Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1743
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by P.S.பிரபா

  1. இலங்கையில் வாழ்பவர்கள் யார்? தமிழர் சிங்களவர்… இன்று ஒன்றாக இருப்பவர்களை நம்பாமல் அயலவனை நம்பி மோசம் போனது யார்? சிங்களவர்கள் இதயபூர்வமாக எங்களை மதித்து தீர்வை தர விரும்பினால் இந்தியாவின் செயல்களைப் பற்றி அவர்கள் நம்பியிருக்க வேண்டிய தேவை என்ன? இங்கே சிங்களவர்களுக்கும் இந்தியாவிற்கும் பொது எதிரி யார்? தமிழர்களுடன் உண்மையில் தீர்வை விரும்பி நம்பிக்கையை முதலில் தரவேண்டியது அவர்கள்தான்.. அப்படி ஒரு நம்பிக்கையைத் தராமல் எப்படி அவர்களை நம்பலாம்? இந்தியாவை விலத்தி தமிழர்கள் சிங்களவர்களுடன் சேரவேண்டும என்றால் இன்று அதிகாரத்தில் இருக்கும் சிங்களவர்கள்தான் அதனை உருவாக்கவேண்டும் உணரவைக்கவேண்டும்.. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் எப்படி தமிழர்கள் போவார்கள்? இந்த 13, ரணிலின் உண்மையான முயற்சியா? இல்லை.. அப்படியானால் இந்த பிக்குகள் இந்த ஆர்பாட்டங்களை நடத்த விட்டிருக்கமாட்டார்.. இவர்களுக்கு உண்மையிலேயே தீர்வைத் தரவேண்டும் என்ற நோக்கம் இல்லை.. கதிரைக்கு வந்தாயிற்று.. அவ்வளவுதான்..
  2. நீங்கள் இன்னொருவரை சேர்க்க மறந்துவிட்டீர்கள்.. பரவாயில்லை.. ஆனால் பிக்குகளின் இனவாதம் என்று மட்டும் தனியே கூற முடியாது.. நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்த்தால் சாதாரண சிங்களவர்களும் இவர்களின் கதைகளை இனியும் நம்புவது என்றால் சிங்களவர்களின் ஆழ்மனதிலும் மாற்றம் இல்லை என்றுதானே அர்த்தம்.. The Hague நம்பிக்கையை நான் கலைக்கவில்லை.. ஆனால் இவையெல்லாம் தனியே பெயருக்கு மட்டும் என்பது என் அபிப்பிராயம்..
  3. வடக்கில் உள்ள அரச அலுவலர்கள், தனியார் ஊழியர்களுக்கும் அவற்றின் கொழும்பு தலைமையகம், வடக்கில் உள்ள அலுவலகங்கள் நன்றாக இயங்குவதாக(?), இலாபம் ஈட்டுவதாக etc etc கூறி இலவச சுற்றுலா வசதிகளை செய்து தெற்கிலும் இலங்கையின் மற்றைய இடங்களுக்கும் கூட்டிப் போகிறார்கள்.. நன்றாக அவர்களைக் கவனிக்கிறார்கள்.. நல்ல விடயம்தான், எங்களவர்களும் சேர்ந்து வாழலாம் என நினைக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல போர் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகியும் ஒன்றுமே நல்லது நடவாதமையாலும் இன்றைய சமூக நிலையிலும் ஏதோ தருவதைத் தந்து நிம்மதியாக இருக்கவிட்டால் காணும் என்ற நிலையிலும் இருக்கிறார்கள். அதனால்தான். ஒன்றுமே இல்லாத 13த் தாருங்கள்.. சிங்களவர்கள் நல்லவர்கள், பழக இனிமையானவர்கள், சேர்ந்து வாழலாம் .. இப்படிப் பல .. அவர்கள் அப்படிக் கேட்பதை/நினைப்பதைக் கூட நான் தவறாக கூறவில்லை.. ஏனெனில் அங்கே உள்ளவர்களுக்குத்தான் அங்கே உள்ள நடைமுறைச் சிக்கல்கள், வாழ்க்கையின் பிரச்சனைகள் தெரியும்..அனுபவிப்பதும் அவர்கள்தான்.. ஆனால் இன்று வரையும் போராடும் காணாமல் போனவர்களின் பெற்றோர் உறவுகளின் நிலை? மாவீரர்களின் தியாகங்கள்? இன்றுவரை வறுமையிலும் பல்வேறு இடர்களுக்கும் முகம் கொடுக்கும் போராளிகள் மக்கள்? இன்று எங்களது வன்முறைக் கலாச்சாரத்திற்கான தீர்வு? இவ்வளவும் ஏன் இன்று இந்த பிக்குகளின் எதிர்ப்பிற்கு மறுப்பு தெரிவித்தோ இல்லை இனப்பிரச்சனையை தீர்க்கவேண்டும் என சாதாரண சிங்களவர்கள்கூட முன்வரவில்லை.. இந்த நிலையில் யார் முதலில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்? நான் இப்படி எழுதுவதால் இன்னொரு போர் வேண்டும் என்ற அர்த்தமில்லை.. ஆனால் எனக்குள் ஏற்படும் கேள்விகள் இவை!..
  4. இதற்கு சமூகமும் ஒரு காரணம் என நினைக்கிறேன் அங்கிள்.. @goshan_che பாகம் IVல் உங்களது கற்பனை மனோத்துவ வைத்திய நண்பர் உபயோகித்த technique எல்லோருக்கும் சரிவாரது என நினைக்கிறேன்.. இவனுக்கு உதவப் போய் அவனுக்கு வாழ்க்கை குழம்பாமல் விட்டால் சரி… 😊
  5. மீண்டும் பழையபடி வேலைக்குப் செல்லத் தொடங்கியது மகிழ்ச்சியான விடயம் சிறி அண்ணா!! satan கூறிய ஒரு விடயம் // இந்த சம்பவத்துக்கு முன் அவர் குணஇயல்பு எப்படிப்பட்டது என்பதை தாங்கள் அறியத்தரவில்லை.// இது சரிதானே.. அவரைப் பற்றித் தெரியாமல் கூறுவது சரியில்லை.. ஆனாலும் இந்த திரியில் மனித மனம் பற்றி நிறைய அறிய முடிந்தது.. @vasee ம் @satan உங்கள் இருவரதும் கருத்துக்களும் 👌
  6. கடந்த மாதம் நான் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்த சமயம் சக்தி வானெலி என நினைக்கிறேன், அவுஸ்ரேலியவிற்கு சட்டவிரோதமாக படகுகளில் வருபவர்களை தடுத்து நிறுத்துவதுடன் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இந்த சட்டவிரோத பயணமுகவர்களை நம்பி ஏமாறவேண்டாம் என்ற கருத்தில் அறிவித்தல் ஒன்று நிகழ்ச்சிகளுக்கிடையில் வந்து கொண்டிருந்ததைக் கேட்கமுடிந்தது. அப்படி ஒரு அவுஸ் அரசின் அனுசரனையுடனான அறிவித்தலைக் கேட்பது இதுதான் முதல் தடவை அதே போல இந்த அறிவித்தல் பலகை, திருகோணமலையில் ஒரு சந்தியிலும் (உப்புவெளி வீதிக்கு அருகில் என நினைக்கிறேன்) அதேபோல கண்டி வீதியில்( யாழ்ப்பாணம் அல்லது கிளிநொச்சி தாண்டியவுடன்) நடப்பட்டிருந்தது.. அந்தளவிற்கு அவுஸ்ரேலியா அரசின் நடவடிக்கைகள் உள்ளது.
  7. @Justinஅண்ணா.. & @Sasi_varnam, நான் postimageன் மூலம்தான் இணைப்பதுண்டு. அதில் உள்ள direct link copy செய்து நீங்கள் இணைக்கவேண்டிய பகுதியில் paste பண்ணினால் படங்களை இணைக்க முடியும்.. மேலும் அதில் No expire தேர்ந்தெடுத்தால் படங்கள் காணாமல் போகாது.
  8. இந்த ஊரின் பெயர் மணற்காடு.. அங்கேதான் இந்த St.Peter’s Churchம் உள்ளது.. இந்த தேவாலயத்தினைக் கடந்துதான் மணற்காடு கடற்கரைக்குப் போகவேண்டும்.. இந்தக் கடற்கரைக்குப் போகும் வழியில்தான் பாழடைந்த டச்சு தேவாலயம் ஒன்றும் சவுக்குத் தோப்பும் உள்ளது. சிறுவயதில் பார்த்தபொழுது இந்த தேவாலயத்தை சூழ அதிகளவான மணற்மேடுகள் இருந்தது போன்ற நினைவு இப்பொழுது தேவாலயத்தின் இடிபாடுகள் அதிகளவில் வெளியே தெரிகிறது.. காலப்போக்கில் மணற்மேடுகள் இன்னமும் குறையலாம்.. இந்த கடற்கரையும் அழகானதுதான்.. போகும் ஒவ்வொருமுறையும் சில இடங்களுக்குப் போகாமல் வந்ததில்லை அதில் இந்த கடற்கரையும் ஒன்று..
  9. 90 வயதில் எத்தனை மன உளைச்சல்களுக்கும் அழுத்தங்களுக்கம் இவர் முகம் கொடுக்கவேண்டி இருந்ததோ தெரியவில்லை. கூடவே இருந்த வளர்த்தவர்கள்/வளர்ந்தவர்கள் (அதிலும் உடல், உளரீதியாக இளமையானவர்கள், வலிமையானவர்கள்) மற்றவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து சுயநலவாதிகளாக மாறி செய்த காட்டிக்கொடுப்புகளையும், விடவா இவரது செயல் துரோகமானது?? சரி அப்படி அவர் அறிக்கைவிட்டால் அவர் கூறிய சந்தர்ப்பம், சூழ்நிலையை பார்க்கவேண்டும், இதனை ஏன் இந்த சமயத்தில் வெளியிட்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என யோசித்து இதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் அவற்றை எப்படி சமாளிப்பது என்பதை கூறுவதை விட்டு இந்த மாதிரி திரும்பத் திரும்ப விலை போய்விட்டார் etc etc என கூறுவது சரியல்ல என நினைக்கிறேன்.. மிகவும் பரிதாபத்துக்குரிய நிலைக்கு அவர் வந்துள்ளார்.. . மதிப்பிற்குரிய ஒருவர், தலைவரில் மிகவும் பாசமுடையவரின் முதுமையையும் இயலாமையையும் பயன்படுத்துகிறார்கள்.. அவ்வளவுதான்..
  10. உண்மைதான் பாசையூரில் இல்லை.. இந்த தேவாலயம் இருக்கும் இடத்தை கடந்தே நீங்கள் கூறிய இடத்திற்குப் போக வேண்டும்😊 அங்கிள் வடமராட்சி என்ற ஊர் இருக்கிறதா? நான் நினைப்பது வடமராட்சி என்றால் பருத்தித்துறை, VVT, கரவெட்டி தாளையடி கட்டைக்காடு இப்படி பல ஊர்கள் சேர்ந்து என்று!!! இந்த சுருவம் அண்மையில் கட்டியது இல்லை.. முன்பே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்..
  11. இந்த இடம் வடமராச்சியில்தான் உள்ளது.. பிரேசிலில் அல்ல எந்த இடம் என கூறுங்கள் பார்ப்போம் இவரைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன?
  12. உண்மைதான் தமிழ் சிறி அண்ணா.. நன்றி. நன்றி அங்கிள். பயணக் கட்டுரை ஒன்று pendingல் உள்ளது.. Aboriginals சம்பந்தப்பட்டமையால் சரியானதை எழுதவேண்டும் அத்துடன் அப்பாவின் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளதால் எழுதமுடியாமல் தள்ளிப் போகிறது..பார்ப்போம்..
  13. தையல் கதை/வகை பலவிதமாக இருக்கும் போல உள்ளது..கதைக்கு நன்றி சுவி அண்ணா!!
  14. நன்றி அண்ணா!! அப்படித்தான் அந்த சுவரொட்டியில் கூறியுள்ளது.. எனக்குத் தெரிந்த ஒருவர் கூறினார் இப்ப மாவீரர் தினத்திற்கு தென்னங்கன்று கொடுத்தவுடன் கடமை முடிந்துவிட்டது என நினைக்குமளவிற்கு மக்களின் மனநிலை மாறுகிறது என. நான் இன்னமும் ஒன்றிரண்டு படங்களை இணைக்க நினைத்திருப்பதால்தான் படங்கள் கூறும் கதைகள் என தலைப்பிட்டேன். உண்மைதான்.. பார்த்தவுடன் இப்படி செய்துவிட்டார்களே என கோபமும் இயலாமையும் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. நன்றி .. கடைசியில அவருக்கு ஒன்றுமே மிச்சமாக இல்லை. ஒரு இடிந்த சுவரைத் தவிர!!! நன்றி அண்ணா!!
  15. எனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல்லை.. தெரிந்ததெல்லாம் இந்த மாதிரி படங்கள் எடுப்பதுதான்.. நான் இலங்கைக்குக் (அதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகள் மாத்திரம் தான்) சென்ற சமயங்களில் என் கண்ணில் பட்டு கருத்தை கவர்ந்தவற்றை படம் எடுத்து சேர்த்து வைப்பது ஒரு பொழுதுபோக்கு!!!! அப்படி எடுத்தவைகளில் சிலதை இங்கே பதிகிறேன்..நீங்கள் அங்கே நடந்த சம்பவங்களை நான்கு ஐந்து வரிகளில் எழுதுங்கள்.. ஏனெனில் மட்டுறுப்பினருக்கு நிறைய கஷ்டம் கொடுக்கக்கூடாது. உங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு சில சமயம் தெரிந்திருக்காது.. தனிப்பட்ட நினைவுகள் இருந்து எழுதினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை😊 முதலில் இரு படங்களை இன்று இணைக்கிறேன்.. இது ஆலடிச் சந்தி - வல்வெட்டித்துறை.. முதல் படத்தைப் பார்த்து உங்களது மனதில் தோன்றுவதை இங்கே எழுதுங்கள்.. படங்களை நான் இணைக்கிறேன்.. அவற்றின் கருத்தை/எண்ணத்தை நீங்கள் கூறுங்கள். நன்றி..
  16. போராடி களைப்பது என்றாலும் கூட தன்னம்பிக்கையை இழப்பதும் வெளியேறினால் என்ன மாதிரியான நிலை வரும் என்ற பயமும் இந்த வன்முறையான உறவில் இருக்க தூண்டும் என நினைக்கிறேன்
  17. Okay..என்னவோ சொல்ல வாறீங்க..விளங்கின மாதிரியும் விளங்காத மாதிரியும் .. பார்ப்போம்..
  18. நாங்கள் எங்கள் உள்மனதில் எப்படியான எண்ணங்களை வைத்திருக்கிறோம், எதனை நம்புகிறோம் என்பதை வைத்துத்தான் எங்களது பார்வையும் நேரா அல்லது கோணலா எனத் தெரியும்.. உளவியல், உளநல மருத்துவம், அவை தொடர்பான ஆலோசனைகள் இவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது. இதற்குப் பல காரணங்கள், ஆனாலும் எங்களது சமூகத்தில் அதிலும் வெளிநாடுகளிலும் கூட அந்த துறைகளில் படித்து தேர்ச்சி பெறுவோர் குறைவு எங்களது சமூகத்தில் இவை இந்தமாதிரியான துறைகளுக்கு மதிப்பும் இல்லை. ஏனெனில் எங்களது பார்வை இந்த விடயத்தில் கோணலாக இருப்பதுதான். பின் ஒன்று நடந்தவுடன் ஜயோ ஒருத்தருக்கும் இப்படி என தெரியாதே என கவலைப்பட்டு என்ன பிரயோசனம்? கதைப்பதற்கோ, உதவி கேட்பதற்கோ அல்லது உதவுவதற்கோ வழிவிட்டிருந்தால் தானே!!. நன்றி அண்ணா இந்த விடயத்தைப் பற்றி எழுதியது..
  19. ஊருக்கு விடுமுறையில் போவதற்கும் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது ரதி!! விடுமுறையில் போகும் பொழுது நாங்கள் தேவையில்லாதவற்றைப் பேசியோ ஒப்பிட்டோ கதைப்பதில்லை. தேவையில்லாமல் அறிவுரை கூறவும் மாட்டோம். இடம், உறவுகளின் தன்மைக்கேற்பவே, அங்கே உள்ளவர்களின் நிலையை அறிந்து அதற்கேற்பவே நடப்போம். ஆனால் நிரந்தரமாக அங்கே வசிக்க நினைத்தால், காலப்போக்கில் சட்டங்கள், நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் என பலவற்றை ஒப்பிடத் தொடங்குவோம். நல்ல விடயங்கள் என சிலவற்றை அங்கே நடைமுறைப்படுத்த நினைப்போம். விதிமுறைகள் பிழையாகத் தெரியும். இதனால் தேவையில்லாத பிரச்சனைகளை எதிர் நோக்குவோம். மற்றப்படி அங்கே உள்ளவர்களுக்கு பிரச்சனைகளைத் கொடுக்காமல் நான் ஒரு foreign return என்று பந்தா காட்டாமல், காசு இருக்குது அதனால் என்னவும் செய்யலாம் என இல்லாமல் அங்கே உள்ளவர்களைப் போல(பெரும்பாலான) சாதாரன வாழ்க்கையை நடத்த இயலும் என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அங்கே அப்படியில்லலை(விதி விலக்குகளும் இருக்கலாம்). அநாவசியமான ஆடம்பர வீடுகளும், கொண்டாட்டங்களும் இவற்றையெல்லாம் பார்க்கும் இன்னொரு பிரிவினர் அந்த நிலைக்கு தாங்களும் வரவேண்டும் என்பதற்காக, பணம் உழைக்க வேண்டும் என்பதற்காக குறுக்கான வழியில் போய் சீரழிகிறார்கள். என்னைப்பொறுத்தவரை முன்னரைவிட வர்க்க வேறுபாடுகள் அதிகரித்தே உள்ளது. இது எப்படி உருவானது? நான் கண்ட கேட்ட விடயங்களை வைத்து நிறையக் கூறலாம் ஆனால் அங்கே போய் இருப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விடயம் அதுபோல உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகளுக்குள்ளும் இந்த விடயம் வரக்கூடாது. ஆகையால்தான் புலம்பெயர்ந்தோர் அங்கே போகும் பொழுது யோசித்து நடக்கவேண்டும் என நினைப்பது. நீங்கள் என்னைப் பற்றி தெரியாமல் நீங்களாகவே ஒரு முடிவிற்கு வந்திருக்கிறீர்கள். இது தேவையற்ற ஒன்று. நன்றி.. உண்மை
  20. செய்ய வேண்டும் ஆனால் உண்மையானவர்களுக்கு மட்டுமே.. அங்கே உள்ளவர்கள் சீரழிவதற்கு நாங்கள் துணை போகக்கூடாது அதுதான் இன்றைய நிலையில் முக்கியம்.. பி.கு:. நிறையப் பேர் பிரபா என்றவுடன் ஆண் என முடிவிற்கு வந்துவிடுகிறார்கள் ஏன் என்பது தெரியவில்லை. பிரபா என்ற பெயர் தனியே ஆண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண் பெண் இருபாலாருக்கும் பொருத்தமான பெயர்களில் இந்த பிரபாவும் அடங்கும்..நீங்கள் என்னை சகோதரி என கூறுங்கள் அல்லது பிரபா என கூறுங்கள்.. மகிழ்ச்சியாக கருத்தாட முடியும்.😊
  21. பகிடி பகிடியாக தொடங்கி ஒரு சீரியசான விடயத்தையும் எழுதியுள்ளீர்கள் சிறி அண்ணா.. நல்ல விடயம்.. உங்களது ஜேர்மன் ஆள் கூறியது என்னளவில் சரியே இன்றைய நிலையில் அங்கே போய் ஒரு பொது விடயங்களிலும் மூக்கை நீட்டாமல் இருந்தால் கொஞ்சம் மரியாதையாக இருக்கலாம்..இங்கே சட்டம் சுதந்திரம் என்பவற்றை அனுபவித்து விட்டு அங்கே போய் இது பிழை..அது சரி என்றால் அங்கே இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் வீண் கரைச்சலைத்தான் உருவாக்குவோம்.. எனது அனுபவத்தில் பணம் மட்டும் எதையும் தீர்மானிக்கும் கருவியில்லை. மருந்து இல்லை என்றால் அவ்வளவுதான். சில சமயங்களில் பொருட்களும் இல்லை. இந்த நிலையை மாற்ற முடியாது ஏனெனில் நாடு இவ்வளவு கீழ் நோக்கிப் போயும் கூட தமிழர்களுக்கு நல்லது நடக்க கூடாது என நினைக்கும் பெரும்பான்மையே அதிகம். அதே போல உண்மையான அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அக்கறையும் அங்கே உள்ள எங்களது மக்களுக்கு இல்லை(என்னைப் பொறுத்த வரை). எங்கள் எல்லோருக்கும் நாங்கள் பிறந்த நாடு என்ற பாசம் என்பது இருந்தாலும் கூட நடைமுறையில் சாத்தியமானதைத்தான் செய்யலாம்.. இது அங்கே உள்ளவர்களுக்கும் நன்கு விளங்கும். ஆனால் எங்கட புலம்பெயர்ந்தவர்கள் அங்கே போய் செய்யும் வேலைகளால் என்ன மாதிரியான மறைமுக விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள்/ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அங்கே போகும் சமயங்களில் உணரமுடிகிறது..
  22. Dr ஜெயமோகனின் நெறியாள்கையில் ஒரு முழு நீள தமிழ் திரைப்படமே பொய் மான்.. Dr ஜெயமோகனின் குறுந் திரைப்படங்கள் இங்கே உள்ள தமிழர்கள் மத்தியில் தனித்து இடம் பிடித்த ஒன்று.. இன்றைய தமிழ் சமூகத்தில் நடைபெறும் விடயங்ககளை வெளிக்கொணரும் ஒருவர். அவரது தயாரிப்பில் உருவான ஒரு படைப்பு.. அனேகமாக ஜரோப்பாவில் கூட ஒரு நாட்டில் திரையிடப்படலாம் என நம்புகிறேன். இங்கே உள்ள இளைய சமுதாயத்திற்கு இன்னொரு துறையில் முன்னேற இவை போன்றவை வழிவகுக்கும என நினைக்கிறேன். https://m.youtube.com/watch?v=G9T4pFNwWYw https://m.youtube.com/watch?v=xz2W1wMCtzg
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.