Gowin

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  414
 • Joined

Community Reputation

112 Excellent

About Gowin

 • Rank
  உறுப்பினர்

Recent Profile Visitors

508 profile views
 1. அவசரகால நிலையை பிரகடனப்படுத்துங்கள்! அரசாங்கத்திடம் கோரிக்கை கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறையிலுள்ள சட்டங்கள் போதுமாக இல்லாவிட்டால் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், அநாவசியமாக மக்கள் நடமாட்டங்கள் தடைசெய்யப்பட வேண்டும். அவ்வாறு மீறி செயற்படுவோர் கொரோனா வைரஸை நாட்டுக்குள் பரப்ப முயற்சித்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நாட்டுக்குள் இருக்கும் எஞ்சிய நோயாளிகளை இனம் கண்டு அவர்களின் நடமாட்டத்தை அப்பிரதேசத்தில் தடை செய்ய வேண்டும். இல்லையேல் இந்த நோய் நாடு முழுவதும் பரவி விடும். அத்துடன் தொற்றுக்குள்ளானவர்களை மட்டுமன்றி அவர்களது தொடர்புகளையும் முறையாக இனங் கண்டு தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கையில் பதிவாகும் சம்பவங்களை பார்க்கும் போது எதிர்வரும் இரண்டு வார காலமும் நாட்டில் மோசமான இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/139388
 2. யாருக்குமே தெரியாத அம்ம்பிகாட திறமைகளை சுமந்திரன் எப்ப? எங்க? பார்த்தவர். கொஞ்சம் விபரமா சொன்னா எல்லாருக்கும் தெரியுமே. இவ ஐநா மனித உரிமை கவுன்சில் போய் தமிழ் சமூக ஆர்வலரை குழப்ப, அவங்கடை செயற்பாடுகளை தடுக்க முயற்சித்த ஒராள் என்று தானே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அங்க கலந்துகொண்ட ஆக்களால குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
 3. சுமந்திரன் எப்பவுமே சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே நடக்கிறார். எப்பதான் அவர் தமிழினத்தின் உரிமைகளுக்காக உளப்பூர்வமாக குரல் கொடுத்திருக்கிறார்? சர்வதேச விசாரணைகளை குழப்ப சுமந்திரன் ஓடி ஊளைச்சதை யார் தான் மறக்க முடியும்? இப்ப சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடக்கிற ஆக்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி தமிழ் மக்களை அழிக்க நாய்படாதபாடா துடிக்கிறார்.
 4. மக்கள் பொறுப்பா நடக்காட்டி இந்த உயிர்கொல்லி நோயை கட்டுப்படுத்துறது கஷ்டம்.
 5. மிக நல்ல கருத்து! விக்கி ஐயாவும் இந்தமாதிரி சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு பொறுப்பு கூறவேணும்.
 6. மிக அருமையான கருத்து! சுமந்திரன் பின்கதவால உள்ள புகுந்த காலத்தில இருந்து தமிழரை அழிக்கும் வைரஸ் நோய் கொஞ்சம் கொஞ்சமாக பரவுது. இதுக்கு கடுமையான ஒரு மருந்து கண்டுபிடிக்க வேணும். எங்கள் கல்விமான்கள் ஏதாவது செய்யணும்.
 7. நளினி ரட்ணராஜா மேல சுமந்திரனின் பாசம் புல்லரிக்க வைக்குது. சுமந்திரன்ட தறுதலை ஆட்டம் முடிவுக்கு வரேக்க தமிழர்ர கொஞ்ச பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருக்கும்.
 8. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இன்றிலிருந்து 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்குசட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இன்று சில பகுதிகளில் அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/139390?ref=imp-news
 9. கொரோனா சிகிச்சை பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் வவுனியா- பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு, விமான பயணிகள் கொண்டுவரப்பட்டதனை கண்டித்து நெளுக்குளத்தில் கண்டன போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வவுனியா- தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெளுக்குளம் சந்தியில் இன்று (சனிக்கிழமை) காலை 10மணியளவில், மக்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ‘அகற்று அகற்று கொரோனா முகாமை அகற்று’, ‘கொரோனா வைரஸ் வவுனியாவிற்கு வேண்டாம்’, ‘தமிழர் பிரதேசத்தில் கொரோனா முகாமை எதற்காக அமைத்தாய்’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம், “வவுனியா- பம்பைமடு பிரதேசத்திற்கு இனங்காணப்படாத கொரோனோ என சந்தேகிக்கும் 265பேர் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அதாவது கொரானா குறித்து எங்களுடைய மக்கள், பீதியில் காணப்படுகின்ற நிலையில், இலங்கையிலேயே பல்வேறு மாவட்டங்கள் இருக்கின்றபோது வட.கிழக்கிற்கு மாத்திரம் இத்தகைய நோயாளர்களை கொண்டு வருவதனை ஏற்று கொள்ள முடியாது. சஹரான் குண்டு தாக்குதலின்‌ போதும், வெளிநாட்டவர்கள் சிலர் வவுனியா பூந்தோட்டத்தில் குடியேற்றப்பட்டிருந்தார்கள். வட.கிழக்கில் இவ்வாறானவர்களை குடியமர்த்துவதென்பதை இனஅழிப்பாகவே சிந்திக்க வேண்டியுள்ளது. இலங்கையில் பல்வேறு இடங்கள் இருக்கின்றபோது அவர்களை அங்கே வைத்து அவர்களின் நோய்தொற்றை ஆராய முடியாதா? வவுனியா- பம்பைமடு இராணுவ முகாமில் குடியமர்த்துவதென்பது கண்டிக்கத்தக்க விடயம். பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பம்பைமடுவில் குப்பை கொட்டும் இடம் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் நோயாளிகளின் குப்பை அங்கே கொட்டப்படும் போது, எங்களுடைய தொழிலாளிகள் அங்கே சென்று வரும்போது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே உடனடியாக இந்த முகாமை அகற்ற வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக காணப்படுகின்றது‌” என தெரிவித்தார். http://athavannews.com/கொரோனா-சிகிச்சை-பிரிவுக்/
 10. கொரோனா வைரஸ்: இராணுவச்சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச்சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அதேபோன்று மற்றொருவரும் நேற்றிரவு வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.https://athavannews.com/கொரோனா-வைரஸ்-இராணுவச்சி/
 11. கடைசில கருணாவையும் சுமந்திரனையும் ஒரே தட்டுல வைச்சாச்சு! வைச்சது வேறு யாருமில்ல தமிழரசுக் கட்சியின் உபதலைவி ஒராள்.