வெளிநாடெல்லாம் சென்று சம்பாதித்து - பணபலத்தை வைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து - குழந்தைக்கு தகப்பனாகி - சம்பாத்தியம் நோக்கி ஓடி - மனைவி வேறோர் உறவுக்கு செலகிறாள் - விவகாரத்து - ஜீவனாம்சம் - என்கிற பெயரில் கனவனின் சம்பாத்தியம் சுரண்டப்படுகிறது -
சரி, தவறு என்பதற்கப்பால் திருமணம் என்கிற தோற்றுப்போன அமைப்பை நோக்கி ஆண் வர்க்கம் தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதிலிருந்து விடுபட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் குறை சொல்வதனால் எந்த பயனும் இல்லை.
ஒருவேளை திருமணம் செய்துகொண்டால், வரதட்சணை வாங்காமல் - எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டு - எதிர்காலத்தில் இந்த உறவு சலித்து வேறோர் உறவுக்கு செல்வதென்றால் ஜீவனாம்சம் என்கிற பெயரில் சம்பாத்தியத்தை சுரண்டாமல் நேர்மையாக பிரிய வேண்டுமென கையெழுத்து ஒப்பந்தம் செய்து கொண்டுதான் வாழ வேண்டும்.
எப்படியும் இன்னொருத்தியை/இன்னொருத்தனை வைத்துக்கொள்வார்கள் என அப்பட்டமாக தெரிந்தும் திருமணம் செய்துகொள்வது நல்லதற்கல்ல. சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்துக்கொண்டு, வலுவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும் சேமித்துக்கொண்டு ஜாலியாக வாழ்வதுதான் சரி...
- Rama Lingam
பதிவுத் திருமணம் செய்வது ஆணுக்கு ஆபத்தானது என்பதைத் தவிர ராமலிங்கம் சொல்லும் வேறு கருத்துக்களை ஏற்கிறேன். முதலில் குடும்பநல சட்டம் துவங்கி பெண்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு சட்டம், 498A ஆகியவை ஒழிய வேண்டும் அல்லது பாலின சமத்துவம் கொண்டவையாக மாற வேண்டும். கூடுதலாக, மனைவி கணவனை அடித்தாலோ மனதளவில் துன்புறுத்தினாலோ வழக்குத் தொடுக்க ஒரு சட்டம் வர வேண்டும். வலுவான ஆதாரம் இல்லாமல் வரதட்சிணை தடுப்பு சட்டத்தில் குற்றத்தை பதிவு பண்ணுவதைத் தடுக்கும் சட்டத்திருத்தம் வர வேண்டும்.
இந்த திருமண சட்டம் வரும் முன்பு நம் உலகம் (ஆண்களின் உலகமே) எவ்வளவோ நியாயமாக அழகாக இருந்தது. இந்த நேரு குடும்பத்தினர் வந்து அதை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டனர்! அதன் பலனையே பய்ஜூ போன்று பலரும் அனுபவித்துள்ளார்கள்!
- ஆர். அபிலாஷ்