Jump to content

பசுவூர்க்கோபி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  338
 • Joined

 • Last visited

Everything posted by பசுவூர்க்கோபி

 1. எனது ஆக்கத்திற்கு ஊக்கம் தந்துள்ளீர்கள் நன்றிகள். அன்புடன் நன்றிகள் தோழர்.
 2. உங்களின் பஞ் டயலாக்குக்கு நன்றிகள். அன்புடன் ஐ.கோவிந்தநாதன்.
 3. எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான்..! **************************** பஸ்ஸில் ஏறிய தாயிடம் பிள்ளைக்கு எத்தின வயதென கேட்டார் நடத்துனர். தாய் சொன்னாள் நான்கென்று பிள்ளை சொன்னான் ஆறென்று மெதுவாக.. அதட்டினாள் பிள்ளையை நாலென்று சொல்லு. சினிமாவுக்கு கூட்டிச்சென்றார் தந்தை.. எட்டு வயதுக்கு மேல் டிக்கட் எடுக்க வேண்டுமென்றார்கள். இவனுக்கு ஏழு வயதென்றார் இல்லையப்பா.. ஒன்பதென்றான் பிள்ளை அதற்கு அதட்டி ஏதேதோ சொன்னார் அப்பா இப்போது மதுபான கடையில் பிள்ளை நிற்க்கிறான் இருபது வயதுக்கு மேல்தான் வாங்கலாம் என்றார் கடைக்காரர் இருபத்தி இரண்டென்றான் பிள்ளை.. பதினெட்டு வயதிலும் நாலைக் கூட்டினேன் அம்மா,அப்பா குறைத்த வயதுகள் என்றான். தாயோ தலை தலையென அடித்து அழுதாள்- எனிமேல் பட்டணிகிடந்தாலும் பொய்யில்லா வாழ்வே புனிதமானதென்றாள் போன பஸ்சிற்கு கை காட்டிய படியே. பொய்யென்ற விதைதன்னை பிள்ளைகள் மனதில் நட்டால் கஞ்சா,களவு, சூது போதை வீட்டுக்கே உதவாத பெரு விருட்சமாகும். பெற்றோரே எச்சரிக்கை. அன்புடன் -பசுவூர்க்கோபி.
 4. மரங்கள்.! (குறுங்கதை) பலாமரம் ஒன்று வேலிக்கு அப்பால் நின்ற புளியமரத்தை ஏளனமாகப் பார்த்து என்னைபோல் இனிமையான பழம் உன்னால் தரமுடியுமா என்றது. இதைக்கேட்ட புளிய மரம் இயற்கையோடு நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி எந்தமரமும் கேட்டதில்லையே என மனதுக்குள் யோசித்தது. பின் சிரித்துவிட்டு சொன்னது என்னைப் போல புளிக்கின்ற பழமும் உன்னாலும் கொடுக்க முடியாது.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்குதென்று ஏற்றுக்கொள். பழங்களில் நீதான் பெரியவன் இனிப்பானவன் என்று எண்ணிக்கொண்டு பெருமை பேசாதே என்றது. மனிதர்கள் போல் உயர்வு தாழ்வு போட்டி பொறாமை இருக்கக் கூடாதென்று எட்டத்தில் நின்ற வேப்பமரம் பிசின் வடிய கத்தியது. எங்கள் காலம் என்ன ஆகுமோ என ஏங்கி அசைந்தன சுற்றிநின்ற சிறுமரக்கூட்டம்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட பலாமரம் என்பது அந்த அப்பாவி மரங்களுக்கு தெரியவில்லை. -பசுவூர்க்கோபி.
 5. அந்தக்காலம் அவர்களே அடிப்பார்கள் சொல்லியும் கொடுத்தால் சொல்லவா வேண்டும். உளமார்ந்த நன்றிகள்.அண்ணா
 6. அன்புடன் நன்றிகள் தோழர். உண்மைதான் அருமையாகச்சொன்னீர்கள் அன்புடன் நன்றிகள்.
 7. காலங்கள்..! *************** ஆசிரியர்கள் வீடுதேடி போனார்கள்-அது ஆதிகாலம். மாணவர்கள் பாடசாலை சென்றார்கள்-அது கொரோனாவுக்கு முன் காலம். பாடமே வீடு தேடி வருகிறது இது “சூம்” காலம். எத்தனை காலங்கள் வந்தாலும் எதனையும் பயன் படுத்த முடியாத ஏழைகள் காலந்தான் நாட்டின் நிரந்தரமாகி வருகிறதே! பட்டணியாகப் போகும் குழந்தைக்கு-இலவச பாடப் புத்தகம் கொடுத்தும் என்னபயன். அன்புடன் -பசுவூர்க்கோபி.
 8. அன்புடன் நன்றிகள் ஐயா உங்களுக்கும் அங்கில புத்தாண்டு இனிய நல் வாழ்த்துக்கள்.
 9. ப “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” (நன்னூல் நூற்பா 426) பிரிந்து போகும் 2021டே உனக்கு பிரியா விடைதந்து அனுப்பும் இவ்வேளை.. இன்று.. புலரும் புது ஆண்டே இனம்,மொழி, சாதி,மதம், கறுப்பு,வெள்ளை ஏழை,பணம், அகதி,அடிமை என்னும் மனிதப்பிரிவுகள் நீக்கி மனிதநேயத்தை மனங்களில் இருத்தி அனைத்துயிரோடும் அன்பைப் பொழிந்து. அகிலத்தில் அனைத்தும் ஒன்றேயென்ற உறுதி மொழி கொடுத்து உயிர் கொல்லி நோய்கள் நீக்கி எம்மை வாழவைக்க வா! வா! 2022 புத்தாண்டே! உன்னை வாழ்த்துகின்றோம், வணங்குகின்றோம். என் அன்பு "யாழ் இதயங்களுக்கு “ஆங்கில புது வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்” அன்புடன் -பசுவூர்க்கோபி. 1.01.2022.
 10. உளமார்ந்த நன்றிகள். எழுத்தை மாற்றமுடியாமல் உள்ளது. யாருடன் சொல்லி மாற்றுவதென்பது தெரியவிலை.
 11. வழிப்போக்கன்..! ****************** வறுமையின் காரணமாக உலக சந்தையில் நாட்டை துண்டு துண்டாக்கி விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.வந்த வழிப்போக்கன் கேட்டான் உள்ளுரில் ஒரு துண்டைக்கேட்டவர்களுக்கு கொடுத்திருந்தால் உங்களுக்கே உணவு தந்திருப்பார்களே! இந்தநிலை வந்திருக்காதே! என்றான்.மீசையில் மண் ஒட்டவில்லையென எழுந்த பெரியவர் அவர்களை வைத்துத்தான் ஆட்டமே நடக்குது என்றார். அரசமரத்தடியில் இருந்த புத்தபெருமான் இது எத்தனைநாளுக்கென்று சிரித்தார். உணவின்றி,உடையின்றி,எரிபொருளின்றி,நோய்க்கு மருந்தின்றி குழந்தைகளுக்கு மாப்பாலின்றி எத்தனை எத்தனை கொடுமைகளைப் புரிந்தும் வெண்றவர்கள் அவர்கள். அதுபற்றி உனதுமக்களும் புரிந்துகொள்ள இதுவொரு அரிய சந்தர்ப்பம்.கொடுத்திருக்கிறீர்களென வழிப்போக்கன் வாயுக்குள் முனகியபடியெ புத்தபிரானை வணங்கிவிட்டு போய்க்கொண்டிருகிறான். -ஐகோ.
 12. உண்மையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள்
 13. என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் “மாருதி”அவர்களின் ஓவியம் சிறுவயதிலிருந்தே எனக்குப் பிடிக்கும். அவர்களின் இந்த உயிர்ப்போடிருக்கும் ஓவியநாயகிக்கு! படம் சொல்லும் கவிதை..! ********************** கொஞ்சிடும் கெஞ்சிடும் பொன்னழகே கொவ்வையின் பழந்தந்த மென்னுதடே மிஞ்சிடும் மேனியின் இருகனி ரசமே மிஞ்சாத இனிமையின் கொடியிடையே! கொத்தி இழுக்கின்ற மூக்குத்தி பூவே குறும்புகள் செய்கின்ற கண் இரு விழியே கருமேகச் சுருள் தந்த காதோர முடியே காலோடு கவிபாடும் கொலிசின்ரஒலியே! கரைதொட்டு பின் திரும்பும் கனிவான அலைபோல்-கால் தொடை பட்டு மேல்படரும் கரை போட்ட உடையே! கலகலக்கும் உன் களுத்து நிறைவான நகையே கண்புருவ வானவில்லின் அம்போடு வில்லே! கைநிறைந்த வளையல்களின் விரல்பேசும் மொழியே கரு இரவில் தேன்சுரக்கும் மறைவான நிலவே! பெண்ணென்ற பெருமதிப்பு பிரபஞ்ச பேரழகே-உன் பிறப்பால் தான் உலகெங்கும் உயிர்களுக்கு மகிழ்வே! அன்புடன்-பசுவூர்க்கோபி.
 14. நல்லது தீயது அறிந்து இரு அருமை வரிகள். தொடருங்கள் வாழ்த்துக்கள்
 15. என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. எனி வரும் காலம் பற்றி முளித்திருக்கவே வந்த கனவிது. இப்படியும் நடக்கலாம்..! ***************** வேலை ரோபோக்கள் வீடெங்கும் திரியலாம் விரும்பிய சமையலறை காணாமல் போகலாம் மூன்று வேளையுணவும் மாத்திரையாகலாம் முளித்திருக்க கதிர்வீச்சால் உறுப்பும் திருடலாம். சந்திரன் செவ்வாய்க்கு ரொக்கட் பறக்கலாம் சரித்திர தேடல்கள் குழி வெட்டிப்புதைக்கலாம் சுவாசிக்கும் காற்றும் காசுக்கு விற்கலாம்-எம் சுயசரிதை சொல்ல சிப்பொன்றும் வைக்கலாம். பிறப்பு வீதத்தை ஐம்பதால் குறைக்கலாம் பிறந்த பின் வீரத்தை கோழையாய்யாக்கலாம் வயோதிப மரங்களை ஊசியால் சாய்க்கலாம் வயது வரமுன்னே பெரியவர் போலாக்கலாம். ஓரினச் சேர்க்கைக்கு ஊதியம் கொடுக்கலாம் உலக வரைபடம் உருமாற்றிக் கீறலாம் நாட்டு எல்லைகள் இல்லாமல் போகலாம் நலிந்த இனங்களை நசுக்கியே கொல்லலாம். புத்தகபடிப்புகள் பொசுக்கி எரியலாம் புதுப்புது நோய் செய்து போரும் நடத்தலாம் காட்டு விலங்குபோல் மனிதனைஆக்கலாம் காசு முதளைகள் உலகத்தை ஆளலாம். அன்புடன் -பசுவூர்க்கோபி. 13.10.2021
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.