Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Kapithan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  3,477
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Kapithan last won the day on September 8 2020

Kapithan had the most liked content!

2 Followers

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

Kapithan's Achievements

Grand Master

Grand Master (14/14)

 • Reacting Well Rare
 • Dedicated Rare
 • Very Popular Rare
 • First Post
 • Collaborator

Recent Badges

950

Reputation

 1. உங்களுக்கு இந்தப் பாடல் பிடித்ததோ இல்லையோ, சிங்களத்தைக் குறை கூறுவது பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
 2. நீங்கள் கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னுடைய தேவை , நாங்கள் எங்கே நிற்கிறோம், எங்கள் தெரிவுகள் என்ன, எங்கள் பலம் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். என்பதே. இதன் அடியாக மட்டும்தான் நாங்கள் சரியான முடிவுகளையும்,இலக்குகளையும் எட்ட முடியும் என்பது என் நம்பிக்கை. இதற்காகத்தான் நாகதஅ வினை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறேன். ""தற்போது எங்களுக்கு தலைமை என்று எதுவுமே இல்ல. நாங்கள் அனாதைகள்"" இதிலிருந்துதான் எதுவுமே ஆரம்பமாக வேண்டும்.
 3. 1) உருத்திரகுமாரன் வன்முறையைத் தூண்டுவதைத் தவிர மிகுதி எல்லாவற்றையும் செய்யலாம். அவருக்குள்ள எல்லை தொடர்பாக இங்கு எவருக்குமே சந்தேகம் இல்லை 2) செயற்பட முடியாத அமைப்பை எதற்காக வைத்திருக்க வேண்டும்? ஆகக் குறைந்தது தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்பதை வெளிப்படுத்த முடியாத நிலையிலா உருத்திரகுமாரன் இருக்கிறார்.. 3) நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். இதைக் கதைப்பதால் எதனையும் உன்னால் மாற்ற முடியாது என்றா.. ஆகக் குறைந்தது, இதை வாசிப்போர்க்கு சிறிதாக ஏதேனும் புரிந்தால் நன்மைதானே நான் தெரிந்துகொண்ட உண்மைகளை மற்றவர்களும் அறிந்துக்கொள்ளட்டும். ஆக உருத்திராவை இயக்குவது வேறு நபர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் போல
 4. ஐயா கோசான், இங்கே நான் படித்தவர்கள் என்று கூறியது நீங்கள் கூறும் இந்தக் கூட்டத்தை அல்ல. இவர்கள் புலிகளின் பெயரால் உயிர் வாழ்பவர்கள். புலிகளின் இருப்புத்தான் இவர்களுக்கு சோறு போடும். இவர்கள் ஒருபோதுமே புலிகள் அழிய வேண்டும் என விரும்பியதில்லை. ஆயுதப் போராட்டம் தொடர வேண்டிய கட்டாயம் நீங்கள் கூறிய ஆட்களுக்கு இருந்தது. அதுதான் அவர்களுக்கு சோறு போட்டது. ஆனால் நான் கூறும் ஆட்கள் வெளிநாடுகளில்உயர் பதவிகளில் இருந்து கொண்டு மறைமுகமாக(semi), புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக காட்டிக்கொண்டவர்கள். வெளிநாடுகளில் புலிகளின் வழிகாட்டிகளாக, ஆலோசகர்களாக, நலன் விரும்பிகளாக காட்டிக்கொண்டவர்கள். ஆனால் வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் கையாட்களாகச் (handlers) செயற்பட்டவர்கள். இவர்களது ஒரே நோக்கம் புலிகளிடம் அதிகாரம் போகக் கூடாது. போராட்டம் அழிந்தாலும் பிரச்சனை இல்லை. புலிகளின் கைகளில் அதிகாரம் போய்ச் சேரக்கூடாது. அந்த விடயத்தில் இவர்கள் மிகத் தெளிவாக இருந்தார்கள். தற்போது இதனை நாளாந்தம் நான் கண்கூடாகப் பார்க்கிறேன். கதிர்காமர் கூல் ஆட்கள் வெளிப்படையானவர்கள். அவர்களிடம் தங்கள் நம்பிக்கை சார்ந்த நேர்மை இருந்தது. அவர்கள் சார்ந்த செயல்களும் சேதங்கக்ளும் வெளிப்படையானவை. ஆனால் என்னால் கூறப்படும் ஆட்களைத்தான் நாங்கள் எல்லோரும் தற்போதும் பெரிதும் நம்பியிருக்கிறோம். திரும்பவும் கூறுகிறேன், உருத்திரகுமாரன் சுயமாக முடிவுகள் எடுப்பவரல்ல. அவரை இயக்குபவர்கள் வேறு நபர்கள். அவர்களுக்கான ஆணை/ஆலோசனை கேபியிடம் இருந்து வருகிறது. கேபி யாரிடமிருந்து உத்தரவுகளை பெறுகிறார் என்று நான் சொல்லவா வேண்டும்..
 5. அது அவங்களுக்குப் பிரச்சனையோ இல்லையோ, அது எனக்குப் பிரச்சனை. என்ன நா சொல்றது சரிங்தானே மஹாத்தயாவ்..
 6. கட்டுரையில் வந்த மிகப் பெரும்பாலானவை தொடர்பாக எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் உருத்திரகுமாரன் விடயத்தில் அவருக்கு பின்னால் நின்று செயற்படுபவர்களைப் பார்த்ததில், அறிந்ததில், அனுபவப்பட்டதில், நாகத அரசு உண்மையில் தமிழர்களை செயற்பட விடாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட இலவம் காய். மக்கள் அதைப் பார்த்து, பார்த்து, பார்த்து,........ ஏமாந்து போவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பொம்மை. இதனைக் கட்டுப்படுத்துவது கேபி ஊடாக இலங்கை அரசு. கேபியின் முகவர்கள் இருப்பது கனடா. ஆக ஒன்று மட்டும் உண்மை. அதாவது, புலிகளின் கையில் அதிகாரம் போகக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது தமிழர் தரப்பில் ஒரு படித்த கூட்டம். போராட்டம் அழிந்தாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகாரம் மட்டும் புலிகளின் கைகளிற்கு போகக் கூடாது என்பதில் இவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள். இவர்களது ஆலோசனையை நம்பியதுதான் புலிகளின் வீழ்ச்சிக்கும் போராட்டத்தின் அழிவுக்கும் காரணம் . தற்போதைய சூழலை அப்படியே பேணுவதுதான் இலங்கை அரசின் தேவை. இப்படியே இன்னும் 10 வருடங்கள் போனால் அதற்கப்பால் தமிழருக்கு எதுவுமே இல்லை.
 7. நிலத்தைக் கிளறினால் (உழுதால்) மறைந்திருப்பதெல்லாம் வெளியே வரத்தானே வேண்டும்.
 8. அடியும் இல்லை நுனியும் இல்லை. யாரப்பா இதை இணைத்தது..
 9. இஞ்ச நடக்கிறது West க்கும் India விற்கும் இடையிலான போட்டி. ஈழத் தமிழருக்கு யார் தலைமை தாங்குவது என்கின்ற போட்டி. இந்தியா போட்டியில் முன்ணணியில் இல்லை என்பது மட்டும் உண்மை.
 10. வானம் மேற்கால கறுக்கோணும் அப்போதுதான் மழை. அனேகமாக இது கோடை இடியாகத்தான் இருக்கும் எண்டு நினைக்கிறன்.
 11. சுமந்திரனை வைத்துத்தான் கிறீத்துவர்களை எடைபோடுவீர்களோ... இது பேணியை தலைகீழாக(குப்பற வைத்து ) வைத்து அரிசி அளப்பது போல் அல்லவா இருக்கிறது. அளவை பிழையே...
 12. முழுதும் நனைந்த பின்னர் முக்காடிட்டுப் பிரயோசனமில்லீங்க சாத்தான். குறிப்பு; 1) சுமந்திரனுக்கும் எனக்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை. தனிப்பட்ட ரீதியில் அவரை எனக்குத் தெரியாது. சுமந்திரனின் அரசியலில் கூட எனக்கு உடன்பாடில்லை 2) மதத்தை அடிப்படையாக வைத்து தமிழரை பிரித்தாளுவதற்கு இந்தியா மிகவும் மும்முரமாக முயற்சிக்கிறது. அதனை பல சந்தர்ப்பங்களில் இங்கே கூறியுமுள்ளேன். அதற்கு எனது எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளேன். இந்த அடிப்படையில்தான் சுமந்திரனிற்கெதிரான தூற்றுதலை நான் எதிர்க்கிறேன். சுமந்திரன் மட்டுமல்ல, அடைக்கலநாதன், ஆனல்ட்டுக்கெதிரான இந்தியாவின் சூழ்ச்சிகளையும் நான் நன்கறிவேன். என்னிடம் ஆதாரமும் இருக்கிறது. இங்கே சாதாரண தமிழ் மக்களைப்பற்றி எதனையும் நான் கூறவில்லை. 3) யாழ் களத்திலுள்ள பலரும் இந்தியாவின் இந்த கொள்கைக்கு ஆதரவு. 4) இந்தியாவை தொடர்புபடுத்துவது நான் அல்ல. மேலேயுள்ள செய்தித் தளம் கூறியுள்ளது தங்களுக்குப் புரியவில்லையோ.. உங்களுக்கு இது தெரியாதென்று நான் நம்பவில்லை. உண்மையில் தெரியாதென்றால் கண்களைத் திறந்து பாருங்கள். தெரியும், புரியும். இதன் பின்னாலுள்ள ஆபத்தும் புரியும்..
 13. மீனவ நண்பனாக மாறிய சுமந்திரன்... செய்தி மூலம்; ahalnews.com இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம் ஆரம்பம் October 17, 2021 8:42 am No Comments Share on facebook Share on twitter Share on linkedin Share on whatsapp வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கோரி முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துரை வரையான கடல் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது. முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் இருந்து ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பமானது. இதில் ஆரம்பத்தில் 50ற்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்களும் அரசியல் பிரமுகர்களும் மக்களும் கறுப்பு கொடிகளை தாங்கிய வண்ணம் கலந்துகொண்டுள்ளனர். இதேநேரம் பருத்தித்துறை செலும்போது, அந்த வழியில் உள்ள மேலும் பல மீனவ சங்கங்கள் இந்த போராட்டத்தில் இணையத் தயாராக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பருத்தித்துறையை அடையும் சமயம் 200ற்கும் மேற்பட்ட படகுகள் இதில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு கடல் பேரணி வெற்றிகரமாக நகர்த்த வண்ணம் உள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.