Jump to content

பசுவூர்க்கோபி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    418
  • Joined

  • Last visited

Everything posted by பசுவூர்க்கோபி

  1. எனது கவிதைக்கேற்ற உங்கள் வார்த்தைகளும் அருமை யாயினி நன்றிகள் உளமார்ந்த நன்றிகள்;
  2. அன்பின் தெய்வம் அம்மாவை நினைக்கவைத்த அருமைக் கடிதம்.
  3. ஊர் வம்பும், கைபேசியும்..! ********************* அந்தக்காலம்.. நல்லதண்ணிக் கிணத்தில நாலுபேர் கூடுமிடத்தில பக்கத்து வீட்டு பழசுகள்-2 பவ்வியமாய் வந்தாலே குலநடுங்கி போகுமாம் குடும்பங்கள் எல்லாம். மூல வீட்டுப் பெட்ட முளங்காலுக்கு மேல போடுது சட்ட ஓல வீட்டுப் பொடியன் ஒருத்தியோட ஓடிட்டான். வேலைக்கு அவன் போக-வீட்ட வேறொருவன் நிக்கிறான் காலக் கொடுமையென கதிராச்சி முடிக்க முன்ன.. குப்பத்தொட்டியில ஒரு குழந்த கிடந்தது-அது பக்கத்து வீட்டு பணக்காரச் சமாச்சாரம். எண்டு தொடங்கி எல்லா வரலாறும் சொண்ட நெளிச்சு சொல்லி முடிக்குமாம் மற்றது.. கடுகளவு உண்மையை மடுவளவு பெரிதாக்கி வதந்திய பரப்பிவிட்டு வாயமூடு நமக்கேன்-ஊர் வம்பு என்று சொல்ல.. வந்த சனமெல்லாம் வாயும் காதும் வைத்து சொந்தங்களுக்குள்ளே சொறிநாயாய் கடிபட்டு வெட்டுக்குத்தில போய்-ஊரே வெடிச்சு பிளந்து உண்மை பொய் தெரியாமல் ஓராயிரம் பிரச்சனைகள். கலியாணக்குளப்பமும் கருமாரியும்-வதந்தி கதை பேச்சால் நடந்த அந்தகாலம். இன்றும் வேறு வடிவில வீட்டுக்குள்ள திரியுதாம் எச்சரிக்கை.. கையில இருக்கிற கை பேசியை நம்பிறதால் பொய் வதந்தியெல்லாம் பொட்டளமாய் கொட்டி குடுப்பத்தை குலைத்து கொடுமை நடக்கிறது. கணவனுக்கு போண் வந்தால் மனைவிக்கு தூக்கமில்லை மனைவிக்கு மெசேச் வந்தால் கணவனுக்கு வாழ்க்கையில்லை. உள்ளத்து தூய்மையில்லா உணர்வு எமக்கிருந்தால் கள்ளப் போண் வருகுதென்று கணவன் மனைவிக்கே கை பேசி மூட்டி விட்டு-பல கலவரங்கள் அது பார்க்கும். பிள்ளைகளை வழி நடத்த முதலில்.. பெற்ரோரே முடிவெடுங்கள் இல்லையேல் ஒவ்வொரு மூலையாய் உங்களைப் போல் பிள்ளைகளும். குரோதம் தவிர்த்து குடும்பத்துக்குள்ளே திறந்த மனதுடன் திறப்பின்றிப் “போணை” அனைவரும் பார்க்க அனுமதித்தாலே வதந்திகள் பயப்படும் வாழ்வே ஒளி பெறும். அன்புடன் -பசுவூர்க்கோபி- 07.03.2021
  4. உங்களின் கதையில் எனது ஊர் வாசனை அடிப்பதோடு பால்சுறாவும் குழல் புட்டும் வந்து இனிக்கிரது. தொடருங்கள் அருமை இனிமை.
  5. புங்குடு தீவுக்குள் தொடங்கி நயினாதீவைத் தொட்டு நெடுந்தீவுக்குள் இறங்கி விட்டீர்கள். அந்த சந்திரன் அண்னாவையும் எனக்கு தெரியும் போலக்கிடக்கு அருமையாக இருக்கிறது கதை..எனக்கும் ஊரின் நினைவுகள் உள்ளுக்குள் வந்து உசுப்புகிறது.அன்பின் புங்கையூரான் அவர்களே. தொடருங்கள்
  6. நன்றிகள் எனது கவிதை பற்றிய உங்களின் வார்த்தைகள் உற்சாகம் தருகின்றன நன்றிகள்
  7. நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்து முதல்,முதல் கொட்டிப்பார்த்த.. வெண்பனித்தூறல் நான் பிறந்த மண்ணின்(ஈழம்) வாசனையே என்னுக்குள் வந்து எழுத வைத்தது. வெண்பனித்தூறல்..! ***************** மார்கழி தொடங்கிவிட்டால் வானம் மந்திரித்துக் கொட்டுமிந்த-வெண்மைநிற தேங்காய்த் துருவலோ? தேசமெல்லாம் பூத்திருக்கும் மல்லிகையோ!முல்லையோ! வெள்ளை நிற றோஜாவோ? வெண்தாமரை இதழ்தானோ-ஏன் கடல் களைத்து கரையொதுங்கும் நுரையலையோ.. கண்சிமிட்டிக் கொட்டுகின்ற விண்மீனோ.. வெட்டுக்களி எழுப்பும் வெண்புளுதிப் படலமோ வெற்றிலைக்கு போட்டுமெல்லும் வெண்நிறத்துச் சுண்ணாம்போ பாலாறு ஓடி தயிர் படிந்து உறைந்ததுவோ பருத்தி மரம் ஈன்ற பஞ்சினத்துக் குஞ்சுகளோ இலவம் காய் வெடித்ததுவோ இளம் பெண்கள் புன் சிரிப்போ முதுமை உலகத்து மூதாட்டி நரை முடியோ கொட்டிக் குவிந்துவிட்டால் கோபுரமும் தெரியாது-பின்பு பட்டக் குளிர் அடிக்கும் பல நிறமும் உள் மறையும்-இப்போ எல்லாம் ஒரே நிறம் எங்கும் சமாதானம் இது வேண்டும்,வேண்டும். அன்புடன்-பசுவூர்க்கோபி-
  8. இயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. அன்புடன் -பசுவூர்க்கோபி-
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.