Jump to content

selfywalking

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  26
 • Joined

 • Last visited

Everything posted by selfywalking

 1. பாலியல் நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கும் கருத்தடைக்குமாகவே நாம் இப்போது ஆணுறைகளைப்பயன்படுத்திவருகின்றோம் ஆணுறை தற்போது இறப்பரினால் உருவாக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் இந்த ஆணுறையை மனிதன் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தான் என்று நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா ?ஆணுறையை பயன்படுத்த ஆரம்பித்தவரலாறு இன்று நேற்று தோன்றியதல்ல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆணுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றான் அவன் பயன்படுத்த ஆரம்பித்த காலங்களில் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை கருத்தடையைமேற்கொள்வதுதான் ஆணுறைபயன்பாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது எகிப்தியர்கள் கிரேக்கர்கள் சுமேரிய நாகரீகத்தவர்கள் ஆணுறைகளைப்பயன்படுத்தியதற்கான பதிவுகள் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள் பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட 15 000 வருடங்கள் பழமையான குகை ஓவியத்தில் ஆணுறையின் ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கிமு3000 ஆண்டளவில் நடைபெற்றதாக கூறப்படும் கிரேக்க வரலாற்று சம்பவங்களில் ஆணுறைபயன்பாடுபற்றிய கதை ஒன்று உள்ளது கிமு 3000 ஆண்டில் கெனோஸிஸ் என்ற நாட்டை மைனோஸ் என்ற மன்னன் ஆண்டுகொண்டிருந்தான் இந்த மன்னருக்கு ஒரு சாபம் இருந்தது இவரது விந்தில் தேளின் விஷம் இருக்கும் என்பதுதான் அது இதன் காரணத்தால் மன்னன் யாருடன் உடலுறவுகொண்டாலும் உடனே அந்தப்பெண் இறந்துவிடுவார் மன்னனின் மகாராணியும் இதன் காரணத்தால் இறந்துவிட வாரிசு கிடைக்கவழியில்லையே என்று மன்னன் மிகுந்த துன்பத்தில் இருந்தான் அப்போது பைஸ்பே என்ற பெண் இதற்கான உத்தியொன்றை கண்டுபிடித்து மன்னருக்கு தெரிவித்தாள் ஆட்டின் சிறு நீர்ப்பையை உடலுறவின்போது பயன்படுத்திக்கொண்டால் பெண்கள் இறக்கமாட்டார்கள் என்பதுதான் அவள்கூறிய யோசனை மன்னன் அந்த யோசனையை அவளிடமே பயன்படுத்தி வரிசையாக 8 பிள்ளைகளுக்கு தந்தையானான் என்பதுவேறுகதை வரலாற்றுக்கதைகளில் ஆணுறை பயன்பாடை உள்ளடக்கிய முதலாவது மிகப்பழமையான கதை இந்தக்கதைதான் ஆனால் ஆட்டின் சிறு நீர்ப்பையை பெண்ணின் குறிக்குள் உறையாகப்பயன்படுத்தப்பட்டதா அல்லது அரசன் அதை ஆணுறையாகப்பயன்படுத்தினானா என்பது இன்னும் விவாதப்பொருளாகவே உள்ளது இருந்தாலும் ஆணுறைப்பயன்பாடு பற்றிய வரலாறு இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றது அடுத்ததாக ஆணுறைகளைப்பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் இவர்கள் துணிகளை ஆணுறைகளாகப்பயன்படுத்திக்கொண்டார்கள் எதிர்பார்த்ததுபோல் இந்தமுறை அவளவுக்கு பலனளிக்கவில்லையாயினும் இவற்றைத்தான் அவர்கள் தொடர்ந்துபயன்படுத்தினார்கள் அதோடு சமூக அந்தஸ்துக்கு ஏற்றவகையில் தமது உடைகளில் வித்தியாசமான நிறங்களை அணிவது எகிப்தியர்களின் வழக்கமாக இருந்தது அதே நிறத்தை ஆணுறைக்கும் இவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் அடுத்து ஆணுறையைப்பயன்படுத்தியவர்கள் ரொமேனியர்கள் கலை கலாச்சாரம் கட்டிடத்துறை என அனைத்திலும் தமக்குரிய தனித்துவத்துடன் மிளிர்ந்தவர்கள் ரொமேனியர்கள் ஆனால் இவர்களுடைய காலத்திலேயே பாலியல் நோய்கள் பரவ ஆரம்பித்திருப்பதை உணர்ந்துகொண்டார்கள் ரொமேனிய மருத்துவர்கள் இதற்காகவே இவர்கள் ஆணுறைகளை உருவாக்கினார்கள் இவர்கள் துணிகளைமட்டும் பயன்படுத்தவில்லை இறந்தவிலங்குகளின் குடல்களையும் ஆணுறைகளாகப்பயன்படுத்திக்கொண்டார்கள் இறந்தவிலங்குகளின் குடல்களைப்பதப்படுத்தி ஆணுறைகளாக ரொமேனியர்காள் பயன்படுத்திக்கொண்டார்கள் இவர்ளுக்கு அடுத்தபடியாக காண்டம்களைப்பயன்படுத்தியவர்கள் ஆபிரிக்க பழங்குடியினத்தவர்களான யூக்கா இனத்தவர்கள் இவர்கள் கிரேக்கர்கள் ரொமேனியர்களைப்போல் அல்லாமல் பெண்களுக்காக ஒரு உபகரணத்தை வடிவமைத்தார்கள் சுமார் 6 இஞ்ச் நீளமுடைய ஒரு மரத்தின் தடியைத்தான் பெண்கள் பயன்படுத்தினார்கள் கர்ப்பத்தடைக்காகத்தான் இது பயன்படுத்தப்பட்டது சீனாவைச்சேர்ந்த மக்கள் ஆணுறைகளை பட்டுத்துணியால் உருவாக்கினார்கள் ஆனால் அவற்றிற்கு சில உராய்வு நீக்கிகளையும் பயன்படுத்திக்கொண்டார்கள் அதோடு கபுடா கட்டா என்றழைக்கப்படும் ஆண்குறியின் நுனியை மூடும் உபகரணம் ஒன்றையும் சீனர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் பார்ப்பதாற்கு சிறிய ஆமையோடுபோன்றிருந்தாலும் இது இறப்பரினால் உருவாக்கப்பட்டது இதன்பின்னர் லியார்னாடோ டாவின்சி தன் ஓவியங்களில் ஆணுறைதொடர்பான பல வரைபடங்களை வெளிப்படுத்தினார் இருந்தாலும் கிறீஸ்தவ மதக்கொள்கைகள் இது தொடர்பாக கடும் கண்டனங்களைவெளியிட்டன ஆணுறை பயன்படுத்தல் பாவம் என்று மதத்துக்கு எதிரானது எனவும் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள் கப்பிரியோ பலோப்பியோ என்ற பிரபல அனாடமிஸ்ட் இவர்தான் ஆணுறைகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றவர்.இவர்தான் பலோப்பியன் ரியூப் தொடர்பான தெளிவான படங்களை விபரங்களைவெளியிட்டவர் இதனால்தான் பெண்ணின் உடலில் இருக்கும் அந்தப்பாகத்திற்கு பலோப்பியன் டியூப் என்றா பெயர் வைக்கப்பட்டது.ரிபன் போன்ற ஒரு றப்பட் பட்டியை ஆண்குறையை சுற்றிக்கட்டி எச்சிலை லுபிரிகேஸனாகப்பயன்படுத்தி இதை பயன்படுத்தமுடியும் என அறிவித்ததுடன் 1100 ஆண்களில் இதை பரிசோதனை ரீதியாக செய்துபார்க்கும்படி கேட்க பரிசோதனை வெற்றிபெற்றது இதன்பின்னர் விபரம் பிரபலமடைய 17 ஆம் நூற்றாண்டில் சடுதியாக இங்கிலாந்தின் சனத்தொகை வளர்ச்சிவீதம் குறைவடைந்துவிட்டது 1640களில் மீன் மற்றும் விலங்குகளின் குடல்கள் ஆணுறையாகப்பயன்படுத்தப்பட்டது முதலாம் சார்லிமன்னன் உள் நாட்டு கலவரங்கள் யுத்தங்களின்போது தன் படைவீரர்களை இந்த ஆணுறைகளைப்பயன்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தான் ஆரம்பத்தில் இந்த மன்னன் துணிகளையே பயன்படுத்தினான் ஆனால் விலைமாதுக்களுடனான உறவில் மன்னர் சிபிலிஸ் நோயால் பீடிக்கப்பட்டார் மன்னனுக்கு சிறுவர்களுடன் உறவுகொள்வதும் பிடித்தமான விடயமாக இருக்க மன்னரது வைத்தியர்தான் மீன் விலங்குகளின் குடலை பயன்படுத்தும் முறையை மன்னருக்கு அறிமுகப்படுத்தினார் அந்த வைத்தியரின் பெயர் என்ன தெரியுமா? கொலோனல் காண்டம் இதன் பின்னர்தான் ஆணுறைக்கு காண்டம் என்ற பெயர் ஏற்பட்டது 1785 இல் இந்த வார்த்தை ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது 18 ம் நூற்றாண்டில் காண்டம் உலகப்பிரபலமடைந்தது விபச்சாரம் நடைபெறும் இடங்களில் இது அதிகப்படியாக விற்பனைசெய்யப்பட்டது ஆணுறைகளை வாங்கி அவற்றில் ஓட்டை ஏதாவது இருக்கின்றதா என பரிசோதனை செய்தபின்பே அவற்றை பயன்படுத்தமுடியும் அதோடு ஒருதடவை வாங்கினால் போதுமானது இவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தமுடியும் இப்படித்தான் அப்போதைய ஆணுறைகள் உருவாக்கப்பட்டிருந்தன ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் ஆணுறைகள் இலட்சக்கணக்கில் உருவாக்க ஆரம்பித்தார்கள் துணிகளால் ஆன ஆணுறைகள் கைவிடப்பட்டன 1860 இல் அமெரிக்காவை சேர்ந்த சார்லிஸ் குட்யியர் என்பவர்தான் இயற்கை இறப்படினால் ஆணுறைகளை உருவாக்கினார் முதலாம் உலகப்போரில் அமெரிக்க பிரிட்டிஸ் வீரர்களுக்கு ஆயுதங்களுடன் ஆணுறைகளும் அனுப்பிவைக்கப்பட்டன ஆனால் வீரர்களில் பெரும்பாலானவர்கள் இதை பயன்படுத்தாத காரணத்தால் அதிகளவான வீரர்கள் பாலியல் நோய்களுக்கு உள்ளானார்கள் 1920 இல் லட்டக்ஸ் என்ற இறப்பர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஆணுறைகள் அதிக தாங்கும் திறங்கொண்டதாக வடிவமைக்கப்பட்டன இதனால் ஆணுறைகாளின் விற்பனை அதிகரித்தது முதலாம் உலகப்போரில் ஆணுறைகள் பயன்படுத்தல் தொடர்பிலும் பாலியல் கல்வியிலும் கொண்டுவரப்ப்பட்ட சட்டங்கள் பாலியல் நோய்கள் அதிகரித்தமையால் மீண்டும் 2 ஆம் உலகப்போரில் தளர்த்தப்பட்டன அதோடு 1980 இல் எயிட்ஸ் நோயின் கண்டுபிடிப்பு விழிப்புணர்வுகளின் காரணமாக உலகம் முழுவதும் ஆணுறைகளின் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது காண்டம் பயன்படுத்துவதால் பாலியல் நோய்க்கு உள்ளாகும் தன்மை 10 000 மடங்குகளால் குறைவடையும் அதோடு கர்ப்பத்தடை மருந்துகளால் ஏற்படும் பாதிப்புக்களைவிட காண்டம் பயன்படுத்துதல் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகமிகக் குறைவு பலர் பேசத்தயங்கும் விடயமாக இது இருந்தாலும் ஆரோக்கியமான குடும்பம் மற்றும் சமூகத்திற்கு இதன் பயன்பாடு அவசியமாகும் https://www.manithanfacts.com/2021/09/history-of-condom.html
 2. பொதுவாகவே விமானவிபத்துக்கள் நடைபெற்றால் அதில் பயணம் செய்யும் அனைவருமே இறந்துவிடுவார்கள் மிக மிக அரிதாகத்தான் அதில் பயணம் செய்யும் சிலர் உயிர் தப்புவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது அப்படி உயிர்தப்பினாலும் கை கால்களை இழந்தோ அல்லது நிரந்தர பாதிப்புக்களுடனேதான் நாம் உயிர்வாழமுடியும் ஆனால் நாம் இப்போது ஒரு நம்பமுடியாத சம்பவம் ஒன்றைத்தான் பார்க்கப்போகின்றோம் 1971 டிசம்பரில் ஜூலியான கோபிக் என்ற 17 வயதுச்சிறுமி தனது ஹை ஸ்கூல் பட்டமளிப்பு விழா முடிந்ததும் தன் தாயுடன் சேர்ந்து புல்காப்பா என்ற இடத்தில் இருந்து லீமா என்ற இடத்திற்கு விமானத்தின் மூலம் புறப்படுகின்றார்கள் பட்டமளிப்பு விழா முடிந்த ஒரு மணி நேரத்தில் லஸ்னா 508 என்ற தனியார் விமானத்தின் மூலம் இவர்கள் புறப்படுகின்றார்கள் லீமா என்ற இடத்தில் இருக்கும் தன் தந்தையுடன் பட்டமளிப்புவிழாவைக்கொண்டாடுவதற்காகவே அவர்கள் விரைவாக தமது பிரயாணத்தை ஆரம்பித்திருந்தார்கள் இரண்டு நகரங்களுக்குமிடையில் ஒரு மணி நேர பிரயாண இடைவெளிதான் இருந்தது அவர்கள் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது வானிலை திடீர் என மோசமடைகின்றது எங்கும் கும்மிருட்டு மழையுடன் மின்னலடிக்க ஆரம்பிக்கின்றது ஆரம்பத்தில் பயணிகள் பயத்தில் அலறினாலும் கேப்டன் அவர்களை சமாதானப்படுத்துகின்றார் ஆனால் திடீர் என ஒரு பெரிய மின்னல் விமானத்தின் இறக்கையை தாக்கிவிட விமானம் இருளில் மூழ்கிவிடுகின்றது எல்லாம் முடிந்துவிட்டது என ஜூலியானாவின் அம்மா கூறிவிட விமானத்தின் எஞ்சினும் செயலிழந்துவிடுகின்றது கட்டுப்பாட்டை இழந்தவிமானம் கீழே விழ ஆரம்பிக்கின்றது உள்ளேயிருந்த பிரயாணிகள் அலற ஆரம்பிக்கின்றார்கள் சடுதியாக விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்துவிட ஜூலியானவின் தாயார் ஜூலியானாவின் கண்முன்னாலேயே வெளியே தூக்கிவீசப்படுகின்றார் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரும் தூக்கிவீசப்படுகின்றார் ஆனால் அவர் சீட் பெல்ட்டினால் சீட்டில் இணைக்கப்பட்டிருந்தார் 3 நபர்கள் அடுத்தடுத்து அமரக்கூடிய அந்த சீட் அவருடன் சேர்த்து வெளியில் வீசப்பட்டிருந்தது விபத்து நடந்தபகுதிக்கு கீழேதான் மிக அடர்த்தியான அமேசான் காடு அமைந்திருந்தது வெளியே தூக்கிவீசப்பட்ட ஜூலியானா கீழே விழ ஆரம்பித்தார் ஆனால் ஹெலிஹாப்டரின் இறக்கை சுற்றுவதைப்போல் அவரது சீட் மிக வேகமாக சுற்ற ஆரம்பித்தது ஜீலியானாவிற்கு உலகமே மிகவேகமாக சுற்ற ஆரம்பித்திருந்தது அந்தவேகத்தில் சீட் சுழன்றுகொண்டு கீழே விழ ஆரம்பிக்க்க ஜூலியானா மயங்கிவிடுகின்றார் காட்டுக்குள் விழுந்த ஜூலியானா சுமார் 20 மணித்தியாலங்கள்வரை மயக்கன் நிலையிலேயே இருந்திருக்கிறார் விழித்ததும் சீட்பெல்டில் இருந்து தன்னைவிடுவித்துக்கொள்கின்றார் அப்போதுதான் நடந்த கொடூர சம்பவம் கனவல்ல என்பதும் நடுக்காட்டிற்குள் தான் தனி ஆளாக தப்பியிருப்பதையும் அவர் உணர்ந்துகொள்கின்றார் அதிஷ்டவசமாக அவரது கடிகாரம் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருந்தது அப்போது நேரம் அதிகாலை 9 மணி மழைபெய்துகொண்டிருந்தது உடல்முழுவதும் வலி அவரால் நடக்கவேமுடியவில்லை அதோடு மழையில் நன்றாக நனைந்துமிருந்தார் இதனால் வேறுவழியில்லாமல் ஒரு சீட்டின் கீழே சுருண்டு படுத்துக்கொண்டார் ஜூலியானா சிறிது நேரத்தில் என் உடலில் எந்த உணர்ச்சியையும் உணரமுடியவில்லை என்று கூறுகிறார் ஜூலியானா அதன்பின்னர் மீண்டும் மயங்கிவிடுகிறார் நாள் முழுவதும் மயக்கத்திலேயே சீட்டின் அடியில் கழிந்துவிடுகின்றது எழுந்து நடக்கவே ஒரு நாள் ஆகின்றது எழுந்து நடக்கும்போதுதான் தனது தோள்மூட்டு உடைந்திருப்பட்தையும் தொடையில் பெரிய வெட்டுக்காயம் இருப்பதையும் தெரிந்துகொள்கின்றார் ஜூலியானா ஆனால் அதிஷ்டவசமாக இரத்தம் அதிகம் வெளியேறவில்லை அதோடு உடைந்த தோள்மூட்டு எலும்பு தோலைக்கிழிக்கவில்லை ஆனால் கையில் ஏற்பட்ட காயத்தில் புழுப்பிடித்துவிடுகின்றது இதனால் கையை சத்திரசிகிச்சைமூலம் அகற்றவேண்டியேற்பட்டுவிடுமோ என ஜூலியான பயப்படுகிறார் ஆனாலும் அவரால் எதுவுமே செய்யமுடியவில்லை வைத்தியர்கள் பின்னர்தான் அவரது முதுகெலும்பிலும் உடைவுகள் இருந்திருப்பதாக கூறுகின்றார்கள் ஆபத்துவேளைகளில் உடலில் சுரக்கும் அட்ரினலின் ஹோமோன்காரணமாகத்தான் இவற்றின் வலியை உணராமல் தொடர்ந்தும் ஜூலியானா இயங்கியிருக்கின்றார் நீண்டமுயற்சிக்குப்பின் வலியிலும் அவர் தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கின்றார் முதலைகள் பாம்புகள் விஷப்பூச்சிகள் நிறைந்திருக்கும் காடுதான் அமேசன் அதில் இருந்து தன்னந்தனியாகதப்பிவருதல் என்பது மிக்ச்சவாலான விடயம்தான் அங்குதான் அவருக்கு அவரது தந்தைகற்றுக்கொடுத்தவிடயங்கள் நினைவுக்கு வருகின்றது அவரது தந்தை ஒரு சூலொஜிஸ்ட் தாவரங்கள் காடுகள் உயிரங்கள் பற்றிய புலமைகொண்டவர் அவர் அதோடு ஜூலியானாவின் சிறியவயதில் அவர்கள் வசித்த வீடும் இதே மாதிரியான காட்டுப்பகுதிக்குள்தான் அமைந்திருந்தது இவற்றினால் காட்டின் அசாதாரண சூழ்னிலைகளில் எப்படி உயிர்தப்புவது என்பதைப்பற்றிய பல விடயங்களை ஜூலியான சிறியவயதிலேயே அறிந்திருந்தார் இதுதான் அவர் உயிர்தப்புவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது உடனடியாக வேறுயாராவது உயிருடன் இருக்கிறார்களா எனத்தேட ஆரம்பித்தார் ஆனால் அவருக்கு கிடைத்தவையெல்லாம் பிணங்கள் மட்டுமே தன் தாயையும் தேட ஆரம்பிக்கின்றார் ஆனால் அவர்தொடர்பாக எந்த தடயமும் ஜூலியானாவிற்கு கிடைக்கவில்லை இதானால் உயிர்வாழ்வதற்கு தேவையான உணவு உடைகள் மருந்துகள் கிடைக்கின்றதா என உடைந்தவிமானத்திற்குள்ளே தேட ஆரம்பிக்கின்றார் ஜூலியானா இப்படியே 4 நாட்கள் கழிந்துவிட வெளியே செல்லும்வழியைத்தேடி நடக்க ஆரம்பிக்கின்றார் ஜூலியானா திடீர் என பெரிய கழுகு ஒன்று கீழே வந்து அமர்ந்துவிடுகின்றது அப்போத்தான் அங்கே மேலும் சில பிணங்கள் இருப்பதை பார்க்கிறார் ஜூலியானா தன் தாயாக இருக்குமோ என்ற பயத்தில் ஓடிச்சென்று பார்த்தால் அது அவரது தாயாரல்ல இவ்வாறு திக்குத்தெரியாமல் நடந்து செல்லும் நாட்களில் மீட்பு விமானத்தின் சத்தத்தையும் ஜூலியானா கேட்கத்தவறவில்லை ஆனால் தான் கீழே இருப்பதை காட்டுவதற்கு அவரிடம் எதுவுமே இருக்கவில்லை அதோடு 20 30 அடி உயரத்திற்கு அடர்த்தியான மரங்கள் இருப்பதால் கீழே இருக்கும் ஜூலியானாவை விமானத்தில் இருப்பவர்களால் பார்க்கவும்முடியாது நாட்கள் செல்கின்றன உயிரோடு தப்பவேண்டுமென்றால் காட்டைவிட்டுத்தப்பி சென்றாகவேண்டும் வேறு வழியே இல்லை உதவுவதற்கும் யாருமில்லை காட்டில் நீருக்கு தட்டுப்பாடு இருக்கவில்லை பெய்யும் மழை நீரை சேகரித்து அவரால் குடிக்கமுடிந்தது ஆனால் உணவை தேடுவது அவளவு இலகுவானதாக இருக்கவில்லை காட்டில் இருக்கும் கிழங்குகள் பழங்களை உண்னமுடியாது அவை விசமுள்ளவையாக இருந்தால் உடனடியாக மரணம்தான் ஆனால் அதிஷ்டவசமாக விமானத்தில் ஒரு சாக்லேட் பையொன்றை கண்டுபிடித்திருந்தார் அதற்குள்ளும் சில துண்டுகளே இருந்தன எனவே நாள் ஒன்றுக்கு இரண்டு துண்டுகளை தன் உணவுத்தேவைக்கு பயன்படுத்தவேண்டியேற்பட்டது ஆனாலும் அவை முடிந்ததும் பசியால் மிகவும் துடித்துப்போனார் ஜூலியானா இதனால் வேறுவழியில்லாமல் கண்ணில் தென்படும் தவளைகளை பிடித்து உண்பது என்றமுடிவுக்கு வருகிறார் ஆனால் அவர்மிகவும் பலவீனமாக இருந்தமையால் அவரால் தவளைகளைப்பிடிக்கமுடியவில்லை பின்னர்தான் அவை விஷமுள்ள தவளைகள் என்றவிடயம் தெரியவருகின்றது அப்போதுதான் ஒரு நீரோடையை கண்டுபிடிக்கின்றார் ஜூலியானவின் தந்தை காட்டில் தொலைந்துபோனால் நீரோடையைக்கண்டுபிடித்து அது ஓடும்திசையில் அதோடுசென்றால் காட்டில் இருந்து தப்பிப்பதற்கான வழிகிடைக்கும் என அவரது சிறியவயதில் கூறியது அவருக்கு நினைவுக்கு வந்தது நீரோடைகள் பல இணைந்தே ஆறாக ஓடுகின்றன எனவே இலகுவாக காட்டில் இருந்து வெளியே சென்றுவிடமுடியும் எனவே இந்த ஐடியாவை ஜூலியானா பின்பற்ற ஆரம்பித்தார் ஆரம்பத்தில் சில நாட்கள் காத்திருந்து உயிர்தப்பியவர்கள் யாராவது இருந்தால் அவர்களுடன் இணைந்து உயிர்தப்புவது என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார் ஆனால் அது ஆபத்து என உணர்ந்துகொண்டதால் ஜூலியானா முடிவெடுத்திருந்தார் ஆனால் வெளியே சென்றுகொண்டிருக்கும்போது தனது சூக்களில் ஒன்றை ஜூலியானா தொலைத்திருந்தார் இதனால் தாரையில் இருக்கும் பாம்புகள் தொடர்பான பயம் அவருக்கு அதிகரித்தது அதோடு அவரது கண்ணாடியும் தொலைந்துவிட்டது இதனால் பார்வையிலும் தெளிவு இருக்கவில்லை அதோடு அவரது கடிகாரமும் நின்றுவிட்டது இதனால் காலில் இருக்கும் ஒரு சூவின் உதவியுடன் பாஅம்பு இருக்கின்றதா என தரையை தடவிதடவிதடவி சோதனைசெய்துகொண்டே நடந்தார் ஜூலியானா நீரோடை ஆறாகமாறியது ஆனால் ஆற்றின் குறுக்காக பெரிய மரம் ஒன்றுமுறிந்துவீழ்ந்திருந்தது இதனால் பாதை தடைப்பட்டது ஆரம்பத்தில் நம்பிக்கையிழந்தாலும் மீண்டும் முயற்சிசெய்து மரத்தைக்கடந்து முன்னேற ஆரம்பித்தார் ஜூலியானா சிறிது தூரம் சென்றதும் அவரது கண்முன்னால் ஒரு படகு தெரிந்தது ஆரம்பத்தில் இது கற்பனை என எண்ணினாலும் அருகில் சென்று தொட்டுப்பார்த்ததும் அது உண்மை என ஜூலியானாவிற்கு புரிந்துவிட்டது சந்தோஷத்தில் ஜூலியானாவிற்கு தலைகால்புரியவில்லை உடனடியாக போர்ட்டில் ஏறினார் போட் நீரோட்டத்தில் தானாக செல்ல ஆரம்பித்தது ஜூலியானாவால் துடுப்பை இயக்கமுடியவில்லை காரணம் அவரது கையில் இருந்த புழுப்பிடித்த காயம் அதோடு புழுக்கள் இன்னும் சற்று ஆழத்துக்கு சென்றிருந்த்ன.அப்போதுதான் போர்ட்டில் இருந்த எண்ணைக்கான் அவரது கண்களுக்கு தெரியவருகின்றது சிறியவயதில் நாயின் காலில் இருந்த புழுப்பிடித்த காயத்திற்கு ஜூலியானவின் தந்தை எண்ணை ஊற்ரியது நினைவுக்குவர அதையே ஜூலியானாவும் செய்தார் மிகுந்த எரிச்சல் வலி ஏற்பட்டாலும் அது வேலைசெய்தது 30 புழுக்களை அவரால் வெளியே பிடுங்கி எடுக்கமுடிந்தது ஆனால் படகு மீண்டும் காட்டிற்குள்தான் சென்றுகொண்டிருந்தது மீண்டும் மயங்கிய ஜூலியானா கண்விழிக்கும்போது தரையௌயும் அதில் கட்டப்பட்டிருந்த சிறியகுடிசையையும் காண்கின்றார் அவரால் படகில் இருந்து கீழிறங்க முடியவில்லை நீண்டமுயற்சிக்குப்பின் ஜூலியானா தரையிறங்கி குடிசையை நோக்கி ஓடுகின்றார் அங்கே 2 பழங்குடி இனத்தவர்கள் இவரைக்கண்டவுடன் மிரண்டுவிடுகின்றார்கள் இரத்தச்சிவப்பில் கண்கள் உடல்முழுவதும் இரத்தத்துடன் தங்கமுடியைக்கொண்ட பெண் இதே உருவத்தில் அவர்கள் வழிபடும் பேய் தெய்வமொன்று ஆற்றில் வாழ்வதாக அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள் ஒருவேளை அதுதானோ என அவர்கள் ஆரம்பத்தில் பயந்துவிட்டார்கள் விபரீதன் நடப்பதற்கு முன்னர் ஜூலியானா தனக்குத்தெரிந்த ஸ்பானிஸ் மொழியில் நடந்தவிபத்திய அவர்களுக்கு கூறி உதவி கேட்க புரிந்துகொண்ட அவர்கள் அருகில் இருந்த நகரத்திற்கு ஜூலியானாவை அழைத்துச்சென்று அங்கிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜூலியானா விபத்து நடந்த 11 வது நாளில்தான் இது நடைபெற்றது அந்த விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே ஒரு நபர் இவர்தான் என்ற விடயம் பின்னர்தான் ஜூலியானாவிற்கு தெரியவருகின்றது திரைப்பட இயக்குனர் வேர்னர் ஹேர்சொக் இந்தவிமானத்தில் செல்வதற்கு டிக்கட்டை பதிவுசெய்து இறுதினேரத்தில் கான்சல் செய்திருந்தார் அவர் இந்த விடயத்தை அறிந்ததும் இந்த சம்பவத்தை வைத்து wings of hope என்ற திரைப்படதை இயக்கி வெளியிட்டிருக்கிறார் அவர் https://www.manithanfacts.com/2021/08/girl fell from plane pla.html
 3. உண்மைதான்,5 முட்டைகளின் சத்து இதில இருக்குன்னு விளம்பரபடுத்துவாங்க அத வாங்குறதுக்குப்பதிலா 5 முட்டையையே சாப்பிடாமேன்னு யாரும் யோசிக்கிறதில்லை Comment க்கு நன்றிகள்
 4. பெண்கள் வாழ்வில் மருந்தாகும் உணவு இன்றைய காலகட்டத்தில் பெண் விடுதலை,பெண் முன்னேற்றம் என்பன பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால்அன்றும் இன்றும் என்றுமே குடும்பம் எனும் தேரானது பெண் எனும் அச்சாணியைப் பற்றியே சுற்றிக் கொண்டிருக்கிறது.அச்சாணி உறுதியாக இருந்தால் தான் தேர் சரியாக பயணிக்கும்.அதே போல ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அக் குடும்பத் தலைவியின் ஆரோக்கியத்திலேயே தங்கியுள்ளது. குடும்பத்தலைவி ஆரோக்கியமாக இருந்தால் தான் அக் குடும்பத்தின் செயற்பாடுகள் சீராக அமையும். எனவே தான் முன்னோர்கள் அக் காலத்திலேயே பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரிய உணவை கட்டாயமாக்கியிருந்தனர். அதாவது பெண் பருவமடையும் போதும் கர்ப்ப காலத்திலும் பிரசவ காலத்திலும் பாரம்பரியமான விசேட உணவுப் பழக்கங்களை கடைப் பிடிப்பது வழக்கம். இவற்றைக் கடைப்பிடிக்காததாலேயே இக்காலத்தில் கர்ப்பம் தரிப்பதில் தாமதம்,கருச்சிதைவு, இளம் வயதிலே உடற் பருமன் ஆகியன ஏற்படுகின்றன. இன்றைய நவநாகரீக உலகிலே முன்னோர்கள் வகுத்தவை யாவும் கேலிக்கூத்தாகவே சித்தரிக்கப் படுகின்றன. அவற்றை மேலோட்டமாக விளங்கி கருத்திடாமல் அதன் உட் பொருளை விளங்கிக் கொண்டால் அதனால் ஏற்படும் நன்மைகளை நாம் உணர்ந்து கொள்ளலாம். இலங்கையில் யாழ்ப்பாண பாரம்பரியத்தில் ஒரு பெண் பூப்படையும் போது ஒரு மாத காலத்திற்கு பத்திய உணவு வழங்கப்படுகிறது. இவ் உணவிலே உழுந்தும் நல்லெண்ணை யும் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பப்பை மற்றும் இடுப்பெலும்புகளை வலுப்படுத்துவதில் இவற்றிற்கு நிகர் எதுவுமில்லை. மேலும் கத்தரிப் பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைப்பிஞ்சு ஆகியனவும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சரக்குக்கறி எனப்படும் பத்தியக்கறியுடனே அப் பெண்ணுக்கு உணவு வழங்கப்படும். இதில் மல்லி, சீரகம், இஞ்சி, உள்ளி, மஞ்சள் என பல மூலிகை சரக்குகள் சேர்க்கப்படுகின்றன. மல்லி சீரகம் போன்றவை இரும்புச் சத்தை கொண்டுள்ளதோடு உடலை சீர்ப்படுத்தும் தன்மையுள்ளவை. இவை அப் பெண்ணின் உடலை வலுவாக்குவதோடு எதிர் காலத்தில் இன்னோர் உயிரை உடலில் தாங்குமளவுக்கு உடலை வலுப்படுத்துகின்றன. அடுத்து திருமணமான புதுமணத்தம்பதியருக்கு உழுத்தங்களி மற்றும் பால் என்பன வழங்கப்படும் வழக்கம் உள்ளது. மேலும் உறவினர் வீடுகளில் அவர்களை அழைத்து விருந்து வைப்பதுவும் வழக்கம். இது அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவாறு உடலை வலுப்படுத்தவும் ஆரோக்கியமான கருவை உருவாக்கவும் உருவான கருவை ஆரோக்கியமானதாக பெற்றெடுக்கவும் ஏற்றவாறு சத்தான உணவுகளை உறவினர்களால் வழங்குவதற்கும் உருவான வழக்கமாகும். ஆனால் இன்றைய காலகட்டத்திலே உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட மற்றும் செயற்கைச் சுவையூட்டிகள் கலக்கப்பட்ட துரித உணவுகளை புதுமணத்தம்பதிக்கு வழங்கி அவர்களை வைத்தியசாலைக்கு ஓடச் செய்கின்ற நாகரீகமே பரவி வருகிறது. அடுத்து கர்ப்ப காலத்தில் உணவு எப்போதும் முக்கியத்துவம் வகிக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பண்டைய வழக்கமாக சில சமூகங்களில் யாப்பண்டம் எனும் பெயரில் பலவகை மாறுபட்ட சுவையுள்ள சாதங்களை உறவினர் எடுத்து வந்து கொடுக்கும் வகையில் விழாக்கள் கொண்டாடப்படுவதாக அறிந்துள்ளேன். ஆயினும் இவ் விழா பற்றிய போதிய விளக்கம் கிடைக்கவில்லை. மேலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கர்ப்பப்பையை உறுதியாக்க குங்குமப்பூ பாலுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது.ஆயினும் இது பிள்ளை நிறமாக பிறக்க கொடுக்கப்படுவதாக ஒரு மூடநம்பிக்கை நிலவுகிறது. https://www.manithanfacts.com/2021/08/blog-post_4.html
 5. 2021 May 6ல் எனக்கு செய்யப்பட்ட pcr testன் ரிசல்ட் positive. எனவே நான் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டேன் அதோடு எனது வீடும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. Corona விற்கான 2 வது தடுப்பூசி (covishield) போடப்பட்டு அடுத்தநாள் காலையில் காய்ச்சல்,தொண்டைவலி ,உடல்வலி போன்ற அறிகுறிகள் இருந்ததால் நானாக சென்று pcr பரிசோதனையை செய்துகொண்டேன்,ரிசல்ட் பொசிட்டிவ் என்றுகாட்டியது.உடனடியாக வைத்தியசாலையில் தடுத்துவைக்கப்பட்டேன் 2 நாட்கள் intermediate ward எனப்படும் வாட்டில் அனுமதிக்கப்பட்டேன் அங்கும் என்னைப்போல் பலர் என்னுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.கொரோனா பொசிட்டிவ் ஆகியிருந்தாலும் உடலில் எந்தவித அறிகுறிகளும் தென்படாமல் விட்டால்தான் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றுவார்கள்.எனக்கு 6 மணித்தியாலங்கள்வரைதான் அறிகுறிகள் தென்பட்டது பின்னர் எந்த அறிகுறிகளும் இல்லை எனவே 2 நாட்களின் பின்னர் என்னை கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றினார்கள்.அங்குசென்றதும் என்னை பரிசோதித்தபின்னர் எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்லுமாறுகூறினார்கள். சுருக்கமாகக்கூறினால் அது ஒரு அகதிமுகாம்போலத்தான் இருந்தது அங்கு என் நோய் நிலைக்கு என்ன நடந்தது?அங்கு செல்வதாயின் என்னென்ன பொருட்களைக்கொண்டுசெல்லவேண்டும்?கொரோனா தொடர்பான ஆலோசனைகள் என்ன?என் அனுபவம் என்ன என்பதை ஒட்டுமொத்தமாக இந்த வீடியோவில் கூறியிருக்கின்றேன் பாருங்கள் நண்பர்களே <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/1DrCkFs7p8U" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
 6. விஞ்ஞானம் இவளவு வளர்ந்தும்கூட மரணத்தை எம்மால் எதுவுமே செய்யமுடியவில்லை ஆனால் சில பூச்சிகள் விலங்குகளால் சர்வசாதாரணமாக மரணத்தைக்கடந்தும் வாழ்தல் சாத்தியமாகியிருக்கின்றது ஒரு கரப்பான் பூச்சியினால் அணுகுண்டின் கதிர்வீச்சுக்களில் இருந்துகூடத்தன்னை பாதுகாக்கமுடியும் என்று கூறப்படுகின்றது நாம் பார்க்கப்போகும் சில உயிரினங்களால் தலை இல்லாமல் கூட வாழமுடிகின்றது இதுதான் இயற்கையின் அதிசயம் அவ்வாறு எமனுக்கே அல்வா கொடுக்கும் உயிரினங்களைப்பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம் கரப்பான் பூச்சி எம்மால் மிகவும் அருவருப்புடன் பார்க்கப்படும் பூச்சியினம்தான் கரப்பான் பூச்சி ஆனால் அதன் தலையை துண்டாக்கினால் கூட அதனால் உயிர்வாழமுடியும் ஒரு மனிதனின் தலையைத்துண்டாக்கினால் இரத்தம் பீறிடும் ஆனால் கரப்பான் பூச்சியின் தலையைத்துண்டாக்கினால் இரத்தம் வெளியேறாது உடனே உறைந்துவிடும் அதோடு அதன் இரத்தம் வெள்ளை நிறமானது மனிதர்களின் குருதியின் சிவப்பு நிறத்துக்குக்காரணமான ஹீமோக்குளோபின் என்ற பதார்த்தம் கரப்பான் பூச்சிகளில் இருப்பதில்லை தலை துண்டிக்கப்பட்டாலும் கரப்பான் பூச்சியின் உடல் முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான துளைகளினூடாக கரப்பான் பூச்சியினால் சுவாசிக்கமுடியும் ஆனால் மனிதனின் தலை துண்டிக்கப்பட்டால் மூளையுடனான இணைப்பு துண்டிக்கப்படுவதால் உடல் இயங்காது இறப்பு ஏற்படுகின்றது கரப்பான் பூச்சியின் தலை துண்டிக்கப்படுவதால் அதன் மூளை துண்டாக்கப்படுவது உண்மைதான் இருந்தாலும் சுவாசம் தடைப்படாது ஆனால் கரப்பான் பூச்சியால் உணவை உண்னமுடியாது ஆனாலும் சில நாட்கள்வரை உயிர்வாழ்ந்தே பின்னர் அது மரணிக்க்கும் தேனீக்கள் தேனீக்கள் இறந்தாலும் குற்றக்கூடியவை இறந்து பல நாள் ஆன தேனியாக இருந்தாலும் அவற்றின் கொடுக்கில் விஷம் அப்படியேதான் இருக்கும் நீங்கள் நினைப்பதுபோல் இறந்த தேனி பறந்து குற்றப்போவதில்லை தேனியின் உடலில் தேனியின் கொடுக்கு தேனியின் மூளையால் கட்டுப்படுத்தப்படுவதில்லை தேனியின் உடலின் பின்புறத்தில் இதற்காக என்றே சிறிய உடற்பாகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது எதிராளியை கண்டுகொண்டதும் தேனியின் விஷம் உள்ளே இருந்து கொடுக்குடன் வெளியேறும் எதிரியின் தோலில் கொடுக்கு குற்றியதும் அதனூடாக விஷமும் வெளியேறும் தேனி இறந்தாலும் விஷமும் கொடுக்கும் அவளவு இலகுவில் அழிந்துவிடுவதில்லை எனவே இறந்த தேனியை கையில் எடுத்துப்பார்க்கும்போதும் அவதானமாக இருக்கவேண்டும் ஆக்டோபஸ் ஆசியாவின் சில நாடுகளில் ஆக்டோபஸ் கறி மிகவும் பிரபலம் முக்கியமாக சீனாவில் ஆக்டோபஸ்ஸை உயிரோடு சாப்பிடுவது மிகவும் பிரபலமான விடயமகாக பார்க்கப்படுகின்றது ஆக்டோபஸைப்பிடித்து அதன் 8 கால்களை வெட்டியபின்னரும் அதன் கால்கள் பிளேட்டில் அசைந்துகொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம் இதற்குக்காரணம் ஆக்டோபஸ்ஸிற்கு மட்டுமே இருக்கும் சிறப்பான மூளை நரம்புத்தொகுதிதான் ஆக்டோபஸின் மூளையின் 3/2 பகுதிதான் தலையில் காணப்படுகின்றது ஏனைய பகுதி அதன் கால்களிலேயே காணப்படுகின்றது ஆக்டோபஸின் கால் துண்டானாலும் அது முளைத்துவிடக்கூடியது அதோடு துண்டாக்கப்பட்ட காலைத்தொடும்போது உணர்வு தூண்டப்பட்டு கால் அசைந்துகொண்டுதான் இருக்கும் இதைப்பார்க்கும்போது ஆக்டோபஸ் உயிருடன் இருப்பதைப்போல் தோன்றினாலும் உண்மை அதுவல்ல ஆக்டோபஸை உயிருடன் சாப்பிடுதல் நிச்சயம் ஆபத்தை விளைவிக்கக்கூடியவிடயம்தான் காரணம் ஆக்டோபஸின் கால்கள் ஒட்டும்தன்மை கொண்டவை தொண்டைக்குள் சென்ற ஆக்டோபஸின் கால்கள் தொண்டையில் சிக்கிக்கொண்டால் வைத்திய உதவிகிடைக்கும் முன்னரே மரணம் சம்பவிக்கலாம் Salamander பல்லி வீடுகளில் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் இந்த உயிரினத்தின் ஆச்சரியமான விடயமே இதன் வால்தான் மனிதர்களுக்கு மாத்திரமல்ல பல்லியின் எதிரிகளுக்கும் இது கிலியை ஏற்படுத்தும் விடயம்தான்,எதிரிகளைக்கண்டதும் பல்லி தன் வாலை துண்டாக்கிவிடும் துண்டாக்கப்பட்ட வால் துடித்துக்கொண்டிருக்கும் பல்லியை தாக்கவரும் பூச்சி விலங்குகள் துடிக்கும் வாலை பார்த்துக்கொண்டிருக்கும்போது பல்லி தப்பி ஓடிவிடும்.ஆனால் துண்டாக்கப்பட்ட வாலுக்காக பல்லி கவலைப்படத்தேவையில்லை காரணம் சில நாட்களிலேயே வால் மீண்டும் முளைத்துவிடும் மீண்டும் பழையவாலைப்போலவே இதுவும் செயற்படும் தவளை தவளையின் மூளையை சத்திரசிகிச்சைமூலம் அகற்றினால் கூட தவளை முன்பிருந்ததைப்போலவே சாதாரணமாக இயங்குமென்ற கருத்து பரவலாக இருந்துவந்தது 19 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த டேவிட் ஃபரியரல் என்ற ஆய்வாளர் இது உண்மையா எனக்கண்டறிவதற்காக தவளையின் மூளையை மிகக்கவனமாக சத்திரசிகிச்சைமூலம் அகற்றினார் ஆச்சரியமான விடயம் என்ன தெரியுமா தவளை முன்பு போல சாதாரணமாக பாய்ந்து பாய்ந்து சென்றது தவளையை தலைகீழாக திருப்பிவைத்தபோதுகூட மீண்டும் பழைய நிலைக்கு வந்து மீண்டும் தாவிச்சென்றது ஈக்கள் ஈக்கள் எவளவு குளிரான வெப்பனிலையில் கூட உயிர்தப்பும் ஆற்றல் கொண்டவை இவ்வாறான காரணங்களால்தான் இவற்றைக்கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கின்றது பெண் ஈக்கள்தான் அசாத்திய ஆற்றலைக்கொண்டுள்ளன,பெண் ஈக்களின் தலையை துண்டாக்கினால்கூட அவை உடனே இறந்துவிடுவதில்லை தலையுள்ள ஈக்களைப்போலவே இவையும் பறக்கும் நடக்கும் இதனால் இவை சில நாட்கள் சாதாரண ஈக்களைப்போலவே வாழ்ந்து இறக்கும்
 7. கொடூரமான கனவுகளை நாம் கண்டிருப்போம் அவ்வாறான கனவுகளில் உயிருடன் புதைக்கப்பட்டிருப்பதுபோலவும் கனவுகள் வந்திருக்கலாம் உயிருடன் சவப்பெட்டிக்குள் புதைக்கப்பட்டிருக்கும்போது கை முஸ்டியினால் சவப்பெட்டியின் உள்ளே குத்தி குத்தி அதை உடைக்கமுயன்று அது பயனற்றுப்போய் பதட்டம் அதிகமாகி பயத்தில் அலறும்போது கண்விழித்த அனுபவங்கள் கூட உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இவையெல்லாம் கனவுகள்தான் ஒருவேளை உண்மையிலேயே உங்களை உயிருடன் சவப்பெட்டிக்குள் புதைத்தால் எப்படி இருக்கும்?எப்படி உயிர் தப்புவது? உண்மையில் இதுபோன்ற பல சம்பவங்கள் வரலாற்றில் நடைபெற்றிருக்கின்றன 1800களில் அமெரிக்காவின் ஹெண்டக்கியைச்சேர்ந்த ஒக்டீவியா சிமித் என்ற இளம் பெண் மகன் இறந்துவிட்டதால் மிகவும் துன்பத்துக்கு ஆளாகின்றார் மகன் இறந்து 2 3 நாட்களிலே கோமா நிலைக்குச்சென்ற இந்தப்பெண் இறந்துவிடுகின்றார் இறந்ததும் இவரின் உடலை எடுத்துச்சென்று உறவினர்கள் அடக்கம்செய்துவிடுகின்றார்கள்,ஆனால் இவரைப்போன்று பலர் சடுதியாக கீழே விழுந்து கோமா நிலைக்கு சென்று 2 3 நாட்கள் உணர்வற்றிருந்தபின் மீண்டும் பழைய நிலைக்கு மீள ஆரம்பித்தார்கள் இந்தவிடயம் வைத்தியர்களையும் குழப்ப ஆரம்பித்திருந்தது அவர்களால் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை பின்னர் ஒரு இலையான் போன்ற ஒரு பூச்சியின் கடியினாலே இவ்வாறான கோமா நிலை தோன்றுவதாக வைத்தியர்கள் கண்டறிந்தார்கள்.இந்தச்செய்தி சில நாட்களில் ஊடகங்களில் வெளிவந்ததும் ஒக்டீவியா சிமித்தின் கணவருக்கு பொறி தட்டியது ஒருவேளை தன் மனைவியை தான் உயிருடன் புதைத்துவிட்டேனோ என எண்ணி அவரின் மனைவி புதைக்கப்பட்ட இடத்திற்கு ஓடிச்சென்றார் அவர் அங்கே சென்று குழியைத்தோண்டி சவப்பெட்டியைத்திறந்தபோது இவர் எதிர்பாராத கொடூரவிடயம் ஒன்று அங்கு அரங்கேறியிருந்தது .மனைவியின் தலை முதுகின் பக்கம் திரும்பியிருந்தது சவப்பெட்டியின் உட்புறம் கீறல் அடையாளங்கள் இரத்தக்கறையுடன் இருந்தன மனைவியின் கைகளின் விரல்கள் தேய்ந்து எலும்ப்கள் வெளியே தெரிந்தன அவரது மனைவி இப்போது நிச்சயமாக இறந்திருந்தார் ஆனால் உயிருக்காக உள்ளே போராடி மரணித்திருந்தார். 1786 இல் புரபஸர் ஒருவர் பாரிஸ்ஸில் 14 ஆம் நூற்றாண்டின் கல்லறைகள் உடைக்கப்பட்டு புனரமைக்கப்படும்போது பாரிஸ்ஸிற்கு சென்றிருந்தார் அங்கிருந்த கல்லறைகள் தோண்டி எடுக்கப்பட்டு உடைக்கப்பட்டபோதுதான் உள்ளே இருந்த எலும்புக்கூடுகள் அசைந்திருப்பதற்கான தடயங்கள் இருப்பதையும் சவப்பெட்டியின் உட்புறம் கீறல் அடையாளங்கள் இருப்பதையும் இவர் அவதானித்திருக்கின்றார் தூக்கிலிடப்பட்டு இறந்துவிட்டார்கள் என முடிவுசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிலர் சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு புதைக்கப்பட்டபின்னர் மீண்டும் சுய நினைவுக்கு மீண்டிருக்கிறார்கள் அங்கு அவர்கள் பார்த்த அனுபவித்த விடயங்கள் மரணத்தைவிட கொடுமையானவையாக இருந்திருக்கின்றன வெளியேவரபோராடி பயங்கரமான சூழ் நிலையை எதிர்கொண்டு கத்திக்கத்தியே அவர்கள் மரணித்திருக்கின்றார்கள் 1817 ல் ஜோன் சினார்ட் ரெஸோர்ஸ் ஆப் ஹாரர் என்ற நாவலில் ஒரு உண்மை சம்பவத்தை எழுதியிருந்தார் மிஸ்ரட் கோர்னிஸ் என்ற நபர் கடுமையான காய்ச்சல் காரணமாக மரணமடைந்துவிடுகிறார் அவரை உறவினர்கள் புதைத்துவிடுகின்றார்கள் அன்றிரவு பிணங்களை புதைக்கும் நபர்கள் புதைக்கப்பட்ட கல்லறையில் இருந்து சத்தம் வருவதை கேட்டதும் உடனடியாக மீண்டும் குழியைதோண்ட ஆரம்பித்தார்கள் அவர்கள் விரைவாக குழியைத்தோண்டினார்கள் ஆனால் நேரம் கடந்துவிட்டிருந்தது அவர்கள் சவப்பெட்டியை திறந்ததும் சவப்பெட்டியினுள்ளே கீறல்கள் இரத்த சகதிகளுடன் அவரது பிணமே கிடைத்தது உள்ளே இருந்தவர் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார்.சில வருடங்களில் இவரது சகோதரனும் இறந்துவிட இவர்களது குடும்பத்தில் எஞ்சியிருந்த சகோதரி தன் முதல் சகோதரனைப்போல் தற்போது இறந்தவரும் துன்பப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இறந்த சகோதரனின் கழுத்தை வெட்டி துண்டாக்கிய பின்னரே அவரை புதைத்தார் அந்த நாட்களில் இவ்வாறு செய்வதற்கு சட்ட ரீதியாக அனுமதியிருந்தது ,இதயத்துடிப்பை வைத்தியரால் அவதானிக்கமுடியாமல்போகும்போது உடல் குளிராக இருந்தால் நபர் இறந்துவிட்டார் என்றே கருதப்படுவார் அப்போது இப்போது நம்மிடமிருப்பதைப்போன்ற எந்த தொழில் நுட்பங்களும் இருக்கவில்லை ஆனால் ஒரு நபர் இறக்காமலேயே இவ்வாற நிலமைகள் ஏற்படக்கூடும் மருத்துவத்துறையில் ஹைப்போ தேர்மியா என்ற நிலை இருக்கின்றது ஒருவர் இந்த நிலமையால் பீடிக்கப்படும்போது அவரது உடல் நிலை 21 டிகிரிவரைகூட குறையலாம் அதேபோன்று லெதார்ஜிக் சிலீப் என்ற நிலையில் இதயம் மிக மெதுவாகவே துடிக்கும் இப்படியான சந்தர்ப்பங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் கூட இதயத்துடிப்பை உணரமுடியாது இவ்வாறு பல காரணங்களால் உயிருடன் இருப்பவரையே இறந்துவிட்டார் என கருதும் வாய்ப்புக்கள் இருந்தாலும் தற்போது எம்மிடம் மருத்துவத்தொழில் நுட்பசாதனங்களால் இது தவிர்க்கப்படுகின்றது இதனால் 17 18 ஆம் நூற்றாண்டுகளில் இறந்தவரை உடனே புதைக்கமாட்டார்கள் குறைந்தது 3 நாட்கள் அவரது உடலை வைத்திருந்த பின்னே இறுதிக்கிரியைகளை மேற்கொள்வார்கள் ஆனால் தற்போதும் இறந்தவர் உயிர்த்தெழுந்த கதைகளை சமூகவலைத்தளங்கள் மூலமாக எம்மால் அறியமுடிகின்றது ஆனாலும் சரியான தகுதியற்ற வைத்தியர்களால் இவ்வாறான தவறுகள் நடைபெறத்தான் செய்கின்றன பிரேசில் நாட்டின் ரியாக்கோ நகரில் 37 வயதான ரோஸ் அஞ்சேலா என்ற பெண் செப்ஸிஸ் காரணமாக இறந்துவிட்டார் என தீர்மானிக்கிறார் வைத்தியர் ,அவை புதைத்து 11 நாட்களின் பின்னர் அவரது கல்லறையில் இருந்து சத்தம் கேட்பதை அவதானித்த உறவினர்கள் உடனடியாக குழியை தோண்டி சவப்பெட்டியை திறந்தபோதுதான் அதிர்ச்சிகரமான அந்த விடயம் அவர்களுக்கு தெரியவருகின்றது ஆஞ்சலோவின் நெற்றியிலும் கைகளிலிலும் இருந்து இரத்தம் வெளிவந்து உறைந்திருந்தது அவர் நீண்ட நாட்களாக வெளியே வருவதற்கு போராடியே பின்னர் மரணமடைந்திருக்கின்றார் 1993 இல் ஆபிரிக்காவில் வில்லியம் என்பவரும் அவரது மனைவியும் திருமணமான புதிதில் காரில் பிரயாணம் செய்யும்போது கொடூரமான விபத்து ஒன்றை சந்திக்கின்றார்கள் அதில் மனைவி தப்பிவிடுகிறார் ஆனால் கணவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிடுகின்றார். அவரது உடலை பிரேதப்பரிசோதனைக்காக எடுத்துச்செல்கின்றார்கள் அங்கே சில நாட்கள் குளிர்சாதனப்பெட்டிக்குள் அவரது உடல் வைக்கப்படுகின்றது அங்கே இருந்த ஊழியர்களுக்கு பெட்டிக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்க ஆரம்பிக்கின்றது ஆரம்பத்தில் பயந்தாலும் பின்னர் ஒருவாறு பெட்டியை திறந்துபார்க்கும்போது இறந்துவிட்டதாக கருதப்பட்ட இந்த நபர் உயிரோடு இருப்பது தெரியவருகின்றது கதை இத்துடன் முடியவில்லை உயிருடன் மீண்ட வில்லியத்தைப்பார்க்க அவரது மனைவி திரும்பிவரவே இல்லை உயிருடன் மீண்ட கணவர் உண்மையில் ஒரு சோம்பி என பயந்த அவரது மனைவி ப்யத்தில் ஊரைவிட்டே ஓடிவிட்டார் மத்தியகாலப்பகுதியில் இவ்வாறுதவறுதலாக புதைக்கப்படும் மீண்டும் சவப்பெட்டிக்குள் இருந்து திரும்பினால் அவர்களை ட்ரெகுல்லாக்களாக கருதி மக்கள் அவரை கம்பத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்தே கொன்றிருக்கின்றார்கள் பிரான்ஸை சேர்ந்த 19 வயதான அஞ்சலோ ஹேய்ஸ் கார்விபத்தில் மரணமடைந்துவிடுகின்றார் அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்னர்தான் அவரது தந்தை மகன் மீது 2 லட்சம் டாலர்களுக்கு இன்சூரன்ஸை செய்திருந்தார் பணத்திற்காக மகனை இவர் கொன்றிருக்கலாம் என சந்தேகித்த கம்பனி கோர்ட்டின் உதவியுடன் மீண்டும் கல்லறையைத்தோண்டியபோது இறந்துவிட்டதாக கருதப்பட்ட மகனின் இதயம் துடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது அவர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார் இதைவிட ஆச்சரியமான விடயம் எது தெரியுமா அவரைப்புதைக்கப்பயன்படுத்திய சவப்பெட்டிதான் அந்த சவப்பெட்டி உள்ளே ஒருவரை உயிருடன் வைத்திருக்கும்வகையில் பிரத்தியேகமாக செய்யப்பட்டிருந்தது இதன் காரணமாகவே அவரது மகனால் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கமுடிந்தது 1987இல் 39 வயதான தொழில் அதிபர் எதிர்பாராதவிதமாக ஒரு நட்டத்தை சந்திக்கிறார் அதிலிருந்து மீளுவதற்கு பெரும்தொகை பணம் தேவைப்பட்டது இதனால் தன் மனைவியிடமிருந்து பணம் பெறுவதாற்காக தன்னைக் கடத்திப்புதைப்பதற்கு தானே குண்டர்களை தயார்செய்துவிடுகிறர் அவர்களும் இவரை சவப்பெட்டிக்குள் அடைத்துப்புதைத்துவிடுகிறார்கள் ஆனால் உணவு ஆக்ஸிஜன் சப்பிளை போன்றவற்றை ஏற்படுத்திவிட்டுத்தான் அவர் புதைக்கப்படுகின்றார் புதைக்கப்பட்டபின் அவரது குடும்பத்துடன் பேரம்பேசப்படுகின்றது 1 மில்லியன்டாலர்களுக்கு அவரது குடும்பம் சம்மதிக்க பணத்தைகொடுப்பதற்கு அவரது மனைவி வரும்போது போலீஸார் குற்றவாளிகளை கைதுசெய்து புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து சவப்பெட்டியை தோண்டி எடுக்கின்றார்கள் உள்ளே திறந்து பார்த்தால் அதிர்ச்சி அவர் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார் ஆக்ஸிஜன் சப்பிளையில் ஏற்பட்ட தடை காரணமாகவே அவர் மரணமடைந்திருந்தார் போலீஸார் கடத்தியவர்கள் மீது ஆட்கடத்தல் மற்றும் கொலைக்குற்றத்திற்காக வழக்குப்பதிவுசெய்து அவர்களை உள்ளே தள்ளிவிடுகின்றார்கள் கில்பில் என்ற பிரபல ஹாலிவூட் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதில்வரும் பியட்ரிக்ஸ் உயிருடன் நிலத்தில் புதைக்கப்பட்டபோது தன்கைகளாலே அதை உடைத்துக்கொண்டுவெளியே வந்துவிடுவார் உண்மையிலேயே ஒருவரை உயிருடன் சவப்பெட்டிக்குள் அடைத்துப்புதைத்தால் அவரது அனுபவம் எப்படி இருக்கும் இதை உண்மையிலேயே செய்துபார்ப்பதற்காக அமெரிக்காவின் பிரபல ரியாலிட்டி மாஜிக் ஷோக்களை நடத்தும் மித் பஸ்டர் குழிவினர் இதை முயற்சிசெய்தார்கள் ஆனால் நிஜம் படத்தைவிட மிச மோசமாக இருந்தது மிகவும் வலிமையான 600 குத்துக்களின் பின்னர்தான் சவப்பெட்டியில் துளையை இட முடிந்தது ஆனால் அதனூடாக கையை 60 செண்டிமீட்டர் அதாவது இரண்டடி உயரத்திற்கு மட்டுமே உயர்த்த முடிந்தது ஆனால் சவப்பெட்டி 6 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தது எனவே உண்மையில் இது சாத்தியமற்றவிடயம்தான் ஆனால் ஏன் பிணத்தை 6 அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைக்கின்றார்கள் தெரியுமா இதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது1655 இல் லண்டனை பிளேக் நோய் ஆட்டிப்படைத்தது அந்த நோய் இறந்தவர்களிடமிருந்தும் பரவும் என்ற காரணத்தினால் 6 அடி ஆழமான குழியைத்தோண்டி புதைக்கும் வழக்கத்தை அவர்கள் அப்போது பின்பற்றினார்கள் பின்னர் தொடர்ந்து இதே வழக்கத்தை பல நாடுகள் பின்பற்ற ஆரம்பித்தன இந்த வழக்கம் இன்றுவரை தொடர்கின்றது ஆனால் நிபுணர்கள் 6 அடி ஆழத்தில் புதைத்தாலும் தப்ப வாய்ப்பிருப்பதாக கூறுகின்றார்கள் நிலத்திற்கு கீழே எமக்கு தேவையான ஆக்ஸிஜனின் அளவு மிகக்குறைவாகவே இருக்கும் சாதாரண அளவையுடைய சவப்பெட்டியில் இருக்கும் ஆக்ஸிஜன் சராசரி வளர்ந்த நபர் ஒருவருக்கு 40 நிமிடங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால் புதைக்கப்பட்ட நபர் மிகவும் பயந்து பதட்டமடைந்தால் இதயம் வேகமாக துடிக்கும் வேகமான சுவாசிப்பார் இதனால் ஆக்ஸிஜன் மிகவேகமாக முடிவடைந்துவிடும் இது நிலமையை இன்னும் மோசமாக்கிவிடும் எனவே நீங்கள் இப்படியான சவப்பெட்டிக்குள் மாட்டிக்கொண்டால் முதலில் அமைதியாக இருக்கவேண்டும் பதட்டமடையக்கூடாது அடுத்ததாக உங்கள் டீசார்ட் அல்லது ஏதாவது ஒரு துணியை உங்கள் மூக்கு மற்றும் வாயைச்சுற்றி நன்றாக கட்டிக்கொள்ளவேண்டும் இதனால் உள்ளே இருக்கும் தூசியால் உங்கள் நுரையீரல் பாதிப்படையாது பாதுகாக்கப்படும் உங்களிடம் மோதிரம் பேனை அல்லது திறப்பிருந்தால் உள்ளே உள்ள பலகையில் சத்தம் வருமாறு தட்டி அல்லது கீறி ஒலி எழுப்பி யாரையாவது உதவிக்கு அழைக்கமுயற்சிக்கலாம் உதவி எதுவும் கிடைக்கவில்லையென்றால் சவப்பெட்டியினை உடைக்கவேண்டும் கைகளால் அல்ல கால்களால் உதைந்து உடைக்கவேண்டும் உடையும்போது உள்ளே மண் அடைந்துகொள்ளும் இப்போது உங்கள் தலைக்கு அருகேயுள்ள பகுதியை கைகளால் பலம் முழுவதையும் பயன்படுத்தி உயர்த்தவேண்டும் இதற்கு கால்களுக்கிடையில் நிரம்பியிருக்கும் மண்ணில் உதைத்து விசையைப்பெற்றுக்கொள்ளலாம் அப்படியே பலத்திய பயன்படுத்தி எழ முயற்சிசெய்துகொண்டு எழுந்தால் ஒருவாறு எழ்ந்து நிற்கமுடியும் பின்னர் மெதுமெதுவாக மேலே தரைக்கு மீளமுடியும் ஆனால் ஒவ்வொரு சவப்பெட்டியும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றன என்பதுதான் முக்கியவிடயம்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.