரை இதனை இன்னொரு விதமாகப் பார்த்தால் அந்த கூடையில் ஏன் எல்லா முட்டைகளையும் சேர்த்து வைக்கவேண்டிய நிலை வந்தது என்பதை நாங்கள் இன்னும் உணரவில்லையோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. 

    இதற்குமேல் சொல்ல ஒன்றும் இல்லை. 

    உங்களது முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • Thanks 2
  11. 10 minutes ago, ரஞ்சித் said:

    சிங்கள பாதாள உலக சமூகவிரோதிகளை புலிகள் என்று செய்தி புனையும் ஒரு ஊடகத்தின் உரிமையாளர், அதுவும் பெளத்த பிக்குகளின் முன் எண்சாண் உடம்பை சுருக்கி, நாணிக்கோணி நின்று விருது வாங்கிய அவர் தனது பொருளாதாரப் பலத்தின்மூலம் தமிழருக்கான உரிமைகளை வாங்கித் தருவார் என்று நம்புவோமாக. 

    அவருக்கும் இரு முகம் இருக்கும் என்று நம்புவோமாக..

    வெளியே எட்டாக வளைந்தும் உள்ளே வெறுப்பை கொண்டும் ஏனெனில் காரியம் நடக்கவேண்டும் என்றால் சில விரும்பத்தகாத செயல்களை செய்யவேண்டும் தானே…

    வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்தானே

  12. On 25/8/2023 at 08:30, goshan_che said:

    தேவை - பறிக்க முடியாத ஆட்சி அதிகாரம். நிதியை கையாளும் சுதந்திரம்.

    இவை பற்றி யார் சிந்திக்கிறார்கள். அப்படி சிந்தித்தாலும் கூட செயல்படுத்த முடியாத நிலை. 

    19 hours ago, ரஞ்சித் said:

    உங்களை பொருளாதாரத்தில் பலவீனமாக்கி, தம்மிடம் கையேந்தும் நிரந்தர நிலையை அவன் உருவாக்க நினைக்கிறான்

    உண்மை. 

  13.  

    23 hours ago, சுவைப்பிரியன் said:

    பல தடவை எழுதியிருக்கிறேன்.பொருளாதரப் பலமே எம்மை மீட்க்க வளி

    பொருளாதார பலம் எங்களை எப்படி மீட்கும் எனக் கூறமுடியுமா?

    ஊரி்ல்(வன்னியில்) vanni cashews என்ற ஒன்றை தயாரிக்கிறார்கள்.. மிகவும் சுவையான ஒன்று.. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. புலம்பெயர் தமிழ் செல்வந்தர்கள், அதுவும் அரசியல் செல்வாக்கானவர்கள் ஏன் இப்படியான உள்ளூர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய வழிவகுத்து அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். 

    ஊரில இளையோர் சீரழிந்து போகிறார்கள், இப்பதான் மறுவாழ்வு சிகிச்சை நிலையம் பற்றி யோசிக்கிறார்கள். எங்கட பொருளாதார பலம் இவர்களை மீட்க வழி செய்யுமா? எப்படி?

    கொஞ்ச காலத்திற்கு முன் நீராஜ் டேவிட் அவர்களின் இஸ்ரேல் பயண அனுபவங்களை தொகுத்து வழங்கிய காணெளியைப் பார்த்தேன், அதில் அவர் புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார பலம் பற்றி அடிக்கடிக் கூறுவார். இதனைப் பார்த்து உங்களைப் போலவே நானும் கொஞ்ச காலத்திற்கு முன் நம்பியிருந்தேன். 

    ஆனால் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கையில் நாங்கள் எங்களுடைய பொருளாதார பலத்தை ஒற்றுமையாகப் பயன்படுத்தவில்லை உணரவில்லை, உணர்ந்தவர்களும் தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். 

    • Like 1
  14. On 22/8/2023 at 23:28, nochchi said:

    அப்படித்தான் பார்க்கமுடியும். வெறுமனே சாதியெனும் ஒற்றைக் கரணியமாக இருக்கமுடியாது. 

    ஆனால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஏதோதோ காரணங்களைக் கூறி மேலும் மேலும் பிளவுபடுகிறோம். 

    13 hours ago, satan said:

    சாதி மட்டுந்தான் காரணம் என்றால்; மதம் மாறியவர்கள் சாதி பார்ப்பதில்லையா? மதம் மாறியவர்களோடு சாதியும் இல்லாமல் போகவில்லையே? இது, ஒவ்வொருவரும் சுக போக வாழ்க்கை வாழ்வதற்கு மக்களை ஏமாற்றி அடிபட வைத்து தாம் பிழைக்கும் தந்திரம். 

    உண்மை.. 

    உண்மையில் இந்தக் கூட்டத்திற்கு இவர்கள் என்ன சொல்லி அழைத்து வரப்பட்டார்களோ தெரியாது.. எப்படியான குடும்ப பிண்ணனியுடன் வந்தார்களோ தெரியாது. 

    பெரும்பாலான சமயங்களில் உண்மையான காரணத்தைச் சொல்லி கூட்டங்களை கூட்டுவதில்லை ஏனெனில் காரணம் தெரிந்தால் அதிகமானோர் வரமாட்டார்கள் என்பதால்

  15. 4 hours ago, விளங்க நினைப்பவன் said:

    நீங்கள் உண்மையிலேயே கண்டோஸ் தான் சாப்பிட்டு இருக்கிறீர்கள்.

    IMG-0627.jpg
     

    4 hours ago, விளங்க நினைப்பவன் said:

    அங்கே  Cadbury  TimTam  சொக்லேற் வாங்கி சாப்பிட்டதையும் கண்டோஸ் சாப்பிட்டேன் என்று  சொல்வார்களாம்😀  கோஷான் சேயின் விளக்கத்திற்கு பின்பு தெரிந்து கொண்டேன்.

    அப்ப உங்களுக்கு எங்கட ஆட்களையோ ஊரையோ தெரியாதா???

  16. 3 hours ago, குமாரசாமி said:

     

    ஈழத்தமிழனுக்கு யாருமே எதிரியில்லை. அவன் தனக்குத்தானே எதிரியை வைத்துக்கொண்டிருக்கின்றான்.

    நாகரீகமாக பேசுங்கள் எழுதுங்கள் என்பவர்கள் கூட சாதி வேற்றுமை பார்க்கின்றார்கள். தமிழர் பகுதிகளில் சாதி எனும் இழவு நோயை அழித்து விட்டு வெளியே வாருங்கள்.

    சிங்கள ஆக்கிரமிப்பு பற்றி பேசலாம்.

    உங்களிடம் ஒரு கேள்வி நாளை தமிழர்கள் இப்படி தமிழ் பெளத்தர்களாக மாறுவதற்கு சாதிப் பாகுபாடினால் பாதிக்கப்பட்டது என்ற ஒன்று மட்டும்தான் காரணம் என்கிறீர்களா?

    நான் நினைக்கிறேன், சலுகைக்குள் ஆசைப்பட்டு, அவர்களது சமயக்கொள்கைகளில் கவரப்பட்டு அல்லது தன் இனம் மொழி ஏன் முக்கியமானது, எமது அடையாளம் ஏன் முக்கியம் என பற்றித் தெரியாத எவரும் இதற்குள் உள்வாங்ப்படலாம். சாதி மட்டுமே தனித்த ஒரு காரணமாக அமையாது. 

     

     

    • Like 1
  17. நான் ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் சில இடங்களுக்கு தவறாது போவது போல  சில உணவுகளை சாப்பிடாமல் வந்தது இல்லை(பெரும்பாலும்).. அதில இந்த கண்டோஸும் அடங்கும்😊..இனி யோசிக்கத்தான் வேண்டும்

     

    1 hour ago, பெருமாள் said:

    வீட்டை விட்டு வெளியில் போனால் சைவம்தான் நல்லது .

    உண்மைதான்.. 

  18. 8 hours ago, ரஞ்சித் said:

    உள்ளிருந்தே அரிக்கப்பட்டு, பலவீனப்பட்டுப்போகும் நிலையினை மெதுவாக தமிழினம் அடைந்துகொண்டிருக்கிறது. 

    ஆனால் நாங்கள் இதனைப் பற்றிக் கவலைப்படாமல், வெறிச்சோடி இருக்கும் தீவுகளில் பிரமாண்டமான கோவில்களைக் கட்டுகிறோம். 

    புதுப்புது கடவுள்களை அறிமுகப்படுத்துகிறோம்.

    மாணவர்களின் உடல்உள ஆரோக்கியம் வேண்டாம் புதுக்கட்டிடங்கள் வேண்டும் எனக் கேட்கிறோம். 

    இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு எத்தனை பேர் உண்மையான நோக்கம் அறிந்து வந்தார்களோ தெரியவில்லை.. ஒரு வகையில் இவர்கள் மேல் அனுதாபமே வருகிறது. 

     

    • Like 2
    • Thanks 1
  19. நாங்கள் சிதறிப் போன மக்கள் கூட்டமாக எப்படி மாறிவருகிறோம் இன்னொரு கட்டுரையில் எழுதியுள்ளார். 

    ஆனால் எத்தனைபேர் இதனை உணர்கிறார்கள்? 

     

  20. @Justinஅண்ணா, யாழிணையத்தில் தலைவரைப் பற்றிய தொடர், நன்னியின் வரலாற்று ஆவணப்படுத்தல் மற்றும் உங்களது இந்த தொடர் எல்லாமே மிகவும் பயனுள்ள தொடர்கள். 

    உண்மையில் இப்படியான தொடர்களை இங்கே அல்லது புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் இலகுவான மொழி நடையில் உயர் வகுப்புகளிற்குப் பயன்படுத்தலாம். ஒரே சிலப்பதிகாரத்தையும் இராமயாணத்தையும் சொல்லிக் கொடுக்காமல். 
     

    • Like 1
  21. 5 hours ago, பையன்26 said:

    அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி வெளிய‌

    பின‌லில்
    ஸ்பேனிய‌ன் இங்லாந்
    இந்த‌ முறை யார் க‌ப் தூக்குவின‌ம் என்று க‌னிப்ப‌து க‌ஸ்ர‌மாய் இருக்கு

    இங்லாந் ம‌க‌ளிர் அணி க‌ல‌க்க‌ள் விளையாட்டு

    நான் நினைக்கிறேன் ஸ்பெயினிற்கு வெற்றி பெறும் சந்தர்ப்பம் அதிகம் என..

    நேற்று Matlidas கோல் அடிக்கும் சந்தர்ப்பங்களை கொஞ்சம் தவறவிட்டுவிட்டார்கள். Defending கூட சரியாக இருக்கவில்லை.. இலகுவாக இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டது

  22. On 15/8/2023 at 10:34, ஈழப்பிரியன் said:

    அப்ப உங்கள் அப்பாவுக்கு நான் தம்பி.

    அப்பாடா!! ஒரு மாதிரி இதைத் தெளிவுபடுத்தியாச்சு😀..

    On 15/8/2023 at 18:38, Kavi arunasalam said:

    எனது கருத்தும் இதுதான்.👍

    என்னுடைய சிநேகிதியும் இந்தப் படம் பார்க்க வந்திருந்தா.. பல்வேறு காரணங்களுக்காக தனக்கு எங்கட படங்கள் பிடிப்பதில்லை ஆனால் இந்தப் படத்தை நன்றாக எடுத்துள்ளார்கள் எனக் கூறினார்.. 

    எங்களுடைய கலைஞர்களுக்கு சரியான வாய்ப்பும் ஆதரவும் கிடைத்தால் அவர்களாலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க முடியும் என்பதை பலர் உணர்வதில்லை. 

    9 hours ago, suvy said:

    இப்பதான் பார்த்தேன்......பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!   👍

    மிக்க நன்றி

  23. இப்படி ஒரு நிலையத்தை அமைக்க வேண்டிய சூழ்நிலையை உணர்ந்தது வரவேற்கப்படவேண்டிய விடயம். அத்துடன் போதையில் இருந்து மீண்டு வருவோரை சமூகம் நோக்கும் விதமும் மாற வேண்டும்.

     

  24. On 13/8/2023 at 10:52, நியாயத்தை கதைப்போம் said:

     

    சமூக அக்கறை உள்ளவர்கள், தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் உடல், உள பாதிப்புக்கு உள்ளாகிய பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும். 

    கிடைக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் பார்தால் மிகவும் பின் தங்கிய இடம்/குடும்பம் போல் தோன்றுகின்றது.

    இந்த பிள்ளைக்கு இனி தாய், தகப்பன், சகோதரங்களுடன் வாழ்வது சாத்தியப்படாது. ஊருக்குள் வாழ்வது பெரும் வேதனையாகும், போராட்டமாகும். 

    அக்கறை உள்ள பொது நல அமைப்புக்கள் ஏதாவது பிள்ளையை நாடி தேவையான உடனடி உதவிகள், வசதிகள் செய்து கொடுத்தால் பெரும் புண்ணியம். 

    சுவிஸ்/பிரான்ஸ்/கனடா போன்ற நாடுகளுக்கு இலங்கையில் இருந்தே விண்ணப்பித்து அகதி விண்ணப்பம் மூலம் செல்வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏதாவது தொண்டு நிறுவனம் பிள்ளையின் நிலமை, விருப்பம் அறிந்து பொறுப்பெடுக்க வேண்டும். 

    முயற்சி செய்தாலும் விளைவு நாங்கள் எதிர்பார்த்த மாதிரி வருமே தெரியாது. ஏனெனில் இந்த விடயங்களில் நாங்கள் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. 

    நன்றி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.