முரளீதரன்

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    1
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About முரளீதரன்

  • Rank
    புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

  1. தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலினிது கொள் தாமரைக் கண்ணா னுலகு இந்தக் குறளின் பொருள் பலரும் சரியாக புரியாது மெலெழுந்தவாரியாகச் சொல்லிச் செல்கின்றனர். வள்ளுவர் தமிழில் தோய்ந்தவரும் தாமரைக் கண்ணனை பல இடங்களிலு சுட்டுவதாலும், அதன் பொருள் இவ்வாறு கொள்ள வேண்டும் என்பதே சரியாக இருக்கும். ஏன் எனில் இந்த குறள் பால் அதிகாரத்தில் வருகிறது. புணர்ச்சியில் துய்த்தால் அது சிற்றின்பமேயன்றி பேரின்பமாக இருக்காது. இருக்க முடியாது. வள்ளுவன் சிற்றின்பத்தை தூக்கிப் பிடிப்பவன் அல்ல. அவன் நோக்கும் அதுவல்ல என்பது சாலத் தெரிந்த ஒன்று. அப்படி இருக்க இதன் பொருள் தாழ்வீழ்வார் என்பது வைகுண்டத்தை அடைந்த ஒரு ஆத்மா(இங்கே ஆத்மா என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்றாலும், தாமரைக் கண்ணனின் தாளை அடைந்தார்க்கு வைகுண்டப் ப்ராப்தியே மிகும் என்பதால் ஆத்மா என கொள்ளப்பட்டது) எப்படி பேரின்பத்தில் துய்க்குமோ அதைப் போல என கலவியற்கு சிற்றின்பம் எனச் சொல்கிறார் எனப் பொருள் கொள்வதே சாலச் சிறந்ததாகும். அதாவது கலவியற்கு சிற்றின்பமே பேரின்பம் என்றாகும் எனக் குறிப்பிடுகிறார் இங்கே. எனவே அவர் திருமாலை குறைத்து மதிப்பிட்டார் எனவே வைணவர் சம்மந்தம் இல்லைனெக் கொள்வது சரியான நோக்காகது.