Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Gowin

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    532
  • Joined

  • Last visited

Everything posted by Gowin

  1. கிராமத்துக்கு திருப்புபவர்கள் கிராமத்தை நரகமாக்காமல் இருக்க வேணுமே.
  2. அங்க ஜனநாயக வியாபாரத்தில் அரசியல்வாதிகள். இங்க மனித உரிமை வியாபாரத்தில் அரசியல்வாதிகள்.
  3. அவங்களையும் சேர்த்தா எப்பிடி பொய்க்கதைகளை எழுத முடியும்?
  4. செயலாளர் பதவி? அதை வைச்சுக்கொண்டு கழுத்தறுக்கலாம் என்று ஆனந்தசங்கரி கனவு காண்கிறார்.
  5. னும் ஐங்கரநேசனும் தேர்தல் காலத்தில் புலிகளின் புகழ்பாடும் கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத் தனத்தை செய்ய ஆரம்பிச்சிருக்கார்!
  6. ஏன் இதுவரை பாடுபடவில்லை? சமுக அக்கறை இருக்கிறமாதிரி தெரியவில்லை. கூட்டமைப்பு ரவிராஜை வைச்சு வாக்குகளை கொள்ளையடிச்சு தமிழ் சனத்தை ஏமாத்த ஆளை களமிறக்கி இருக்கு.
  7. எப்பவரை தொடர்பிருந்திச்சு? எப்ப இருந்து தொடர்பை நீக்கினீக?
  8. இந்தியன் குடுக்குற பணத்தில எவ்வளவு பங்கு விக்கிக்கு குடுக்க ரெடி?
  9. பிலிப்பைன்ஸும் ஊழல் நிறைஞ்ச நாடு உண்மைக்கு இடமிருக்கோ தெரியா
  10. சிங்களத்தின் சலுகைகளை பெற்றுக்கொண்டு புரட்டி புரட்டி கூத்தடிப்பதில் கருணாவுக்கு சளைக்காத சுமந்திரன் யார் என்கிறதும் எல்லோருக்கும் தெரியுமே!
  11. நச் என்று ஒருவரியில் தெளிவா சொல்லிருக்கீங்க! கூல் செய்த அயோக்கியத்தனங்களுக்கு அளவு கணக்கு கிடையா. எந்தவொரு நடுநிலை அமைப்புக்கும் பொருத்தமில்லாத கூல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டது வரலாற்று தவறு, உண்மையாவா? நம்பவே முடியாத புதுக்கதையே! கூலும் அவரது பரிவாரங்களும் இதுவரை மனித உரிமை பேசி வியாபாரம் செய்த மனித உரிமை வியாபாரிகள் ஆச்சே? அதுவும் மனித உரிமை பேசி தங்களுக்கு உயர்பதவிகள் கோரும் மனித உரிமை வியாபாரிகள் ஆக்களாச்சே? இதுதானே 30, 40 வருஷ வரலாறு.
  12. 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளனர். இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். மேலும் வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சுகாதார வழிகாட்டுதல்களைப் பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தேர்தலுக்கான-திகதி-மற்று/
  13. யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபம் இனந்தெரியாத நபரால் உடைக்கப்பட்டுள்ளது. கோவிலின் மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் உடைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாட்டிலிருந்து வருகை தந்த ஒருவராலேயே சிலை உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. தற்போது மாதாவின் சொரூபம் பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா ஆலயத்தின் உட்பகுதிக்குள் கொண்டுசென்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.ibctamil.com/srilanka/80/144564
  14. அவுஸ்திரேலியாவின் பால் தரும் பசுக்களை இலங்கையின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது எனவும் தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் சுய நலத்திற்காகவே பல கோடி ரூபாயை செலவிட்டு, அரசாங்கம் 2 ஆயிரத்து 500 பசுக்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். ஜேர்சி ரக இனமான பசுக்களே இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்த பசுக்களை எமது நாட்டின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது. நாம் பிரேசில், ஆபிரிக்க, இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள பசு இனங்களையே இறக்குமதி செய்ய வேண்டும். அந்த பசுக்களே நாட்டின் சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருக்கும். இப்படியும் முட்டாள்தனமான அரசாங்கம். இது கொள்ளையிடும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ள இவர்களுக்கு இருக்கும் சுயநலத்தை பாருங்கள். மோசமான பேராசையால் நாட்டுக்கு செய்யும் அநியாயம். இவர்கள் மீது இடிவிழும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144569?ref=imp-news
  15. மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச்சடங்களில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையகத்தை பிரதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர், அவரது வீட்டில் இருந்தவரும் சாரதி ஒருவரும் நேற்றைய தினம் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை 14 நாட்கள் சுயதனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் வைக்கப்பட்ட பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்திற்கும் சென்றுள்ளார். செய்தி சேகரிப்பதற்காக அந்த பிரதேசத்திற்கு சென்று அவர் திரும்பியுள்ளார். அவரின் இறுதிக் கிரியைகளின் பின்னர் குறித்த ஊடகவியலாளருக்கு கொரோனா அறிகுறிகள் சில காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நோய் அறிகுறிகள் தென்பட்டதனை தொடர்ந்து குறித்த பிரதேச ஊடகவியலாளர் டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பீசீஆர் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொளள்ப்படும் எனவும் மீண்டும் ஒரு முறை பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அதுவரை அந்த ஊடகவிலாளர் மற்றும் ஏனைய இருவர் ஹட்டன் திம்புல பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144567
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.