Jump to content

பசுவூர்க்கோபி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    418
  • Joined

  • Last visited

Posts posted by பசுவூர்க்கோபி

  1. On 12/3/2024 at 15:35, alvayan said:

    யதார்த்தம்...

    இப்ப தானே அரசமரம் இல்லாமலேயே அலுவல்கள் நடக்குது.

    அரசமரத்துக்கு மறுபெயர்= தொல்பொருள் திணைக்களம்.

    நாட்டிலே பஞ்சமே தலைவிரித்த தாண்டவமாடுது...இங்கு என்னவென்றால் ..அலுவலகமில்லா அமைச்சுக்கு உவ்வளவு நிதி ஒதுக்கி ..காணி பிடிப்பு நடக்குது...

    மகிழ்வோடு நன்றிகள்

  2. 16 hours ago, Kavi arunasalam said:

    நிலவு என்றால் பெண்

    சந்திரன் என்றால் ஆண்

    ஆகா உண்மைதான்கவியே
    பொட்டதுபோல் என்கண்ணுக்கு தெரிந்ததால்....
    மகிழ்வோடு நன்றிகள்.

    • Like 1
  3.  

    சர்வதேச மகளீர் தினம்(08.03.2024) அதற்காக எழுதிய கவிதையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றிகள்.

     

    தாயின்றி நாமில்லை.!

    ************************

    பூமித்தாய் என்று சொல்லும்

    புவிகூடத்தாய் தானே-வானில்

    பொட்டதுபோல் சுற்றிவரும்

    நிலவுகூட பெண்தானே

    நீலத்தால் சாறிகட்டி நிலம் காக்கும்

    கடல் அவளும் தாய் தானே

    நித்திலத்தில் தாய்க்கு நிகர்-எதுவும்

    இல்லை என்பேன் சரிதானே.

     

    சிந்து,கங்கை,யமுனை,சரஸ்வதி

    சித்தப்பா பிள்ளைகளா?

    காவேரி,குமரி,கோதவரி,நர்மதா.

    பெரியப்பா பிள்ளைகளா?

    இல்லை இல்லை இயற்கை

    ஈண்றெடுத்த நதித் தாய்கள்

    இவைகளும் பெண் பெயாரால்

    உயிர்த்தார்கள்.

     

    பூமிதன்னில் பெண்ணினமே

    இல்லையென்றால்

    போட்டியிடும் ஆண்களெங்கே?

    பொறுமையெங்கே?

    ஆணினம்தான் அகிலத்தில்

    தனித்திருந்தால்

    அன்பு எங்கே? காதல் எங்கே?

    இனிமை எங்கே?

     

    கற்பனைக்கு பெண் இனமே

    இல்லையென்றால்

    கவிஞரெங்கே?கலைஞர் எங்கே?

    கலைதானெங்கே?

    கர்ப்பத்தில் எமைத் தாங்கி

    வளர்க்காவிட்டால்

    கல்வியெங்கே? கருணையெங்கே?

    காசினிதானெங்கே?

     

    பொன்னுலகம் பெண்

    இனத்தை மறந்திருந்தால்

    புதுமையெங்கே,புலமையெங்கே

    புரட்சியெங்கே?

    மண்ணகமும் வாழ்வதற்காய்

    படைத்து தந்த

    மாதவத் தாய்யினத்தை

    மதித்து வாழ்வோம்.

    அன்புடன் -பசுவூர்க்கோபி.

    • Like 8
  4. On 12/3/2024 at 23:49, suvy said:

    நல்ல கவிதை..........பாராட்டுக்கள் கோபி ..........!  👍

     

    On 12/3/2024 at 23:49, suvy said:

    நல்ல கவிதை..........பாராட்டுக்கள் கோபி ..........!  👍

    கிழ்வோடு நன்றிகள்

    On 13/3/2024 at 09:35, Kavi arunasalam said:

    ரசித்த வரிகள்.

     

    மகிழ்வோடு நன்றிகள்

  5. 15 hours ago, ஈழப்பிரியன் said:

    உங்கள் கவிதையுடன் இந்தப் பாட்டு ஒத்துப் போவதால் இணைத்துள்ளேன்.

    கவிதைக்கு பாராட்டுக்கள்.

    அருமையான பாடல் நாம் வாழ்ந்த அன்றைய வாழ்வியலை நினைத்து கண்கலங்க வைத்துவிட்டது.
    ஈழப்பிரியன் அவர்களுக்கு என் உளமாந்த நன்றிகள்.

    9 hours ago, suvy said:

    நல்ல கவிதை..........பாராட்டுக்கள் கோபி ..........!  👍

    ஊக்கம் தரும் உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு உளமார்ந்த நன்றிகள்.

  6. 16 hours ago, நிலாமதி said:

    உண்மை தான் அன்று  போல் இன்று இல்லை. இழந்ததை நினைத்து வருந்துவதை விட இனி என்ன செய்யலாம் என சிந்திப்போம். கடந்துபோன காலமும் பேசிய வார்த்தைகளும் மீள வருவதில்லை. 
     

    30 வருடத்தின் பின் எனது ஊருக்குப் போயிருதேன் எல்லாமே மாறிவிட்டது.அந்தப்பழமையை நினத்து கவலையடைந்தேன். அப்பொழுது என்னுக்குள் வந்த வரிகள்தான் இவை தற்போது நீங்கள் சொல்வதுதான் உண்மை.

    உளமார்ந்த       நன்றிகள் நிலாமதி அக்கா.

  7. 21 hours ago, ரசோதரன் said:
    அருமையான கவிதை...........👍👍
     
    ஊர்ச் சந்தியில் ஒரு அரசமரம் நின்றது. நான் பிறப்பதற்கு முன் இருந்தே அது அங்கே இருந்தது. பின்னர் எங்களுடன் சேர்ந்து எல்லா குண்டு வீச்சுகளையும், ஷெல் அடிகளையும் அது தாங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக முறிந்து கொண்டு வந்தது. நான்கு வருடங்களின் முன் அங்கு போயிருந்த பொழுது, சந்தியில் ஒரு புதிய இள அரசமரம் இப்பொழுது நிற்கின்றது.
     
    புதிய மரம் நிற்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியே என்றாலும், மறு பக்கம் எப்பொழுது இரவோடிரவாக அவர்கள் ஒரு சிலையை வைத்து விடுவார்களோ என்றும் தோன்றியது.....போன பழைய மரம் போனதாக இருக்க, வெறும் சந்தி இருந்தாலும் பரவாயில்லையோ என்று தோன்றுகின்றது இந்தக் கவிதையை வாசித்த பின்.  

     

    21 hours ago, ரசோதரன் said:
    மகிழ்வோடு நன்றிகள் ரசோதரன்

     

    21 hours ago, ரசோதரன் said:
     

     

    21 hours ago, ஈழப்பிரியன் said:

    இப்ப தானே அரசமரம் இல்லாமலேயே அலுவல்கள் நடக்குது.

    அரசமரத்துக்கு மறுபெயர்= தொல்பொருள் திணைக்களம்.

    உண்மையாகச் சொன்னீர்கள்.
    உளமார்ந்த நன்றிகள்.

  8. அன்றுபோல் இன்று இல்லையே!

    ***************************************

    அதுவொரு கடல் சூழ்ந்த அழகிய கிராமம்

    அதிகாலைப் பொழுதும் அந்திமாலையும்

    அத்தியும்,இத்தியும் ஆலமரமும் அதிலிருந்து

    கத்திடும்,கொஞ்சிடும் பறவை இனமும்

    ஏரும் கலப்பையும் வண்டிலும் மாடும்

    உழைப்போர் வியர்வையில் வளரும்

    சாமையும்,வரகும்,குரக்கனும்,சோளனும்

    பனையும்,தென்னையும் பனாட்டும்,ஒடியலும்.

     

    வேலிகள் தோறும் கொவ்வையும்,குறிஞ்சாவும்

    தரவை நிலமெங்கும் மூலிகைச் செடிகளும்

    கடலும் காற்றும் மீன்களும்,இறாலும்

    இயற்கை மாறாத மாரியும்,கோடையும்

    இனிமை தருகின்ற கருப்பணிக் கள்ளும்

    இனிக்க இனிக்க பேசிடும் தமிழும்

    கொடுத்து கொடுத்தே மகிழ்திடும் மனிதரும்

    குடும்பங்கள் பிரியா வாழ்ந்த இணையோரும்.

     

    உறவும் உரிமையும் கூட்டுக் குடும்பமும்

    உயிர்கள் அனைத்திலும் காட்டிடும் அன்பும்

    பொருட்களை மாற்றும் பண்டமாற்றமும்

    பொழுது முழுதும் உழைத்திடும் தன்மையும்

    பள்ளியும் படிப்பும் உள்ளத்து தூய்மையும்

    பண்பும் அடக்கமும் மரியாதைச்  சொற்களும்

    பாயில் கிடக்காத பலமுள்ள தோற்றமும்

    நோயில்லா உணவும் நூறாண்டு வாழ்வும்.

     

    ஆயுள்வேதமும் ஆயாக்கள் மருந்தும்

    வீட்டில் பிறந்தே விளையாடும் குழந்தையும்

    தலைமுடி கொட்டாத ஆவரசுக் கொழுந்தும்

    தாவணி மயில்களும் தமிழ் கலாச்சார உடையும்

    கிட்டியும் புள்ளும் தாச்சியும் கொடியும்

    கிராமத்து பேச்சும் கிளு கிளு கொஞ்சலும்

    சுத்தக் காற்றும் சுதந்திரப் போக்கும்-எம்

    பக்கத்தை விட்டு பறந்துமேன் போனதோ?

     

     -பசுவூர்க்கோபி.

    • Like 9
  9. 21 hours ago, குமாரசாமி said:

    யதார்த்த வரிகள். ❤️

    பேரன்புடன் நன்றிகள்❤️

    20 hours ago, suvy said:

    சில வரிகளில் செழுமையான கருத்தான கவிதை .......!  👍

    மகிழ்வோடு நன்றிகள்🙏

  10. large.IMG_2709.JPG.1138eac431ec88b464967ac61cffbbaf.JPG

    வெறுப்பு!

    ***********

    அரசமரக் கன்றுகளை

    அழித்துக்கொண்டிருந்தான்

    அந்தத்தேசத்து

    மனிதனொருவன்

    எத்தனையாண்டுகள்

    வாழும் மரத்தை

    ஏன்..

    அழிக்கிறாய்யென்றான்

    வழிப்போக்கன்.

     

    எனக்கும் கவலைதான்

    என்னசெய்வது

    வருங்காலப் பிள்ளைகளும்

    வாழவேண்டுமே என்று

    பெரு மூச்சுவிட்டான்

    அந்த மனிதன்.

     

    அன்புடன் -பசுவூர்க்கோபி.

    • Like 8
  11. large.d5de1b69-c9bc-426e-8418-6314de10626a.JPG.d16d0dc22261d1a44c6e831357716552.JPG

     

    மனிதம் செத்துவிட்ட மகாத்மா பூமி!

    *****************************************

    வாசலை திறந்து கொண்டு-நீ

    வருவாயென்றுதானே

    ஏங்கிக் கிடந்தது

    எம் தேசம்…

    விடுதலை பெற்றபின்னும்

    தூக்கு கயிறை மாட்டி

    தூங்கவைத்து

    அனுப்புமென்பது

    யாருக்குத் தெரியும்.

              😢

    உன்னைப்போலவே

    உன் அம்மாவும்

    ஒவ்வொருநாளும்

    செத்து செத்து..

    உன்வரவுக்காகவே

    காத்துக் கிடந்தாள்-எனி

    அவளுக்கு ஆறுதல் சொல்ல

    யாரால் முடியும்

    இந்த பூமியில்.

     

    ஆத்மார்த்த அஞ்சலிகள்🙏

    பசுவூர்க்கோபி.

    • Like 1
  12. On 5/2/2024 at 08:14, புங்கையூரன் said:

    வாழ்த்துக்கள் பசுவூர்க் கோபி...!

    மிகவும் அதுமையான பொருள் பொதிந்த ஒரு பாடல்...!

    பின்னணியில் தமிழ்க் கல்வெட்டுக்கள் வருவதும் மிகவும் அழகு..!

    அதையும் விட அழகு...எனது மண்ணிலிருந்து இந்தக் கவிதை பிறந்தது..!

    அம்மா என்னும் மழலையின் ஓசையில் பிறந்தவள் அவள்!

    பொதிகையின் தென்றலுடன் தவழ்பவள் அவள்..!

    ஆரியத்தின் கூத்துக்கள் அவளிடம் பலிக்காது...!

    புங்கையூரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  13. On 26/1/2024 at 18:02, suvy said:

    உயிர்த்தமிழே நீ வாழ்வாய்........ ஒலி ஒளிப் படச்சேர்க்கையில் கவிதை அருமையாக உள்ளது......!  🙏

    நன்றி கோபி.......!

    உங்களின் வரிகள் எனக்கு உற்சாகம் தருகிறது.உளமார்ந்த நன்றிகள்.

  14. On 17/1/2024 at 16:44, நிலாமதி said:

    கவிதைக்கு நன்றி    

    எங்கே கன  நாட்களாய் காணோம்.  ?

    நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா  

    வரமுடியாமல் போனதிற்கு  நானும் வருந்துகிறேன். இலங்கை இந்தியா போய்வந்தேன்.

    On 17/1/2024 at 20:13, குமாரசாமி said:

    இயற்கையின்  மகிமை சொல்லும் கவிதை.

    நன்றி  கோபி 👍🏼

    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    • Like 1
  15. வாழ்வு தந்தவள் இவளே!

    *****************************

    எழில் கொஞ்சும் மலைகள் தந்தாய்

    ஏர் பூட்ட வயல்கள் தந்தாய்

    பயிர் வளர மழையும் தந்தாய்

    பார் சிறக்க பல்லுயிர்கள் தந்தாய்.

     

    அழகான அருவி தந்தாய்

    அகிலம் சுற்றி கடலும் தந்தாய்

    எரிகின்ற தீயும் தந்தாய்

    இளவேனிற் காற்றும் தந்தாய்.

     

    உயர்வான வானம் தந்தாய்

    உருண்டோடும் மேகம் தந்தாய்

    வளமான காடு தந்தாய்

    வலிமைமிகு மரங்கள் தந்தாய்.

     

    சூரியன்,மதியும் தந்தாய்

    சுதந்திர பறவைகள் தந்தாய்

    கடல் நிறைந்த உயிர்கள் தந்தாய்

    கரையோரம் காட்சிகள் தந்தாய்.

     

    கலர்,கலராய் மலர்கல் தந்தாய்

    கண்குளிர பலவும்  தந்தாய்

    இரவு பகல் எமக்குத் தந்தாய்

    எம் வாழ்வு சிறக்கத் தந்தாய்.

     

    இத்தனையும்  தந்த உன்னை

    மறக்கலாமோ?

    இடையில் வந்த பணத்தின்பின்

    ஓடலாமோ?

    செத்தபின்பும் செயற்கை 

    என்றும் வருவதில்லை

    சிறந்த இந்த இயற்கை

    எம்மைப் பிரிவதில்லை.

    அன்புடன் -பசுவூர்க்கோபி.

    17.01.2024

    • Like 6
  16.  

    உயிர் தமிழே நீ வாழ்வாய்!

    *********************

    பட்டாளம் எம்மை சுட்டாலும்

    குண்டு பட்டாலும்

    உதிரம் குடித்தாலும்

    உணவு மறுத்தாலும்.

     

    பிரித்தாலும் முறைத்தாலும்-சிறை

    தன்னில் அடைத்தாலும்

    அறுத்தாலும் தோல் உரித்தாலும்

    அவயங்கள் எடுத்தாலும்.

     

    அழித்தாலும்,புதைத்தாலும்

    அடியோடு வெறுத்தாலும்

    கருவோடு கலைத்தாலும்

    கலையெல்லாம் பறித்தாலும்.

     

    இருக்குமிடம் எரித்தாலும்

    இடம் மாறியலைந்தாலும்

    உருக்குலைந்து போனாலும்

    உயிர் தமிழே நீ வாழ்வாய்.

     

    இத்தனை வதைகள் வந்தபோதும்

    செத்து மடியாத  செந்தமிழே-உலகம்

    உயிருடன் இருக்குமட்டும் அழிவு

    உனக்கும் இல்லையென்பேன்.

     

    அன்புடன் -பசுவூர்க்கோபி.

    • Like 1
  17. மனித காட்சிச் சாலை!

    ******************

    சனி,ஞாயிறு நாட்களில்

    அந்த..

    மிருகக் காட்சிச் சாலை

    பரபரப்பாகவே விடியும்.

    காரணம் பார்வையிடும்

    மக்கள் வெள்ளம் 

    அலைமோதுமென்பதால்.

     

    யானைகளின் -சாகச

     விளையாட்டுக்கள்

    குரங்கு ககளின்

    தாவல்கள்

    சிங்கத்தின் வீர நடை

    சிறுத்தையின் ஓட்டம்

    கரடி புலி சிவிங்கி 

    காண்டா மிருகமென..

    ஒவ்வொன்றும் ஒவ்வொரு

    விதமான வீர

    செயல்களைக்காட்டி

    மக்களை மகிழ்வித்து

    வருவது வளக்கம்.

     

    அதனால் அவர்களுக்கும்

    நல்ல உணவு கிடைத்தது

    காட்டை மறக்கடித்து

    கம்பிக்கூடுகளில் -தம்

    வாழ்வை மறந்து

    வாழ்ந்தன அங்கு.

     

    இப்போது எல்லாம் 

    சனி,ஞாயிறு களில்..

    மக்களைக் காணாமல்

    மிருகங்களெல்லாம்

    உற்சாகமிளந்து 

    ஓய்ந்து கிடக்கிடந்தன

    உணவுமில்லாமல்.

     

    இதை பொறுக்கமுடியாத

     சிங்கமொன்று..

    வெறிச்சோடிக் கிடந்த

    மிருகக்காட்சி சாலையின்

    வேலியை கிளித்து

    வெளியில் புறப்பட்டது.

     

    அது..

    ஊருக்குள் புகுந்து

    ஊர்ப்புதினங்களை

     திரட்டியவாறு

    திரும்பவும்

    கூட்டுக்குள் வந்து

    குதித்தது.மகிழ்சியில் 

     

    குஷியாயிருக்கும் 

    சிங்கத்திடம்

    குசலம் விசாரித்தன  

    மற்றைய மிருகங்கள்.

     

    சிங்கம் சிரித்தபடியே 

    சொன்னது..

    எனி எமக்கு இங்கு 

    வேலையில்லை

    நமக்கு சுதந்திரம் 

    கிடைத்துவிட்டது.

     

    புரியும்படியாக 

    சொல்லென்று

    புன்னகைத்தன மற்றைய 

    மிருகங்கள். 

     

    சில மனிதர்களை 

    அடைத்துவைத்து

    அவர்களின் சேட்டைகளை

    மனிதர்களே பார்த்து

    மகிழ்வதும்,ஏசுவதுமாக

     

    காலத்தை வீணடிக்கும்-அந்த

    கலிகாலம் வந்துவிட்டதென்று

    கர்சித்து சொன்னது சிங்கம்.

     

    மிருகங்களோ மகிழ்சியில்

    வேலியில்லுள்ள 

    கமராக்களையும் 

    கம்பிகளையும் 

    உடைத்துக்கொண்டு 

    காட்டுக்குள் பாய்வதற்கு

    வீறுநடையோடு

    வெளிக்கிட்டன.

     

    காவல் இருந்தவர்களோ

    கைபேசியில் பஜை ரிவி 

    பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

     

    அன்புடன் -பசுவூர்க்கோபி.

    • Like 1
  18. தேங்காய்ச் சொட்டு!🌴

    ******************🌴

    பட்டினி கிடந்து நாங்கள் சாகிறோம்

    பார்க்க இங்கு யாருமில்லை.

    பாராளுமண்ற உணவுக்காக-பலகோடி 

    ஒதுக்குதல் நியாயமில்லை.

     

    அடுப்பு எரித்து எத்தனை நாட்கள்

    அம்மா,அப்பா வேலையில்லை-நாங்கள்

    உடுப்பு வாங்கி எத்தனை நாட்கள்

    ஊருக்கு வெளியில் போனதில்லை.

     

    அப்புவும்,ஆச்சியும் நட்டு வைத்த

    அழகான தென்னைமரங்களிவை

    இப்புவிதன்னில் எம்மைக்காக்கும்

    இதயம் நிரம்பிய வரங்களிவை.

     

    அரசை நம்பி உணவுக்கு அலைந்தால்

    ஆயுள்  எம்மிடம் மிஞ்சாது

    அனைவரும் 🌴🥦மரங்கள்

    நட்டு வளர்த்தால்

    அகிலத்தில் பஞ்சம் எமக்கேது.

     

    அன்புடன் -பசுவூர்க்கோபி.

  19.  

     

     

     

     

     

     

     

     

    large.Drug-abuse.jpg.e13c8299085476a2e2bc9e4067917d8e.jpg

    புத்தகப்பையுக்குள் போதையா!

    ************************

    புனிதம் நிறைந்த கல்விச்சாலைக்குள்

    போதை வஸ்துக்கள் புகுந்ததாம்-நாளை

    புவியையாழும் மாணவச்செல்வங்கள்

    போரின்றியே உடல்கள் நொருங்குதாம்.

     

    கல்வியை கல்லறையாக்கின்ற கயவர்கள்

    காரியம் அங்கு நடக்குதாம்-பாலுக்கு

    காவலிருப்பதும் பூனைகளா?வென

    கான்போர் மனமெல்லாம் துடிக்குதாம்.

     

    போதையைப் புகுத்தி போதனை கெடுக்கும்-அந்த

    போக்கிரிக்கூட்டத்தை அழிப்போம்-நாளை

    சாதனை செய்யும் மாணவச் செல்வங்கள்-கழிவில்

    சறுக்கி விழுவதை தடுப்போம்.

     

    உண்ண உணவின்றி தவிக்கும் நிலை கண்டும்

    உணரவில்லையா மாணவ,இளையோரே!

    எண்ணிப்பாருங்கள் இன் நிலை நீடித்தால்

    எனியும் சுடுகாடாய் ஈழமண் அழியும்.

    அன்புடன் -பசுவூர்க்கோபி.

  20.  

    large.IMG_5789.JPG.421a5085290d90c8dbc1913143ba6e78.JPG

     

     

    எனது பிரித்தானிய பயணத்தின் போது கண்டது,கேட்டது,மகிழ்ந்தது.என்ற வரிசையில்..

    இது முதலாவது கவிதை. இதைஉங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.

    நன்றிகள்.

     

    Bed ford

    வெட் வோர்ட்  நகரமும்கிரேட் நதியும்

    ********************************

    லண்டன்  இருந்து

    நூறு மைல் 

    கற்களுக்கப்பால்

    அமைந்துள்ள அழகான

     நகரமிது.

     

    அண்ணளவாக..

    இருநூற்றி முப்பது

    கிலோமீற்றர் 

    நீளம் கொண்ட

    ரிவர் கிரேட்  நதி 

    (The River Great Ouse)

     

    புல்வெளிகளையும் 

    காடுகளையும்

    கட்டிடங்களையும் 

    வீடுகளையும்

    கரையோர

    மரங்களையும்

    இருபக்கமும் 

    அணைத்தபடியே!

     

    வளைந்து நெழிந்து 

    வலம் வரும் இந்த..

    அழகிய நதி மங்கை

     

    நகரின் இதயமாக 

    அன்பு சொட்ட சொட்ட

    உருண்டு புரண்டு

    காலங்கள் கடந்த-பல

    காதல் கதைகளையும்

    சோகச் சுவடுகளையும்

    சுமந்து வந்தாலும்

     

    மயில் தோகையாய் 

    விரிந்து இளம்

    மான்குட்டியாய் துள்ளி

    குயிலிசை பாடி

    கூவிச்செல்லும்

    அவளின் அழகோ அழகு!

     

    முதுமையிலும் புதுமையாய் 

    இளமையாகவே

    என்றும் இவளின் வாழ்வு.

     

    இதிலூறிய மக்களும்

    அதிகாலை தொடக்கம்

    அந்திமாலை.. 

    இரவு வரையும்

    சுறுசுறுப்பாகவே

    நகரத்தை..

    தூங்க விடுவதில்லை.

                                    தொடரும்

     

    அன்புடன்-பசுவூர்க்கோபி.

    • Like 1
  21.  வாழ்வு!

    *************

    பூப்பதும் உதிர்வதும்

    பூலோகத்தில்.. 

    அனைத்துக்குமுண்டு

    உதிர்வதைப் பற்றி

    ஓரம் கட்டுவோம்

    பூத்து சிரிப்பதே

    வாழ்வெனக் கொள்ளுவோம்.

     

    அன்புடன் -பசுவூர்க்கோபி.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.