Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  536
 • Joined

 • Last visited

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

 1. இவரது இன்னொரு சித்திரத்தை "துளி துளியாய்" பகுதியில் ஒரு கட்டுரையில் இணைத்துள்ளா், அந்த ஓவியம் மிகவும் அழகான ஒரு ஓவியம். அந்த மானின் கண்களை தீட்டிய விதம் மற்றும் வர்ணங்களின் தெரிவு என்னை கவர்ந்த ஒன்று. நல்லதொரு விளக்கம். உங்களுக்கு இருக்கும் திறமையை இன்னமும் மேம்படுத்தும்் வசதி அல்லது வாய்ப்புகள் இருக்கும்் என்றால் அதைப்பயன்படுத்தினால் உங்களோடு சேர்த்து மற்றவர்களும் பயன் பெறமுடியும்.........திறமைகள் ஏன் வீணாக வேண்டும்... சிந்தித்துப்பாருங்கள்்் உடையார் அண்ணா உங்களது மகளிற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்கள். ..
 2. விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என உணர்த்தும் ஒரு கட்டுரை. சில விடயங்கள் அடிக்கடி பேசப்படும் பொழுது மக்களிடையே ஓரிரு மாற்றங்களாவது ஏற்படும் என்று நினைப்பதுண்டு. சில நாட்களுக்கு முன்பு “ சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு” பற்றிய ஒரு மொழிபெயர்ப்பை சமூக சாளரத்தில் இணைத்திருந்தேன். அந்த கட்டுரையில் இணைத்த இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான படம் ஒன்றை மறுபடியும் இங்கே இணைக்கிறேன். வண்ணத்துப்பூச்சி போன்று பல வர்ணங்களில் பறக்கும் சிறுவர்களை துன்புறுத்தும் மனிதர்களின் பல வடிவங்கள் இவை. மேலும் இந்த பெண்கள் சிறுவர்கள் தொடர்பான துன்புறுத்தல்
 3. நீரோடை காயும் நிலை வந்ததாலே... கறையான் அரிக்கின்ற மரமானதே...
 4. பாவித்து இருக்கலாம், ஆனால் சமைக்கும் போது இந்த texture நன்றாக வந்தது ஆகையால் வேறு ஒன்றையும் சேர்க்கவிரும்பவில்லை.
 5. இருக்கலாம். முதலில் நான் இந்த மரக்கறிகளை (முள்ளங்கியை தவிர்த்து)grillல் போடாமல் salad dressingல் ஊறவைத்து செய்யவே..அத்துடன் நான் tin chickpea பாவிப்பது இல்லை, ஆகையால் அண்ணளவாகதான் போட்டு செய்தேன். அதிக நேரம் எடுக்காத salad.. உங்களது பல தகவல்களுக்கு நன்றிகள்
 6. கல்லூரியில் படிக்கும் காலத்தில் சித்திரம் வரைதலை ஒரு பாடமாக எடுத்தேன். மறைந்த சிற்ப கலாநிதி, ஆசிரியர் க. சிவப்பிரகாசம் அவர்களின் மாணவி சிவகெளரி அவர்கள்தான் எங்களது கல்லூரி ஆசிரியை. அவரின் ஊக்கம் எனக்கு ஒரு உந்துதலாக இருந்தது. அவர் மூலம் கொஞ்ச நாட்கள் மறைந்த சிவப்பிரகாசம் ஆசிரியரிடமும் ஓவியம் வரைதலை பயிலமுடிந்தது. சிறுவயதிலும் மனித முகங்களை வரைவது ஒரு பழக்கம்.. இப்பொழுது வரைவது இல்லை ஆனால் ஓவியங்கள், வர்ணங்கள் இயற்கையை ரசிப்பது தொடர்கிறது.
 7. நன்றி அபராஜிதன்.. இந்த வாக்கெடுப்பிற்கான இறுதிநாள் எது?.
 8. தமிழ்சிறி அண்ணா, Kadancha கூறியது போல புளிப்பு என்பதை விட கயர்ப்பு சுவைக்காக அதை பாவிக்கலாம். தயிர் சாதத்திற்குதான் ஊறுகாய் பாவித்தால் மிகவும் நன்றாக இருக்கும்
 9. நான் மேலே நீங்கள் கூறியவற்றில், சிலவற்றை போட்டு இந்த saladஐ இன்று செய்திருந்தேன். எனக்கு நான் சேர்த்தவற்றின் கலப்பு பிடித்திருந்தது.. தேவையான பொருட்கள்:- வேகவைத்த கொண்டைக்கடலை 1/2 cup Zucchini - 1/2 Baby capsicum -1 Mini Roma tomatoes -1 Small Red radish -1 மிளகாய் -1 Cabanossi ( dry pork sausage) - 1/2 ( இதை சேர்ப்பது meaty textureக்காக) Salad dressing - ஒலிவ் எண்ணெய்யில் ஊற வைத்த, உள்ளி(1), இஞ்சி(மிகவும் சிறிய துண்டு), மஞ்சள் கிழங்கு( மிக மிக சிறிய துண்டு) fresh mixed herbs. 1- முதலில் salad dressing உள்ளி(1), இஞ்சி(மிக மிக சிறிய துண்டு), மஞ்சள் கிழங்கு(
 10. நான், ஒலிவ் எண்ணெயில் Cauliflower, காளானுடன் broccoli போட்டு செய்தேன்.. மிகவும் நன்றாக வந்தது.. cream பாவிக்காமலே நன்றாகவும் இருந்தது. உங்களது தகவலுக்கு நன்றி.
 11. யாழ் இணையத்தில் இணைக்கப்பட்ட இவரது மூன்று கட்டுரைகளும் 1- தேர்தல் களத்தில் பெண்கள், 2- ஆளுமையா? அனுதாபமா?, மற்றும் 3- நேர்பட உரைத்தல்.. இந்த மூன்று கட்டுரைகளும் இலங்கையில் இன்றைய அரசியலில் ஏற்கனவே இருக்கின்ற மற்றும் புதிதாக நுழைய இருக்கின்ற பெண்களின் நிலையை தெளிவுபடுத்துகிறது. இந்த மூன்று கட்டுரைகளும் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டிருந்தாலும் பெண் அரசியல்வாதிகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்க வேண்டிய காரணத்தை, அவசியத்தை தெளிவாக வலியுறுத்துகிறது. இலங்கை அரசியலில் பெண் அரசியல்வாதிகளின் விகிதசாரம், அவர்களுக்கு எத்தகைய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகிறது, அவர்கள் எதிர்நோக்கும் தடைகள், பெண் வேட்பாளர்கள
 12. National Geographic websiteல் கொஞ்சம் விரிவாக போட்டிருக்கிறார்கள்.. What’s killing Botswana’s elephants? Here are the top theories. July 14, 2020 More than 280 elephants are dead and officials are still trying to unravel the cause. Hundreds of elephants have died from unknown causes over the past few months in Botswana. Photograph by Sergio Pitamitz, Nat Geo Image Collection They walk in circles and appear dizzy before suddenly dropping dead, sometimes face-first. No one knows why. Over the past several months, hundreds of elephants have
 13. ஆபிரிக்க பெண்கள் எங்களைவிட உடல்வலிமையானவர்களாகவோ மனவலிமையுடையவர்களகவோ இருக்கலாம், ஆனால் எதை வைத்து அவர்கள் பொல்லாதவர்கள் என கூறுகிறீர்கள்?. எங்களைவிட அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி தெரியவேண்டுமானால் Azali எனும் ஒரு படம் சமீபத்தில் வெளிவந்தது அதைப்பாருங்கள். அதேபோல, Aman - The story of Somali Girl , The White Masai போன்ற நாவல்களில் அவர்களைப்பற்றி கூறுகிறார்கள். இதைவிடவும் வேறு வழிகள் மூலமும் பல விடயங்களை அறிந்து கொள்ளமுடியும்.
 14. உங்களது நேரத்தை எடுத்து இதை இங்கே பகிர்வதற்கு மிக்க நன்றி. இன்னொரு மொழியிலிருந்து தமிழிற்கு மொழிப்பெயர்க்கும் போது சில நேரங்களில் அதே அர்த்தத்தை தருவது மிகவும் கடினம் என்பதை தொடரை வாசிக்கும் உணரக்கூடியதாக இருந்தது..ஆனாலும் எழுதியவரின் முயற்சி பாராட்டுக்குரியது. அதே போல, நாவலை இங்கே இணைக்கும் உங்களுக்கும் நன்றி.
 15. மற்றைய இனங்கள் பற்றி நாங்கள் அதிகம் அறியமுற்படுவதில்லை என்பது ஒரு வகையில் உண்மையே. எங்களில் அனேகமானோருக்கு, (முதலாவது, இரண்டாவது generation) வேற்று இனத்தில் நெருங்கிய நட்புக்கள் அதிகம் இருந்திருக்காது, அவர்களுடன் பழக சந்தர்ப்பங்களை அதிகம் நாடியிருப்போமோ தெரியாது. எனது மேலதிகாரி ஒரு ஜோர்டன் இனத்தவர், அவர் ஒரு முறை கூறினார், " உங்களது நாட்டவருக்கு அவர்களது பெயருக்கு பின்னால் தாங்கள் படித்த பல்கலைகழகல்வி பட்டங்களை சேர்ப்பதில்தான் அதிக நாட்டம், ஆனால் public speaking, interaction with others இல்லாமல் பயன் இல்லை என்று.". இப்படி பல... எங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள என தெரிந்தால் ந
 16. நீங்கள் சொல்வது போல Sumac தனியாக பாவித்தது இல்லை ஆனால் லெபனீஸின் Zaatar எனும் spice mixesல் dried sumac உள்ளது.. இந்த Zaatar வாசனையும் ருசியும் மிகவும் பிடிக்கும்.. புளிப்பு, உறைப்பு என நன்றாக இருக்கும்
 17. ஹிமாலயன் பிங்க உப்பு, கடல் உப்பு, போன்றவற்றில் ஓப்பீட்டளவில் அதிக minerals உள்ளதாக கூறுவார்கள்.. ஆனால் கடல் உப்பில் iodine குறைவு என கூறுவார்கள். அதற்காகத்தான் iodine கலந்த தூள் உப்பை அறிமுகப்படுத்தினர்கள்.இப்படி பல தகவல்கள். ஆனால் அதிகளவு மாற்றங்கள்/வேறுபட்ட குணங்கள் உள்ளதா என தெரியவில்லை. “ஹிமாலயன்” உப்பு, “கடல்” உப்பு என்பன அவை உருவாகும் இடங்கள் இயற்கையாக இருப்பதால், உங்களை அவை இயற்கையான ஒன்று என அதிகம் கவரலாம். ஹிமாலயன் உப்பு( pink and black) சலாட் போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும். விலையும் கொஞ்சம் அதிகம் என்பதால் அன்றாட சமையலுக்கு அதிகம் பாவிப்பார்களோ தெரியாது. ஆனால் என்னை
 18. எங்களது குடும்பத்திற்குள் ஆபிரிக்கவம்சவழியில்தான் ஒருவர் இல்லாமல் இருந்தது, இரண்டு வருடங்களுக்கு முன் கென்யா இனத்தவர் ஒருவர் மாப்பிள்ளையாக வந்துவிட்டதால்... பல்லினத்தவர் உடைய குடும்பம் ஆகிவிட்டோம். நாங்கள் எங்களுக்குள்ளேயே யாழ்பாணி என்றும், பிரதேசங்களின் பெயர் கொண்டும் மனம் நோக கதைக்கும் போது, இவர்களை விட்டு வைப்போமா? எனது தனிப்பட்ட கருத்து, ஒரு குடும்பத்தில்/உறவில் முதன்முதல் தனது இனத்திலிருந்து வெளியே போகும் அல்லது தனது கலாச்சாரத்திலிருந்து வெளியே போகும் ஒருவரே அதிக எதிர்ப்புகளை எதிர்நோக்குவார்.. அது கல்யாணம் தொடங்கி விவாகரத்து வரை...
 19. இந்த கட்டுரையை வாசித்தபொழுது, எனக்கு தோன்றியது என்னவென்றால், சாதாரணமாக இங்கே பிறந்தவர்கள், மொழிபிரச்சனை இல்லாதவர்களே கஷ்டப்படும் பொழுது ஆங்கிலமொழி அல்லது அந்தந்த நாடுகளின் மொழி அதிகம் பரீட்சயமில்லாதவர்கள் உளவியல்ரீதியான பிரச்சனைகள் வரும்போது எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதே. எங்களது சமூகத்தில் கூட இந்த உளவியல்சம்பந்தமான தொழிசார்நிபுணர்களும் அதிகம் இல்லை என்பதும் கவலையான விடயம். Suicide prevention programs are a cornerstone of the mental health system, but how well do they work? - ABC News By Bridget Judd Posted 6 days ago For every death by suicide, as many as 30 others atte
 20. Bastille Day honors the rebellion that sparked the French Revolution On July 14, France celebrates the anniversary of the day revolutionaries rose up against the monarchy and seized one of its most potent symbols. July 13, 2020 When angry commoners stormed the Bastille in Paris on July 14, 1789, they struck a blow against one of the monarchy’s most forbidding symbols. The infamous prison no longer exists—it was destroyed in a bout of revolutionary fervor a few months later—but its legacy can still be felt in celebrations across France on Bastille Day, or la Fête Nati
 21. நீங்கள் முன்பு இணைத்த Professor Kishore Mahbubani வீடியோவை பார்த்தமையால் இந்த கட்டுரையை விளங்கிக்கொள்ள இலகுவாக உள்ளது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.