• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Vankalayan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  426
 • Joined

 • Last visited

Everything posted by Vankalayan

 1. இப்போது கல்முனைக்குடியான் வெடி கொளுத்துறான், சாய்ந்தமருதான் ஓடி ஒளிகிறான்। இது ஒரு நல்ல முடிவு। கல்முனை தமிழ் பிரிவுக்கு முடிவு கண்டபின்னர் இரண்டையும் ஒரே நேரத்தில் வர்த்தமானியில் பிரசுரிக்க கோத்த கடடளையிட்டுள்ளார்।
 2. பாவம் இந்த அப்பாவி மக்கள்। இவர்களுடனும் அரசியல் வாதிகள் விளையாடுகிறார்கள்। இவர்களையும் விக்கி அணி, கஜேந்திரன் அணி என்று பிரித்து விடடார்கள்। ஒற்றுமையே பலம்।
 3. சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு என்பது பிழையான கருத்து। ரணிலும் அவருடன் சேர்ந்தவர்களும் சிங்களவர்கள்தானே। அவர்கள் தீர்வை கொடுக்கும்போது சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள மாடடார்கள்। ராஜபக்சேவின் கொடுக்கும் தீர்வு என்று சொல்லியிருக்க வேண்டும்। ராஜபக்சவின் ஈழம் கொடுத்தாலும் சிங்களவர்களுக்கு பிரச்சினை இல்லை। இங்குதான் இனவாத கூடாரம் இருக்கின்றது। எனவே எதை ராஜபக்சவினர் கொடுக்கிறார்களோ அதுதான் தீர்வு। ரணில் கிராம சபை கொடுத்தாலும் சிங்களவனுக்கு ஈழம் மாதிரித்தான் தெரியும்। அதுதான் இங்குள்ள கள நிலவரம்। ஆகாயத்தில் சிலம்பம் அடிக்கும் இணையதள போராளிகளின் எதிர் கருத்தும் வரவேற்கப்படுகின்றது।
 4. உங்களுக்கு இனப்பிரச்சினையின் அடிப்படையே தெரியாதபோது இப்படித்தான் பேசுவீர்கள்। எனவே உங்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை , பரிதாபப்படுகிறோம்। அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் , அவர்களுக்கு உங்களை தடை செய்ய உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள்। அப்படி என்றால் நீங்களும் அவர்களை தடை செய்யலாம் , நடவடிக்கை எடுக்கக்கலாம் உங்களால் முடியுமென்றால்। அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறீர்கள்। அப்படி என்றால் நீங்கள் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து அப்படி அவர் செய்யவில்லை என்று நிற்பிக்கலாம்தானே।நீங்கள் ஒன்றுமே செய்ய மாடீர்கள், செய்பவனாயும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பீர்கள்। எனவே உங்கள் வீடடை சுத்தப்படுத்திவிட்டு மற்றவன் வீடடை சுத்தப்படுத்த முயட்சியுங்கள்।
 5. கபித்தான், என்ன செய்வது। இப்படி இந்துக்கள் தனியே போனால் , கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் தனியேதான் போக வேண்டும்। வேறு ஏதும் வழி இருப்பதாக தெரியவில்லை। பார்ப்பம் மாற்று தலைமையும் வந்துவிட்ட்து। இணையப்போராளிகளும் இருக்கிறார்கள்। அவர்களாவது எதாவது செய்யட்டும்।பிரபாகரன் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது।
 6. நிச்சயமாக உங்களால் மன்னர் மாவட்த்திலிருந்து இந்த அமைப்பூடாக ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியாது। மன்னாரில் ஏறக்குறைய ஐந்து வீதமான இந்துக்களே இருக்கிறார்கள்। அப்படி என்றால் ஒரு இந்து அமைப்பால் வெல்வது மிக கடினம் । அத்துடன் வவுனியா, முல்லைத்தீவில் எந்தவொரு கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை। எனவே நீங்கள் செய்ய நினைப்பது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்। இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ வாக்குகள் மத ரீதியாக பிரியும்போது முஸ்லிம்களுக்கு அது வாய்ப்பாக அமையும்। அல்லது தமிழர் அல்லாத தரப்புக்கு வாய்ப்பாக அமையும்। இருந்தாலும் மன்னாரில் கத்தோலிக்கர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட்தாக அறிகிறேன்। அவர்களும் கத்தோலிக்க ஆயர்களின் துணையுடன் ஒரு சடடதரணி தலைமையில் போட்டியிடப்போகிறார்கள்। எனவே அவர்கள் நிச்சயமாக மன்னாரில் வெல்லுவார்கள்। இது தமிழர்களுக்கு ஒரு பின்னடைவே . நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।
 7. இப்போது இங்கு யார் மாற்றுத் தலைமை? சம், சும்மை தாக்கும் அன்பர்கள் இப்போது கஜயை தாக்க ஆயத்தமாகிக்கொண்டிருப்பார்கள்। உங்கள் இணையதள தாக்குதல்களை, போராளிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்। அதுக்கு மேலே ஒன்றும் எதிர்பார்க்க முடியாதுதானே।
 8. உங்கள் கருது சரியாக இருந்தாலும் தற்போதைய நிலவரம் வேறுமாதிரி இருக்கிறது। சட்டத்தரணி புனிதநாயகம் தலைமையில் கத்தோலிக்கர்கள் இப்போது ஒரு அணியாக போட்டியிடப்போகிறார்கள்। இந்துக்கள் தமது அணியாக போட்டியிடப்போகிறார்கள்। கத்தோலிக்கர்கள் வாக்குப்பலம் அங்கு அதிகமாக இருப்பதால் நிச்சயமாக இந்த அணி வெல்லக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது। இதட்கு அங்குள்ள ஆயர்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகின்றது। எனவே நிச்சயமாக அடைக்கலத்துக்கு இம்முறை ஆப்பு வைக்கப்படும் போலத்தான் தெரிகிறது। அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வளர்க்க முயட்சிக்கிறார்களே ஒழிய மக்களை பற்றி சிந்திப்பதில்லை। இதுதான் கள நிலவரம்।
 9. இவர் பொதுவாக சிங்கள கத்தோலிக்கர்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்। தமிழ் கத்தோலிக்கர்கள் பொதுவாக இவரை ஏற்றுக்கொள்வதில்லை। இந்த தாக்குதலுக்கு பிட்பாடு அவர் மடடக்களுப்புக்கு போய் அங்குள்ள தமிழ் கிறிஸ்தவர்களை உடனே சந்திக்கவில்லை। எல்லா இடங்களுக்கும் சென்றார், ஏன் உண்ணாவிரதமிருந்து ரத்தன தேரரை பார்க்க கண்டிக்கு சென்றார்। பத்திரிகைகள் இதைப்பற்றி கடுமையாக விமர்சிக்க தொடங்கினவுடன்தான் மட்டக்களப்புக்கு ஓடிப்போனார்। இருந்தாலும் சொல்லக்கூடிய அளவுக்கு ஏதும் உதவி செய்யவில்லை। ஆனால் சமாதானம் , ஒற்றுமை இப்படியாக வார்த்தைகளில்மட்டும்தான் இவரின் செயல்களை காணலாம்। மற்றப்படி இவர் ஒரு இனவாதிதான்।
 10. சரியான கருத்தை பதிவிட்டிருக்கிறீகள்। இருந்தாலும் விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியாவின் தாளத்துக்கு ஆடுபவர்கத்தான் இங்கு அடையாளப்படுத்தப்படுகிறார்। நேற்றும் டிவியில் ஒரு விவாதம் நடந்தது। அதில் கஜேந்திரன் பேசும்போது தங்களை இந்த புதிய கட்சியில் சேர்க்க வேண்டாமென்று இந்தியா தங்களிடம் கூறியதாக விக்னேஸ்வரன் தன்னிடம் கூறியதாக கூறினார்। விக்கியின் கட்சி சார்பாக பங்கேற்றவர் மறுப்பு தெரிவிக்கவில்லை। எனவே இங்கு எங்கே எப்போது ஒற்றுமை கட்சிகளிடம் உருவாக்கப்போகின்றது। அது வரைக்கும் எமக்கு தீர்வோ அல்லது நல்ல முடிவோ வரப்போவதில்லை। இருந்தாலும் மக்களின் தீர்மானம் , தெரிவு வருகிற தேர்தலில் தெரிய வரும் । அது வரைக்கும் எதுவும் கூற முடியாது।
 11. மஸ்தான் அவர்கள் ரிசதைபோல ஒரு தீவிரவாதி இல்லை। எனவே அவர் ஹாஜியார் ஹோட்டலாக மாற்ற மாட்டார் என்று கூறலாம்।
 12. இப்போதைக்கு அப்படி நடக்க சந்தர்ப்பம் இல்லை। இப்போது அவர் வாழ்வா , சாவா என்ற நிலைமையில் இருக்கிறார்। ராஜபக்ச ஆட்சி அவரை நிராகரித்துவிடடபடியால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை। நிறைய வழக்குகளை எதிர்நோக்கி இருக்கிறார்।எதிர்க்கட்சி இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு ஆட்சியை நினைத்துப்பார்க்க முடியாது। எனவே அல்-அக்ஸா பல்கலைக்கழகமாக மாற இப்போதைக்கு சந்தர்ப்பம் இல்லை।
 13. யாழ்பாணத்தவர்கள் மற்றைய மாவட்ட்ங்களில் அநேக வருடங்களாக அரச அதிபராக இருந்துள்ளார்கள்। எனவே மட்டு நகரை சேர்ந்த ஒருவர் யாழுக்கு அரச அதிபராக வருவது ஒன்றும் பெரிய விடயம் இல்லை। அங்குள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர் தனது சேவையை முன்னெடுப்பர் என்று எதிர்பார்க்கிறோம்।
 14. சகோதரப்படுகொலை செய்தவர்கள், இயக்கத்திலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாடு ஓடியவர்கள் இப்படியாக பேசுவார்கள், எழுதுவார்கள்। அதெல்லாம் பிரச்சினை இல்லை। தேர்தல் வருகுது மக்கள் யாரை தெரிவு செய்கிறார்கள் எண்டு பாப்போம்।
 15. சரியாக சொன்னீர்கள்। சிலருக்கு இது விளங்குவதே இல்லை। விளங்கினாலும் விளங்காதவர்கள்போல நடிப்பார்கள்।
 16. உங்களுக்கு நல்ல விளக்கம் இருக்கு। முன்னேற இடமுண்டு। நீங்கள் நினைக்கிறதை எல்லாம் எழுதக்கூடாது பாருங்கோ। நீங்கள் எவ்விடம்?
 17. இவர்களில் முக்காவாசி பேர் இயக்கத்தில் இருந்து கொள்ளையடித்துக்கொண்டு ஓடின கூடடம்। இப்படியே நாட்டில பிரச்சினை இருந்தால் அதுகளுக்கு கொண்டாடடம்தானே। அதுதான் சும்மா துள்ளுதுகள்। மத்தபடி ஒன்றுக்கும் உதவாத நபர்கள்।
 18. அதாவது ஆயுதம் தூக்கி மக்களை பலகீனமாகினவர்கள், பிச்சைக்காரராகினவர்கள் எல்லாம் இப்போது நல்லவர்கள், சடட புத்தகம் தூக்கியவர்கள் எல்லாம் கெடடவர்கள்। மக்களை காட்டிக்கொடுத்து , சகோதர படுகொலை செய்தவர்கள் எல்லாம் வேதம் ஓதுகிறார்கள்। ச்டடம் படித்தவன் எல்லாம் இந்த அரசியல் இல்லாவிடடாலும் பிழைக்க வழி இருக்கு। உங்களுக்கு ஏது வழி। கொள்ளையடிப்பதுதான் உங்கள் வழியாக மாறும்। அதைவிட இப்படியே பிழைத்து போங்கள்।
 19. Dash அவர்கள் யதார்த்தமான வாதத்தைத்தான் வைத்தார்। இலங்கையில் உள்ள நிலைமை அப்படி। எவ்வளவுதான் தமிழ் வாக்குகள் கிடைத்தாலும் சிங்களவர்களின் ஆதரவில்லாமல் ஆட்சியை பிடிக்க முடியாது। இருக்கிற பிசாசில் எது நல்ல பிசாசு என்பதுதான் எமது தெரிவு। இல்லாவிடடாள் இருக்கிறதையும் இழக்க வேண்டியதுதான்। சஜித்தை பொறுத்தளவில் தமிழரை ஆதரிப்பவர் என்று சொல்ல முடியாது। அப்படி செய்வதாக இருந்தால் தனது அரசியலுக்காகத்தான் அப்படி செய்வார்। ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் , அவருடைய தந்தையார் புலிகளினால் கொல்லப்பட்டார்। எனவே அவருக்குள் ஒரு காயம் இருந்துகொண்டே இருக்கும்। அமெரிக்கா எதாவது ஒரு காரியம் செய்யுமா இருந்தால் அது தனக்கு சாதகமான விளைவை தருவதாக இருக்க வேண்டும்। இதட்கு பின்னால் நிறைய காய் நகர்த்தல்கள் இருக்கின்றன। அத்துடன் சவேந்திர சில்வா சொல்லி இருக்கிறார் தனக்கோ , தனது குடும்பத்தினருக்கோ அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று। எனவே சவேந்திர சில்வா அல்ல இங்கு பிரச்சினை। ஓர் போர் குற்றவாளியை இலங்கை அரசு ராணுவ தளபதியாக நியமித்திருக்கிறது என்பதுதான் பிரச்சினை। இது வருகிறதான மனித உரிமைகள் பேரவையில் எழுப்பப்படலாம்। அமெரிக்கா ஏன் இப்போது இந்த பிரச்சினையை எழுப்பியது? தனது ராணுவ தந்திரோபாயத்தை பலப்படுத்த இலங்கையூடாக நிறையவே செய்ய வேண்டி இருக்கிறது। ரணிலின் ஆட்சி காலத்தில் செய்ய முட்பட்டதை ராஜபக்சவின் செய்ய விடவில்லை। இவர்கள் ஆட்சியில் இப்படியான பயமுறுதல்களூடாகவே தனது காரியத்தை செய்ய முட்படுகிறது। மேலும் கோத்தாவின் குடியுரிமை சம்பந்தமான பெயர் பட்டியலில் இன்னும் கோத்தாவின் பெயர் வரவில்லை। எனவே அமெரிக்கா ஒரு நோக்குடன்தான் செயல்படுகிறதே ஒழிய தமிழர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுக்க அல்ல।
 20. இந்த ஐம்பது ஆண்டுகளில் மக்களுக்கு டெலோவினால் ஏதும் நன்மைகள் கிடைத்ததா என்றால் விடை பூச்சியம்தான்। இவர்கள் இந்த கட்சியை பிழைப்புக்காக நடுத்துகிறார்களே ஒழிய வேறொன்றும் இல்லை।