Jump to content

Kapithan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  3809
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by Kapithan

 1. 1) தீவகம் EPDPயின் கோட்டை என கூறப்பட்ட காலம் எது? அப்போ அங்கே இருந்த மக்கள் கூட்டம் எது ? அவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவினுள் அடங்குவர் ? பிற மக்கள் கூட்டத்திற்கு என்ன நடந்து? அவர்கள் அப்போது எங்கே இருந்தனர்? ஏன் அவர்கள் தீவகத்தில் இருக்கவில்லை? 1A) அங்கே EPDPக்கு வாக்களித்த மக்கள் யார்? ஏனைய மக்கள் ஏன் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை / வாக்களிக்க முடியவில்லை 2) பாசையூர், குருநகர் மக்களில் எத்தனை சதவிகிதம் EPDPக்கு வாக்களித்தனர் ? இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் சமூகத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன? 3) " குருநகர் ஈபிடிபி ஒட்டுக்குழுவின் கோட்டை. புலிகள் காலத்திலே அவை ஒரு மாதிரித்தான்" இது இந்தத் திரியில் நீங்கள் எழுதியது நெடுக்ஸ். 4) கேட்கலாம். ஆனால் கேட்க மாட்டீர்கள். மீசையில் மண் ஒட்டவில்ல. ஆனாலும் எதற்கும் ஒருக்கால் மீசையைத் தட்டி விடுங்கள் 5) இந்த அண்டப் புழுகையும் ஆகாசப் புழுகையும் வேறு எங்காவது கூறுங்கள் நெடுக்ஸ். இந்த மக்கள் கூட்டம் கொஞ்சம் முரண்டு பிடிப்பவர்கள்தான. ஆனால் நீங்கள் கூறு அளவுக்கெல்லாம் அப்படி எதுவும் அங்கே நடைபெற்றது கிடையாது. 6) டக்கி அங்கிருந்து கொடி பிடித்தார் என்பதிலிருந்து அந்த மக்களை எப்படி தீர்ப்பிடுவீர்கள் ? உங்கள் கருத்துகள் முதிர்ச்சியற்றவை என்று கூறுவதா அல்லது சாயம் கரைந்தோடுகிறது என்று கூறுவதா..?
 2. நீங்கள் என்னதான் போர்த்தி மூடினாலும் கொண்டையை மறைக்க மறந்தீட்டீங்களே சாத்..
 3. சூட்சுமமாகச் சொல்லவில்லை. நீங்கள் தெளிவான தகவலோ அல்லது நேரடி அனுபவமோ இன்றி செவிவழிச் செய்தியின்பால் ஒரு மேலோட்டமாக கருத்துரைக்கிறீர்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன். எனது கருத்து பிழை என்றால் குருநகர் மக்களைப்பற்றி உங்களுக்கு தெரிந்த விடயங்களை கூறுங்கள். சரியென்றால் சரியென்று கூறுகிறேன. இல்லாவிட்டால் உங்கள் முதல் கருத்தைத் திருத்தி விடுங்கள். EPDPயின் கோட்டை என்று அம்மக்களை பொத்தாம்பொதுவாக கூறி இழிவுபடுத்தாதீர்கள்.
 4. யாழ் நகர கட்டமைப்பு தொடர்பாக நெடுக்ஸ்க்கு பெரிதாக எதுவுமே தெரியாது என்பது என் கணிப்பு. அதே போன்று ஈபிடிபி நின்று பிடிப்பதற்கான அடிப்படை சமூக உளவியல் காரணங்கள் எதும் உங்களுக்கு புரியவில்லை/தெரியவில்லை என நம்புகிறேன்.
 5. இதனை நம்புவதற்கென்றே இந்தியாவில் ஒரு கூட்டமிருக்கிறது. அண்மையில் இலங்கையில் இருக்கும் RAW முகவருடனான கலந்துரையாடல் ஒன்றில் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பிரஸ்தாபித்த போது அவர் கூறினாராம் "அம்பாந்தோட்டை எங்கள் குண்டுவீச்செல்லைக்குள்தான் இருக்கிறது" என்று. அம்பாந்தோட்டை இந்தியாவின் குண்டு வீச்செல்லைக்குள் இர்ருக்கிறதென்பது சீனாவுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்தான.
 6. "விட்டால் குடும்பி அடிச்சா மொட்டை" ரகம் என்கிறீர்கள். ம்ம்ம மம். விறகு கொத்தும்போது மொக்கு என்று ஒரு பகுதி வரும். அதை எப்படிக் கொத்தினாலும் பிளப்பது கடினம். அதை சூளைக்கு உள்ளே வைத்து எரித்தால்தான் உண்டு. அல்லது நெஞ்சாங்கட்டையாக போடவேண்டும். பார்ப்போம் அநாகரிகத்தின் உச்சம் எதுவரை செல்லும் என்று (கத்தரிக்கோல்காறரே அறம் புறமாக வெட்டித் தள்ளுகிறீர்கள். எனது எழுத்தில் எது பிழைத்தது என்று கூற முடியுமா? இல்லாவிடி கண்ணை மூடிக்கொண்டு கத்தரி பிடிப்பதோ? )
 7. எனக்கு இந்தத் தீ விபத்தில் சந்தேகம் உள்ளது. உயிர்ச் சேதமோ, அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பது நல்ல விடயமாகினும் அதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதேனும் ஊழலை மறைப்பதற்காக, ஆவணங்கள் அடங்கிய தொகுதியை எரித்துள்ளார்கள் என நினைக்கிறேன்.
 8. யாழ் வைத்தியசாலை வைத்தியர்களை அரசியல்வாதிகள் என்கிறீர்கள்...ம்..ம்ம்..நீங்கள் கூறுவது சரியாகவும் இருக்கலாம். யார் கண்டார்.
 9. அரசியல்வாதிகளும் அவர்களின் நோக்கங்களும், வைத்தியர்களும் அவர்களது சேவைகளும் ஒன்றா ?
 10. இவரது கோபத்தின் பின்னாலிருக்கும் நியாயமான காரணம் புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் சாதிப் பாகுபாடுதான் இவரது கோபத்திற்கு பின்னாலிருக்கும் உண்மையான காரணமென்றால் அதற்கெதிராகத்தானே இவரது போராட்டம் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவரது செய்கை தேசியம், சைவ சமயம், தமிழ் இனத்திற்கெதிரானதாக இருக்கிறது . அப்படியென்றால் இவரது செய்கைகள் அனைத்தும் இவரது சுயநலமான சிந்தனையின்பாற்பட்டதே. அற்பன்.
 11. பாதிரியார்கள் நிச்சயம் கோவிக்க மாட்டார்கள். ஆனால் மாதா கோவிலில் வழிபாடு நடைபெற்றிருந்தால் யாழ் களத்தில் கூட பலர் பொருமியிருப்பர.
 12. மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இவற்றிற்கெல்லாம் திறப்பு விழா. அதற்கு வரிசையில் நின்று படம் வேறு? மூன்றாம் உலகம் என்று கூறுவது சரிதான்.
 13. குடும்பம் என்கிற அமைப்பு ஒன்று இருப்பதே பலருக்குத் தெரியாது.
 14. எவற்றிற்கெல்லாம் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம் ? மலசல கூடம் கட்டி, அதன் திறப்பு விழாவிற்கு வரிசையில் நிற்காதவரைக்கும் சகித்துக்கொள்ளலாம்.
 15. கம்ப வாரிதியின் ஆரம்ப நாட்களில் அவர் எனது கல்லூரி நிகழ்வொன்றிற்கு வந்து அங்கு சொற்பொழிவாற்றும்போது "தான் வேலை எதுவும் இல்லாது திரியும்போது தனது தாயார் தன்னை ஏசி வீட்டிலிருந்து விரட்டியதாகவும், தான் சொற்பொழிவாற்றத் தொடங்கி சிறிது சிறிதாக பிரபலமடையத் தொடங்கியதன் பின்னரே அவரது ஏச்சு குறைந்ததாக" கூறியது இப்போதும் என் நினைவில் நிற்கிறது. (அவர் St. John's College மாணவர் என்பது என் நினைவு ) தாயார் இன்னும் கூடுதலாக ஏசியிருக்கலாமென்று தற்போது தோன்றுகிறது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.