
Gowin
வரையறுக்கப்பட்ட அனுமதி-
Posts
532 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by Gowin
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர் ஒருவருக்கு விடுமுறை தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொழில் தருநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 122ஆம் பிரிவின் அடிப்படையில், வாக்காளர் ஒருவருக்கு தேவையான விடுமுறை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், வாக்களிப்பிற்காக விடுமுறை கோரி விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில், நான்கு ங்களுக்குக் குறையாத, சம்பளத்துடன் கூடிய, விடுமுறையொன்று வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு விடுமுறை பெறுபவர்களின் விபரங்கள், வேலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்களிப்பதற்கான விடுமுறைக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதிருத்தல், உரிய விடுமுறைக் காலத்தை வழங்காதிருத்தல், வாக்களிப்புக்கான விடுமுறைக்காக சம்பளம் வழங்காதிருத்தல், விடுமுறைக்காக விண்ணப்பிப்பதற்காக, வாக்காளர் அட்டையை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தல் மற்றும் வாக்களிப்புக்காக விடுமுறை பெற்றால் தொழிலை இழக்க நேரிடும் என எச்சரித்தல் ஆகியன குறித்து கடந்த காலங்களில், முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், குறித்த விடயத்துக்காக ஊழியர் ஒருவரினால் கோரப்படும் விடுமுறையை வழங்காதிருத்தல், நீதவான் நீதிமன்றமொன்றில், வழக்குத் தாக்கல் செய்து தண்டனை வழங்கக்கூடியதொரு குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது விடுமுறைக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக, வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்காளர் அட்டையை மீளக் கோரும் பட்சத்தில், அதனை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, தனக்கு விடுமுறை வழங்கப்படாமை குறித்து வாக்காளர் ஒருவர் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கும் பட்சத்தில், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் ஆணையாளர் ஆகியோரின் ஊடாக, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/வாக்களிப்பதற்கான-சந்தர்/
-
பரவாயில்லை! விக்கியராவது கொஞ்சம் உஷாரா இருக்கிற மாதிரி தெரியுது.
-
அப்பிடி யார் உங்களிட்டை சொன்னது?
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலி அரசியலையே நடத்திவருகின்றது!
Gowin replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
யாரப்பா சொன்னது! ஒற்றை வசனத்தோட பதிவு நிக்குது. -
யாழிலுள்ள நிறைய சட்டத்தரணிகளின் நிலை படுமோசமான இருக்கு.
-
நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை! - விக்கி
Gowin replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
வாக்களிக்க மக்கள் கருத்தில் எடுக்கக்கூடிய நல்ல கொள்கைகள்! உண்மை விலை போகக்கூடியவர்கள் பற்றி எச்சரிக்கையா இருக்கணும். குறிப்பா ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன். -
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள மூன்று புதிய கிரேன்களை அதற்கு பயன்படுத்தாமல், அவற்றை கிழக்கு முனையத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சந்திரசிறி மஹகமகே குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு எதிராக துறைமுக பொது ஊழியர் சங்கம், வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த வழக்கு இந்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தமக்கு வழங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த முனையத்தை அபிவிருத்தி செய்ய துறைமுக அதிகார சபை 80 மில்லியன் டொலர் மாத்திரமே செலவாகும். எனினும் தரகு பணத்திற்கு ஆசைப்பட்ட ஆட்சியாளர்களால் தேசிய வளங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/145891
-
வெள்ளை வான் சாரதிகளுக்கு பிரியாணி என்று நெச்சிட்டன்.
-
சி.வி.விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியும்? சம்பந்தன் கேள்வி
Gowin replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
அவரவர் அவரவர் அறிவுக்கேற்ப புரிதல் இருக்கும் என்கிறதுக்கு நல்ல எடுத்துக்காட்டு! -
குட் வேர்க்!
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து கலந்துரையாடல்
Gowin replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
தேர்தல் ஏமாற்றல் -
எல்லா சுயநலவாதிகளும் அங்க ஆஜர்!
-
கைப்பற்றிய போதை பொருட்கள் விற்பனை – பொலிஸாரிடம் விசாரணை
Gowin replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
ஸ்ரீலங்கா போலீஸ்காரன் டெய்லி ராத்திரி தண்ணி அடிக்கிறதுக்கு பணம் எப்பிடி கிடைக்கும்? -
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடி மீது மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் இன்று (வியாழக்கிழமை) மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் மன்னார் நகரில் கழிவுகளை சேகரித்து பாப்பாமோட்டை பகுதியில் உள்ள மீள் சுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள பிரதான இராணுவ சோதனை சாவடி மீது குறித்த பௌசர் வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது சோதனை சாவடிக்கு என வீதியில் அமைக்கப்பட்ட இராணுவ வீதித் தடைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சோதனை சாவடியில் வாகனங்கள் பதிவு செய்யப்படும் பகுதி முழுவதும் சேதம் அடைந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இராணுவ-சோதனைச்-சாவடியில்/