Jump to content

பசுவூர்க்கோபி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    418
  • Joined

  • Last visited

Posts posted by பசுவூர்க்கோபி

  1.  

    large.0-02-0a-70b421f6e7a50049efae402661b0d27e52575470c7e3e1a25f254ea62d37756a_1c6da250f13d8e.jpg.d63cf5249e27dd62f64e0d8831d71b95.jpg

    மேநாள்..!

    ***********

    உழைப்பாளர் தினம்

    18ம் நூற்றாண்டின்

    போராடிப் பெற்றதிற்கான

    வெற்றித்தினம்-இந்த 

    மேதினம்..

     

    ஆனால் இன்றும் ஆதிக்க

    அரசியல்

    முதலாளி..

    வர்க்கத்துக்கு எதிராக

    போராடவேண்டிய தினம்.

     

    உலகெங்கும் இன்று 

    லீவுநாள்.

    முதலாளிகளுக்கு

    ஆடம்பர நாள் அன்றாட

    தொழிலாளர்களுக்கு-இது

    பட்டணியின் நாள்.

     

    இருந்தாலும் 

    எல்லோரையும் துரத்தும்

    பொது எதிரியின் நாள்

     

    அதுதான் 

    “கொரோனாவின் நாள்”

     

    உயிர் காக்க அனைவரும்

     இணைந்து..

    போராடுவோம்.

     

    அன்புடன் -பசுவூர்க்கோபி-

    01.05.2021

    • Like 4
  2. On 19/4/2021 at 18:09, suvy said:

    வாவ்.....அழகான கவிதை கோபி.......அதற்கு அந்த அய்யாவின் விளக்கம் அதி சிறப்பு.......!  👍

    பகிர்வுக்கு நன்றி கோபி.......!   

    நன்றி  அண்ணா

  3. அன்பான யாழ் உறவுகளுக்கு.. 

    எனது இந்த கவிதை முனைவர் முபா ஐயா அவர்கள் தமிழ் நாடு புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக்  கல்லூரியில் படித்திருந்தார்  அவர்களுக்கு நன்றிகள்.

    பார்கின்ற உங்களுக்கும் நன்றிகள்.

     

    • Like 3
  4. On 13/4/2021 at 20:14, suvy said:

    அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம்

    அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும்

    உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும்

    ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும்.....!

     

    நிஜமாகவே  இப்படி ஒரு காலம் வரவேண்டும் என மனசு கிடந்தது அடிக்குது......!

    பாராட்டுக்கள் கோபி......!   👏

    நாளைய விடிவு நமக்கா விடியுமென்ற நம்பிக்கையோடு வாழுவோம். நன்றி அண்ணா

  5. 15 hours ago, நிலாமதி said:

    நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020

    நீள் துயர்  துயர் எமை விட்டு அகலவேண்டும்

     

    விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம்

    விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும்

    அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும்

    அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும்.

     

     

     அழகான வரிகள் எம் விருப்புகளை எல்லாம் நிறைவேற்ற அந்த பரம் பொருளை வேண்டுவோம். பாராட்டுக்கள் கோபி  

    எமக்கு மேலே இருக்கின்ற அந்த சக்தியால் தான் எல்லாமே முடியும். உண்மையே அக்கா நன்றிகள்

  6.  

     

     

     

    large.0-02-05-5efd33be98e8035f5a7eae7050c3c3937265622f5f32b50c3217b7e4c74beb67_1c6da464cb69a3.jpg.49d09677e0a23977e1fff5e40d0a92a6.jpg

    சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!

    *******************************

     

    நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020

    நீழ் துயர் எமை விட்டு அகலவேண்டும்

    உலகத்து நாடனைத்தும் உயர வேண்டும்

    உயர்வான எண்ணங்கள் தோன்ற வேண்டும்.

     

    அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம்

    அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும்

    உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும்

    ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும்.

     

    விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம்

    விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும்

    அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும்

    அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும்.

     

    விண் மேகம் கடலோடு  உரச வேண்டும்-பூமி

    விளைநிலத்தில் தென்றலது பாடவேண்டும்

    இருள் வெளுக்க சூரியனும் ஒளிர வேண்டும்

    இயற்கையவள் எமைச் சேர்த்து வாழவேண்டும்.

     

    அவளிடத்தில் எங்களுக்கு பணிவு வேண்டும்

    அனைத்துயிரும் எமைப்போல காக்கவேண்டும்

    அண்டவெளி பிரபஞ்சம் நாம் அறிய வேண்டும்

    அறிந்த பின்பு எம்மையவன்அழைக்கவேண்டும்.

     

    அன்புடன் -பசுவூர்க்கோபி-

    13.04.2021

    • Like 3
  7. On 8/4/2021 at 21:08, suvy said:

    ஆஹா......நெருஞ்சிக்கு கவிபாடிய குறிஞ்சிக் கவிஞனே நின் கற்பனை வளம் பெறுக, நீவிர் நீடுழிவாழ்க .....!  🌹

    உங்களின் ஆசீர்வாதம் என்னை மென்மேலும் எழுதத்தூண்டும் நன்றிகள் அண்ணா

     

  8. large.0-02-0a-32dd37dbdbb780c15ca3ee7d4b29cb384147f6ce36d6f40833674345a9422aa5_1c6da1412537e8.jpg.998cf9419a74a87b20140bdab7f27eb0.jpg

    பசுவூர்க்கோபியின் படம்சொல்லும் வரிகள்-03

    **********************************

    கூட்டுக்குடும்ப
    வாழ்வை விட்டு
    குடத்து நீரை
    இடுப்பில் 
    அணைத்து
    பிரிவின் துயரை
    மனதில் சுமந்து

    ஒற்றையடி
    பாதையிலே
    ஓரமாய் வந்தேன்
    அப்போது.. 
    கும்பலாய் கிடந்த
    நெருஞ்சி முற்கள்

    குத்திச் சொன்னது.
    இயற்கையின்
    விதியை
    தனியே வாழ 
    ஆசைப்படுகிறோம்
    தாயே எடுத்து
    தூர எறியுங்கள்.

    உதிரம் வடிந்த
    காலின் வலியால்
    ஒளிமயமானது
    எங்களின் வாழ்வும். 


    -பசுவூர்க்கோபி-

    08.04.2021

    • Like 3
  9. On 2/4/2021 at 14:34, குமாரசாமி said:

    நுரை போல
    பொங்கி வரும்
    அழகுத்தமிழ் சொற்களால்
    கவிதை 
    பொங்கி வருகிறது
    உங்கள் இதயத்திலிருந்து....👍🏽

    உளமார்ந்த நன்றிகள் ஐயா

    On 3/4/2021 at 13:14, உடையார் said:

    அருமையாக கவிதை வடிவில் நிஐத்தை சொல்லியுள்ளீர்கள், பாராட்டுக்கள்

    என்றும் எனது கவிதைக்கு ஊக்கம் தரும்  அன்புடையாருக்கு நன்றிகள்.

  10. large.Unknown-1.jpeg.0d012990a3d3515ff103105ad8563b9c.jpeg

    வண பிதா வுக்கு 

    கண்ணீரால் எழுதுகின்றேன்.

    *********************

     

    வண பிதாவே..

    நீங்கள் பிறந்ததாலே நெடுந்தீவு

     தாய்க்கு மகிழ்ச்சி

    நீங்கள் பிறந்த மண்ணில் 

    நாங்களும் பிறந்தோம் என்பது 

    எங்களுக்கு மகிழ்ச்சி

    நீங்கள் இறைபணித்தூதராய் 

    துறவறம் பூண்டு செய்த சேவைகள்

    இலங்கை மக்களுக்கே மகிழ்ச்சி

    தமிழ் உணர்வாளராய் தமிழை 

    தலைநிமிர வைத்தது-உலக

    தமிழினத்துக்கே மகிழ்ச்சி.

     

    மனித நேயம் கலந்து..

    இத்தனை மகிழ்சிகள் எமக்குத்தந்த பிதாவே

    இன்று(1.04.21) எமைவிட்டு பிரிந்த செய்தி

    அறிந்து அகிலமே கண்ணீரால் கரையுதையா.

    இறைவனோடு இறைவனாய் என்றும் 

    எம்மனதில் நிலைத்திருப்பீர்கள்.

    போய் வாருங்கள் ஆண்டகையே.🙏

    அன்புடன் -பசுவூர்க்கோபி-

    • Like 6
    • Thanks 1
  11. On 28/3/2021 at 23:00, nige said:

    யதார்த்தத்தை சொல்லும் கவிதை... வலிசுமந்த வரிகள். பகிர்வுக்கு நன்றி 

    ஊக்கம் உங்கள் வார்த்தைக்கு உளமார்ந்த நன்றிகள் 

  12. On 25/3/2021 at 15:42, நிலாமதி said:

    கலப்பை தூரிகையால் வியர்வைத்துளிகள் குழைத்து
    பூசப்பட் டதே இந்த பச்சை வர்ணம். ............

    பரிசு  நெல்மணிகளாய் ....

    உண்மையான விவசாயியின் வரிகள். நன்றி 

    நன்றிகள் அக்கா

  13. 22 hours ago, கிருபன் said:

    மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து சக மனிதர்களுடன் சண்டையிட்டு அழித்தும் அழிந்தும் வருகின்றார்கள். எனவே, சண்டையில்லா நிலை கனவில் மட்டும்தான் வரும்!

    சிங்களவர்கள் மேலாதிக்க உணர்வுடன் வாழும்வரை இலங்கைத் தீவில் முறுகல்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

    உங்கள் கருத்துக்கு நன்றிகள் கிருபன் அண்ணா  

  14. 22 hours ago, suvy said:

    தமிழ்..

    வடக்கு கிழக்கென்றும்

    சிங்களம்.. 

    தெற்கு மேற்கென்றும்

    ஒவ்வொரு பகுதியாக

    பிரிந்து வாழ்ந்தாலும்

    ஒற்றுமையைத் தவிர

    அப்போது..

    ஒருநாளும்

    நான் கண்டதில்லை 

    சண்டையை.....!

     

    நிஜமான கருத்துக்கள் .......கோபி......!  👏

    நன்றிகள் சுவி அண்ணா

  15. 15 hours ago, புங்கையூரன் said:

    ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளூக்கு முன்பே, கணியன் திருப்பூங்கனார் கூறியது,

    யாதும் ஊரே....யாவரும் கேளிர்

    எம்மைச் சுற்றி வட்டங்களை நாங்கள் போடவில்லை! மற்றவர்களே போட்டார்கள்!

    உலகம் முழுவதும் விதைக்கப் பட்டிருக்கிறோம்! அறுவடை காலமும் அண்மித்து வருகின்றது!

    ஏக்கம் சுமந்து வரும் கவிதை! நன்றி....!

     

    அருமையாக பதில் தந்தீர்கள். வாழ்த்துக்ளும் நன்றிகளும் அண்ணா

     

  16. large.0-02-0a-af8a7659afd3c85d3d89aef97cc8e7bb65d77a0e56c422d82f6d53586742f668_1c6da4fbb55557.jpg.e3574bbb081567c99eccdcd5d27f2275.jpg

    அப்புவிட அப்புவும்,பேரனும்..!

    *********************

    கந்தையா அண்ணரும்

    காசிம் நானாவும்

    றம்பண்டா மல்லியும்

    ஒரு குடும்பமாய்

    திரிந்த காலம்

    அப்போது ..

    ஒருநாளும்

    நான் கண்டதில்லை 

    சண்டையை..

     

    புத்த பெருமானுக்கும் 

    நபிகள் நாயகத்துக்கும்

    ஜேசு பிரானுக்கும் 

    சித்தர் சிவனுக்கும்-மதம் 

    பிடித்ததாய்..

    அப்போது..

    ஒருநாளும்

     நான் கண்டதில்லை 

    சண்டையை..

     

    கண்டியில பெரகராவும் 

    திருக்கேதீச்சரத்தில 

    சிவராத்திரியும்

    கொச்சிக்கடையில

    பாலன் பிறப்பும்

    மட்டக்களபில 

    நோன்புப் பெருநாளும்

    அன்பாக நடந்ததே தவிர

    அப்போது..

    ஒருநாளும்

    நான் கண்டதில்லை

    சண்டையை..

     

    ஒவ்வொரு இடத்தில 

    ஒவ்வொரு ஆலயம் கட்டி

    வளிபாட்டுத்தலமெல்லாம் 

    அனைவரும்

    வந்து வணங்கி வளிபட்டு

    போனார்களே தவிர

    அப்போது..

    ஒருநாளும்

    நான் கண்டதில்லை

    சண்டையை..

     

    தமிழ்..

    வடக்கு கிழக்கென்றும்

    சிங்களம்.. 

    தெற்கு மேற்கென்றும்

    ஒவ்வொரு பகுதியாக

    பிரிந்து வாழ்ந்தாலும்

    ஒற்றுமையைத் தவிர

    அப்போது..

    ஒருநாளும்

    நான் கண்டதில்லை 

    சண்டையை..

     

    இப்படி எனக்கு-என்

    அப்புவிட அப்பு 

    கனவில வந்து

    கதை சொல்லி போனார்.

     

    அப்போது நினைத்தேன்

    இப்போது நடப்பது

    அரசியல் வாதிகளும்-சில

    அரசடி வாதிகளும்

    தாம் வாழ நினைத்து.

     

    வல்லரசு சிலதோட

    வறுமையை காட்டி

    முக்குலத்தையும்

    முட்டி மோதவிடும் 

    முடிவால்தான்-இன்று

    எங்களுக்குள்ளே

    இத்தனை..

    சண்டையோ?

     

    எண்ணித் திகைத்து

    இடையில.. 

    எழுப்பி விட்டேன்.

    “விடியவில்லை”

    ஐயோ பக்கத்தில..

    அழுகுரல்கள் கேட்கிறது.

     

    அன்புடன் -பசுவூர்க்கோபி-

    27.03.2021

    • Like 8
    • Thanks 1
  17. 18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

    கஷ்டப்பட்டு உழைக்கும் மனிதா அதை அனுபவிக்காது மிச்சம் பிடித்துச்  சேர்த்து என்ன பயன்????

    😂😀

    உங்கள் கருத்துக்கு நன்றிகள்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.