Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Gowin

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    532
  • Joined

  • Last visited

Everything posted by Gowin

  1. யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக நிராகரித்துவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ள அவர், அதனை நியாயப்படுத்தவும் முயன்றுள்ளார். இந்தியாவின் முன்னணி பத்திரிகையொன்றில் பிரசுரமான கட்டுரையொன்றுக்கு காரசாரமான முறையில் பதிலளித்துள்ள கோட்டாபய ராஜபக்ஸ, யுத்தத்தில் ஒரு நபரின் மனித உரிமை மீறல்களை பாதுகாப்பது சாத்தியமற்றது என கூறியுள்ளார். யுத்ததின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, போரில் ஒரு நபரின் மனித உரிமையை பாதுகாப்பது என்பது மழையின் போது சேறு ஏற்படுவதை தடுப்பது போன்றது என கூறியுள்ளார். யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், அதேபோல கடந்த மே மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற யுத்த வெற்றிவீரர்கள் தின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆற்றிய உரை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்திய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையொன்றுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அனுப்பட்டுள்ள பதிலில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. "யுத்த வெற்றி வீரர்கள் இலக்குவைக்கப்படுவதை இலங்கை பொறுத்துக்கொள்ளாது” என தலைப்பிடப்பட்டு கடந்த மே மாதம் 20 ஆம் திகதி அப்பத்திரிகையிள் ஊடகவியலாளரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட கட்டுரைக்கே ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் பதில் கடிதம் அனுப்பட்டுள்ளது. இந்த கட்டுரையானது உண்மையான நிலையை எடுத்துரைக்கவில்லை என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களில் தெளிவான விதிகளை கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த அறிக்கையில் இராணுவத்தின் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவ நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் முடிவுக்கு வருவதற்கு பதிலாக வேறுபாடு மற்றும் முறையான இலக்கு விதிகள், இராணுவத் தேவை மற்றும் விகிதாசாரத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. போரின் இறுதி நாட்களில் வைத்தியசாலை உள்ளிட்ட இராணுவம் அல்லாத இலக்குகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் விகிதாசார விதிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டதா என்பது தொடர்பில் இறுதி முடிவுக்கு வருவதற்கு கட்டாயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையினால் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய இராணுவத் தளபதி, யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான ஒரு ஜெனரல் தர அதிகாரி என அந்தப் பத்திரிகை அடையாளப்படுத்தியுள்ளமை மிகவும் நியாயமற்றது என கூறியுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பானவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும் வழக்குகள் அற்ற கொலைகள் உள்ளடங்கலாக யுத்தக் குற்றங்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல் தொடர்பாக லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் நம்பக்கத்தன்மை அடிப்படையில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இறையாண்மையுள்ள ஜனாதிபதியை வெளிநாடு கேள்விக்கு உட்படுத்துவது அதிருப்தி அளிப்பதாகவும் அரசாங்கம் அந்தப் பதிலில் சுட்டிக்காட்டியுள்ளது. ஊடகவியலாளர் எழுதிய கட்டுரையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என கூறப்பட்டுள்ளதை நிராகரித்துள்ள ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட எண்ணிக்கை தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை சரிபார்க்கும் வகையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் விடுத்த கோரிக்கையை போருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அடுத்தடுத்த அனைத்து அரசாங்கங்களும் நிராகரித்துள்ளன. யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூருவதற்கு பொலிஸார் வடக்கு கிழக்கு மக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் ஜனாதிபதியின் உரை இடம்பெற்ற யுத்த வெற்றிவீரர்கள் நினைவேந்தல் நிகழ்வு, உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் நடைபெற்றதாகவும் இந்திய இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இராணுவத்தின் வெளிப்படையான ஈடுபாடு, யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் இராணுவமயமாக்கம் தொடர்பான பிரச்சினை என இந்தியாவின் பிரபல பத்திரிகை தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தது. எனினும் இதனை முழுமையாக நிராகரித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, யுத்தப் பிரதேசங்களில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் நெருக்கமான உறவுகளை கட்டியெழுப்பும் வாய்ப்புக்களை தெளிவாக உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது. ஜனாதிபதியின் இராணுவ ரெஜிமெண்டான கஜபா பிரிகேட்டில் தன்னுடன் போரிட்ட நெருக்கமானவர்கள் உள்ளடங்கலாக மனித உரிமைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான இராணுவ அதிகாரிகள் பலரை புதிய அரசாங்கத்தின் சிவில் உயர் பதவிகளுக்கும் கோவிட் 19 பரவலை தடுக்கும் செயற்பாடுகளின் முக்கிய பொறுப்புக்களுக்கும் நியமித்துள்ளமை, இராணுவ மயமாக்கத்திற்கான உதாரணம் என சர்வதேச சமூகங்களின் கவனத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் கொண்டுவந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144419?ref=home-imp-parsely
  2. நீண்ட ஊரடங்கு காலத்தில் நடைபயணம் சாத்தியமில்லை தவிர்ப்பதே மேலான முடிவு
  3. போர்குற்றவாளிகளுக்கு ஆதரவா இருக்க சொதப்பல் சுமந்திரன் இருக்கவே இருக்கார்.
  4. சம்மந்தம் ஏதாவது பதில் அனுப்பி இருக்க மாட்டுதே. சம்மந்தத்துக்கு ஜனநாயகம் என்றா என்னெண்டு தெரியாது. அதனால மற்ற கருத்துக்களுக்கு அங்க இடமிருக்காது.
  5. தரம் குறைஞ்ச இந்திய ஊடகங்களே போர்குற்றவாளிகளை அடிக்கடி பேட்டி எடுக்கின்றன. இந்த தரம் குறைஞ்ச இந்திய ஊடகங்களுக்கு மறுபக்க கருத்தையும் கேட்டு போடவேணும் என்ற நேர்மையான எண்ணம் ஒருபோதும் எழுவதில்லை. அப்பிடி கேட்டாலும் போர்குற்றவாளிகளுக்கு ஆதரவான டக்குளஸ், ஆனந்தசொங்கரி, சம்பந்தம், சுமந்திரன் போன்ற வெருளிகளையே கேட்டு பிரசுரிப்பார்கள்.
  6. நீதி ஒருநாள் வென்றே தீரும். இவர்களின் அறப்போராட்டம் வெல்ல ஒவ்வொரு தமிழரின் பங்களிப்பும் அவசியம்.
  7. அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்தின் ஆய்வு தமிழரசுக் கட்சியின் திருகுதாளங்களை புட்டுப்புட்டு வைக்குது.
  8. ஸ்ரீலங்கா அரசின் அக்கிரமங்களை எப்ப நினைச்சாலும் நெஞ்சு பொறுக்குதில்லையே! ஸ்ரீலங்கா சிங்களம் செய்த அநியாயங்கள் ஒவ்வொன்றுக்கும் 100 மடங்கு அறுவடை செய்ய வேணும்.
  9. முகக்கவசம் அணியாம மீடியாக்களுக்கு பிலிம் காட்டும் மகனின் அட்டகாசம் யாராலயும் சகிக்க முடியல என்று பௌத்த அமைப்புகளும் வைத்தியர்களும் கோத்தாவிடம் போட்டு குடுத்திருக்கீனம்.
  10. கொரோனா ஒரு பாடம் படிப்பிச்சிட்டு தான் போகும்னு நினைக்கிறன். தேர்தல் வைக்க நெச்சு ஆடின ஆட்டம் அடங்குது.
  11. தேர்தல் பயத்தில ஏதோ அக்கறை உள்ளவர் போல பந்தா பண்ணுகிறார். அதுக்கு பிறகு பெட்டிப்பாம்பு தான்.
  12. நான் நினைக்கிறன் இத்தாலி, அமெரிக்கா போன்ற சில நாடுகள் தவிர ஸ்ரீலங்கா, சீனா, இந்தியா உட்பட பல நாடுகளின் புள்ளிவிபரங்கள் நம்ப முடியாதவை. கனடாவில் கூட உண்மை மறைக்கப்படுதாம்.
  13. அப்பிடியே வவுனியாவுக்கும் திருகோணமலைக்கும் நுவரெலியாவுக்கும் தமிழ் அரச அதிபரை கேட்டா ஒரு நேர்மை இருக்கும். இல்லை என்றா இது ஒரு சந்தர்ப்பவாத மதவெறி தான்.
  14. அதான் உண்மை! சம்பந்தனுக்கு கிடைச்ச ஒரு ஆடம்பர வீடு போதாதுனு நினைக்கிறன். சுமந்திரன் புதுசு புதுசா புகுத்துற ஆக்களுக்கும் ஆடம்பர வீடு கேக்கிறாரோ?
  15. ம்ம். ஆயுத போராளிகளின் தியாகங்களை வித்து சுமந்திரன் போன்ற சந்தர்ப்பவாதிகள் சொந்த லாபங்களுக்கு பயன்படுத்துறதை சரி என்று சொல்ற ஆக்கள் இருக்கிறது ஆச்சரியம் இல்லை.
  16. கொரோனா வைரஸ் நோயில் இருந்து தற்காத்து கொள்வதற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தனது மகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நேற்றும் நேற்று முன்தினமும் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார். வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார். தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் தனது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார். இது குறித்த தகவலை அறிந்துக்கொண்டதும் தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்கள் நேற்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து சிரேஷ்ட அதிகாரிகள் தலையிட்டு அவர்களை தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர்.\ 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தனிமைபபடுத்தல் சட்டத்தை மீறி பேராசிரியர் ஹூல் தனது புதல்வியை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வந்ததன் மூலம் தினமும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் அவரது புதல்வி ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவின் ஊழியர்களின் எதிர்ப்பை அடுத்து நேற்று மதியம் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதாகவும் இதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் முற்றாக கிருமி தொற்று நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அத்துடன் இன்று நடைபெறும் தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் பேராசிரியரை வீடியோ தொழிற்நுட்பத்தின் மூலம் கலந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். https://www.tamilwin.com/politics/01/246501?ref=home-imp-parsely
  17. எங்க அரசியல்வாதிகள் தேர்தலுக்கு விலைபோகாட்டி தேர்கள் மீண்டும் ஓடும்!
  18. நம்பிக்கையே பிரதான பலம்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.