யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த கிறிக்கற் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் 4 விக்கற்றுகள் மற்றும் 130 மேலதிக ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி வெற்றியீட்டியது.. நாணயச் சுழற்சியில் துடுப்பெடுத்தாடலை தெரிவு செய்த சென். பற்றிக்ஸ் அணியினர் 40 ஓவர்களில் சகல விக்கற்றுகளையும் இழந்து 78 ஓட்டங்களை பெற்றிருந்தனர். அணி சார்பாக விளையாடிய வீரர் அருள்ராஜ் அதிகப்படியாக 21 ஓட்டங்களை பெற்றிருந்தார். களத்தடுப்பில் இருந்த மத்திய கல்லூரி அணியின் சார்பில் விதுசனின் பந்து வீச்சில் 4 விக்கற்றுகளையும் இயலரசனிடம் 3 விக்கற்றுகளையும் நிதுசன் மற்றும் வியாஸ்காந்த்திடம் தலா ஒவொவொரு விக்கற