Jump to content

Gowin

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Posts

  532
 • Joined

 • Last visited

Everything posted by Gowin

 1. இந்தியன் ஆசனங்களை விக்கிறானோ? இந்தியானிட்டை அதைவிட கூட ஆசனமில்லையோ?
 2. தமிழர்ற்ற நீதிக்கான வேட்கையை நேர்மையுடன் முன்னெடுப்பதில் கூத்தமைப்பின் அத்தனை கையாலாகாத ஒட்டுமொத்த கோஷ்டியைவிட விக்கினேஸ்வரன் தனியொருவரே ஒரு மில்லியன் தரம் சிறப்பானவர்.
 3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருடைய அரசியல் நலனுக்காகத்தான் திருமதி சசிகலா ரவிராஜ் திட்டமிட்ட வகையில் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே சண்முகராஜா அரவிந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ரவிராஜ் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட காலத்தில் இருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் அரசியலில் ஈடுபடுவதை அவருடைய மனைவி மற்றும் அவருடைய குடும்பம் விரும்பவில்லை. அவருடைய அரசியலுக்கு அவர்கள் எந்தவிதமான ஆதரவையும் கொடுத்ததாக நான் அறியவில்லை, நீங்களும் அதை அறிந்திருப்பீர்கள். உதாரணமாக சொன்னால் மாநகர முதல்வராக கடமையாற்றியுள்ளார், நாடாளுமன்ற உறுப்பினராக இந்த பிரதேசத்திலே தெரிவு செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு நிகழ்விலாவது ரவிராஜ் உடன் அவரது மனைவி இணைந்து பயணித்த வரலாறு இருக்கின்றதா? இல்லை. அவருடைய பணியை தொடர்ந்து செய்யவேண்டும் என நினைத்திருந்தால் அவர் இறந்த அடுத்த ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலே வந்து இறங்கி இருக்க வேண்டும் அல்லது அதற்கு பிறகு வந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலிலாவது களமிறக்கப்பட்டிருக்க வேண்டும். இன்றைக்கு தங்களுக்கு ஏற்பட்ட சரிவுகளை தவிர்ப்பதற்காக, தங்களுடைய பரப்புரைகளுக்கு அவருடைய பெயரை வைத்து தாங்கள் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக திருமதி ரவிராஜை கொண்டுவந்து களமிறக்கியுள்ளார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட அரசியல் நலன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே உள்ள முக்கியஸ்தர் ஒருவருடைய அரசியல் நலனுக்காகத்தான் திருமதி ரவிராஜை திட்டமிட்ட வகையில் களமிறக்கப்பட்டுள்ளதாக நான் பார்க்கின்றேன். தன்னுடைய கணவர் விட்ட பணியை தொடர்ந்து செய்வது என்று சொன்னால், மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அரசியலில் பிரவேசித்தது போல் திருமதி சசிகலாவும் அரசியலில் வந்திருக்க வேண்டும். இவ்வளவு கால இடைவெளிக்கு பிறகு வருவதென்பது, இன்றைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட சரிவினை நிவர்த்தி செய்வதற்காக இவர்களுடைய அனுதாபங்களை, மக்களிடையே கொண்டு போய் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தான் களமிறக்கியுள்ளார்களே தவிர அவர் தன்னுடைய கணவர் விட்ட பணியை செய்வதற்கு வந்ததாக நான் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/145718
 4. நாட்டுக்குரிய பணத்தினை தனது சொந்தத்துக்காக செலவு செய்யும் பழக்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கக் கூடும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் விக்னேஸ்வரன், வடக்கிற்கு வந்த பணம் திருப்பி அனுப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார், இது தொடர்பாக தொடர்ந்தும் பேசிய அவர், https://www.ibctamil.com/srilanka/80/145710?ref=imp-news
 5. இப்ப ஏதோ பள்ளிகள் விடுமுறை இல்லாமல் நடக்கிறமாதிரி ஒரு பெரும் தீர்மானம் எடுத்திருக்கீனம்.
 6. இந்த தறுதலைகளை எல்லாம் ஒழுக்கத்துடன் கட்டி மேய்த்தவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்திருக்க வேண்டும்!
 7. சுமந்திரன் ஒரு பழைய பேப்பரைக் காட்டி தனது சகா கருணா பற்றிய விசாரணை எல்லாம் முடிஞ்சுது, இனி விசாரிக்க ஒன்றுமில்லை என்று விரைவில சொல்லுவார்.
 8. இருக்கும் இருக்கும். இஸ்லாம் பயங்கரவாதிகளை பாதுகாக்கிறதை தவிர இவனுகளுக்கு வேறென்ன வேலை?
 9. மாரித் தவக்கை தன் வாயாலேயே கெடுமாம் என்கிறது இதைத் தானோ? “நுணலும் தன் வாயால் கெடும்” அனந்திக்கு தேவையில்லாத வேலை இது.
 10. மனித உரிமை மீறல்களை பார்த்து கூத்தமைப்பு என்ன செய்கிறது? சுமந்திரனுக்கு அம்பிகாவின் மனித உரிமை மட்டும் தான் தெரியும் போல
 11. நல்லா தான் கதை அளக்கிறார்! ஏன் இதுவரை மக்களின் கருத்தை கேட்டு செய்ய முடியாம போச்சு? இனி எப்பிடி மக்களின் கருத்தை கேட்டு செய்ய முடியும்? ஒரு விளக்கமும் இல்லாம ஊரை ஏமாத்துறார். இப்பிடி ஊரை ஏமாத்தினா தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையோ?
 12. ஒருத்தரும் குடுக்கேல்லை போல இருக்குது. அதான் திரும்ப ஒருக்கா ஞாபகப்படுத்துறார்.
 13. டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா- வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் அண்மையில் அரபு நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பல இலங்கையர், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கொரோனா தடுப்பு சிக்கிச்சை நிலைங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் நாடு திரும்பிய 168 பேர், வவுனியா- வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை, அனுமதியளிக்கப்பட்ட வவுனியா சுகாதார திணைக்கள வைத்தியர் உட்பட்ட குழுவினர், நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டதன் அடிப்படையில், இன்று அவர்களது பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தது. இதன் பிரகாரம் கர்ப்பணி பெண் உட்பட 10 பேருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒருவரை முல்லேரியா கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கும் ஏனைய 9 பேரையும் காத்தான்குடியிலுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/வவுனியாவில்-தனிமைப்படு-7/
 14. ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வந்த மக்கள் பிரதிநிதிகள் சிலரின் தகுதிகளை ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த சில பிரதிநிதிகள் மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்தவர்களும், நாட்டுக்கு போதைபொருள் கடத்தி வந்தவர்களும், ரயிலில் தங்கச் சங்கிலியை பறித்தவர்களுமாகவே இருந்தனரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்த 100 பேரும், மணல் அகழும் அனுமதிமை பெற்ற 75 பேரும், நாட்டுக்கு போதைபொருள் கடத்தி வரும் இருவரும், ரயிலில் தங்கச் சங்கிலியை பறித்த ஒருவரென பலர் அங்கு இருந்தனர். இதுவே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக வந்தவர்களின் தகுதியென அவர் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/145440
 15. திரையரங்குகளுக்கு அதிகம் போறது சோம்பேறி தமிழ்ச்சனம் தான். அதுகளுக்கு ஆப்பு இருக்கு.
 16. அடிப்படை தமிழ் விளக்கம் உள்ளவர்ளுக்கு ஒரு சொல் பயன்படுத்தப்படும் இடத்தை பொறுத்து புத்தியை தீட்டியவர் எனவும் அர்த்தப்படும் என புரியும்.
 17. நீங்க வெண்டுடீங்க பாஸ்!
 18. சம்பந்தன், சுமந்திரன் போல தமிழர் உரிமைகளை அடகுவைச்சு அவர்களிடம் எலும்புத்துண்டுகளை கேட்டு கேட்டு பிச்சை எடுக்கமாட்டம் என்று சொல்றார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!
 19. தமிழை அரிஞ்சு கொல்லாமல் தமிழின் வளமை பெருக தமிழை கற்றுக் கொள்ளுங்கள்!
 20. இந்த அம்பிகா மாமி சுமந்திரன் கொண்டுவந்த மாமி இல்லையே?
 21. அமெரிக்கர்களும் வைரசுக்களே!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.