Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Gowin

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Posts

  532
 • Joined

 • Last visited

Everything posted by Gowin

 1. கொரோனா சிகிச்சை பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் வவுனியா- பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு, விமான பயணிகள் கொண்டுவரப்பட்டதனை கண்டித்து நெளுக்குளத்தில் கண்டன போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வவுனியா- தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெளுக்குளம் சந்தியில் இன்று (சனிக்கிழமை) காலை 10மணியளவில், மக்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ‘அகற்று அகற்று கொரோனா முகாமை அகற்று’, ‘கொரோனா வைரஸ் வவுனியாவிற்கு வேண்டாம்’, ‘தமிழர் பிரதேசத்தில் கொரோனா முகாமை எதற்காக அமைத்தாய்’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம், “வவுனியா- பம்பைமடு பிரதேசத்திற்கு இனங்காணப்படாத கொரோனோ என சந்தேகிக்கும் 265பேர் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அதாவது கொரானா குறித்து எங்களுடைய மக்கள், பீதியில் காணப்படுகின்ற நிலையில், இலங்கையிலேயே பல்வேறு மாவட்டங்கள் இருக்கின்றபோது வட.கிழக்கிற்கு மாத்திரம் இத்தகைய நோயாளர்களை கொண்டு வருவதனை ஏற்று கொள்ள முடியாது. சஹரான் குண்டு தாக்குதலின்‌ போதும், வெளிநாட்டவர்கள் சிலர் வவுனியா பூந்தோட்டத்தில் குடியேற்றப்பட்டிருந்தார்கள். வட.கிழக்கில் இவ்வாறானவர்களை குடியமர்த்துவதென்பதை இனஅழிப்பாகவே சிந்திக்க வேண்டியுள்ளது. இலங்கையில் பல்வேறு இடங்கள் இருக்கின்றபோது அவர்களை அங்கே வைத்து அவர்களின் நோய்தொற்றை ஆராய முடியாதா? வவுனியா- பம்பைமடு இராணுவ முகாமில் குடியமர்த்துவதென்பது கண்டிக்கத்தக்க விடயம். பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பம்பைமடுவில் குப்பை கொட்டும் இடம் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் நோயாளிகளின் குப்பை அங்கே கொட்டப்படும் போது, எங்களுடைய தொழிலாளிகள் அங்கே சென்று வரும்போது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே உடனடியாக இந்த முகாமை அகற்ற வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக காணப்படுகின்றது‌” என தெரிவித்தார். http://athavannews.com/கொரோனா-சிகிச்சை-பிரிவுக்/
 2. கொரோனா வைரஸ்: இராணுவச்சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச்சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அதேபோன்று மற்றொருவரும் நேற்றிரவு வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.https://athavannews.com/கொரோனா-வைரஸ்-இராணுவச்சி/
 3. கடைசில கருணாவையும் சுமந்திரனையும் ஒரே தட்டுல வைச்சாச்சு! வைச்சது வேறு யாருமில்ல தமிழரசுக் கட்சியின் உபதலைவி ஒராள்.
 4. இங்க குறிப்பிட்ட எல்லா குற்றவாளிகளும் மற்றவர்கள் மேல வலிந்து தங்கட ஆதிக்கத்தை நிலைநிறுத்துற ஆக்கள் தான் என்று விளங்காட்டி நான் ஒன்றும் செய்ய ஏலாது. இப்பிடி பொதுவா சொல்லியும் தப்ப முடியா. மதமாற்றம் செய்யும் ஆக்கள் கைல இருக்கிற உலகம் பூரா கொள்ளையடிச்ச பணம் போல சைவர்கள் கொள்ளையடிக்கிறதும் இல்லை பெரும் பணபலம் கொண்டவர்களும் இல்லை. இது இப்பிடி இருக்கேக்க இப்பிடி ஒரு கேவலமான சிந்தனையை உங்களிட்ட இருந்து எதிர்பார்க்கில்லை.
 5. யோகர் சுவாமிகளது கூற்றை நல்லா பாடமாக்கி வைச்சிருக்கா. தமிழரசுக் கட்சிக்குள்ள புகுந்த சுமந்திரன் என்ற கொரோனா வைரஸை அழிக்க ஒரு குட்டிச்சாத்தான் முயலுது.
 6. உந்த ராணுவத்தினரும் அவங்க குடும்பமும் கொரோனா வைரைஸுக்கு நல்ல சாப்பாடா இருக்க கடவது. தமிழனை அழிக்க நினைக்கிறவன் அழியட்டும்.
 7. நல்ல ஐடியா! போர்குற்றவாளிகளை சுதந்திரமா போர்குற்றங்களை செய்ய விட்டுட்டு பாதிக்கப்படக்கூடிய ஆக்களை தடுக்க சொல்றீக. கொலைகாரர்களை சுதந்திரமா கொலைகளை செய்ய விட்டுட்டு பலியாபவர்களை பலியாகாம கவனமா இருக்க சொல்றீக. சமூக விரோதிகளை சுதந்திரமா சமூக விரோத செயல்களை செய்ய விட்டுட்டு பாதிக்கப்படுபவர்கள் பாதிக்கப்படாம தடுக்க சொல்றீக. இப்பிடி வித்தியாசமாவும் யோசிக்க பழகணும். இப்பிடி ஆக்கள் இல்லாம தான் நாட்டில இவ்வளவு பிரச்சினை.
 8. குறைந்தது இப்பிடி குரல் கொடுத்ததை பாராட்டலாம். பலர் நிசப்தம். சுமந்திரனும் கிழக்கு பற்றி ஏதோ சொல்லிருக்கிறார். ஆனால் அந்தாள் வெளில ஒன்றைச் சொல்லும் உள்ளுக்குள்ளே இன்னொன்றைச் செய்யும். அப்பிடி பாத்தா கிழக்கிலே கொரோன தங்கல் முகாம் அமைக்க சுமந்திரனும் ஐடியா குடுத்திருக்கலாம்.
 9. எல்லா பக்கமும் புகை கிளம்புது. அருமை!
 10. அப்ப நீங்க ஏன் அவரை இன்னும் விட்டு வைச்சிருக்கீக? உங்க விஷமத்தனம் அதை வென்றதா இருக்குதல்லோ
 11. தான் முதலைமைச்சரா வந்தா எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திடும்னு சொல்லிருப்பார்
 12. மக்களுக்கு இடைஞ்சல் என்றபடியா யாரோ நல்லா கொழுவி விட்டிருக்கீனம்
 13. ஏன் கிடைக்கும் மில்லியன்கள் பில்லியன்களாக மாற்ற ஆசையோ? சாகப்போற வயசில ஏனய்யா உங்களுக்கு இந்த ஆசை எல்லாம்?
 14. நல்ல நீச்சல் பயிற்சி கொடுக்கனும். முன்னமே தெரிஞ்சு அதுக்கு வசதியா தான் பார்லிமென்ட் ஏரிக்கு மத்தில கட்டிருக்காங்க.
 15. தமிழர் மத்தில ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை அதிகமாம். அதால எல்லா பெண்களுக்கும் மாப்பிளை கண்டு பிடிக்கிறது கஷ்டமாம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.