Jump to content

பழுவூர்கிழான்

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  24
 • Joined

 • Last visited

Everything posted by பழுவூர்கிழான்

 1. சி வி இராமனின் மைத்துனர் இல்லை, சகோதரனின் மகன், சி வி இராமன் இவரது சித்தப்பா ஆவார். இவர் லாகூரில் பிறந்தவர், சிக்காகோவில் காலமானார்.. அத்துடன் இவர்கள் இருவரும் பௌதீகவியலில் நோபல் பரிசு பெற்றவர்கள்.. அவரின் நினைவாகவே அமெரிக்காவினால் “Chandra X-ray Observatory” விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது..
 2. புலிகள்தான் தமிழருக்கான தீர்வுக்கு தடை என்றார்கள், ஆனால் இன்று புலிகளும் இல்லை, தீர்வும் இல்லை…
 3. லெப் கேணல் வினோதன், கேணல் ரமணன் எல்லாம் ஒரே ஊரவர்கள். (பழுகாமம், மட்டக்களப்பு)
 4. நல்லது, எனினும் 2009 இல் இவ்வாறான கூட்டு எதிர்ப்புகள் ஏதும் நடந்ததா?!
 5. எனக்கும் ஆசை உண்டு, என் வாழ்நாளில் இந்தியா சிதறுண்டு போவதை காணவேண்டும்.... என் நெஞ்சில் தணலாகக் கனல்கின்றது, என் மக்கள் பட்ட, படுகின்ற துன்பம்
 6. ஆக இந்தியாவிற்கு பின்னால் தமிழர்கள் “வால்பிடிக்க” வேண்டுமென்றா கட்டுரையாளர் விரும்புகின்றார்??!!
 7. தேர்தல் முடிய எல்லாப் பணத்துக்கும் கோவிந்தா.....கோவிந்தா....
 8. நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?!
 9. இலங்கை இனப்பிரச்சினை எனும் அரசியல் சதுரங்கத்தில் “ஹிந்தியா” தப்பாட்டம் ஆடி “ராஜாவை” இழந்ததுதான் மிச்சம்... அத்தப்பாட்டம் இன்றும் தொடர்வதுதான் சோகம்...
 10. ”நாங்கள் ஒரு இனவிடுதலைக்கான, இனத்தினுடையதன்னாட்சிக்கான, ஒரு கட்டமைப்பைஉருவாக்குவதற்கான கோரிக்கையை எங்கள் மக்கள் மத்தியில் முன் வைத்திருந்தோம். அதற்காக வழங்கப்பட்ட ஆதரவின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள்தான் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்“ தங்களின் இக்கருத்திற்கு அமைவாகவா இவ்வளவு காலமும் அவர்கள் நடந்துகொண்டார்கள்? தன்னாட்சி, சமஷ்டி, 13+, 13, ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு என்று இன்று ஒற்றையாட்சியினுள் பொருளாதார அபிவிருத்திதான் தமிழர்க்கு தேவையானதேயன்றி அதிகாரப்பகிர்வு அல்ல என்று அவர்கள் (அரசாங்கம்) கூறுமளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்...
 11. இங்கு நியூஜேர்சியிலும் சிற்சில இடங்களில் படிப்படியாக நெகிழிக்குத் தடைவருகின்றது.
 12. மட்டக்களப்பில் “ஆடவர் தோளிலும் கா.... அரிவையர் வாயிலும் கா...” என்பது போல, (குறிப்பாக) படுவான்கரைப் பெருநிலத்தில் “வாங்ககா” “போங்ககா” “எங்ககா” எனப் பலசொற்கள் வழக்கத்தில் உள்ளன. அந்தவகையில் இந்த “வாங்கோகா” என்பது “வாங்ககா” எனும் சொல்லின் திரிபாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.
 13. சும்மாவா வேலை வாய்ப்பு வழங்கினவர்!! எல்லோரிடமும் இலட்சக்கணக்கில் வாங்கித்தானே வேலை வழங்கினவர்... என்னிடம் பணம் இல்லை என்றதால் தன்னுடைய மருமகனுக்கு நிலவளவை திணைக்களத்தில் வேலை வாங்கி கொடுத்தவர்தானே!!??
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.