• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மாங்குயில்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  151
 • Joined

 • Last visited

Community Reputation

5 Neutral

About மாங்குயில்

 • Rank
  உறுப்பினர்
 1. உங்களது எழுத்தில் ‘ஆதிக்க சக்தி’ என்று இருப்பதாக நான் அறியவில்லை. நாத்திகமும் மதமாகத்தான் இப்போது காணப்படுகிறது.
 2. உண்மைதான். உரிமை வேறு, நாகரிகம் வேறு. நாகரிகம் வளர்ச்சியடையும்போது, மனிதனது உரிமைகள் அதிகரிக்கும். மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து, ரவுடித்தனம் மனிதனிடம் இருக்கிறது. ரவுடித்தனம், சரியா, பிழையா என்பது வேறு விடயம். ஆனால், நம்மவர்களுக்கு ரவுடித்தனம் செய்வதற்கும் உரிமை இருக்கிறது என்பது யாழ் கள பதிவாளர்கள் எதிர்பார்ப்பு.
 3. அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்கள், யாழ் நகர சபை உறுப்பினர்களின் ரவுடித்தனம், அவர்களின் உரிமை சார்ந்தது என்று வாதிடுகிறார்கள். ரவுடிப் பிக்கு, கிறிஸ்தவ பாதிரியாருக்கு கன்னத்தில் அறைந்ததை, ரவுடிப் பிக்குவின் உரிமை சார்ந்தது என்று மேற்கில் வாழும் நம்மவர்கள் சொல்கிறார்கள்.
 4. மதம் ஒரு கீழ்த்தரமான போதை என்பது உங்களிடம் இருந்து வெளிப்பட்ட ஞானத்தின் ‘தற்துணிப்பா’ அல்லது எங்கேயோ வாசித்து அறிந்த அறியாமையின் வெளிப்பாடா? உங்களது ஞானம் யாருக்கும் பயன்படாது.
 5. மனிதன், எப்போதும் வெற்றியாளனாக இருந்ததில்லை - வரலாற்றில். அதனால்தான், என்னைப்போன்ற சாதாரண மனிதப் பிறவிகளை நான் ஒருபோதும், கும்பிடுவதில்லை. வணங்குவதில்லை.
 6. முதுகில் தட்டி, பப்பாளி மரத்திற்கும் ஏற்றியாச்சு, உங்களை போன்ற புண்ணியவான்களால். இனியென்ன எதிலும் வெற்றி, எங்கும் வெற்றி என்ற தோரணைதான் பாக்கி.
 7. கருத்துக்களை எழுதுவது, வெல்லுவதற்காகவா? எனது பாமரத்தனமான கருத்துக்கள், உங்களை போன்ற பகுத்தறிவுப் பகலவன்களுக்கு முன்னால் எடுபடும் என்றால், சந்தோஷப்பட வேண்டியதுதான்!
 8. மேற்படி மதத்தில், பிக்குகளை கடவுளாக வணங்குகிறார்கள் என்றில்லை.
 9. இயேசு ஜீவிக்கிறார் கூட்டம் வந்து கதவைத் தட்டினால், நான் ஒருபோதும் கதவைத் திறக்காமல் இருப்பதில்லை. நாமெல்லாரும், இறந்தபின் எங்கே போவோம் என்று கேட்டால், மண்ணறையைக் காட்டவேண்டியதுதான். அதற்காக யாரையும் அறைய வேண்டிய அவசியமில்லை. அன்புடன் அவர்களுடன் உரையாடி, கிறிஸ்தவம் என்பது ஒரு பொய்யான மார்க்கம், பைபிளுக்கும் இயேசுவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்று, அவர்கள் கொண்டுவரும் பைபிளை வாசித்து அவர்களுக்கு விளக்கி இருக்கிறேன். அதன்பின், என் வீட்டு வாசற்படியை மிதித்ததே இல்லை. எதேச்சையாக அந்தக் கோஷ்டியை தெருவில் கண்டால், நானே போய் பேச்சுக் கொடுப்பேன். என்னை விழுங்குவதுபோல பார்ப்பார்கள்.
 10. மதம் மாறுவது, ஒருவனது தனிப்பட்ட கொள்கை, வாழ்வியல் சார்ந்த சமாச்சாரம். இது அவனின் உரிமை. இப்படி மதம் மாறுபவர்களை, அருவருத்து வெறுத்தொதுக்குவது, பிறரின் உரிமைகளில் கைவைக்கிறீர்கள் என்று நீங்கள் உணரவில்லையா? ஒருவன் மதம் மாறுவது, ஒருவனின் உரிமை. அதை வெறுக்குறீர்கள். ஒருவன் மதம் மாறுவதற்கு எதிராக, ரவுடிப் பிக்குபோல காட்டுக் கத்தல் செய்யும் உரிமை உங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அந்த ரவுடிப் பிக்குபோல, நீங்கள் தூஷணத்தில் கத்தினால், பாதிக்கப்படுபவர் உங்களுக்கு எதிராக Defamation Law இன்படி, உங்களுக்கு எதிராக வழக்கு போட உரிமை பெறுகிறார். ஆக, கண்டதற்கெல்லாம் உரிமை கோரி, அதன் பின்விளைவுகளை சந்திக்க நாடாதீர்கள் - அதுவும் லண்டனில்.
 11. இப்படியான பெயர்களையுடைய கோஷ்டிகள், லண்டனில் இருக்கின்றன என்று ஏன் பொய் சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டதில் ஏதும் இருக்கலாம். லண்டனில் யாரும், யாரிடமும் போய் நெருக்கடி தொந்தரவு செய்து, எனது கூட்டத்தில் சேருமாறு வற்புறுத்தல் செய்வதில்லை. அவனவன் விரும்பிச் சேருகிறான். பிடிக்காவிட்டால், வெளியேறுகிறான். இது அவனவன் உரிமை. ஒருவரின் உரிமையை வெறுத்தொதுக்கும். உங்களின் செயல் அநாகரீகமானது மட்டுமல்ல, இன்னொருவரின் ஜனநாயக விழுமியங்களை புதைக்கும் செயல்.
 12. இலங்கையில் மதம் மாற்றும் போதனை செய்வது குற்றம். தண்டனைக்குரியது. தான் சார்ந்த மதத்தை, பிறருக்கு ஏத்தி வைப்பது, போதிப்பது - இலங்கையில் குற்றமல்ல. பிறருக்கு ஏத்தி வைப்பது, போதிப்பது என்ற பெயரில், திணிப்பு, வற்புறுத்தல் செய்வது இலங்கையில் பாரிய குற்றம் அந்த அடிப்படையில், இந்த கிறிஸ்தவ பாதிரியாருக்கு எதிராக எடுக்கும் எந்த சட்ட ரீதியான நடவடிக்கைக்கும் நீதிமன்றம் தலை சாய்க்காது. என் பார்வையில், இந்த கிறிஸ்தவ பாதிரியார் - அவரின் மதத்தைப்பற்றிய திணிப்பு, வற்புறுத்தலைச் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், அவர் கம்பி எண்ணுவார்.
 13. பவுத்த கொள்கை, நாத்திகம் என்பது பெரும்பாலான சிங்களவருக்குத் தெரியாது.
 14. இன்னொரு மதத்தை அறிவதற்கு, விளங்கி கொள்வதற்கு தான் சார்ந்த மதமோ, கலாசாரமோ தடையாக இருக்காது. தான் சார்ந்த மதத்தை, கலாசாரத்தை விட்டால்தான், பிற மதங்களை புரிந்து அறிந்து கொள்ளலாம் என்ற நியதியும் இல்லை. புத்த மதம், ஏறக்குறைய நாத்திகத்தைப் போதிக்கும் மதம். இதை நீங்கள் கூட, யாரும் இதை மறுக்கவில்லை என்று சொன்னீர்கள். ஆக, புத்த மதம் நாத்திகம் என்று அறிந்திருந்தும், அதில் கூறப்படாத ஒரு கொள்கையான, பிக்குகளை மக்கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்ற உங்கள் செய்தி புனையப்பட்டது என்று புரிந்து கொள்ளலாமே! எந்த மதத்தையும் , அதன் கொள்கை, கோட்பாடுகளை விளக்கும் அதன் வேத கிரந்தங்களில் இருந்துதான், மேற்கோள் காட்டிச் சொல்லவேண்டுமேயொழிய, அந்த அறிஞர் சொன்னார், இந்த அறிஞர் சொன்னார், இந்த புத்தகத்தில் இப்படி இருக்கிறது, இந்த லிங்கைப் பாருங்கள், கூகளைத் தட்டிப் பாருங்கள், புத்த பிக்குகளுடன் எனக்கு தொடர்பு இருக்கிறது என்று சொன்னால், அது எடுபடாது.