Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  536
 • Joined

 • Last visited

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

 1. உங்களது சிறுகதை மிகவும் பிடித்திருக்கிறது. சந்திரசேகரன், அன்று கெலியுடன் காரில் போகாமல்விட்டது ஒரு வழியில் நன்மைக்கே. எங்களது வாழ்க்கையில் சில நேரங்களில் சில மனிதர்கள் வருவது, ஒன்று அவர்களால் எங்கள் வாழ்க்கை மாறும் அல்லது எங்களால் அவர்கள் வாழ்க்கை மாறும் என படித்த நினைவு. நீங்கள் நிறமில்லா மனிதர்கள் என எழுதியது போல, நான் எனது வீட்டில் வெவ்வேறு மனித முகங்களின் paintings and woodcraftம் சேர்த்து வைத்திருக்கிறேன், ஏனெனில் ஒவ்வொரு சித்திரத்தின் முகமும் ஒவ்வொருவிதம் அதேபோலதான் நிஜ மனிதர்களும் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தும். நிறமில்லா மனிதர்களும், வீட்டைவிட்டு வெளியே போகும்போது, உ
 2. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் பெண்கள் பழமைவாதங்களிலிருந்து விடுபட்டு, முற்போக்கு சிந்தனையுடையவர்களாக இருக்கவேண்டும் என நினைத்து நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள். அவர்கள் மீதான பயத்தினால் பழமைவாதிகளும் அடக்கிவாசித்தார்கள் என்றுதான் நானும் நினைப்பதுண்டு. இப்பொழுது மீண்டும் பழைய அணுகுமுறைகளை தொடங்கிவிட்டார்கள், ஆனால், நான் பெண் வாக்காளர்களை நினைத்து பார்க்கிறேன். ஏன் அவர்கள் இந்தப்பெண் வேட்பாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை?. இப்பொழுது போரினால் குடும்பத்தை தாங்கிய ஆண்களை இழந்த பெண்தலைமைத்துவகுடும்பங்கள் அதிகம்..அவர்கள் நினைத்தால், தங்களது பிரச்சனைகளை அதிகம் யாரால் உணரமுடியும் என்ற
 3. நீங்கள் கூறியபடி பொதுவாக அரசியலில் அறம் என்பது குறைவாக உள்ள நிலையில் இலங்கையில் இந்தியாவில் பெண்கள் அரசியலில்/ சமூக பொருளாதார முன்னேற்றங்களில் ஈடுபடும் போது நிறைய சவால்களை எதிர்நோக்குகிறார்கள். சவால்களை மீறி முன்னேறுவதற்கு வித்தியாசமான மன உறுதியும் தேவை. அந்த தன்னம்பிக்கை பெண்களிடம் குறைவாக உள்ளது அல்லது அப்படி வளர்க்கப்படுகிறார்கள். சம்பளம் பெறுவதால் அரசியலும் ஒரு தொழில், அரசியல்வாதியும் ஒரு ஊழியன் என நினைத்துகொண்டு மேலே முன்னேறுவதற்கான mindset என்பதும் இல்லைதான். இளவயதினர் கூட படிப்படியாக மேலே வரமுடியாதளவிற்கு எங்களது சமூக கட்டமைப்பு உள்ளது. இந்தியா, ஆபிரிக்க நாடுகளில் நடைபெறும்
 4. மிக்க நன்றி.. இந்த படம் Primeல் உள்ளது..விமர்சனங்களை பார்த்தமையால் நான் சோதனையோ வேதனையோ அனுபவிக்க தேவையில்லை
 5. I WOMEN OF IMPACT I For these women, an age-old way of life is ending in the Horn of Africa Droughts are killing livestock, forcing herders to move to camps for displaced people, where they face an uncertain, often violent, new world. So many died at once “it was like they were poisoned,” said Rahma Hassan Mahmoud, a herder in Somaliland, of the catastrophe that befell her 300 goats and sheep and 20 camels. After the last camel died, she and her family lived off milk from their neighbors, but with everyone else’s livestock dying, it wasn’t long before there wasn’t enough to go
 6. இதைப்பற்றி யாழ் இணைய உறவுகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆவல். ஏன் இலங்கை அரசியலில் பெண்களின் எண்ணிக்கை குறைவு? அல்லது சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை? பெண் வாக்காளர்களை அவர்களால் ஏன் கவரமுடியாது உள்ளது? விதாண்டவாத கருத்துகள் இல்லாமல், ஆக்கபூர்வமான கருத்துகளை அறிய ஆவல்.. நன்றி.
 7. நல்லகாலம் நான் பார்க்கவில்லை, நான் திரைப்படங்கள் பார்ப்பது மிகவும் குறைவு. எனது தந்தை அடிக்கடி கூறுவது 3 மணித்தியாலம் செலவழித்து ஏன் கவலையான வன்முறைகள் கொண்ட படங்களை பார்க்கவேண்டும் என்று..அவர் கூறியது நன்றாகவே மனதில் பதிந்துவிட்டதால், படங்கள் பார்ப்பது மிகமிக குறைவு. ஆனால் விமர்சனங்களை வாசிப்பேன். அப்படி வாசித்தபொழுது இந்த கட்டுரை கண்ணில்பட்டது, உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
 8. சைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள் 2020 - சிவபாலன் இளங்கோவன் · கட்டுரை சமீபத்தில் சினிமா உதவி இயக்குனர் ஒருவர் அவர் எழுதிவைத்திருக்கும் கதையில் அவருக்கிருக்கும் சில சந்தேகங்களின் நிமித்தம் என்னைச் சந்திக்க வந்திருந்தார். ஒடிசலான தேகம், நெடுநெடுவென உயரம், கசங்கிய சட்டை, ஹவாய் செப்பல், பொறியியல் படிப்பு என உதவி இயக்குனர்களுக்கான அத்தனை இலக்கணங்களும் அவரிடம் இருந்தது. இதுதான் அவருக்கு முதல் படம். தயாரிப்பாளரை அணுகியிருக்கிறார். கதையில் சில மாற்றங்கள் செய்துவிட்டு வர சொல்லியிருக்கிறார். ‘பவுண்டட் ஸ்க்ரிப்ட்’ என சொல்லக்கூடிய தடிமனான புத்தகம் ஒன்று அவர் கையில் இருந்தது. “
 9. மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள தகவல். நான் பொதுவாக, ஒரு சிறிய மர உரலில் உள்ளி மற்றும் மிளகை நன்றாக குற்றி பின் அதை சிறிதளவு ஓலிவ் ஓயிலில், ஊறவைத்து, அதை salad dressingஆக பாவிப்பது வழமை.அந்த உள்ளியின் வாசனை மிகவும் பிடிக்கும்.
 10. கீழே உள்ள இணைப்பில், கடஞ்சா இணைத்துள்ள வீடியோ உள்ளது. அதில் Prof. Kishore Mahbubani கூறுகிறார், Asian glasses போட்டுக்கொண்டு பார்த்தால் சீனாவினதும், ஆசியாவிலும் நடைபெறும் நிகழ்வுகள் எப்படியானவை என தெரியும் என்று. நல்லதொரு விளக்கங்கள் கொண்ட கட்டுரையும் வீடியோ இணைப்பும்.
 11. உண்மைதான் தமிழ் சிறி அண்ணா. நாங்கள் இந்த கடலையை அவித்து, அதை வெங்காயம், செத்தல்மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை எல்லாம் போட்டு தாளித்து சாப்பிடுவோம். எனது Fiji நண்பி, பச்சைமிளகாய், வெங்காயம், ஒரு உள்ளி பல், கரம் மசாலா போட்டு செய்வதாக கூறுவா. நான் இந்த 3 முறைகளிலும் செய்வது வழமை. உங்கள் எல்லோரது கருத்துக்களுக்கும் நன்றிகள்
 12. Ancient Aboriginal underwater archaeological sites discovered, and a new frontier for study ABC Pilbara / By Karen Michelmore Posted 2 days ago, updated2 days ago This area was dry land just 8,000 years ago.(Supplied: Jerem Leach) Scientists have discovered Australia's first ever ancient Aboriginal underwater archaeological sites, settled on the sea bed for thousands of years. Key points: Australia's first underwater Aboriginal heritage sites have been confirmed off WA's Pilbara coast
 13. நன்றி. இல்லை, சாதாரன உப்பும் பாவிக்கலாம். ஆனால் கூடுதலாக ஹிமாலயன் பிங்க் உப்பைத்தான் salad வகைகளுக்கு பாவிப்பது வழமை என்பதால் அப்படியே எழுதிவிட்டேன். .நன்றி. கொஞ்சம் spicyயக் இருக்கும்.. ஆனால் இந்த salad பற்றி எனக்கு கூறியவர் என்னுடன் வேலை பார்க்கும் மராத்திய பெண். அவர்கள் வெங்காயம் சேர்ப்பதில்லை என்பதால் எல்லோருக்கும் பிடிக்குமோ தெரியாது.
 14. நல்லதொரு கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் நொச்சி அண்ணா!, “ தமது இருப்பிற்கான நம்பிக்கைகள் பொய்த்துவிடச் சலிப்பேற்பட்டு இருப்பதே போதுமென்ற எண்ணமேற்பட்டுவிடும்” இந்த உணர்வைத்தான் நான் ஊருக்கு போகும் சமயங்களிலெல்லாம் உணர்வது. அதே நேரத்தில் எங்களுக்கு நடந்தவற்றை பேசாமல் எழுதாமல் விடுவதும் இயலாத ஒன்று..இரண்டு உணர்வுகளுக்கிடையில் சிக்கிதவித்தாலும், பரப்புரைகளை செய்வதுடன் இப்போதையநிலையில் கல்வி, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் என அவரவரிற்கு ஏற்றவகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதே இருப்பைதக்கவைத்துகொள்ளவும், மன உளைச்சலை குறைக்கவும் உதவும் நடவடிக்கைகள்.
 15. இந்த salad செய்முறையை நான் இணைத்தபொழுது, இதைப்பற்றிய ஒரு அறிமுகத்தை எழுத மறந்துவிட்டேன்.. postimage linkம் வேலை செய்யவில்லை. பொதுவாக, நாங்கள் வெங்காயம் சேர்க்காமல் கறியோ, அல்லது salad செய்வது குறைவாக இருக்கும். ஆனால் இந்த salad வெங்காயம் இல்லாத salad. வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தமையால் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
 16. நான் ஊருக்கு போகும் சமயங்களிலும் சரி, இங்கேயும் சரி, மனிதர்களை விட இயற்கையை எனது phoneல் படம்பிடிப்பதே விருப்பம். அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
 17. தேவையான பொருட்கள்: 1 & 1/2 கப் - கொண்டைக்கடலை(இரவில் ஊறவைத்த கடலையை மென்மையாகும் வரை வேகவைக்கவும்) 2 - சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு, தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும் 2 - சிறிய தக்காளி, நறுக்கியது 2 தேக்கரண்டி - கொத்தமல்லி இலை நறுக்கியது 1 - பச்சை மிளகாய், நறுக்கியது 2-3 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு 1/4 தேக்கரண்டி - ஹிமாலயன்/பிங்க உப்பு 2 தேக்கரண்டி - Chaat மசாலா செய்முறை: ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, மற்றும் சாட் மசாலாவை ஒன்றா
 18. அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்... நமது கதையை காலமும் சொல்லும்...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.