-
Posts
397 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by பசுவூர்க்கோபி
-
-
மனித காட்சிச் சாலை!
******************
சனி,ஞாயிறு நாட்களில்
அந்த..
மிருகக் காட்சிச் சாலை
பரபரப்பாகவே விடியும்.
காரணம் பார்வையிடும்
மக்கள் வெள்ளம்
அலைமோதுமென்பதால்.
யானைகளின் -சாகச
விளையாட்டுக்கள்
குரங்கு ககளின்
தாவல்கள்
சிங்கத்தின் வீர நடை
சிறுத்தையின் ஓட்டம்
கரடி புலி சிவிங்கி
காண்டா மிருகமென..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
விதமான வீர
செயல்களைக்காட்டி
மக்களை மகிழ்வித்து
வருவது வளக்கம்.
அதனால் அவர்களுக்கும்
நல்ல உணவு கிடைத்தது
காட்டை மறக்கடித்து
கம்பிக்கூடுகளில் -தம்
வாழ்வை மறந்து
வாழ்ந்தன அங்கு.
இப்போது எல்லாம்
சனி,ஞாயிறு களில்..
மக்களைக் காணாமல்
மிருகங்களெல்லாம்
உற்சாகமிளந்து
ஓய்ந்து கிடக்கிடந்தன
உணவுமில்லாமல்.
இதை பொறுக்கமுடியாத
சிங்கமொன்று..
வெறிச்சோடிக் கிடந்த
மிருகக்காட்சி சாலையின்
வேலியை கிளித்து
வெளியில் புறப்பட்டது.
அது..
ஊருக்குள் புகுந்து
ஊர்ப்புதினங்களை
திரட்டியவாறு
திரும்பவும்
கூட்டுக்குள் வந்து
குதித்தது.மகிழ்சியில்
குஷியாயிருக்கும்
சிங்கத்திடம்
குசலம் விசாரித்தன
மற்றைய மிருகங்கள்.
சிங்கம் சிரித்தபடியே
சொன்னது..
எனி எமக்கு இங்கு
வேலையில்லை
நமக்கு சுதந்திரம்
கிடைத்துவிட்டது.
புரியும்படியாக
சொல்லென்று
புன்னகைத்தன மற்றைய
மிருகங்கள்.
சில மனிதர்களை
அடைத்துவைத்து
அவர்களின் சேட்டைகளை
மனிதர்களே பார்த்து
மகிழ்வதும்,ஏசுவதுமாக
காலத்தை வீணடிக்கும்-அந்த
கலிகாலம் வந்துவிட்டதென்று
கர்சித்து சொன்னது சிங்கம்.
மிருகங்களோ மகிழ்சியில்
வேலியில்லுள்ள
கமராக்களையும்
கம்பிகளையும்
உடைத்துக்கொண்டு
காட்டுக்குள் பாய்வதற்கு
வீறுநடையோடு
வெளிக்கிட்டன.
காவல் இருந்தவர்களோ
கைபேசியில் பஜை ரிவி
பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
1
-
-
தேங்காய்ச் சொட்டு!🌴
******************🌴
பட்டினி கிடந்து நாங்கள் சாகிறோம்
பார்க்க இங்கு யாருமில்லை.
பாராளுமண்ற உணவுக்காக-பலகோடி
ஒதுக்குதல் நியாயமில்லை.
அடுப்பு எரித்து எத்தனை நாட்கள்
அம்மா,அப்பா வேலையில்லை-நாங்கள்
உடுப்பு வாங்கி எத்தனை நாட்கள்
ஊருக்கு வெளியில் போனதில்லை.
அப்புவும்,ஆச்சியும் நட்டு வைத்த
அழகான தென்னைமரங்களிவை
இப்புவிதன்னில் எம்மைக்காக்கும்
இதயம் நிரம்பிய வரங்களிவை.
அரசை நம்பி உணவுக்கு அலைந்தால்
ஆயுள் எம்மிடம் மிஞ்சாது
அனைவரும் 🌴🥦மரங்கள்
நட்டு வளர்த்தால்
அகிலத்தில் பஞ்சம் எமக்கேது.
அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
புத்தகப்பையுக்குள் போதையா!
************************
புனிதம் நிறைந்த கல்விச்சாலைக்குள்
போதை வஸ்துக்கள் புகுந்ததாம்-நாளை
புவியையாழும் மாணவச்செல்வங்கள்
போரின்றியே உடல்கள் நொருங்குதாம்.
கல்வியை கல்லறையாக்கின்ற கயவர்கள்
காரியம் அங்கு நடக்குதாம்-பாலுக்கு
காவலிருப்பதும் பூனைகளா?வென
கான்போர் மனமெல்லாம் துடிக்குதாம்.
போதையைப் புகுத்தி போதனை கெடுக்கும்-அந்த
போக்கிரிக்கூட்டத்தை அழிப்போம்-நாளை
சாதனை செய்யும் மாணவச் செல்வங்கள்-கழிவில்
சறுக்கி விழுவதை தடுப்போம்.
உண்ண உணவின்றி தவிக்கும் நிலை கண்டும்
உணரவில்லையா மாணவ,இளையோரே!
எண்ணிப்பாருங்கள் இன் நிலை நீடித்தால்
எனியும் சுடுகாடாய் ஈழமண் அழியும்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
எனது பிரித்தானிய பயணத்தின் போது கண்டது,கேட்டது,மகிழ்ந்தது.என்ற வரிசையில்..
இது முதலாவது கவிதை. இதைஉங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.
நன்றிகள்.
Bed ford
வெட் வோர்ட் நகரமும் “கிரேட் நதியும்”
********************************
லண்டன் இருந்து
நூறு மைல்
கற்களுக்கப்பால்
அமைந்துள்ள அழகான
நகரமிது.
அண்ணளவாக..
இருநூற்றி முப்பது
கிலோமீற்றர்
நீளம் கொண்ட
ரிவர் கிரேட் நதி
(The River Great Ouse)
புல்வெளிகளையும்
காடுகளையும்
கட்டிடங்களையும்
வீடுகளையும்
கரையோர
மரங்களையும்
இருபக்கமும்
அணைத்தபடியே!
வளைந்து நெழிந்து
வலம் வரும் இந்த..
அழகிய நதி மங்கை
நகரின் இதயமாக
அன்பு சொட்ட சொட்ட
உருண்டு புரண்டு
காலங்கள் கடந்த-பல
காதல் கதைகளையும்
சோகச் சுவடுகளையும்
சுமந்து வந்தாலும்
மயில் தோகையாய்
விரிந்து இளம்
மான்குட்டியாய் துள்ளி
குயிலிசை பாடி
கூவிச்செல்லும்
அவளின் அழகோ அழகு!
முதுமையிலும் புதுமையாய்
இளமையாகவே
என்றும் இவளின் வாழ்வு.
இதிலூறிய மக்களும்
அதிகாலை தொடக்கம்
அந்திமாலை..
இரவு வரையும்
சுறுசுறுப்பாகவே
நகரத்தை..
தூங்க விடுவதில்லை.
தொடரும்…
அன்புடன்-பசுவூர்க்கோபி.
-
1
-
-
வாழ்வு!
*************
பூப்பதும் உதிர்வதும்
பூலோகத்தில்..
அனைத்துக்குமுண்டு
உதிர்வதைப் பற்றி
ஓரம் கட்டுவோம்
பூத்து சிரிப்பதே
வாழ்வெனக் கொள்ளுவோம்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
On 5/8/2022 at 17:29, விசுகு said:
எனது கைத்தொலைபேசி எண் 1998 இல் எடுத்தது
இன்றும் அதே இலக்கம் தான்
எனது கைத்தொலைபேசியின் திறப்பு இலக்கம் (Password)
எனது மனைவியிலிருந்து ◌பிள்ளைகள்வரை அனைவருக்கும் தெரியும்
தொலைபேசி அடித்து இதுவரை எடுக்காமல் விட்டதில்லை
என்னால் பதிலளிக்கபமுடியாத சூழல் என்றால் பிள்ளைகள் பதிலளிப்பார்கள்
எம்மிடமே
வீட்டிலேயே பிள்ளைகள் எல்லாவற்றையம் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நம்புபவன் நான்
நன்றி ஆக்கத்துக்கு....
உங்களின் உண்மையான பதில் பார்த்து மகிழ்சியடைகிந்றேன் பேரன்புடன் நன்றிகள்.
ஆனால் எனது கவிதைக்கு ஆதாரமாக பலர் இருக்கிறார்கள் என்பதும் பலர் சொல்லிப் புரிகிறது.
-
1
-
-
On 5/8/2022 at 16:37, நிலாமதி said:
பொய்யென்ற விதைதன்னை
பூப்போன்ற பிள்ளைகள்
மனதில் நாட்டினால்-........?
பெற்றவர்கள் சிந்திக்க வேண்டிய விடயம். என் பாராட்டுக்கள் உரித்தாகுக.அடிக்கடி உங்கள் கவி வரிகள் காண ஆவல்.
On 5/8/2022 at 16:37, நிலாமதி said:பொய்யென்ற விதைதன்னை
பூப்போன்ற பிள்ளைகள்
மனதில் நாட்டினால்-........?
பெற்றவர்கள் சிந்திக்க வேண்டிய விடயம். என் பாராட்டுக்கள் உரித்தாகுக.அடிக்கடி உங்கள் கவி வரிகள் காண ஆவல்.
பேரன்புடன் நன்றிகள்.அக்கா
-
சிறு ஓட்டையால் கப்பலும் கவிழும்!
*************************
போன் அடித்தது..
என்னைக்கேட்டால்
இல்லையென்று
சொல்லென்றார்
அப்பா..
அம்மாவையும்
அப்பாவையும்
படித்துக்கொண்டிருந்த
ஆறு வயது மகன்
பார்த்து முளித்தான்.
மறுநாள்..
அம்மாவின் கைபேசி
அலறியது..
நாங்கள் வீட்டில்
இல்லை
வெளியில் நிற்கிறோம்
என்றாள் அம்மா
வீட்டில் விளையாடி
கொண்டிருந்த
பிள்ளை பார்த்து
வெருண்டான்.
பிள்ளையின் வெள்ளை
உள்ளத்தில்..
கறுப்பு புள்ளிகள்.
காலங்கள் உருண்டன
அவனின் கைபேசியும்
இப்போது
பொய்பேசியாகவே
மாறிவிட்டது.
பொய்யென்ற விதைதன்னை
பூப்போன்ற பிள்ளைகள்
மனதில் நாட்டினால்-அது
கஞ்சா,களவு, சூது போதை
என்ற விளைச்சலே தரும்.
பெற்றோரே எச்சரிக்கை!
அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
3
-
-
என்னவளே!
***********
காதலுக்கு கண்ணில்லை
என்பார்கள் பலர் நானோ
உன் கண்ணுக்குள் தானே
முதலில் விழுந்தேன்.
இதயத்தை பூட்டிவைத்து
திரிந்தாய்-ஏனோ
என்னிடத்தில் உன்
சாவியை தந்து மகிழ்ந்தாய்.
என்னை காணவில்லை
என்று நானே தேடினேன்
பின்புதான் அறிந்தேன்
உன்னுக்குள் நான்
இருந்ததை.
திருட்டு எனக்கு பிடிக்காது
என்று தெரிந்தும்-கள்ளி
எப்படி நீ என்னை
திருடி வைத்தாய்.
காதல் தோல்வியில்
தாடி வளத்தார்கள் அன்று
தாடி வளர்க்கச்சொல்லியே
காதலித்தாயே இன்று.
உன் கன்னக் குழிக்குள்
விழுந்த பின் என்னால்
எழ முடியவில்லையே-நீ
என்ன மாயம் செய்தாய்.
நீயாரோ நான்யாரோ
உனக்கு நானும்
எனக்குநீயுமென
யாரவன் எம்மை
இணைத்து வைத்தான்.
-பசுவூர்க்கோபி.
-
2
-
-
On 25/5/2022 at 04:09, புரட்சிகர தமிழ்தேசியன் said:
அருமையான கவிதை வரிகளுக்கு நன்றிகள் தோழர்.💐
பேரன்போடு நன்றிகள் தோழர்.
-
மனித நேயமிக்க நல்ல மனிதர்.
சரஸ்வதித்தாயே அவர்நாக்கில் நின்று நடனமாடும் தமிழ் பேச்சாளர்.ஈழத்துக்கும்,தமிழுக்கும் அவர் பெரும் சொத்து.
நல் ஆரோக்கியத்துடன் மீண்டுவந்து பல்லாண்டு காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். -
இருள் மூடிய இலங்கை!
*****************
இந்துமா கடலின் முத்து
இயற்கையின் அழகின் சொத்து
ஆட்சியர் உன்னை வித்து-இப்போ
அனைவற்கும் பிடித்தது பித்து.
கடல் மீது அழகாய் மிதந்தாய்-இப்போ
கடன் மீது மிதக்குகின்றாய்.
உடல்க்கூறு வெட்டி வித்தார்-உன்
உயிருக்கே கொள்ளிவைத்தார்.
பட்டிணியை சொத்தாய் வாங்கி
பாரெல்லாம் நீ கையை ஏந்த
நிற்கதியாய் விட்டபின்னும்
நிற்கல்லையா?
அவர்க்கு கதிரையாசை.
-பசுவூர்க்கோபி.
-
2
-
-
தம்பரும், சுப்பரும்!
****************
தம்பர்..
மக்கள் விரும்பியே மன்னனைத் தெரிந்தும்-பின்
மாபெரும் போருக்கேன் வந்தனர்.
சுப்பர்..
மக்களை மறந்துமே மந்திரி சபைக்குத்தான்
மாபெரும் சலுகைகள் செய்ததால்.
தம்பர்..
சிங்கள மக்களே சீறும் சிங்கமாய்
சினம் கொண்டு வீதிக்கேன் வந்தனர்.
சுப்பர்..
பங்களா கட்டியே வாழும் தலைவர்கள்
வறுமைக்குள் மக்களை விட்டதால்.
தம்பர்..
போரை வெண்றவர் புதுமைகள் செய்தவர்
போற்றிய மக்களேன் வெறுத்தனர்.
சுப்பர்..
போரை சொல்லியே இனத்தை பிரிக்கின்ற
பொய்கள் அவர்கட்கு தெரிந்ததால்.
தம்பர்..
விமானத்தளம், வீதிகள்,விளக்குகள்
விரும்பி தந்தோரை ஏன் வெறுத்தனர்.
சுப்பர்..
துண்டு துண்டாக்கி நாட்டை விற்றுமே- எம்மை
சோறுக்கு அலைய விட்டதால்.
பிச்சையெடுத்து எம் நாடு வாழ்வதா இது
பெரும் துன்பமில்லையா தம்பர்.
வேலியே பயிரை மேய்வதென்பது இங்கு
வேடிக்கையில்லையா சுப்பர்.
மக்கள் நலனையே தன்னலமாக்கும்-அரச
மந்திரி சபை அமைக்கனும் தம்பர்.
இல்லையேல் இந்துமா கடலில் இலங்கையின்
பெயர்மாற்றி எவனோ ஆழுவான் சுப்பர்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
1
-
1
-
-
-
On 2/5/2022 at 20:32, நிலாமதி said:
கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில்
பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை
அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
நன்றிகள் சுவி அண்ண்ணா
On 2/5/2022 at 20:32, நிலாமதி said:கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில்
பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை
அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
நன்றி அக்கா
-
நற்கல்வியும் நல்லாசிரியருமே நாட்டுக்குத் தேவை!
***********************************
ஆதிகால மனிதனென காட்டுக்குள் அலைந்தோம்
அதன் பின் ஆரம்ப மனிதராய் நாட்டுக்குள் வந்தோம்
மற்றைய உயிரினத்திலிருந்து மாறுபட வைத்த -அந்த
ஆறாம் அறிவு எம் கல்விக்கென்றே கிடைத்தது.
கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில்
பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை
ஆளுமை கொண்ட ஒரு சமுதாயம் நிமிர-நல்ல
ஆரம்பக் கல்வியில் அத்திவாரமிடுவோம்.
சொல்லில் அடங்காத ஆசிரியத் தொண்டும்
சுறுசுறுப்பாய் கற்கின்ற மாணவர்கள் பங்கும்
எல்லைகள் கடந்தே நல்லதைச்செய்யும்-இல்லையேல்
தொல்லைகள் நிறைந்த சமுதாயமாகும்.
வேலைக்கு மட்டும் படிக்கின்ற பாடங்கள்-பின்பு
வேதனை தந்து வீதிக்கும் வரலாம்.
வேலை இருக்கென படிக்கின்ற தொழிற்க் கல்வி
வீட்டையும் உயர்த்தி நாட்டையும் உயர்த்தலாம்.
காற்றுள்ள போதே தூற்றுவாய் நெல்லை-அதேபோல்
காலம் இருக்கையில் கல்வியைத் தேடு
பாலை வனம்கூட சோலைவனமாகும்-இல்லையேல்
படுக்கின்ற பாய்கூட வெறுப்பாவே பார்க்கும்.
பட்டங்கள் பெற்று நீ உயர்ந்து போனாலும்-கீழே
பார்க்க மறக்காதே? உன்கால்கள் நிற்பதை
அப்பா,அம்மா, ஆசிரியர் தோள்களில்..
அவர்களின் மகிழ்வே உன் உயரத்தின் எல்லை.
ஆசிரியப் பணியை போற்றுவோம் உலகில்
அவர்கள் இல்லையேல் அகிலமே இருளில்
காலா காலமும் புது,புது கல்வியைக் கற்று
காசினி உயர பல கடமைகள் செய்வோம்.
-பசுவூர்க்கோபி.
-
3
-
-
On 23/4/2022 at 18:46, நிலாமதி said:
அன்றுபோல் என் தீவு வேண்டும்
இழந்த சொர்க்கம் மீண்டும் வேண்டும் .
அழகான கவி வரிகள் . நியாயமான ஆசை
நன்றி நிலாமதி அக்கா
-
என் அன்பு யாழ் இதயங்களுக்கு..
பல ஆண்டுகள் நான் நாட்டை விட்டு புலம்பெயர்து வாழ்ந்தாலும் இன்றும் என்னுக்குள் அன்றைய
எனது ஊரின் நினைவுகள்தான் இனிமை தருகிறது.
இதேபோல் உங்கள் ஊர்களையும் நினைத்துப் பார்க்க இந்த சிறு கவிதை உதவினால் எனக்கு மகிழ்ச்சியே.
அன்றுபோல் என் தீவு வேண்டும்
************************
அம்மாவின் அன்பு வேண்டும்
அப்பாவின் கருணை வேண்டும்
பனை தென்னை உணவு வேண்டும்
பாசத்தின் உறவு வேண்டும்
பனம் பாளைக் கள்ளு வேண்டும்-ஓலை
பாய்தன்னில் உறங்க வேண்டும்
கூள் காச்சிக் குடிக்க வேண்டும்
கொண்டாடி மகிழவேண்டும்.
உரல் இடித்து சம்பல் வேண்டும்
ஒடியல் பிட்டு கலந்து வேண்டும்
மண்சட்டி சமையல் வேண்டும்-அந்த
மகிழ்வான பொழுது வேண்டும்.
வெடி கொளுத்தும் பொங்கல் வேண்டும்
கிறிஸ்மஸ் தாத்தா..
வீட்டுக்கு வரவும் வேண்டும்
அயலவர்கள் கூட வேண்டும்-பழய
அன்பு மழை பொழிய வேண்டும்
வெளிநாட்டில் வாழும் போதும்-ஊர்
விட்டு வந்த நினைவே தோன்றும்
அழகான என்னூர் போல-இந்த
அகிலத்தில் நான் கண்டதில்லை.
அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
2
-
-
20 hours ago, நிலாமதி said:
அன்பும் பாசமும் ஆளட்டும் உலகை
அனைத்து உயிர்களும் ஒருதாய் பிள்ளை
இப்படி மனிதம் வாழ்ந்தால் என் இந்த தொல்லை. அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
நன்றிகள் அக்கா
7 hours ago, suvy said:அருமையான கவிதை கோபி ஆனால் யார் கேட்கிறார்கள்.......! 👍
நன்றிகள் சுவி அண்ணா.
-
உனக்குமட்டுமா?உலகம்.
**********************
எமக்கு கிடைத்தது ஒரு பூமி-இங்கு
பிறப்போர் அனைவற்க்கும் சமநீதி
பிறப்பும்,இறப்பும் எம்மிடமில்லை-நீ
பெரியவன் என்பது யாருக்குத் தெரியும்.
உலகில் பிறந்தது எத்தனைகோடி-எனி
உலகுக்கு வருவது எத்தனை கோடி
உலகு எனக்கு கீழென நினைத்தவன்
ஒருவன் கூட உயிரோடு இல்லை
தெரிந்தும்,தெரிந்தும் செய்யும் பிழைகளை
தேசம் ஒருபோதும் வாழ்த்துவதில்லை.
வாழும் போது பணக்காரன்,ஏழை
வாழ்வு முடிவில் பெட்டிக்குள் சமமே
காலையும் மாலையும் சூரிய,சந்திரன்
காணாமல் போனால் உன்னிலை என்ன
வாழும் வயசோ நூறாண்டு காலம்
வையகம் உனதென போர்கள் செய்கிறாய்.
காலைச் சூரியன் உதிக்காவிட்டால்
கறண்டால் வெளிச்சம் கொடுக்கவா முடியும்.
அன்பும் பாசமும் ஆளட்டும் உலகை
அனைத்து உயிர்களும் ஒருதாய் பிள்ளை
நெஞ்சக் கறள்களை நீக்கியெறிவோம்
நின்மதியான நல் வாழ்வினைப் பெறுவோம்.
-பசுவூர்க்கோபி.
-
1
-
-
On 1/4/2022 at 22:18, suvy said:
பஞ்சம் பசி தலைதூக்கும் போதுதான் பக்குவமான கவிதைகளும் பிறக்கின்றன......! 👍
பாராட்டுக்கள் கோபி........!
உண்மைதான்.
நன்றிகள் சுவி அண்ணா.On 2/4/2022 at 05:26, புங்கையூரன் said:ஏக்கத்தைப் பிரதி பலிக்கின்றது கவிதை…! விரலுக்கு அதிகமாக வீங்குகிறோம் என்று தெரிந்தே வீங்கியது சிங்களம்…! அனுதாபம் வரவில்லை! ஆத்திரம் தான் வருகின்றது..! மக்கள் தான் பாவம்..! புத்தன் ஏதாவது பார்த்துச் செய்தால் தான் சிங்களத்துக்கு மீட்சி…!
வினைவிதைத்தவன் வினை அறுப்பான் நீங்கல் சொல்வது உண்மையே.
நன்றிகள் புங்கையூரன் அவர்களே. -
19 hours ago, nunavilan said:
ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோட முயல்கின்றனரா?
theweekLakshmi Subramanianராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடமுயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுவதாக இந்தியாவின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
அதுமேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ளது,இதற்கு மத்தியில் ராஜபக்சாக்கள் இலங்கையிலிருந்து தப்பியோட முயல்கின்றனர் என்ற தகவல்கள் கொழும்பில் காட்டுதீ போல பரவுகின்றன.
கட்டுநாயக்காவிலும் இரத்மலானையிலும் ராஜபக்சாக்களை ஏற்றிக்கொண்டுபயணிப்பதற்காக இரண்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன என்ற தகவல்களும் கொழும்பில் காணப்படுகின்றன.
முதல்குடும்பம் மீதான பொதுமக்களின் சீற்றம் கட்டுப்படுத்த முடியாததாக மாறியுள்ளதால் இந்த நிலை உருவாகியுள்ளது.
எனினும் ராஜபக்ச சகோதரர்களிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை நிராகரித்துள்ளன,சகோதரர்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுயல்கின்றனர் என அவை தெரிவித்துள்ளன.
கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியா திரும்பிய மறுநாள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டனர்.
கொழும்பில் உள்ள ராஜபக்சாவின் வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு வீதியிலும் ஆர்ப்பாட்டம் வெடித்தது, கோ ஹோம் கோத்தா என்ற பதாதைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்பட்டனர்.
மிரிஹானவில் உள்ள பங்கிரிவத்தையில் பதட்டமான சூழ்நிலை நிலவியதை தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கோத்தபாய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் பெருப்பிக்கப்பட்ட யூப்பிலி சந்தி வியாழக்கிழமை முதல் பாரிய ஆர்ப்பாட்டங்களை சந்தித்தவண்ணமிருந்தது.
எங்களிற்கும் குழந்தைகள் உள்ளன என பதாகைகளுடன் பெண்களும் குழந்தைகளும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர்.
கோத்தபாய ராஜபக்ச தனது பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்புவதை இலகுவாக்குவதற்காக யூப்பிலி சந்தி புனரமைக்கப்பட்டது.
கொழும்பும் நாட்டின் ஏனைய பகுதிகளும் 13 மணிநேர மின்வெட்டினை எதிர்கொண்டுள்ளன,எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தங்களால் சேவையில் ஈடுபடமுடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வினை விதைத்தவன் வினையறுப்பான்.....
-
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
அருமை.. பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👌
மகிழ்வோடு நன்றிகள் தோழர்
9 hours ago, alvayan said:அடுத்த ஆமி வெற்றி விழா வருகுதே...அது எங்கை நயினாதீவிலா....அல்லது ...ஆரியகுளத்திலா/..
நடத்தினால் நாஷம்தான் பொறுத்திருந்து பார்ப்போம்
மகிழ்வோடு நன்றிகள் alvayan
-
எங்கே போகிறது எம்திருநாடு!
*************************
அழகிய இலங்கை
ஆக்கிரமிப்புகள்
இருந்தாலும்-மக்கள்
ஒருகாலமும் உணவுக்கு
கையேந்தியதாய்
வரலாறு இருந்ததில்லை.
இடையில்..
உண்னமுடியாத
வாழைக்கிழங்கையும்
உணவாய்யுண்டு
தேங்காயோடு தேனீர்
குடித்தோம்.
பாணுகாக கியூவில்
பட்டினி கிடந்தோம்-என
சிறிமாவின் காலமும்
ஐம்பது ஆண்டுகளுக்கு
மேலாகிப் போச்சு.
ஆனால் இன்றோ
அதைவிடவும் கொடுமை
பார்க்குமிடமெல்லாம் கியூ
பாணுக்கும், பல்பொருளுக்கும்
பால்குடிகளின் பால்மாவுக்கும்
சமையல்எரி வாயுவுக்கும்
சாம்பாறு மரக்கறிகட்கும்
மண்ணெண்ணை பெற்றோள்
மாவு அரிசி யாவுக்குமே!
மக்கள் படும் பாடு
சொல்லிலடங்காது.
விடிவை நினைக்கவே
பயமாக இருகிறது
எழுந்தவுடன் அம்மா
பசிக்குது என
அழும் குழந்தைகளுடன்
நாமும் சேர்ந்து
அழத்தான் முடிகிறது-என
அன்றாடம் உழைக்கின்ற
தாய் தந்தைகள்.
விலைவாசி
என்னும் மலையை
மக்கள் தலையில் வைத்து
தூக்கி நடவென
சொல்லுகிறது அரசு.
பட்டினியாலும்- மின்
வெட்டாலும் சமநிலை
படுத்தப்படிருக்கும்
ஒரேநாடு ஒரேகொள்கை
கோனுயர குடியுயரும்-என
வாக்களித்த..
யுத்தம் தெரியாத சகோதர
இன மக்களும்
கோனையுயர்த்திவிட்டு
அவர்கள்போடும்
பொருளாதார-பசி
பட்டினிகுண்டுகளுக்கு
பலியாகும் நிலையில்
இன்றோ வீதியில்.
எனியாவது அரசு
போர்வெற்றியை விடுத்து
பொருளாதாரத்தை
கட்டியெழுப்புமா? அல்லது
கைமாறிக் கொடுக்குமா?
காலம் தான் பதில்
சொல்லவேண்டும்.
-பசுவூர்க்கோபி.
-
5
-
உயிர் தமிழே நீ வாழ்வாய்!
in கவிதைக் களம்
பதியப்பட்டது
உயிர் தமிழே நீ வாழ்வாய்!
*********************
பட்டாளம் எம்மை சுட்டாலும்
குண்டு பட்டாலும்
உதிரம் குடித்தாலும்
உணவு மறுத்தாலும்.
பிரித்தாலும் முறைத்தாலும்-சிறை
தன்னில் அடைத்தாலும்
அறுத்தாலும் தோல் உரித்தாலும்
அவயங்கள் எடுத்தாலும்.
அழித்தாலும்,புதைத்தாலும்
அடியோடு வெறுத்தாலும்
கருவோடு கலைத்தாலும்
கலையெல்லாம் பறித்தாலும்.
இருக்குமிடம் எரித்தாலும்
இடம் மாறியலைந்தாலும்
உருக்குலைந்து போனாலும்
உயிர் தமிழே நீ வாழ்வாய்.
இத்தனை வதைகள் வந்தபோதும்
செத்து மடியாத செந்தமிழே-உலகம்
உயிருடன் இருக்குமட்டும் அழிவு
உனக்கும் இல்லையென்பேன்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.