Jump to content

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1317
  • Joined

  • Days Won

    4

Posts posted by பாலபத்ர ஓணாண்டி

  1. தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..

    • Like 2
  2. 42 minutes ago, பையன்26 said:

    யாழ்க‌ள‌ம் முன்பு போல் வேக‌மாக‌ வேலை செய்யுது இல்லை அண்ணா...........நீண்ட‌ நேர‌ம் எடுக்குது க‌ருத்துக்க‌ள‌த்துக்குள் வ‌ர‌...............

    100 வீதம் உண்மை.. இதனால் நான் இப்பொழுது எதுவும் எழுதுவதில்லை.. பதில் எழுதுவம் எண்டு திரிய ஓப்பின் பண்ணினா திரி வந்து சேரா விடியுது.. அதுவும் பாதி வருது மீது வெள்ளையா இருக்கு.. அந்த மீதி வர இன்னும் அரைநாள் வெயிட் பண்ண வேண்டி இருக்கு.. இவ்வளவு வெயிட் பண்ணி ஒவ்வொரு திரியா கருத்து எழுதுறது எண்டால் ஒண்டு பென்சன் எடுத்திட்டு சும்மா வீட்டில் இருக்கோணும் இல்லாட்டி பங்குச்சந்தையில முதல போட்டிட்டு காலாட்டிக்கொண்டு இருக்கோணும் இல்லாட்டி இருபத்து நாலு மணி நேரமும் கொம்பியூட்டரில இருக்கிற IT ல வேலை செய்யோணும்.. நிர்வாகம் தயவு கூர்ந்து பழைய வேகத்துக்கு லோட்டாகும் யாழை கொண்டு வர ஏதாவது செய்யுங்கள்..

  3. வாத்திய பாத்து நீ வாத்தியா எண்டு கேட்டால் வாத்திக்கு கோபம் வரத்தான் செய்யும்..

    டாக்டர பாத்து நீ டாக்டரா எண்டு கேட்டால் டாக்டருக்கு கோபம் வரத்தான் செய்யும்..

    காவாலிய பாத்து தமன்னா “ நீ காவாலியா” எண்டு கேட்டால் காவாலிக்கு கோபம் வரும்தான..

    வாத்திக்கும் டாகடருக்கும் வந்தா ரத்தம் காவாலிக்கு வந்தா தக்காளி சட்னியா..? 😡😡

    • Haha 1
  4. 2 hours ago, உடையார் said:

    இந்த மேற்கின் சதியால்தான் நாம் சொந்த ஊரைவிட்டு இடம் பெயர வேண்டியிருந்த து, இல்லாவிட்டில் சொந்த மண்ணில் மானத்துடன் வாழ்ந்திருப்போம்

    இங்கு வந்து இப்படியொரு கேள்விக்கு ஆளாகியிருக்கமாட்டோம்

    பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்கள்👍🙏

    இது எமக்கு மட்டுமன்றி இந்த நூற்றாண்டில் விடுதலைக்காக போராடும் அத்தனை சிறுபான்மை இனங்களுக்கும் பொருந்தும்.. அது மட்டுமின்றி  இந்தியா போன்ற பல தனித்துவ இனங்களை நசுக்கி மேற்குலகி விட்டுச்செல்லும்போது நாடாக உருவாக்கப்பட்டிருக்கும் பெரிய நாடுகளில் மொழியை கலாச்சாரத்தை காக்கப்போராடும் சிறுபான்மை இனங்களுக்கும் பொருந்தும்..

    உடையார் எழுதியது இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் நசுக்கப்பட்டும் அளிக்கப்பட்டும் கொண்டிருக்கும் சிறுபான்மை இனங்களின் வரலாற்று துயரத்தின் விதை/வேர்..

    இந்த நூற்றாண்டில் விடுதலைக்காக போராடும் மற்றும் போராடிய இனங்களின் அந்த போராட்ட தேவையின் ஆரம்ப புள்ளியை தேடிப்போனால் உடையார் எழுதியதில்தான் வந்து நிற்கும்..

    இன்று உணவும் உடையுளும் தந்து நம்மை வாழவிட்டிருக்கிறார்கள் என்பதற்காக நாம் உட்பட பலநூறு சிறிபான்மை இனக்குழுக்களின் கட்டப்பொம்மன்களாக நாம் மாறி மேற்கை சகட்டுமேனிக்கு போற்ற முடியாது.. 

     

    • Like 3
    • Thanks 1
  5. 4 minutes ago, Kandiah57 said:

    நான் படம் பார்ப்பதில்லை  எந்தவொரு இசை நிகழ்வுகளும் பார்ப்பது இல்லை  அதற்காக மற்றவர்களை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை  நன்றாகவே பாருங்கள்  நான் மூடிக்கொண்டு வீட்டில் இருக்க நீங்களா சாப்பாடு போடுகிறீர்கள்??   இங்கே கழுவி துடைத்து தெரு கூட்டி தான் சாப்பிடுகிறோம்  மட்டுமல்ல ஊருக்கும் அனுப்பி உள்ளோம்  யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு இருக்கும் போது  நாங்கள் கூட்டக்கூடாது துடைக்க கூடாது கழுவக்கூடாது  என்று கொண்டு திண்ணையிலிருந்து  வாய் நிறைய வெற்றிலை பேயிலை போட்டு  கணட இடமெல்லாம் இரத்த சிவப்பாக துப்பிக்கொண்டு திரிய தெற்கிலிருநது சிங்களவன் வந்து  கூட்டி துடைத்து கழுவதை  நான் நேரில் பார்த்துள்ளேன்  நாங்களும் உங்கே உள்ளவார்கள். போலிருந்தால் பிச்சை தான் எடுக்க வேணடும் அடுத்த தலைமுறையை சேரந்த படிக்காதவரகள் இங்கே வாழுபவரகள்.  பிச்சை தான் எடுக்க வேண்டும்  

    இங்கே பணம் மரத்தில் பிடுஙகுவது இல்லை  வேர்வை சிந்தி உழைக்க வேண்டும்  குத்தி இருந்து சாப்பிட்டு கொண்டு மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களை  அனுப்பு அனுப்பு என்று நடு சமத்தில் தொலைபேசியில் கேட்க முடியாது கருத்துகள் எழுதும் போது சிந்தித்து எழுதவும் 

    போராடும் போது அவர்களை கொண்டாடுவது   கூத்தாடிகள். பாடும் போது இவர்களை கொணடாடுவது  இது தான் தமிழ் இனம்  சரி பிழை துக்கி பாரக்கமால் எழுந்தமானத்தில் தங்களுக்குள் தேவையில்லாமல் தங்களுக்குள் அடிபடுவார்கள் அது தான் தமிழ் இனம்

    முள்ளிவாய்க்கால் இறந்துபோனவாரகள் இவர்களின் உறவினர்கள் தானா?? சகோதரர்கள் தானா??

    வள வள சள சள எண்டு அலம்பாமல் பொயின்ற்சை எழுதுங்கோ.. மாட்டை பத்தி எழுதச்சொன்னா மாடுகட்டின கட்டை, கயிறு, மாடு திண்ட புல்லு எல்லாம் எழுதிக்கொண்டு..  முள்ளிவாய்க்காலுக்கும் நடிகர்மார் வாறதுக்கும் என்ன சம்பந்தம்..? நீங்கள் படம்பாக்காததுக்கு நாங்கள் என்ன செய்யிறது.. ஊரில இருக்கிறவன் பாப்பான் விடுவான்.. உங்கட கட்டை வேகோணும் எண்டதுக்காக நாங்கள் எங்கட கவட்டையை வேக வைக்கேலுமோ..

  6. 1 hour ago, Kandiah57 said:

    ஜேர்மனியில் இருந்து நேரடியாக போய் குதிக்கலாமா?? அதென்ன சர்வதேச விமான நிலையம்??  உள்ளூர் அல்லது பிராந்திய விமான நிலையம் கட்டுநாயக்கவா??🤣

    இவர்களுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்தால்  முள்ளிவாய்க்கால் நடந்தது என்பதையும் இனப்படுகொலை நடந்தது என்பதையும் நம்ப முடியவில்லை 

    முள்ளிவாய்க்காலை நினைத்து நினைத்து உருகி உருகி ஜேர்மனியில் நீங்கள் மட்டும் மூடிட்டு வீட்டுக்குள்ள முக்காடு போட்டுட்டா இருக்கிறியள்..? இல்லத்தான..

    • Like 2
    • Haha 1
  7. 7 hours ago, Kapithan said:

    ""கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள சிவா சிவநாதன்""

    அடுத்த துரோகி பட்டம் ஆயத்தம் செய்யலாம்,......🤣

     

    சிங்களம் தனது மூளையை தனது நலனுக்காக  பாவிக்கிறது.

     

     

    அதெல்லாம் தெரியாது.. அந்தளவுக்கு சிந்திக்க நமக்கு அறிவும் இல்ல.. ஆள் சிங்களவன் கூப்பிட்டு வந்திருக்கு.. வார்டன்னா அடிப்பம்.. ஆள் துரோகிதான்.. மூடிட்டு கிளம்புங்க நீங்கள்..

     

    • Haha 2
  8. பாஜாக பி டீம் யாரென்பதை காலம் நிரூபிக்கும்.. திமுகா எத்தனைகாலம் ஏமாத்த முடியும்..

  9. 6 hours ago, alvayan said:

    இதையும் பார்த்து புல் சவுண்டு கொடுங்க ...

    2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை, எமது மக்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் பலமான நேர்மையான அமைப்பு எதுவும் இல்லை என்பது பலரது கவலை.

    ஆனால், தமிழ்த் தேசியம் தன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை.

    தலைமை, அமைப்பு, கட்சி பற்றிய எந்தக் கவலையுமின்றி யாருக்காகவும் காத்திராமல் தனது மக்களுக்கூடாக தமிழ்த் தேசியம் அடுத்த கட்டத்தை நோக்கி பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது.

    அண்மையில் கனடாவில் தமிழ்த் தேசியப் பற்றாளர், தீவிர செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது தொடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்ட வழக்கு இதற்கு நல்ல உதாரணம்.

    கனடாவில், 2021 கார்த்திகை மாதம்...

    மாவீரர் வாரத்தில் கார்த்திக் நந்தகுமார் என்பவர் கார்த்திகைப் பூக்களை பெருமளவில் இறக்குமதி செய்து, அவற்றைக் கொண்டு ஒரு பிரமாண்டமான மாலை செய்து ஐயப்பன் ஆலயத்தில் கொடுத்து அதனை வைத்து சுவாமி ஐயப்பனிற்கு அலங்காரம் செய்யுமாறு ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதனை ஆலய நிர்வாகத்தில் தமிழர் தேசியத்துக்கு எதிராக அந்நிய சக்திகளோடு இயங்கும் ஒரு சிலர் மறுத்ததோடு அந்த மாலையைக் குப்பையில் வீசினர். இந்த நிகழ்வு தமிழ் இளையோர் மற்றும் ஐயப்பன் கோவில் பக்தர் மத்தியில் பெரும் அதிர்வை விளைவித்ததோடு அவர்கள் ஆலய முன்றலில் ஆலயத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவர்களும் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு ஆதரவாக செயற்படுபவர்களாக கருத்தப்பட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினார்.

    அதன் விளைவு : "கோவில் நிர்வாகம் கார்த்திக் மீது கனடா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது"

    கார்த்திக் நந்தகுமாரின் தேசியம் தொடர்பான செயற்பாடுகளை சுட்டிக்காட்டியும், அவரின் தனிப்பட்ட வாழ்வியலை காரணம் காட்டியும், குறிப்பாக, அவர் தேசியத் தலைவரை முன்னிலைப் படுத்தி திருமணம் செய்தமை மற்றும் அவரின் உருவம் தாங்கிய தாலியை அணிவித்தமை, பிள்ளைகளுக்கு, தீரன்பிரபாகரன், நந்திக்கடலோன் என்று பெயர் சூட்டியமை மற்றும் அவரின் வியாபார நிறுவனத்தின் வெளிப்புறத்தில் கார்த்திகை பூக்களின் படங்களை வைத்திருந்தமை என பல தகவல்கள் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்து கார்த்திக் நந்தகுமார் புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார் என ஐயப்பன் ஆலய நிர்வாகத்தின் சார்பாக குற்றம் சாட்டப் பட்டது.

    மொத்தத்தில் ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாட்டளானை முடக்குவதற்கும், அவரை அழிப்பதற்கும் அதனை ஏனைய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு ஒரு பாடமாக ஆக்குவதற்மான வகையிலேயே இந்த வழக்கு கார்த்திக் மீது தொடுக்கப்பட்டது.

    அந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை கடந்த 16 ஆம் திகதி நீதிமனறத்தில் நடைபெற்றது. ON-LINE இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது பொது மக்களும் பார்வையாளரகளாகக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பல தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் உலகெங்கிலும் இருந்து இதில் பார்வையாளராகக் கலந்து கார்த்திக்குக்கு தமது ஆத்மாத்த அதரவைத் தெரிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    உயர் நீதிமன்ற நீதிபதி J.T. Akbarali J. தனது தீர்ப்பில்,

    "ஐயப்பன் ஆலயம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை தள்ளுபடி செய்வதாக அறிவித்ததோடு, இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்"

    எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்த வழக்கின் தீர்ப்பு சூட்சுமமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது....

    தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது ஈழத்தமிழரின் உரிமை, ஈழத்தமிழரின் விடுதலை, தமிழர் அறம் தமிழர் பண்பாடு சார்ந்த விடயம் மட்டுமல்ல; அது உலக அறம் சார்ந்த நிலைப்பாடு, அது நீதி சார்ந்த நிலைப்பாடு; அது அனைத்து அநீதிகளுக்கும் எதிரான நிலைப்பாடு!

    அது ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல அது மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு!

    அது தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல மனிதப் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு!

    அது மனித நாகரீகம் சார்ந்த நிலைப்பாடு; மனித ஒழுக்கம் சார்ந்த நிலைப்பாடு!

    மொத்தத்ததில் அது மனிதம் சார்ந்த நிலைப்பாடு, கோட்பாடு, வாழ்வியல் முறை!

    “இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்” என்னும் நீதிபதியின் கூற்று அதனையே சுட்டிக் காட்டுகிறது. அதாவது தமிழ்த்தேசிய நிலைப்பாடு என்பது உலக நீதி, மனித அறம், மனித ஒழுக்கம், மனிதப் பண்பாடு மற்றும் மனித நாகரீகம் மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு என்பது இங்கு நிரூபணமாகியுள்ளது.

    தமிழ்த் தேசியம் சார்ந்த விடயங்களை இனிமேலும் சட்டவிரோத நடவடிக்கையாகவோ, பயங்கரவாதப் போர்வைக்குள்ளே முடக்கிவிட முடியாது.

    தமிழ்த்தேசியம் தனது மக்களுக்கூடாக அடுத்த கட்டத்தை நோக்கிச் பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது என ஆரம்பத்தில் நான் கூறிய கூற்றுக்கான ஆதாரமாக இந்த வழக்கின் வெற்றியை நான் பார்க்கிறேன்.

    ஆம்! இது எமக்கான காலம். எமக்கெதிரான குற்றச்சாட்டுகள், வழக்குகள், பிரச்சாரங்களை நாம் துணிவோடும் ஒருமித்தும் எதிர்கொண்டால் நாம் வெல்வதும் வாழ்வதும் நிட்சயமானது என்னும் பெரு நம்பிக்கையைத் தருகிறது இந்த வழக்கின் வெற்றி.

    பாராட்டுகள் Karthick Nanthan

    பி.கு: கனடாவில் உள்ள ஐயப்பன் கோவிலானது இலங்கையில் உள்ள போர்க்குற்றவாளிகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வேலையைச் செய்து வருகிறது எனவும் அதன் பின்னணியில் கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உள்ளது எனவும் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

    (copy from... நண்பரின் முகப்புத்தக பதிவில் இருந்து பிரதி செய்யப்பட்டது)

    இந்த செய்தி உண்மையானால் வாழ்த்துக்கள் வழக்குக்கு எதிராக போராடிய ஆதரவு செய்த அனைவருக்கும்.. கனடா உறவுகள் யாரும் இதைப்பற்றி மூச்சே விடவில்லை.. அதிலும் அரசியல் செய்திகள் விடயங்களில் கருத்து எழுதும் கனடா உறவுகள் கூட மூச்… இதுவே தமிழ்தேசியாவாதிகள் ஏதாவது சின்ன பிழை செய்திருந்தாலும் பந்தி பந்தியாக எழுதி விவாதிப்பார்கள்.. அது தப்பில்லை.. ஆனால் அதேபோல் நல்லவிடயங்களையும் எழுதி ஊக்குவித்து பரப்பவேண்டாமா..?

    • Like 3
  10. மெக்கானிக்கல் clocks வேகம் கூடும்போது மாறுவது ஒன்றும் விந்தை இல்லை.. அவை விசைகளின் அடிப்படையில் செயல்படுபவை.. ஆனால் வேகம் அதிகரிக்கும்போது உடல் கலங்களின் Biological clock எப்படி மாறுகிறது என்பதை பற்றிய தெளிவான விளக்கங்களுடன் விஞ்ஞானிகள் யாராவது எழுதிய கட்டுரை யாராவது வாசித்திருக்கிறீர்களா..? அப்படி உங்களில் யாராவது வாசித்தால் இங்கு பகிர முடியுமா அல்லது அதை சுருக்கமாக விளக்கி எழுத முடியுமா..? ஏனெனில் உடல் கலங்கள் தமக்கே உரிய ஒரு own காலச்சக்கரத்தின் அடிப்படையில் உருவாகி அழிகின்றன.. வயது குறைகிறது எனில் கலங்கள் அழிய மிக நீண்டகாலம் எடுக்கிறது என அர்த்தம்.. அது எப்படி biological clock இந்த வேகம் போன்ற புற விசைகளின் தாக்கத்தில் மாறுகின்றது என அறிய ஆவல்.. இறப்பை கூட வெல்லும் விந்தை அதில் மறைந்திருக்கலாம்.. 

    • Like 1
  11. இது இந்த திரியுடன் சம்பந்தப்படுவதால் இதை இங்கு எழுதுகிறேன்..

    அண்மையில் எனது சகோதரம் எனது பல தடைகள் அட்வைஸ்கள் எச்சரிக்கைகளை தாண்டி நிராகரித்துவிட்டு வெளிநாடு வந்துவிட்டான்.. அது சரி அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று சொல்லுவார்கள்.. நான் கடவுளை நம்பாதவனாக இருந்தும் என் மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவராக உள்ளார். அவரையே நம்பவைக்கவோ மாற்றவோ முடியவில்லை.. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு..

    சரி இப்போ விடயத்துக்கு வருவோம்.. தம்பி வெளிநாடு போக தேர்ந்தெடுத்த நாடு ஜேர்மன். ஜேர்மனை தேர்ந்தெடுக்க அவன் சொன்ன காரணம்தான் என்னை தூக்கி வாரிப்போட்டது.. இவ்வளவு காலம் ஜரோப்பாவில் இருந்தும் எனக்கு இந்த விடயம் தெரியாதது வெக்ககேடாக இருந்தது.. அதைவிட பல்கலைக்கழகத்துக்கு வருடம் 7-8 ஆயிரம் பவுன்ஸ் பிளஸ் தங்குமிடம் உணவு போன்ற வாழ்க்கை செலவுகளுக்கு அதே அளவு பணம் என்று கொட்டி ஒரு காலத்தில் நானும் படித்தேன் இன்றும் பலர் கனடா அவுஸ்த்திரேலியா என்று பல மில்லியன் களில் படிக்க போகிறவர்களுக்கு இடையில் இங்கிலீஸ் மீடியத்தில் ஒரு சதம் செலவுகூட இல்லாமல்( பதிவு செய்தல் போன்றவற்றிற்கு ஒரு சில நூறு யூரோக்கள் மட்டும்) தம்பி ஜேர்மன் படிக்கபோய் இருக்கிறான் என்பதை இப்போ வரை என்னால் நம்ப முடியவில்லை.. இத்தனைக்கும் அவன் ஒரு அவரேஜ் ஸ்டுரன்ற். பிறைவேட்டாகதான் தன் முதல் பட்டத்தை இலங்கையில் முடித்தான். எந்த ஸ்கொலர்சிப்பிலும் போகவில்லை.. 

    ஸ்கொலர்சிப்பும் இல்லை அப்ப ஈயூ சிற்றிசனும் இல்லை வெளிநாட்டுக்காரன் ஆன உன்னை எப்பிடியேடா ஜேர்மனில பிறியா படிக்கவிட்டவங்கள் என்டு கேட்டால் எட அண்ணா லூசுப்பயலே யூறோப்பிய சிட்டிசனா  இருந்தும் இது தெரியாம இருக்கிறியே ஜேர்மனில கல்வி ஜெர்மன் சிற்றிசன் மற்றும் ஈயூ சிட்டிசன் மட்டுமன்றி அனைவருக்குமே பிறி என்டு ஒரு குண்டைபோட்டான்.. என்னடா நம்ம குசா தாத்தா தமிழ்சிறி அண்னை கந்தையா அண்னை சாந்தி அக்கா கவி அருணாசலம் என்டு எக்கச்சக்கமான ஜேர்மன் காரர் இருந்தும் யாரும் இதைப்பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லையே.. எத்தனையோ குடி பெயர்வு சம்பந்தம்மான திரிகளில் யாழில் உரையாடி இருப்பம் யாரும் இதைப்பற்றி மூச்சுக்கூட விடவில்லையே என்று நினைத்து விட்டு கண்டிப்பாக நான் இதைப்பற்றி யாழில் எழுதவேணும் என்டு நினைத்து உடனும் போனை எடுத்து இதை ரைப்பண்ணுறன்.. இதனால் ஒரு ஏழை மாணவனாவது பயன்பெற்றால் அதைவிட சந்தோசம் எனக்கு வேறு இல்லை..

    “யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமே”

    அடுத்த அடுத்த பதிவுகளில் எப்படி அனுமதி பெற்றான் என்ன செய்யவேணும் போன்ற அனைத்து தகவல்களையும் தொடர்கிறேன்..

    • Like 3
    • Thanks 2
  12. 1 hour ago, குமாரசாமி said:

    என்ன இது எல்லாம் ஒரே இனிப்பாய் இருக்குது....😂

    சீ.. சீ.. இந்த பழம் புளிக்கும்.. டயபெற்ரிக் குளிசையை குடியுங்கோ..😂

    • Haha 1
  13. உங்கள் அம்மா சகோதரங்களாக நீங்கள் வாழ்ந்த வீட்டின் ஞாபகங்கள்.. எல்லோரும் திசைக்கொன்றாக பறந்துவிட முகவரி இழந்து இன்று அது தனிமையில் கிடப்பதை வாசிக்கும்பொழுது மனதில் சட்டென ஒரு வேதனை படர்ந்தாலும் இதுதானே வாழ்க்கை.. இதில் எது நிரந்தரம்..? காலம் யாருக்காகவும் எதற்காகவும் காதிருப்பதில்லைத்தானே.. மாற்றம் ஒன்றுதானே இந்த பூமியில் அது தோன்றியதில் இருந்து மாறாதது.. மற்றவை எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன..

    ராஜராஜனின் மகன் இன்று தஞ்சைக்கு வந்தால் தன் தந்தை எப்படி கட்டி ஆண்ட இடம் இப்படி மாறிப்போய் இருப்பதை பார்த்து வேதனைப்படுவார்.. ஆனால் அதற்காக தஞ்சை மாறாமல் இருக்க முடியுமா..

    நன்றி உங்கள் எழுத்துக்கு.. சற்றும் தொய்வில்லாமல் சிக்கென்று எழுதி இருந்தீர்கள்.. ஒவ்வொரு பகுதிக்கும் காத்திருந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..

  14. குதிரை குலுக்கிற குலுக்கில வீடு போய் சேரமுன்னம் சாப்பாடு சட்னியா போயிடுமே..

    • Haha 2
  15. நல்லா எழுதிக்கொண்டிருந்த நெடுக்ஸ்க்கு என்ன ஆச்சு எண்டு தெரியேல்ல.. நோர்வேக்கும் அடி சோமாலிக்கும் அடி பாகிஸ்த்தானிக்கும் அடி ஜரோப்பிக்கும் அடி ஓரினச்சேர்க்கைக்கும் போட்டு கும்முறாப்ல..😂

  16. கிறீன் ரீ… வெள்ளைகளின் கொக்ககோலபோல யப்பானிஸ் ரெஸ்ரொரன்ற்களில் கிரீன் ரீ இருக்கும்.. கொட் or கோல்ட் எந்த வடிவத்திலும் இருக்கும்.. அங்கிருக்கும் அனைத்து சொப்ற் ரிங்க்ஸ்களும் கிரீன் ரீயை based பண்ணியே இருக்கும்..

    • Like 1
  17. 20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

    இப்போது அங்கே இருந்த இந்தியர்கள் பெரும்பான்மையோர் இந்தியாவுக்கு நாடு கடத்தபட்டுவிட்டனரா

    அதை விட டபிள் றிபிள்.. சவுத்கோல் ஹைஸ் பக்கம் போனா கவுன்சிலே றோட்டில லைட் எல்லாம் கட்டி தீபாவளி கொண்டாடும்.. என்னடா குஜராத்தில நிக்கிறமா எண்டு நினைப்பு வரும்..

    • Thanks 1
  18. 5 hours ago, விசுகு said:

    நேரடி தொடர்பு என்று இப்போது இல்லை ஆனால் எடுக்கலாம். (ஒவ்வொரு வருடமும் டென்மார்க் போய் வருபவன். எனது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் 40 பேருக்கு மேல் அங்கே இருக்கிறார்கள்)

    ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. இவர் வெறும் பொம்மை தான். ஆட்டுபவர்களைத்தான் கண்டறியணும். அதற்கான முயற்சிகள் தான் இன்று தேவை. 

    ஆட்டுபவர்கள் யாரென்று தெரியாமலா அருணா ஆடியவர்.. அருணா ஒன்றும் விரல் சூப்பும் பேபி அல்ல.. அவருக்கு யார் யார் தன்னை தொடர்புகொண்டார்கள் என்னவெல்லாம் சொல்லி தன்னை இப்படி சொல்லவைத்தார்கள் என்று எல்லாம் தெரியும்.. தலைவர் குடும்பத்துக்கு களங்கம் வரவிடக்குடாது என்று உளமார அவர் நினைத்தால் அவர் ஒரு அறிக்கையிலையே அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தி இந்த ஆட்டுவிப்பவர்களின் கதையை முடிக்கலாம்.. பத்து நாள் வாயையும் சூ** யும் மூடி பொறுத்திருந்து இப்ப சேரமான் துள்ளுவதன் காரணம் அருணா அக்கா யாரையும் காட்டிகுடுக்க மாட்டா எண்டு கன்பார்ம் பண்ண வெயிட் பண்ணி உறுதியாக தெரிந்தபின் ஆடுது அந்த ஆடு..

    • Like 1
    • Thanks 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.