Jump to content

Gowin

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Posts

  532
 • Joined

 • Last visited

Everything posted by Gowin

 1. உங்களுக்கு தெரிஞ்சது மட்டும்தான் உண்மை என்று நினைக்காமல் முதல்ல நீங்களெல்லோ எல்லாத்தையும் கருத்துல எடுத்து கருத்தெழுதியிருக்கோணும். வைத்தியர்களோ பொறியலாளர்களோ வேலை செய்யும் நேரத்தில வெளிவேலை செய்ய ஏலா. ஆனா அப்பிடி சட்டவிரோதமான செய்றாக்களை நீங்க பாத்திருக்கலாம். ஆனா இவர்கள் தங்கட வசதிக்கேற்ப ஏனைய நேரங்களில வெளிவேலைகளை பிளான் பண்ணலாம். ஆனா புறபஸ்ஸர் மாணவர்களை இரவுல வந்து சந்திங்கோ என்று சொல்லேலா. நீதிமன்று மாணவர் வசதி பார்த்து வழக்குத் தவணை கொடுக்காது. பிறகு இவர் மாணவர்களை அம்போ என்று விட்டுட்டு கோட்டிலதான் குடியிருப்பார்.
 2. வேற யார் சேர்த்துக்கொள்ள போக்கினம்? புதுசா ஒரு கட்சியை தொடங்கலாம்.
 3. ஆனா அதான் முள்ளிவாய்க்காலுக்கான யதார்த்தம் என்பதை விளங்காதது ஏனோ?
 4. அதுக்கு சுமந்திரன், மாவை, ... இப்பிடி ஒரு கூட்டம் அண்டா குண்டாகளோட ரெடியா இருக்கீனம்.
 5. தான் செய்த போர்க்குற்றங்களை ஒப்புக்கொள்ளப் போறாரோ?
 6. தட்டுத்தடுமாறி ஆன்மீக சந்திப்பு என்று நம்பவைக்க விக்னேஸ்வரன் படாதபாடு படுறார்.
 7. கோத்தாவை ஏமாத்தி ஜனாதிபதி ஆக்கிவிட்டு தான் ஆட்சியை கைப்பற்றிய கோத்தாவை ஏமாத்தி ஜனாதிபதி ஆக்கிவிட்டு தான் ஆட்சியை கைப்பற்றிய மகிந்த என்ன ஏமாளியா? கோத்தாவின் பின்னடைவும் அழிவும் மகிந்த குடும்பத்தால் தான்.
 8. இதைக்கூட ஊர் ஒன்றிணைந்து தடுக்கமுடியாத அளவுக்கு மக்கள் கோழைத்தனமான இருக்கிறார்கள் என்பதை கொஞ்சமும் நம்ப முடியவில்லை.
 9. அருமையான கருத்து! மிக மிக நிதர்சனமான உண்மை! தமிழினம் இத முழுமையா உணர்ந்து, ஏதாவது கிடைக்குமோ என்று அங்கலாய்க்காமல், எது தேவையோ அதை அடைய முழுமையான முயற்சிகளை தளராம எடுக்க வேணும்.
 10. பௌத்த கொடி இவ்வளவு சீப்பான கொடியா போச்சே.
 11. 5 வருஷமா ரணிலிடம் எவ்வளவு காசை வாங்கி தமிழர்களுக்கு துரோகம் செய்தீர்கள் என்று கேட்டிருப்பாரோ?
 12. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நல்ல கவி!
 13. இலங்கை வருமாறு நடிகர் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு இலங்கை வருமாறு நடிகர் ரஜினிக்கு இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் உலகத் தமிழா் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ் வா்த்தகச் சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதில் சிறப்பு அழைப்பாளராக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு சாதனை தமிழா்கள், சாதனை தமிழச்சிகள் என்ற பெயரிலான விருதுகளை வழங்கினார். இந்நிலையில், தமிழக பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் விக்னேஷ்வரன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலை குறித்து ரஜினிகாந்திடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரஜினிகாந்த் இலங்கைக்கு விரைவில் வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். https://www.dailythanthi.com/News/State/2020/01/12145405/Vigneswaran-invites-actor-Rajini-to-come-to-Sri-Lanka.vpf
 14. இன்று இருக்கும் சாக்கடை அரசியல்வாதிகள் மத்தியில் சீமானை பலமடங்கு சிறந்த அரசியல்வாதியாக கருதலாம்.
 15. 10 வருஷத்துக்கு மேலாக துரோகமே தனது வாழ்க்கையாய் வரித்துக்கொண்ட கருணாவை ஒரு துரோகியாவே பெரும்பாலான மக்கள் துல்லியமா கணித்து வைச்சிருக்கீனம். இப்ப ஜனநாயக யுகம்.
 16. சுமந்திரன் இப்படிக் கொள்ளையடிக்கும் பணம் யார் யாருக்கு போகுது என்று தெரியனும்.
 17. விரைவில விலகித் தொலையலாமே! வாசுதேவ பதுளையில் இருந்து மட்டக்களப்புக்கும், மட்டக்களப்பிலிருந்து பதுளைக்கும் தண்ணீர் வழங்கும் தனது திட்டத்துக்கு அனுமதி கிடைவில்லை என்று புலம்புவது போல தெரியுதே.
 18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகிய இருவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் தாம் இருவரும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக இருவரும் கூட்டமைப்பிற்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமூடாக நாடாளுமன்ற உறுப்பினராக வர இருப்பது கூட்டமைப்புக்குள்ளும் பங்காளி கட்சிகளுக்குள்ளும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் அண்மையில் ஒரு அறை கூவலை விடுத்திருந்தார். அந்த அறைகூவலில் இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னுரிமை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். சம்பந்தன் கடந்த 43 வருடங்களாக நாடாளுமன்ற அரசியலில் இருந்து 87 வயதைக் கடந்துள்ள நிலையில், இதுவரை காலமும் சம்பந்தனினதும், அவரது கட்சியினரதும் அரசியல் இராஜதந்திரம் படு தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் காலத்தில் மட்டும் இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலிற்கு வரவேண்டும் என்று போலித்தனமான அறைகூவலை விடுத்து வருகின்றார். சம்பந்தன் கடந்த நான்கு நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் புத்திஜீவிகள், துறைசார்ந்த நிபுணர்களில் ஒருவரைக் கூட நியமிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தாம் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பொய்யான செய்திகளை கசிய விட்டுக்கொண்டு மறுபக்கத்தில் தேசியப் பட்டியல் மூலம் தள்ளாத வயதிலும் நாடாளுமன்றம் செல்ல ஆசைப்படுகின்றார். கொழும்பில் இதுவரை காலமும் தமிழ் மக்களினுடைய பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட மனோ கணேசனை அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்குவதென தமிழரசுக் கட்சியினர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக சுமந்திரன் அந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அதற்கான முக்கிய காரணம் கூட்டமைப்பிற்கு இவ் முறை நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப் போவதில்லை. சம்பந்தனைத் தவிர மாவை சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் வரமுடியாது அதற்காகவே கொழும்பில் கூட்டமைப்பு போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றது. இரண்டாவது காரணம் புதிய அரசியல் யாப்பு சீர் திருத்தத்தில் சுமந்திரன், சம்பந்தனுடைய இரட்டை வேடங்களை (பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்தல், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளல்) போன்ற விடயங்களில் மனோ கணேசன் ஆளுங்கட்சி அமைச்சராக இருந்து கொண்டு அதை ஊடகங்களுக்கு பகிரங்கமாக கருத்து தெரிவித்தமையே சுமந்திரன், மனோ கணேசன் ஆகிய இருவருக்கும் இடையிலான விரிசலுக்கு காரணம். இந்நிலையில் படித்தவர்கள், கொள்கைப் பற்றுடையவர்கள், ஜனநாயகப் போராட்டதில் துணிச்சலுடன் ஈடுபடக் கூடியவர்கள், இளைஞர்கள், துறைசார்ந்த நிபுணர்களுக்கும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்க சம்பந்தன், மாவை, சுமந்திரன் தயாரா? https://www.tamilwin.com/politics/01/235932?ref=home-feed
 19. அரசாங்க பாடசாலையில் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற ஒரு இலட்சம் மாணவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. "அபிவிருத்தி உதவியாளர்கள் சேவை" என்ற புதிய பதவியை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்த கல்வித் தகுதிகளுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/235894?ref=home-feed
 20. மனுஷர் என்ன சொல்ல வாரார்? தங்கட அராஜகத்துக்கு நீதிமன்று காரணம் என்று சொல்லவாராரோ? நீதிமன்று என்று ஒரு இல்லாட்டி ஒரு பிரச்சினையும் இல்லை.
 21. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க காவல்துறை வேண்டாம் இராணுவமே வேண்டும் என கல்லாறு கிராம பெண்கள் விடுத்த கோரிக்கையினை இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.பொது மக்களின் இக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட இராணுவம் உடனடியாக தாங்கள் குறித்த இடத்தில் இராணுவ சோதனை சாவடி ஒன்றை அமைக்க இணக்கம் தெரிவித்தனர். இதன் பின்னரே பொது மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படும் உழவு இயந்திரங்கள், டிப்பர்கள் அதிக வேகத்துடனான போக்குவரத்தால் குழந்தைகள் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இவ்வீதியால் அனுப்புவது என்பதே மிகப்பெரும் ஆபத்தான விடயமாக மாறியுள்ளது. எனவே கடந்த ஐந்து வருடங்களாக இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இதனால் நாங்கள் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளோம் சந்தித்தும் வருகின்றோம். சட்டவிரோத மணல் அகழ்வால் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளான கஞ்சா, கசிப்பு என்பனவும் அதிகரித்துள்ளது. எனத் தெரிவித்த மக்கள், கடந்த காலங்களில் மாதக் கணக்கில் மழை பெய்தாலும் சில குடும்பங்களை தவிர ஏனையவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில்லை ஆனால் தற்போது இரண்டு நாள் பெய்த மழைக்கே நாம் அனைவரும் பாடசாலைக்கு சென்று தங்குகின்றோம். வெள்ளம் இரண்டு அடிக்கு மேல் தேங்கி நின்றதற்கு காரணம் இந்த சட்டவிரோத மணல் அகழ்வே. எனவே இந்த சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்காது விட்டால் எதிர்காலத்தில் கல்லாறு என்ற கிராமமே இல்லாமல் போய்விடும்.ஆகவே கல்லாறு கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த காவல்துறை தேவையில்லை இராணுவமே தேவை. இராணுவத்தினர் இந்த பிள்ளையார் கோவிலடியில் ஒரு சோதனை நிலையத்தை அமைத்து இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.இன்று கல்லாறு கிராமத்தில் பெண்கள் ஒன்று கூடி ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். தங்களின் கிராமத்தில் இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இதனால் தங்களின் கிராமம் மிகப்பெரும் ஆபத்திற்குள் சிக்குண்டுள்ளது என தெரிவித்தனர். http://www.samakalam.com/செய்திகள்/கிளிநொச்சி-கல்லாறு-கிராம/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.