• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பசுவூர்க்கோபி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  62
 • Joined

 • Last visited

Community Reputation

43 Neutral

About பசுவூர்க்கோபி

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

633 profile views
 1. பராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா வாக்குப் போட்ட உறவுகளின் ஆதங்கமே இந்தக்கவிதை நன்றிகள் ஈழப்பிரியன் ஐயா
 2. எங்களின் மனதில் எத்தனை திருப்புமுனை வரவேண்டுமென்று நினைத்தாலும் நீங்கள் சொல்வதே உண்மை நெஞ்சார்ந்த நன்றிகள் உடையார் அண்ணா.
 3. கவிதை பார்த்து காட்டமாய் எழுதிய உங்கள் கவிதை பார்க்கும்போது தெரிகிறது உண்மைகள் என்னதான் செய்வதோ? நெஞ்சார்ந்த நன்றிகள். உளமார்ந்த நன்றிகள். அரசியலை அழகாக சொன்னீர்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்
 4. நன்றிகள் Kapithan 5வருடத்துக்கு ஒரு ஆசை வரத்தான் செய்கிறது.
 5. கவிதை பார்த்து கருத்தெழுதிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
 6. ஓட்டுப் போட்ட உரிமையில் கேட்டால் என்ன தப்போ..! (05.08.2020) தேர்தல் திருவிழா முடிந்து தேசம் அமைதியாகிறது உங்கள் கட்சி “தேர்களை” ஊர் ஊராய் கொண்டு சென்று வெண்றும், தோற்றும் விழா முடிவாயிற்று. ஒன்றாக நிற்க்காமைல் ஒவ்வொன்றாய் நின்றாலும் வெண்றவர்கள் நீங்கள் நாங்கள்… வேறு வேறு தமிழர் இல்லை தனிப்பட்ட குரோதங்கள் தலை தூக்கி ஆடாமல்-புல் பனிகாய பகலவனின் கதிர் போலே நீங்கள்-நெல் மணியாக அனைவருக்கும் நிதம் சோறு படைப் பீர். உள்ளக் குமுறலினால் உடைபட்டுப் போனாலும் மக்களை.. அள்ளக் குறையாத அன்போடு பாருங்கள். தெள்ளத் தெளிவாக-எம் திருக்கரத்தில் மை பூசி வெல்லத் தந்த “வாக்கை” வீணடிது போடாதீர். வடகிழக்கு பிரதேசம் வாழ்ந்தவர்கள் தமிழரென அடையாளம் அனைவருக்கும் ஆதி தொட்டு தெரிந்திருக்கும். பாராளுமண்றமதில் பகை முடிச்சுப் போடாமல் தாராள மனம் கொண்டு அனைவரும்.. தமிழ் வளர குரல்கொடுப்பீர். போராலும்,பொருளாதாரத்தாலும் பொலிவிழந்த மக்களுக்கு பொதுச்சேவைக் கடவுள்களாய் புதுமை செய்வீர் நம்புகின்றோம். அன்புடன் -பசுவூர்க்கோபி-
 7. இக்கவிதை “நெதர்லாந்து இளமுதிர்சோலை” மண்றத்தின் தைப்பொங்கல் விழாவில் படித்திருந்தேன். என் இனிய யாழ் கள உறவுகளுக்காக.. பகிர்ந்து கொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றி இழப்புகள்..! அப்பாவின் அறிவை இழந்தோம் அம்மாவின்அறுசுவை உணவை இழந்தோம் அவர்களுடன் கொஞ்சி குலாவும் அன்பை இழந்தோம்-ஏன் அவர்களை கூடவே இழந்தோம். கோழி கூவலை இழந்தோம். கோவில் மணிச் சத்தம் இழந்தோம். வாய்க்கால் வயல்கள் இழந்தோம். வழமான வாழ்வையே இழந்தோம். காலை விடியலை இழந்தோம், கடல் தொட்டுவரும் தென்றலை இழந்தோம் பட்டியில் நின்ற பசுக்களை இழந்தோம், பங்குனி மாத வெய்யிலை இழந்தோம்-மண் சட்டியில் குழைத்துண்ட உணவுகள் இழந்தோம் சம்பல் அரைத்த அம்மியை இழந்தோம் சகலதும் இடித்துண்ட உரலையும் இழந்தோம் கிணற்று நீரின் சுவையை இழந்தோம், கிடுகுக் கொட்டிலின் வனப்பை இழந்தோம் பனை,தென்னை தந்த பலனை இழந்தோம் பாட்டிகள் சொல்லும் கதைகள் இழந்தோம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை இழந்தோம், கும்மாளம் போட்ட நண்பர்கள் இழந்தோம் பாடசாலை நண்பிகள் இழந்தோம், பார்தத அரச வேலைகள் இழந்தோம் தேன் ஊறும் எங்கள் பழங்களை இழந்தோம், தெவிட்டாத எங்கள் உணவுகள் இழந்தோம். கயூனாபீச்சின் கடற்கரை இழந்தோம் காங்கேசன் துறையின் ஆலையை இழந்தோம் கீரிமலையின் குளியலை இழந்தோம் கிளிநொச்சி நகரின் பசுமையை இழந்தோம் ஆணை இறவு உப்பையும் இழந்தோம் ஆனைக்கோட்டை கள்ளையும் இழந்தோம் தீப கற்ப மூலிகை இழந்தோம் தித்திக்கும் கடல்த்தேன் உணவுகள் இழந்தோம் மட்டக்களப்பு வாவியை இழந்தோம் மன்னார்,புத்தள முத்தையும் இழந்தோம் திருகோணமலையின் அழகினை இழந்தோம் தேசத்தின் மிகுதியும் நாமே இழந்தோம் கல்வி இழந்தோம்!கலைகள் இழநதோம்! காவியம் படைத்த வீரம் இழந்தோம்! முள்ளிவாய்க்காலில் முழுவதும் இழந்தோம்-இங்கு மூச்சு ஒன்றுதான் மிஞ்சியே வாழ்கின்றோம். -பசுவூர்க்கோபி-
 8. அன்புடன் உங்களுக்கும் என் அன்பான நன்றிகள். உங்கள் கவிதை பார்க்கவும் ஆசை.
 9. உண்மையாக சொனீர்கள் அதுதான் இங்கு வந்து கண்ட மிச்சம். நன்றிகளும் வாழ்த்துக்கள் உங்களுக்கும் அம்மாவுக்கும்.
 10. நிங்கள் சொல்வது போல் இது மனிதர்களுக்கான உணவில்லை அந்தக்காலம் கூப்பன் முத்திரை ஒட்டவும் பயன் படுத்தினார்கள். வெளிநாடுகளில் கோதுமை,சோளன் வயல்கள் மிருகங்களுக்காகவே பயிரிடுகிறார்கள். எனது கவிதைக்கு பாராட்டியதிற்கு உளமார்ந்த நன்றிகள் Paanch
 11. அந்தகாலத்து நல்ல சாப்பாடுகளைச் சொன்னேன் நன்றிகள் ஈழப்பிரியன்