Jump to content

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1720
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by விளங்க நினைப்பவன்

 1. நீங்கள் சொன்ன மாதிரி குடும்பத்தில் குற்றம் செய்த ஒருவரை இவர் காப்பாற்றுவதற்காகவும் இருக்கலாம், மற்றவர்கள் இவர் மேல் பழியை போட்டு குற்றம் செய்தவரை காப்பாற்றுவதற்காகவும் இருக்கலாம். நியாயமான விசாரணைக்கு இவருக்கு வாதாட ஒரு வக்கீல் அவசியம்
 2. 1. இவர்தானா குற்றவாளி என உண்மையில் நிறுவ வேண்டும். இதை வீட்டுக்குள்ளேயே ஒருவர் செய்துவிட்டு ஒரு அதிகம் விளக்கம் இல்லாத ஒரு 71 வயசு கிழவர் மேல் பழியை போட்டு இருக்கவும் கூடும். ஆகவே நியாயமான விசாரணை அவசியம். 2. அப்படி நியாயமான விசாரணைக்கு இவருக்கு வாதாட ஒரு வக்கீல் அவசியம் 3. குற்றம் தீர்க்கப்பட்டால் - சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்கொடுமைக்கு இலங்கைக்குள் இருக்கும் அதிக பட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். 4. கல்லால் அடித்து கொல்லல், உறுப்பை நீக்குதல், போன்ற வதைகள் தேவையில்லை. உண்மை. அதன் சாயல்களை வெளிநாடுகளுக்கு வந்தவர்களிடமும் காணலாம்.
 3. மைக் ஒன்று கிடைத்ததே எனபதற்காக சிவ பூமி அறக்கட்டளையினர் புனிதம், சிவபெருமான் , இறைபக்தி என்று அடிச்சு விட்டுள்ளார்கள் என்றால் மிகவும் நல்லது. பிரச்சனையே இல்லை.
 4. போட்டிக்கு சிலைகளை வைத்து கொள்ளட்டும் அதற்கு ஏன் முஸ்லிம் நாடுகள் போன்று பயமுறுத்துகிறார்கள். [யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும். அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்தனர். ]
 5. நாங்கள் இலங்கை சென்ற போது எங்களில் வந்த இந்து பெண்கள் கூட பொட்டுவைக்கவில்லை. யாழ்பாணத்திலேயே பொட்டு வைத்தவர்களை நான் அதிகம் காணவில்லை. தலைக்கு பூ வைத்த ஒருவரையும் காணவில்லை.
 6. [இனவிருத்தி செய்யுங்கள் என்கிறது ...10உம் பெறலாம்..50 உம் பெறலாம்..] கந்தையா அண்ணா இனவிருத்தி செய்யுங்கோ செய்யுங்கோ 10 ம் பெறலாம் 50 ம் பெறலாம் என்று பூமியை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளிவிடுவது என்று தான் நிற்கிறார்
 7. ஓம் இனி ரஷ்ய மக்களுக்கு முன்பு போல படம் காட்டுவது சரிவராது தான்.
 8. யாழ் களத்தை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. களத்தை மீண்டும் இயங்கப் பாடுபட்டவர்களுக்கு நன்றி கிருகன் அய்யா சொன்னதையே நானும் மீண்டும் சொல்கிறேன்
 9. சிறி லங்காவுக்கு ரஷ்யா தான் நட்பு நாடு. ரஷ்ய புரினுக்கு வலது கரமாக ரஷ்ய தொலைகாட்சியாக பல புலம் பெயர் தமிழர்கள் இருப்பதனால் அவர்களை கொண்டு புரினிடம கேட்டுப்பார்க்கலாம் தானே.
 10. ராகா உலகம் முழுவதும உள்ள மக்கள் சதந்திரமாக இன்பமாக வாழவேண்டும் என்று விரும்பும் ஒருவர்.
 11. நீங்கள் சொன்னது சரி தான். ஏராளமான கதைகள் உலாவுகின்றன, பெரும்பாலும் கற்பனை கதைகள் தான். நேற்று யாழ்களத்தில் ஒரு தகவல் படித்தேன் முன்னைய கூட்டமைப்பின் தலைவரின் மகன் லிபியாவுக்கு சென்று கடாபியிடம் தமிழீழத்திற்கு ஆயுத உதவ கேட்டதாக. 2.எனக்கு சொன்னவர்கள் முற்கால கிழக்கு யேர்மனியில் இருந்து கனடா வந்த தமிழர்கள் பலர் கடலில் தத்தளித்ததாக கனடா அரசு அவர்களைகாப்பாற்றி அடைக்கலம் கொடுத்தது ஆனால் வீரகேசரியில் மேற்கு யேர்மனியில் இருந்து வெளிகிட்ட அகதிகள் என்று உள்ளது
 12. பார்க்கலாம். ஆனால் ரஷ்ய கொடுங்கோலன் புதின் ஆக்கிரமிப்பதற்காக உக்கிரைனை அழித்து ஒழித்தாலும் புரினுக்கு மண் சுமக்கின்ற அண்ணாமார் அதை மேற்குலநாடுகளில் இருந்து கொண்டுதான் பார்த்து இரசித்து மகிழ முடியும்.
 13. கட்டுரையாளர் இதபற்றி மேலும் விளக்கமாக தெரியபடுத்தி இருக்கலாம். மேற்கு யேர்மனியில் இருந்தா அல்லது முன்பு கொம்யுளிச நாடாக இருந்த யேர்மன் டெமொகிறரிக் றிபப்ளிக் என்ற கிழக்கு யேர்மனியில் இருந்தா வெளிகிட்டனர்.
 14. ஒட்டுமொத்த ரஸ்யாவையும் அழிக்க புட்டின் தயார் என்றாலும் [மோசமான கொடுங்கோல் சர்வாதிகாரிகள் அப்படிதான்.] ரஸ்ய தளபதிகள் தயாராக இருக்க மாட்டார்கள். இலங்கை தமிழ் ரஷ்யா பிரசாரகர்கள் தான் எமது ஆட்களிடமே இது ஆரம்பம் தான் இனி தான் இருக்கு உக்ரைனுக்கு புரினின் முறையான அடி என்று சொல்லி திரிகிறார்கள்.
 15. நான் நகைசுவைக்கு சொன்னது எனக்கு ஒரு தெரிந்தவர் ஒருவர் சொன்னார் இந்திய இராணுவம் இலங்கை வந்த போது இனி அமெரிக்கா புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுக்க போவதாக தனக்கு ஆட்கள் சொன்னார்களாம்
 16. ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புக்கெதிராக மிகவும் முக்கியமக நிற்க வேண்டியவர்கள் மேற்குலநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள். ஆனால் நம்பவே முடியவில்லை அதில் சில இலங்கை தமிழர்கள் தலை கீழாக நடக்கின்றனர். வாக்களிக்காதவர்கள் எல்லோருமே கொடுங்கோல் ரஷ்யாவுக்கு ஆதரவாக தான் இருந்திருப்பார்கள் ஆனால் வாக்களிக்கவில்லை என்று நினைத்து சந்தோசபட விட மாட்டீர்கள்
 17. ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது.தீர்மானத்திற்கு ஆதரவாக 94 நாடுகள் வாக்களித்துள்ளன. 14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. மேற்குலநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் ரஷ்யாவுக்கு ஆதராவாக தங்களால் வாக்களிக்க முடியவில்லையே என்று ஆழ்ந்த கவலை அடைந்தனர்.
 18. நான் கேள்விப்பட்டதன் அடிப்படையிலேயே பதிவிட்டிருந்தேன், எனக்கு வேறு எதுவும் தெரியாது. யார் எல்லாம் உங்களை தேடுவார்கள் என்று சிந்திக்கிறேள் அமெரிக்க உளவுத்துறை ரஷ்ய KGB இந்திய றோ
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.