• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

selfywalking

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  17
 • Joined

 • Last visited

Community Reputation

4 Neutral

1 Follower

About selfywalking

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

505 profile views
 1. புவி கோளவடிவானது என நாம் கூறிக்கொண்டாலும் பூமியின் வடிவம் ஒரு சீரான கோளமல்ல நீர்ப்பரப்பை அகற்றிவிட்டு அவதானித்தோமேயானால் புவி கோணல்மாணலான ஒரு கல்போன்றுதான் காட்சியளிக்கும் வடதென் துருவங்களைவிட புவியின் மத்தியபகுதியே சற்று உப்பியதுபோல் காணப்படுகின்றது புவிதன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணித்தியாலங்கள் எடுத்துக்கொள்கின்றது ஆனால் உண்மையில் தன்னைத்தானே சுற்ற எடுக்கும் நேரம் 23 மணித்தியாலங்கள் 56 நிமிடங்கள் 4 வினாடிகள் எடுத்துக்கொள்ளும் பூமியின் ஒரு நாளின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கின்றதாம் புவி தன்னைத்தானே ஒரு தடவை முழுமையாக சுற்றுவதைத்தான் ஒரு நாள் எனக்கூறுகின்றோம் இவ்வாறு புவி தன்னைத்தானே சுற்றுவதில் சந்திரனின் ஈர்ப்புவிசை தாக்கத்தை செலுத்துகின்றது இதனால் புவியின் சுழற்சிவேகம் குறைவடைகின்றது ஆனால் இதற்கு மிக நீண்டவருடங்கள் எடுக்கும் 4.6 பில்லியன் வருடங்களின் முன் புவி தோன்றும்போது ஒரு நாள் 6 மணித்தியாலங்களைகொண்டதாகவே இருந்தது 620 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாளின் நேரம் அதிகரித்து 21.6 மணித்தியாலங்களாக மாறியுள்ளது தற்போது ஒரு நாள் 24 மணி நேரத்தைக்கொண்டிருக்கிறது இன்னும் மில்லியன் வருடங்களின் பின்னர் இந்த 24 மணித்தியால நேரம் இன்னும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றார்காள் அதோடு சந்திரன் ஒவ்வொருவருடமும் 1.3 செண்டிமீட்டர்கள் எம்மைவிட்டு விலத்தி செல்கின்றது 600-800 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் புவியில் சடுதியான கால நிலை மாற்றங்களினால் பூமி சில தடவைகள் உறைந்துபோனது இவற்றை ஐஸ் ஏஜ் என்று கூறுவார்கள் ஸ்னோ பால் ஏர்த் தியரி மூலம் இவற்றை விஞ்ஞானிகள் விளக்கியுள்ளார்கள் ஆனால் தற்போது பூமியில் அதிகரிக்கும் பச்சைவீட்டுவிளைவுகள் காரணமாக இவைமீண்டும் தோன்றக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அப்படி ஐஸ் ஏஜ் தோன்றினால் -50செல்ஸியஸிற்கு வெப்ப நிலை குறைந்துவிடும் யாருமே எந்த உயிருமே மிஞ்சாது என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள் கண்டத்தகடுகள் மீண்டும் ஒன்றிணையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள் இதற்கு இன்னும் 250 மில்லியன் வருடங்கள் எடுக்குமாம் 180 - 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற ஒரு நிலம் இரண்டாகப் பிரிந்த போது கோண்டுவானாவும் லோரேசியாவில் இருந்து பிரிந்தது. லோரேசியா என்ற வடக்கு-அரைப்பகுதியின் கண்டம் மேலும் வடக்கே நகர்ந்தபோது கோண்டுவானா தெற்கே நகர ஆரம்பித்தது. கோண்டுவானா இன்றைய ஆப்பிரிக்கா, கடகத் திருப்பத்திற்கு தெற்கில் உள்ள இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்க்டிக்கா, மடகஸ்கார், அரேபியா ஆகிய பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப்பூமியின் வரைபடம் 250 மில்லியன் வருடங்களில் வேறு ஒன்றாக உருத்தெரியாமல் மாறத்தான் போகின்றது எங்கிறார்கள் விஞ்ஞானிகள் சந்திரன் பூமியில் இருந்து பிரிந்துபோன ஒரு பகுதிதான் எங்கிறார்கள் விஞ்ஞானிகள் சந்திரத்தரையில் உள்ள் ஆக்ஸிஜன் மற்றும் டைட்டேனியத்தின் அளவும் பூமியில் காணப்படும் அளவும் அண்ணளவாக ஒறேமாதிரியாக அமைந்திருப்பதாக கூறுகின்றார்கள் 4.36 பில்லியன் வருடங்களுக்கு முன் நிலவு பூமியுடன் இணைந்திருந்து பெருவெடிப்பின் பின் பிரிந்திருக்கலாம் எங்கிறார்கள் அவர்கள் புவியின் பெரும்பாலான பகுதி பகல் நேரத்திலும் இருளாகத்தான் காணப்படுகின்றது எமது பூமியில் 71 விழுக்காடான பகுதியில் கடல் நீரே காணப்படுகின்றது ஆனால் கடல் நீரில் 650 அடி ஆழத்திற்கு மேல் சூரிய ஒளியால் செல்லமுடியாது எனவே பெரும்பாலான புவியின் பகுதிபகல் நேரத்திலும் இருளாகவே காணப்படும் https://tamilinfofacts.blogspot.com/2020/04/scary-yet-beautiful-facts-about-space.html
 2. வில் றோமன் சான்ஸ்பிரான்ஸிஸ்கோ பயோடெக் கம்பெனியான ஜினிஸிஸ்சில் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் அல்ஸிமேர்ஸ் நோயைக்குணப்படுத்தக்கூடிய வைரல் பேஸ் மருந்து ஒன்றை அவர்கள் கண்டுபிடிக்கின்றார்கள் ,இவர்கள் ALZ-112 என்ற பெயரைக்கொண்ட இந்த மருந்தை பிரைட் ஐ என்ற பெயரைக்கொண்ட சிம்பான்சி குரங்கு ஒன்றில் பரிசோதனை செய்துபார்க்கிறார்க்கின்றார்கள், இந்த மருந்து வெற்றியளித்தால் அடுத்ததாக மனிதர்கள் மீது இந்த மருந்தை பரிசோதனைசெய்வதுதான் இவர்களது திட்டம் இவர்கள் எதிர்பார்த்ததுபோலவே பிரைட் ஐ என்ற குரங்கின் அறிவுத்திறமை அபரிமிதமாக வளர்ச்சியடைகின்றது ,தன் திட்டத்தில் வெற்றி அடைந்துவிட்டதாக கருதிய வில் றோமன் மற்ற விஞ்ஞானிகளின் முன் இதை பிறசண்டேசன் செய்யமுற்படும்போது பிரைட் ஐ கூண்டைவிட்டு வெளியே தப்பித்து தன் முன்னால் இருப்பவர்களை தாக்க ஆரம்பிக்கின்றது வேறுவழியில்லாமல் பிரைட் ஐயை சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள் காவலர்கள் இவற்றால் கடுப்பாகிய கன்பனியின் பாஸ் இந்த திட்டத்தை நிரந்தரமாக மூடிவிடுகின்றார்.குரங்கிற்கு என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக அதன் கூட்டினருகே வரும் வில்றோமனுக்கு பிரைட் ஐ ஏன் அவ்வாறு முரட்டுத்தனமாக நடந்துகொண்டது என்பதற்கான காரணம்புரிகின்றது பிரைட் ஐ ஒரு குரங்கை பெற்றெடுத்திருந்தது அந்தவலியில்தான் அது அவ்வாறு முரட்டுத்தனமாக நடந்துகொண்டது.அந்தக்குரங்கை தானே வளர்க்கவேண்டுமென்று முடிவுசெய்த பில் றோமன் குரங்கை வீட்டிற்கு கொண்டுவருகின்றார் குரங்கிற்கு சீசர் என்றுபெயரும் இடுகின்றார்.இன்னொரு அதிர்ச்சிகரமானவிடயமும் சீசரின் கண்களைப்பார்க்கும்போது வில் றோமனுக்கு தெரியவருகின்றது.பிரைட் ஐயிடமிருந்து அதன் புத்திசாலித்தனமும் சீசருக்கு கடத்தப்பட்டிருக்கின்றது என்பதுதான் அது. அதோடு தான் கண்டுபிடித்த ALZ-112 என்ற மருந்தை டெமென்ஸியாவால் பாதிக்கப்பட்ட தன் தந்தைக்கு ஊசிமூலம் ஏற்றுகிறார் அது அவரை மீண்டும் பழைய நிலைக்கு மீட்கின்றது 3 வருடங்களின் பின் சீசர் மெல்லமெல்ல பலவிடயங்களை கற்றுக்கொள்கின்றது,வில்றோமன் சீசரை ரெட்வூட் பார்க்கில் உள்ள காட்டிற்கு அழைத்துச்செல்கின்றார் அங்கே சீசர் தன்னைப்போன்ற குரங்குகள் அடைக்கப்பட்டிருப்பதையும் விலங்குகளை மனிதர்கள் கழுத்தில் பட்டியைக்கட்டி அழைத்துச்செல்வதையும் பார்க்கின்றது சீசருக்கு தான் ஒரு அடிமையாக நடாத்தப்படுவதுபோல் உணர்கின்றது தான் ஒரு செல்லப்பிராணியா என வில் றோமனிடம் கேள்விகேட்க ஆரம்பிக்கின்றது சீசர் இங்குதான் பல விடயங்கள் சீசருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கின்றன தான் யார் என சீசர் வில்றொமனிடம் கேட்டு அறிந்துகொள்கின்றது,நாளாக நாளாக ALZ-112 என்ற மருந்து வில்றோமனின் உடலில் சரியாகவேலைசெய்யாமல்போக ஆரம்பிக்கின்றது அயலவர் ஒருவரிடமிருந்து வில்லின் தந்தையை பாதுகாக்கமுயற்சிசெய்த சீசர் அயலவரை கடித்துவிடுகின்றது இதனால் சீசர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றது எவளவு முயற்சிசெய்தும் வில் றோமனினால் சீசரை வெளியில் கொண்டுவரமுடியவில்லை.சீசர் புதியசிறையில் டோஜ் லண்டன் என்ற இளைஞனால் மிகவும் துன்புறுத்தப்படுகின்றது.அதோடு மற்றவிலங்குகள் துன்புறுத்தப்படுவதையும் பார்க்கின்றது. அங்கே சீசருக்கு மொரீஸ் என்ற பெயருடைய ஓரங்குட்டானின் நட்புக்கிடைக்கின்றது.சீசர் மற்றகுரங்குகளைவிட அடிபுத்திசாலியாகையால் எப்படி பூட்டைத்திறப்பது என்பதையும் அறிந்துகொள்கின்றது.எல்லா விலங்குக்கூட்டத்திற்கும் ஆல்பாவாக ஒரு விலங்கு இருக்கும் அந்தவிலங்கின் கீழ்தான் மிகுதிவிலங்குகள் அனைத்தும் கட்டுப்படும் சீசர் இருக்கும் சிறைக்குள் ராக்கட் என்ற பெயருடைய பெரியசிம்பன்சி ஒன்றுதான் ஆல்பா இடத்தில் இருந்தது ஆனால் சீசர் அதை சமாளித்து அதன் இடத்திற்கு வந்துவிடுகின்றது , சிறையில் இருக்கும் விலங்குகளை அடைக்கப்பட்ட ஒரு பொதுவெளியில் சிலமணி நேரம் விடுவார்கள் அந்த இடத்திற்கு சிறைக்கதவைதிறந்து சீசர் சென்றுவிடுகின்றது. ஜினிஸிஸ் கம்பெனியின் லாப்பில் தலைவர் ஜேகொப் ALZ-113 என்ற வாயு நிலை மருந்தை கண்டுபிடிக்கிறார் இது ஆரம்பத்தில் சீசரின் தாய்க்கு வழங்கப்பட்ட மருந்தைவிட அதிக வீரியமானது,இதைப்பயன்படுத்தி தம் அடுத்த கட்ட பரிசோதனைகளை நடத்த குழு தீர்மானிக்கின்றது இதற்காக கோபா எனப்படும் குரங்கை பயன்படுத்துகின்றார்கள் பரிசோதனைகளால் கோபா மிகவும் கொடூரமாக கடந்தகாலத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும் குழுவினர் அந்தக்குரங்கை பயன்படுத்துகின்றார்கள் வில்றோமன் அந்த மருந்தை தன் தந்தைக்கு வழங்குவதற்கு கொண்டுவருகிறார் ஆனால் அதை பயன்படுத்த தந்தை மறுத்துவிடுகிறார் அதோடு அடுத்த நாளே அவர் இறந்தும் விடுகின்றார்.இதேவேளை இந்தமருந்தை கோபா என்ற குரங்கில் பரிசோதனைசெய்யும்போது அங்கிருந்த இன்னொரு விஞ்ஞானியான பிராங்கிலின் ALZ-113 வாயுவை தவறுதலாக சுவாசிக்க நேருகின்றது இதனால் அவர் வினோதமான ஒரு நோயால் பாதிக்கப்படுகின்றார் அதோடு பிராங்கிலின் அயலவரான ஹன்ஸிகர் மீது தும்மிவிட அவரின் மீது இரத்தம் பீறிடுகின்றடு அடுத்த நாளே பிராங்கிளின் தனது வீட்டில் இறந்துகிடக்கின்றார் .வில்றோமன் முயற்சியால் சீசரை வெளியில்கொண்டுவர சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சீசரிடம் செல்ல சீசர் வெளியே வர மறுத்துவிடுகின்றது தன்னை விடுவித்து மீண்டும் அடிமையாக இருக்க சீசர் விரும்பவில்லை அதோடு சீசர் தன் இனத்தின் விடுதலை பற்றி சிந்திக்க ஆரம்பித்திருந்தது அன்றிரவே சீசர் சிறையைவிட்டு தப்பித்து வில் றோமனின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து ALZ-113 நின் வாயுக்குடுவைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் சிறைக்க்கு வந்துவிடுகின்றது வாயுகுடுவைகளை உடைத்து அங்கிருக்கும் ஏனைய குரங்குகள் மீது எறிகின்றது இதன் மூலம் தன்னைப்போல் ஏனைய குரங்குகளின் மூளையும் விருத்தியடையும் என சீசர் அறிந்திருந்தது அடுத்த நாள் டொட்ஜ் சீசர் தான் சிறையைத்திறக்காமலேயே பொதுவெளியில் இருப்பதை பார்த்துவிட்டு சீசரை அடித்து சிறைக்கு அனுப்ப முயற்சிசெய்கிறார் அப்போதுதான் அதிர்ச்சிகரமான அந்த சம்பவம் நடைபெறுகிறது கோபமடைந்த சீசர் அவனின் கைகளைப்பிடித்து முதன் முதலில் உரத்த குரலில் பேசுகின்றது நோ நோ என்று சீசர் கத்துகின்றது.அதோடு நாங்கு கால்களில் நடக்கும் சீசர் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பிக்கின்றது ஏனைய குரங்குகள் அனைத்தும் இதனால் மிரண்டுவிடுகின்றன. உடனடியா அந்த சிறையில் இருக்கும் அத்தனை குரங்குகளையும் விடுவிக்க முயற்செய்செய்கின்றது சீசர் அந்தமுயற்சியில் டொட்ஜெட் தவறுதலாக இறந்துவிடுகின்றார் சிறையைவிட்டுவெளியேறிய குரங்குகள் சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் சூவில் அடைக்கப்பட்டிருக்கும் அத்தனை குரங்குகளையும் விடுதலைசெய்கின்றன ஜீன்ஸிஸில் பரிசோதனைக்காக அடைக்கப்பட்டிருக்கிம் அத்தனை குரங்குகளையும் சீசர் குரங்குக்கூட்டங்களுடன் சென்றுவிடுதலைசெய்கின்றது அதோடு கோபாவையும் சீசர் விடுதலைசெய்கின்றதுtamilinfofacts ரெட்வூட் காட்டிற்கு அனைத்துக்குரங்குகளும் செல்ல ஆரம்பிக்கின்றன ஆனால் அவை கோல்டன் கேட் என்ற பாலத்தைத்தாண்டித்தான் செல்லவேண்டியிருந்தது அந்தப்பாலத்தைபோலீசார் தடைசெய்கின்றார்கள் அங்கே குரங்குகளுக்கும் போலீஸிற்குமிடையில் மோதல் நடைபெறுகின்றது பக்ச் என்ற மிகப்பெரிய குரங்கு நடந்தபோரில் ஏனைய குரங்குகளைக்காப்பாற்றுவதற்காக தன்னையே தியாகம் செய்கின்றது ஜேகோப்பின் ஹலிஹாப்டர் வீழ்த்தப்படுகின்றது பாலத்தின் விளிம்பில் தொங்கிக்கொண்டிருக்கும் ஹெலிஹாப்டரினுள் ஜேகோப் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கிறார் கோபா பாலத்தின் விளிம்பில் நின்றுகொண்டு ஜேகோப்பை பார்த்துவிட்டு காலால் உதைந்து ஹெலிஹாப்டரை வீழ்த்திவிடுகின்றது ஒருவழியாக குரங்குகள் காட்டை அடைந்துவிடுகின்றன வில்றோமன் அதே காட்டுக்கு சீசரைத்தேடி ஓடுகிறார் அங்கே சீசரிடம் வில் வீட்டுக்கு வந்துவிடும்படி கெஞ்சுகிறார் ஆனால் சீசர் வில்லைக்கட்டிப்பிடித்து சீசர் இஸ் ஹோம் என்று கூறுகிறது சீசர் தன் கூட்டத்துடன் இணைந்துவிட்டது என்பதைப்புரிந்துகொண்ட வில் அங்கிருந்து வெளியேறுகிறார் படத்தின் முடிவில் ALZ-113 வைரஸால் பாதிக்கப்பட்ட ஹன்ஸிகர் சான்ஸ்பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்திற்கு செல்கின்றார் அங்கிருந்து பாரிஸ் செல்கின்றார் அவரினூடாக ALZ-113 உலகின் ஏனைய இடங்களுக்கு எவ்வாறு பரவுகின்றது என்று காண்பிக்கின்றார்கள்
 3. ஆனால் இந்த செய்தி ஆரம்பத்தில் வெளியாகியதும் தாவடியில் கொரோனாவால் பாதிப்படைந்தவரால்தான் பாதருக்கே பரவியது என்று விட்டாங்களே ஒரு பீலா அடேய்
 4. 1974 நவம்பர் 13 நியூயோர்கின் லாங் ஐலண்டில் அமிட்டிவில் என்ற நகரத்தில் அதிகாலை திடீர் என துப்பாக்கிவேட்டுச்சத்தங்கள் கேட்டன,ஒரு வீட்டில் இருந்த இளைஞன் திடீரென அதிகாலை எழுந்துவீட்டில் உள்ளவர்களை எல்லாம் துப்பாக்கி எடுத்து கொரூரமாக சுட்டு கொலை செய்துவிட்டான். அதன் பின் அவன் போலீஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டான். 6 கொலைகள் நடைபெற்றுமுடிந்தன தன் தாய் தந்தை சகோதரக்ள் சகோதரிகள் என அனைவரையும் அவன் சுட்டுக்கொன்றிருந்தான்,இந்த சம்பவங்களால் அந்த வீட்டை யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை இருந்தும் மிக குறைவான விலைக்கு விற்கப்பட்ட அந்த வீட்டிற்கு அடுத்து குடி வந்தவர் தவறுதலாக எடுத்த ஒரு புகைப்படம் தான் இது ,பல ஆண்டுகளாக வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் பின்னால் இருக்கும் கதை என்ன? இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பேயா? வாருங்கள் முழுமையாக காணலாம். அமிட்டிவில் ஹாலிவுட்டில் பல்வேறு பேய் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த பேய்ப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படியாகக் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அமிட்டி வில் ஹாரர். இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. உண்மையிலேயே அந்த வீட்டில் என்ன நடந்ததோ அது அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகளை விடக் கொடூரமானதாகவும் திகில் நிறைந்ததாகவும் இருந்தது. இதற்கு முன்னர் இப்படி ஒரு சம்பவத்தையே கேள்விப்படாத பலருக்கு இந்த சம்பவம் தெரிந்ததும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியமைதான் இதைத் திரைப்படமாகவும் எடுக்கக் காரணமாக அமைந்ததது. இந்த காணொளியில் நாம் அமிட்டிவில் பேய் வீடு குறித்தும் அங்கு நடந்தவற்றையும் தற்போது அந்த வீட்டில் நடப்பவைகளையும் பார்க்கலாம் வாருங்கள். அழகான வீடு அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் அமிட்டிவில் இங்குள்ள ஒரு வீட்டில் தான் இந்த விஷயம் நடந்தது. இந்த வீடு வழக்கம் போல மற்ற வீடுகளைப் போலத் தான் இருந்தது. இதை வீடு என்பதை விடப் பங்களா என்றே சொல்லலாம். இந்த வீட்டில் சன்ரூம், பேக் பேட்டியோ, டெக், போட்ஹவுஸ் என்ற சகல வசதிகளும் இருந்தன. பொதுவாக அமெரிக்காவில் இந்த வசதிகள் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். 1970 களில் இந்த வீட்டில் டிஃபோ என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. அவர் வீட்டில் அவர், அவர் மனைவி மற்றும் அவரின் 5 குழந்தைகளும் வசித்து வந்தனர். இந்நிலையில் நவம்பர் மாதம் ஒருநாள் அதிகாலை 3.15 மணிக்கு இந்த வீட்டில் ஒரு சம்பவம் நடக்கிறது டிஃபோவின் 23 வயது மகன் ரொனால்டு டிஃபோ என்பவர் அதிகாலை 3.15 மணிக்கு எழுந்து வீட்டிலிருந்த 0.35மிமீ துப்பாக்கியை எடுத்து வீட்டில் உள்ள மற்றவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குச் சென்று அங்குத் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வரிசையாகச் சுட்டுக் கொலை செய்தார். அவர் தனது தாய், தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேரைக் கொரூரமாக கொலை செய்கிறான் இவன் கைது இந்த தகவல் அதிகாலை போலீசாருக்கு தெரிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த ரொனால்டை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது அவன் கூறியபதில் அவ்ர்களை திக்குமுக்காடவைத்தது தன்னை ஏதோ ஒரு குரல் அப்படிச்செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும். அது தன்னை மூளைச் சலவை செய்து அப்படிச் செய்ய வைத்துவிட்டதாகவும் வாக்கு மூலம் அளித்தான் அவன். ஆனால் போலீசார் ஆரம்பத்தில் இவன் தண்டனையிலிருந்து தப்பிக்க ஏதோ பொய் கூறுகிறான் என்றுதான் நினைத்தார்கள் பாழடைந்த வீடு 6 பேர் கொலைசெய்யப்பட்ட வீடு என்பதால் அந்த பகுதியில்உள்ள மக்கள் அந்த வீட்டை ஒரு பயங்கரமான வீடாகவே பார்த்தனர். வீட்டில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர். ரொனால்டும் சிறைக்குச் சென்று விட்டார். அந்த வீட்டில் யாருமே வசிக்க வில்லை. வீடும் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்பட்டது. கோட்டில் ரொனால்டு மீது நடந்த வழக்கில் அவருக்கு 6 ஆயுள் தண்டனை கிடைத்தது. இவர் தற்போது நியூயார்க்கில் உள்ள ஒரு சிறையில் இன்றும் கைதியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் இவர் சிறைக்குச் சென்றதும் வீடு அந்த வீடு விற்பனைக்கு வந்தது. ஆனால் யாரும் இந்த வீட்டை வாங்க முன்வரவில்லை அந்த வீட்டில் அமானுஷ்யமான சக்திலக்ள் இருப்பதாக பலர் நம்பியமையே இதற்கு காரணம்,மிகக்குறை1975ம் ஆண்டு ஜார்ஜ் லட்ஸ் என்பவர் இந்த வீட்டை விலைக்கு வாங்கினார். அதனால் இந்த வீட்டின் மதிப்பு மிகவும் குறைந்துகொண்டே சென்றது கிட்டத்தட்ட இவ்வளவு பெரிய பங்களாவை வெறும் 80 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஜார்ஜ் லட்ஸ் என்பவர் வாங்கினார். அவர் தனது மனைவி கேத்தி, மற்றும் மகன்கள் டேனியல் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோருடன் அந்த வீட்டிற்குக் குடி புகுந்தார். குறைந்த விலையில் வீடு வாங்கிவிட்டு செட்டில் ஆகிவிட்டதாக நினைத்து லட்ஸ் ஆரம்பத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தார். ஆனால் அந்த சந்தோஷம் வெகு நாட்களுக்கு நிலைக்கவில்லை. வீட்டிற்குள் அவர்கள் குடிவந்ததும் ஏதோ ஒரு வித அமானுஷ்யத்தை உணர துவங்கினர். அவர்களை யாரோ கண்காணிப்பது போலவும், அவர்களைச் சுற்றி யாரோ ஒருவர் இருப்பது போலவும் அவர்கள் உணர்ந்தனர். இது மட்டுமல்ல தினம் தினம் ஏதோ ஒரு விடயம் வித்தியாசமாக நடக்கத் துவங்கியுள்ளது. samayam tamil லட்ஸ் அவர் வீட்டின் சுவர்களிலிருந்து பிசுபிசுப்பான ஏதோ ஒரு விஷயம் வெளியேறுவதைக் கவனித்துள்ளார். அது என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அதன்பின் அவர் வீட்டின் அருகே உள்ள பன்று யாரும் இல்லாத வீட்டை உற்றுப் பார்த்து மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தது. அதன் கண்களில் சிவப்பு நிறங்களில் ஏதோ தெரிந்துள்ளது. ஆனால் இவர் பார்க்கும் போது வீட்டிற்குள் எதுவுமில்லை.அமெரிக்காவை உலுக்கிய திகில் சம்பவம் இதை விட உச்சகட்டமாக லட்ஸ் இரவு தூங்கும் போது ஒருமுறை அதிகாலை நேரத்தில் விழித்து எழுந்துள்ளார். அப்பொழுது அருகில் படுத்திருந்த அவரது மனைவி படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே அந்தரத்தில் மிதந்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் இவர் பதறி எழுந்துள்ளார். உடனே மனைவி கட்டிலில் விழுந்துவிட்டார் விடயம் இதோடு முடிந்துவிடவில்லை
 5. நாம் வாழும் பூமியானது தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பதும், இதனால் தான் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த பூமி திடீரென சுற்றுவதை நிறுத்தினால் என்னவாகும் என்பது பற்றி என்றாவது கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா? ஒருவேளை அப்படி நடந்தல் என்னவாகும் என்பது பற்றி த்தான் பார்க்கப்போகின்றோம். பூமி சுற்றுவது சடுதியாக நிற்குமானால் நாம் உடனடியாக தூக்கி எறியப்படுவோம் பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது இவ்வாறு சுற்றும் பூமியானது திடீரென்று தனது சுழற்சியை நிறுத்தினால், பூமியில் நிலையாக பிணைக்கப்படாத அத்தனை உயிரனங்கள் மற்றும் பிற பொருட்கள் அத்தனையும் மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் தூக்கி எறியப்படும். எப்படி இருக்கும்? அதாவது ஒரு நிமிடத்திற்கு 28 கிலோ மீட்டர் வேகத்திலும், ஒரு வினாடிக்கு சுமார் அரை கிலோ மீட்டர் வேகத்திலும் நம்மை ஒரு பொருளின் மீது வீசி எறிந்தால் அதன் விளைவு எவ்வளவு மோசமானதாக இருக்கும் என சற்று யோசித்துப் பாருங்களேன்..! பெரிய சுனாமி..! கடல் நீரும் பூமியுடன் முழுமையாக பிணைக்கப்பட்டிருக்கவில்லை...! எனவே பூமி திடிரென தனது சுழற்சியை நிறுத்துவதால் உண்டாகும் விளைவானது ஒரு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தும். இது சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் 28 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு மிகப்பெரிய தீவை கூட ஒரு நிமிடத்தில் கடலுக்குள் மூழ்க செய்துவிடும் அளவிற்கு வேகமாகவும், மிக பெரியதாகவும் இருக்கும். இதனால் நிலத்தில் வாழும் ஒரு உயிர் கூட மிஞ்ச முடியாது...! மிக பெரிய நாள்..! பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்திய போதிலும் சூரியனை சுற்றுவது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். எனவே வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் முற்றிலுமாக இருளிலும், அடுத்த ஆறு மாதங்கள் முற்றிலுமாக பகலாகவும் தான் இருக்கும். இதனால் ஒரு வருடத்தில் உள்ள 367 நாட்களும் ஒன்று சேர்ந்து, 8760 மணி நேரம் கொண்ட ஒரே ஒரு நாளாக தான் இருக்கும். மிகப்பெரிய அழிவு தொடந்து ஆறு மாதங்களாக சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில், வெப்பநிலை நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான வெப்பநிலை இருக்கும். இதனால் தொடந்து ஆறு மாதங்கள் வெயிலில் இருக்கும் பகுதிகள் வெப்பநிலை அதிகரித்து வறண்ட பாலை வனமாகவும், தொடந்து ஆறு மாதங்கள் இருளில் இருக்கும் பகுதிகள் பனிப்பொழிவு அதிகரித்து பனிப் பிரசேதங்களாகவும் தான் இருக்கும். வினோதமான நிகழ்வு இந்த சூழ்நிலை மாற்றங்களை தாங்க முடியாமல் நுண்ணுயிரிகள் கூட முற்றிலுமாக அழிந்துவிடும். சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்கு பதிலாக, மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும். அதுமட்டுமின்றி இந்த வினோதமான நிகழ்வானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.மைய நீக்கவிசை இல்லாத காரணத்தினால் சூரியனை நோக்கிய பகுதியை நோக்கி சூரியனின் ஈர்ப்புவிசை காரணமாக கடல் நீர் சூரியனின் பக்கம் செல்லும் ஆனால் பாறைகளே உருகுமளவிற்கு காணப்படும் மிகப்பெரும் வெப்பம் காரணமாக கடல் நீர் முழுவதும் ஆவியாகி பூமி வறண்ட ஒரு பாறையாக மாற்றமடையும்.கடல் நீர் ஆவியாகியதும் மிக வறண்ட மிகப்பெரிய மலைகள் தோன்றும் இவையெல்லாம் கடலின் அடியில் மூழ்கியிருந்த பள்ளத்தாக்குகள்தான் மலைகளாக மாற்றமடையும்.வெப்பமான பகுதியில் அதிக காற்றுவீசும் திடிரென சுழற்சியை நிறுத்துவதினால் வழிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தினால் வீசும் காற்றின் வேகமானது ஒரு மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பினை விட பல மடங்கு வலிமையானதாக இருக்கும். இதனால் மிகப்பெரிய கட்டிடங்கள் கூட இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போகும். முற்றிலும் புவியின் மத்தியபகுதி வட தென் பகுதிகளை சற்று பருமனாக காணப்படும் புவி மிகவேகமாக சுற்றுவதன் காரணமாக ஏற்படும் மைய நீக்கவிசையினாலேயே கடல் நீர் பூமியின் மத்திய ரேகைப்பகுதில் அதிகமாக சேர்ந்திருக்கின்றது.பூமி சுழல்வது நின்றுவிட்டால் மத்தியரேகையில் அதிக அளவில் காணப்படும் கடல் நீர் பூமியின் துருவப்பகுதியை நோக்கி கிலோமீட்டர் உயரமான சுனாமியலைகளாக சென்றடையும்.எதிரில் இருக்கும் அனைத்தும் துடைத்தெறியப்படும் அழிந்துவிடும் பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்திய அடுத்த நொடியே, புவியின் காந்தப்புலம் பாதிப்படையும் இது இல்லாமலேயே போகலாம் ,புவிக்காந்தப்புலம் உருவாக்கம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படவில்லை பூமியின் வெளியோடு ஒரு வேகத்திலும் பூமியின் மையப்பகுதி வேறு வேகத்துடனும் சுழல்வதாலேயே காந்தப்புலம் உருவாவதாக நம்பப்படுகின்றது எனவே பூமி சுற்றுவது நின்றுவிட்டால் காந்தப்புலம் இல்லாமலேயே போய்விடலாம் . இதனால் சூரியனிடம் இருந்து வரும் புற ஊத கதிர்களினால் பூமியில் இருக்கும் மீத உயிர்களும் முற்றிலுமாக அழிந்துவிடும்...! தாவரங்கள் அனைத்தும் அழிந்துவிடும் ஒளித்தொகுப்பு நடைபெறாது உயிர்களுக்கு உணவே இருக்காது,புவியின் காற்றுமண்டலம் பாதிப்படையும் எமக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜனின் அளவு மாற்றமடையும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே இந்த பூமியானது நமக்கு தெரிந்த இந்த நீர், நிலம், காற்று மட்டும் அல்லாமல், ஈர்ப்பு விசை, காந்த மண்டலம், பூமியின் சுழற்சி ஆகிவற்றை கொண்டு இயற்கையாகவே நம்மை பாதுகாத்து வருகிறது என்பதே உண்மை...!! புவியின் சுழற்சி சடுதியாக நிறுத்தப்பட எந்த சாத்தியமும் இல்லை ஆனால் சுழற்சி வேண்டுமானால் படிப்படியாக நிகழலாம் ஆனால் இதற்கும் மில்லியன் கணக்கான வருடங்கள் எடுக்கும் எனவே யாரும் பயப்படத்தேவையில்லை.tamil info facts
 6. ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற சக நிலவுப் பயணியான அல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் அனைத்தும் அதிர்ச்சி வகையைச் சேர்ந்தவை. சந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஆம்ஸ்ட்ராங், அல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் சந்திரனை விட்டுப் புறப்பட்டுப் பூமியை நோக்கி விண்கலத்தில் வந்து கொண்டிருக்கையில், அல்ட்ரின் கலத்துக்கு வெளியே விண்வெளியில் ஒரு வினோதமான பொருளைக் கண்டார். அல்ட்ரின் தனது படப்பிடிப்புக் கருவியினால் விண்கலத்தின் ஜன்னலினூடாக வெளியே படம் பிடித்துக் கொண்டு வரும் போது, திடீரென இன்னுமொரு விண்கலம் போன்ற ஒன்றைக் கண்டார். சூரிய ஒளியில் தகதகத்துக் கொண்டு, நீண்ட குழாய் வடிவ விண்கலம் ஒன்று இவர்களின் விண்கலத்தை அவதானித்தபடியே தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்து போனார். உடனடியாகத் தன் சக பயணிகளான ஆம்ஸ்ட்ராங்கிடமும், காலின்ஸிடமும் அதைக் காட்டினார். மூவரும் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றார்கள். அத்துடன் பயமும் அவர்களைப் பற்றிக் கொண்டது. விண்கலங்களில் செல்பவர்கள் தங்களுக்குள் உரையாடும் போதும், நாசாக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரையாடும் போதும் ஒரு விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி. இது போன்ற சிக்கலான சமயங்களில் வெளிப்படையாக அவர்கள் தங்களுக்குள் உரையாடிவிட முடியாது. காரணம் இந்த உரையாடல்களை ரஷ்யா உட்படப் பலரும் கிரகித்துக் கொள்ளலாம். எனவே பேசுபவை அனைத்தும் அவதானமாகப் பேசப்பட வேண்டும். அத்துடன் இது போன்ற சிக்கலான சமயங்களில் சங்கேதமான மொழியில் பேசவேண்டும். அல்லது மௌனமாக இருந்துவிட வேண்டும். இந்தச் சமயத்தில் அல்ட்ரின், ஹூஸ்டன் கட்டுப்பாட்டு நிலையத்திடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "ஹூஸ்டன், S4B இப்போது எங்கே இருக்கிறது? (‘where was the S4B?)" என்பதே அந்தக் கேள்வி. இரத்தினச் சுருக்கமாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அது. அதற்கு "6000 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் அது இருக்கிறது" என்னும் பதில் ஹூஸ்டனிடமிருந்து கிடைத்தது. 'S4B' என்பது இவர்கள் பயணம் செய்த ராக்கெட்டிலிருந்து பிரிந்து விழுந்த பகுதியாகும். 'அப்படி வெடித்துப் பிரிந்து போன பகுதியைத்தான், தாங்கள் ஜன்னலினூடாகக் காண்கிறோமோ?' என்ற சந்தேகம் அல்ட்ரினுக்குத் தோன்றியதால், அதை நிவர்த்தி செய்வதற்காகவே அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார். ஆனால், அந்தப் பிரிந்து விழுந்த பகுதியைத் தாங்கள் காணவில்லை என்ற விடயம் கட்டுப்பாட்டு நிலையத்தின் பதிலால் மூவருக்கும் நிச்சயமாகத் தெரிந்து போனது. காலின்ஸ், தொலைநோக்கியால் அந்தப் பொருளைப் பார்த்த போது, அது வேறு வடிவத்தில் இருந்திருக்கிறது. அதனால், உடனடியாக மூவரும், விழித்திருந்தால் அது பற்றிப் பேச வேண்டியிருக்கும், பேசினால் அவை பதிவு செய்யப்படும் என்பதால் மூவரும் தூங்கச் சென்று விட்டார்கள். இந்தச் சம்பவத்தில், அந்த மூவருமே அது ஒரு UFO (Unidentified Flying Object) தான் என்ற முடிவுக்கே வந்திருந்தனர். அல்ட்ரின் எடுத்த படப்பிடிப்புக் கருவியில் அது பதிவாகியுமிருந்தது. இந்தச் சம்பவத்தை பல பேட்டிகளில் தெளிவாக அல்ட்ரின் விவரித்துள்ளார். சமீபத்தில் லாரி கிங் (Larry King) அவர்களுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் மட்டும், தான் பார்த்தது அந்த உடைந்த பகுதியாக இருக்கலாம் எனக் கூறினார். சந்திரனில் தாங்கள் இருவரும் மட்டுமல்லாமல், வேறு யாரோ கூட இருப்பது போல உணர்ந்ததாகவும் அல்ட்ரின் தனது பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். 'ஏலியன்கள் நிச்சயம் இருக்கின்றன' என்று அவர் சொல்வதற்குத் தயங்கியதேயில்லை. அல்ட்ரினைப் போல வெளிப்படையாக ஆம்ஸ்ட்ராங் எப்போதும் பேசியதில்லை. ஆனால், தான் கண்ட அனைத்தையும் ஆம்ஸ்ட்ராங்கும் கண்டார் என்பதை அல்ட்ரின் உறுதிப்படுத்தினார். 'ஆம்ஸ்ட்ராங் இரண்டு பறக்கும் தட்டுகளைச் சந்திரனில் கண்டதாகவும், அவை தங்களை எப்போதும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும்' தன்னிடம் கூறியதாக, நாசாவில் முக்கிய பதவி வகித்த 'மௌரிஸ் ஷட்டலின்' (Maurice Chatelain) என்பவர் 1979ம் ஆண்டுகளில் பேட்டியளித்தார். ஆம்ஸ்ட்ராங். 'இரண்டு பறக்கும் தட்டுகள் தங்களை அவதானிப்பதாகச் சொன்னதை' ரஷ்யாவும் கேட்டுக் கொண்டிருந்ததாகப் பின்னர் ரஷ்ய விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது. இவையெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என்ன முடிவுக்கு நாம் வருவதென்றே தெரியவில்லை. இத்துடன் விடயம் முடிந்து விடவில்லை. 'அப்போலோ 14' விண்கலத்தில் சந்திரனுக்குப் பயணம் செய்த விண்வெளி வீரரான 'எட்கார் மிட்செல்' (Edgar Mitchell) ஏலியன்கள் இருக்கின்றன என்று அடித்துச் சொல்கிறார். சந்திரனில் அதிக நேரம் 'சந்திர நடை' (Moon Walk) நடந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் இவர். 9 மணி 17 நிமிடங்கள் இவர் மொத்தமாக சந்திரனில் நடந்திருக்கிறார். அந்த அளவுக்குச் சாதனை செய்தவரே ஏலியன்கள் இருக்கின்றன என்று அடித்துக்கூறியிருக்கின்றார் ஏலியன் சம்பவங்கள் இவர்களுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. உச்சக்கட்டமாக 'அப்போலோ 17' சென்றவர்கள் சந்திரனில் இறங்கி அங்கு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, வானத்தில் திடீரென ஒளியை உமிழ்ந்தபடி மிகை வேகத்துடன், ஒரு பொருள் தங்களைக் கடந்து செல்வதை அவதானித்திருக்கிறார்கள். முதலில் பார்த்தவர், பெரும் திகைப்புடன், "அங்கே பார்! அந்த ஒளி என்ன?" என்று அடுத்தவரிடம் அலறுவது படக்காட்சிகளாகப் பதிவாகியுள்ளது. 'அப்போலோ 17' விண்கலத்தில் சென்றவர்கள் பல சம்பவங்களை அவதானித்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிய வருகிறது. அதே 'அப்போலோ 17' இல் சென்றவர்கள் எடுத்ததாகச் சொல்லும் படம்தான் இப்போது பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது. ஏன் மனிதன் மீண்டும் நிலவுக்கு செல்லவில்லை மிரளவைக்கும் உண்மைகள்
 7. தற்போது கொரோனாவால் முழு உலகமே பாதிக்கப்பட்டு பயந்து அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.சைனாவின் வுகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவிக்கொண்டிருக்கிறது.அரசாங்கம் முழு மூச்சுடன் வைரஸ் மேலும் பரவுதலை தடுக்கமுயன்றுகொண்டிருக்கிறது இதற்கு நாம் ஒத்துளைப்புதரும்வகையில் எம்மை வீடுகளில் தனிமைப்படுத்திவைத்திருப்பது மிக அவசியம் ஏனென்றால் இந்த வைரஸ் எம்மூடாகவே அடுத்தவர்களுக்கு பரவும்தன்மையைக்கொண்டது எமது அலட்சியப்போக்கால் எம் வீடு மாத்திரமல்ல ஒரு ஊரே இன் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவே இதுபோன்ற அவசரகால நிலமையின்போது சமயவழிபாடுகள் போன்றவற்றை வீட்டில் இருந்தே நாம் கடற்பிடிப்பதும் பொது இடங்களில் கூடாமல் இருப்பதும் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அரசுக்கு நாம் உதவுவதும்தான் நாம் எமது நாட்டிற்குசெய்யும் கடமையாகும்.கொரோனா தொடர்பாக 1981இல் டீன் கூன்ஸ் என்பவரால் வெளியிடப்பட்ட தி ஐஸ் ஆப் டார்க்னெஸ் என்ற நாவலில் சைனாவில் இருந்து அமேரிக்க்கவிற்கு வந்த நபரினால் அமெரிக்காவில் ஒரு வைரஸ் பரப்பப்படுகின்றது அது சைனாவின் வுகான் மாகாணத்தில் இருக்கும் RDNA பரிசோதனைகூடத்தில் விஞ்ஞானிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற விடயங்களை உள்ளடக்கியதாக நாவலின் கதை செல்கின்றது ஆச்சரியப்படும்படியாக வைரஸிற்கு வுகான் 400 என்றும் கதாசிரியர் பெயர்சூட்டியிருந்தார் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விடயமென்னவென்றால் 1981 இல் எப்படி வுகானில் இருந்து இப்படி ஒரு வைரஸ் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் ஆட்டிப்படைக்கப்போகின்றது என்பதை அவர் எதிர்வுகூறினார் என்பதுதான்.ஆனால் விடயம் இதுதான் 7 ஆம் அறிவு திரைப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டபோது போதிதர்மன் ஒரு தெலுங்கர் என்றுதான் டப்செய்யப்பட்டது தமிழில் வெளியிடப்பட்டபோது தமிழன் என்று வெளியிடப்பட்டது இது ஒரு பிஸ்னஸ் தந்திரம் இதே போல் இந்த நாவல் ரஷ்யாவில் வெளியிடப்பட்டபோது ரஷ்யாவில் பிரபலமாக தொழிற்பட்ட உயிரியல் ஆய்வுகூடமான கொர்க்கி ஆய்வுகூடத்தில் இந்த வைரைஸை உருவாக்குகிறார்கள் என்பதாக நாவலின் கதை செல்லும் இதனால் ரஷ்ய னாவலில் கொர்க்கி 400 என வைரஸிற்கு பெயர் வைத்திருந்தார் கதாசிரியர் இதே நாவல் சைனாவில் வெளியிடப்பட்டபோது வுகான் 400 என பெயரிடப்பட்டிருந்தது எனவே இது ஒரு தற்செயலான நிகழ்வுதான் இப்போது உலக வரலாற்றில் உலகை புரட்டிப்போட்டு லட்சக்கணக்கான மக்களைக்கொன்ற கொடிய நோய்களைப்பற்றித்தான் பார்க்கப்போகின்றோம். பிளேக் நோய் இது கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவியது. கான்ஸ்டான்டிநோபிலைத் தலைநகராகக் கொண்டு, பைசான்டைன் பேரரசை ஆட்சி செய்த ரோமப்பேரரசரான ஜஸ்டினியன் காலத்தில் பரவிய அந்த பிளேக் நோய் (541-542 CE), இன்று 'ஜஸ்டினியன் பிளேக்' (Justinian Plague) என அழைக்கப்படுகின்றது. இது ஏறக்குறைய 30-50 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது. 14 ஆம் நூற்றாண்டில் (1346-1353) 'பிளாக் டெத்' (Black Death) என்ற பிளேக் நோய் எறத்தாழ 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களை காவு கொண்டது. இது ஐரோப்பிய மொத்த மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டிற்கும் (60%) மேலாகும். பின்னர் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மீண்டும் மீண்டும் இங்கும் அங்குமாக இந்நோய் உலகெங்கிலும் தோன்றி இருக்கின்றது. 'த கிரேட் லண்டன் பிளேக்' (The Great London Plague) கடைசியாக 1664-66 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் பரவியது. லண்டனில் ஏற்பட்ட 'மாபெரும் லண்டன் தீ'யினால் (The Great London Fire), (1666 செப்டம்பர் 2 லிருந்து 5 வரை) தலைநகரில் பிளேக் கட்டுக்குள் அடங்கியது. இந்தியாவிலும் 1896-1914 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட மலேரியா, காலரா, இன்புளூயன்சா மற்றும் பிளேக் போன்ற நோய்த் தொற்றுகளால் பம்பாயில் மட்டும் 1,83,984 மக்கள் இறந்தனர். பிளேக், கடைசியாக குஜராத் மாநிலத்தின் சூரத்தில், 1994 ஆம் ஆண்டில் பரவி 56 உயிர்களை பலி கொண்டது. தமிழ் Info facts
 8. எனக்கும் விடயம் தெரியாது வீதியால் சென்றுகொண்டிருக்கும்போது தற்செயலாகத்தான் நானும் பார்த்தேன்
 9. எல்ல நகரத்தில் இருந்து மிக அருகாமையில் இராவண எல நீர்வீழ்ச்சியும் இராவணனின் குகையும் காணப்படுகின்றது.தரையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் மேலே ஏறிச்செல்லவேண்டும்,ரிக்கட் விலை 50 ரூபா மட்டுமே,ஆனால் ஏற்றம் இலகுவானதல்ல இருந்தாலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அவளவு கடினமாக இருக்காது.இந்தக்குகையின் வரலாறு எனக்கு சரிவரத்தெரியாததால் வழியில் கடைபோட்டிருக்கும் ஒரு அம்மாவிடம்தான் வரலாற்றை கேட்டு அறிந்துகொள்ளமுடிந்தது எல்லவில்
 10. கண்டியில் இருந்து எல்ல செல்லும் புகையிரதப்பிரயாணம்தான் இலங்கையின் மிக அழகான புகையிரதப்பிரயாணம் என்று கூறப்படுகின்றது,சரி எப்படி இருக்கின்றது என பார்த்துவிடுவோம் என்று கண்டி புகையிரத நிலையத்துக்கு சென்றால் என் கெட்ட நேரம் ரிக்கட் விலை 3000 ரூபா,நானும் மனைவியும்தான் சென்றிருந்தோம் எனவே ரிக்கட் விலை 6000,சாதாரணமாக ரிக்கட் விலை குறைவுதான் என்றாலும் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்ற காரணத்தினால் ஆசனங்கள் அனைத்துமே புக் செய்யப்பட்டிருந்தன எனவே ஸ்பெஸல் ரெயினில்தான் டிக்கட் கிடைத்தது.பிரயாணத்தின் காணொளி கீழே
 11. பேராதனையில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில் கண்டிக்கு மிக அருகாமையில்தான் இந்த விகாரை அமைந்திருக்கின்றது.வீதியில் இருந்து பார்க்கும்போது இந்து கோவில்போன்று தோன்றியதும் அங்கு சென்று பார்த்தால் அங்கிருந்தது விகாரை,ஆனால் விகாரை இந்துக்கோவில் போன்ற அமைப்பில்தான் அமைக்கப்பட்டுள்ளது
 12. வணக்கம் நண்பர்களே யாழ்ப்பாணத்தில் இருந்து கிருத்தி செல்பி வோல்கிங்க் என்ற யூ டியூப் சனலை எமது பிரதேசங்களில் உள்ள வரலாற்று அடையாளங்கள்,சுற்றுலாத்தலங்கள்,கோவில்கள் என அனைத்தையும் காணொளி பதிவாக வெளியிடுவதற்காக ஆரம்பித்திருக்கின்றேன் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நன்றிகள் யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது.