Jump to content

பாலபத்ர ஓணாண்டி

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  924
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

 1. நளினி வாயை மூடிக்கொண்டு இருப்பது மற்ற விடுவிக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்து செய்யும் நல்ல செயல்… கெதியெண்டு வேற பாதுகாப்பான நாட்டுக்கு போய்விட்டு இவற்றை கதைக்கலாம்..
 2. Sex & consent தனுஷ்க குணதிலக்கவை அவுஸ்ட்ரேலிய பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள். குற்றம்- பாலியல் வல்லுறவு. நீதிபதி குற்றம்சாட்டப்பட்டவரது பிணைமனுவை நிராகரித்திருக்கிறார். அனுமதி இல்லாமல் செக்ஸ் வைத்துக்கொள்வது கொடுரமானது. திருமண உறவில் கூட கணவனுடையதோ மனைவினுடையதோ அனுமதி இல்லாமல் உறவு கொள்வது அனுமதிக்கத்தக்கதல்ல. அப்படி இருக்கும் போது பெண் 'தோழியின்' அனுமதி இல்லாமல் அவரை வற்புறுத்தி உறவு கொள்வது இன்னும் பாரதுரமானது. ஆனால்..... இங்கே 'அனுமதி' என்பதை சட்டவரைவியலில் எங்கனம் வரையறுத்திருக்கிறார்கள் என்பதுதான் கேள்விக்குரியதாக இருக்கிறது. தனுஷ்கவும் தோழியும் Tinderயில் சந்தித்திருக்கிறார்கள். நிறையப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் நேரில் சென்று சந்தித்திருக்கிறார்கள். குடித்திருக்கிறார்கள். ஒன்றாக ஹோட்டல் அறைக்குப் போயிருக்கிறார்கள். அவர்களுக்குள் உடலுறவு நடந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் பொலிஸ் நிலையத்தில் நான் வேண்டாம் எனச் சொல்லியும் அவர் 'penetrative sex' வைத்துக்கொண்டார்' எனப் புகார் அளித்ததன் பேரிலேயே தனுஷ்க கைதாகி இருக்கிறார். அவுஸ்ரேலியாவில் எதெல்லாம் கற்பழிப்பில் சேரும் என அண்மையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு பெண் வேண்டாம் எனச் சொன்னதற்குப் பின்னரும், பெண்ணுறுப்பில் விரல்களைக் கொண்டோ, அல்லது வேறெந்த வகையிலேயோ (நாக்கு, toys and so on) உள்புக முயல்வதெல்லாமே அனுமதி இல்லாத செக்ஸ் என்கிற பெயரில், பிணைகொடுக்க முடியாத குற்றமாகப் பதியப்படும். இதற்கு முன்னரும் இந்தச் சட்ட வரைவு பலமுறை திருத்தப்பட்டகிருக்கிறது. ஒரு நபர் அனுமதியை எவ்வாறு மறுக்கலாம்? சொல்லிலோ செய்கைமூலமோ அது இருக்கலாம். உங்களது அறைக்குள் மற்றவரை அனுமதித்திருக்கிறீர்கள். அல்லது மற்றவரது அறைக்கு நீங்கள் போயிருக்கிறீர்கள். அது தவறில்லை. மற்றவர் முன்னிலையில் ஆடைகளைக் கழைந்திருக்கிறீர்கள். அது தவறில்லை. அவரை உங்களை நிர்வாணமாக பார்க்க, தொட விட்டிருக்கிறீர்கள். இது எதுவுமே தவறில்லை. உணர்ச்சிக் குவியலில் உள்ள ஒருவரை சொல்லைக் கொண்டோ, செயல் மூலமோ வேண்டாம் எனச் சொல்லித்தடுத்து, அவர் டொடர்ந்து இயங்கினால் அது மன்னிக்க முடியாத குற்றமாகிவிடுகிறது. Man-made law வில் உள்ள பெரிய ஓட்டைகள் தான் இவை. தனுஷ்கவின் தோழியின் உடம்பில் வற்புறுத்தலுக்கான காயங்கள் இல்லை எனச் சொல்லப்படுகிறது . 'அவர் என் மேலே ஏறி முயங்குகிற போது, கைகளை காற்றில் ஆட்டி வேண்டாம் என மறுத்தேன். அவர் அதை கண்டுகொள்ளவில்லை' என ஒரு வழக்கு அவுஸ்ரேலியாவில் பதிவாகி இருக்கிறது. அப்படி கைகளை வேண்டாம் என காற்றில் ஆட்டும் போது மற்றவர் அதை கவனித்தாரா என்பது கூட முக்கியமில்லை என சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வளவு பலகீனமானது இந்த வரையறை! இந்த இடத்தில் 'so called' கடவுளின் கட்டளைகள் எனச் சொல்லப்படுகிற மதச் சட்டங்கள் என்ன சொல்கிறது என மதங்களின் நூல்களில் இருந்து ஒரு ஆய்வை மேற்கொள்ளலாம். Menmade law vs God's law என்கிற ஒரு thesis யை உருவாக்க முடியும். நிறைய படிப்பினைகள் அதில் நமக்கு கிடைக்க வாய்ப்புண்டு. நல்ல வக்கீல் கிடைத்தால் தனுஷ்க இந்த வழக்கில் இருந்து இலகுவில் விடுவிக்கப்டுவார். https://www.facebook.com/Umayaal.Peri
 3. இது பொய் என்று யாழ் இணையத்தில் இன்னொரு திரியில் பலர் மறுத்து எழுதி இருந்தனர்.. ஆனால் இங்கு அரசே ஒத்துகொண்டதுபோல் இருக்கு.. எது உண்மை..?
 4. சிங்களவனை மோட்டு சிங்களவன் எண்டமாதிரித்தான்… கடைசியா அந்த மோடன் தான் கடைசியா உலகநாடுகளுடன் சேர்ந்து தந்திரமா கதைய முடிச்சவன்..
 5. இதை இவர் சொன்னா இவர் இங்க வந்த வளியை நினைச்சும் குடியேற்றவாதிகளை வச்சே குடியேறிகள் கண்ணை குத்துவதையும் நினைச்சு வெள்ளையள் வாயையும் சூவையும் மூடிசிரிப்பானுவள்.. (ப்ரீதி பட்டேலையும் நினைச்சுத்தான்)
 6. ராமகிருஸ்ணன் உரைகள் விரும்பி பார்ப்பேன்.. இலக்கியத்தை காதால் கேட்பதும் ஒரு சுகம்தான்.. நேரம் போவதே தெரிவதில்லை.. நன்றி இணைப்புக்கு ஏராளன்..
 7. முதல் புங்குடுதீவாரிட்ட கேட்கவோணும் அவங்கட நாட்டையும் சேர்க்க ஓகேயோ எண்டு..
 8. தல ப்ளைட்டில கொண்டுபோக றை பண்ணின்னான் ஆனால் லித்தியம் பற்றி கொடுபோகேலா எண்டுட்டாங்கள்… கப்பல்லதான் போடோனும்..
 9. அடடா.. அருமையான திட்டம்.. இது ஓகே எண்டா முதல்ல என்ர காரை பார்சல் பண்ணி அனுப்போனும்..
 10. மறந்துபோய் டிக்கெட் எடுக்காம கார் பார்க் பண்ணுறதுக்கே அரசியல்வாதிகள் பதவி விலகுற வெள்ளயள் தேசத்துல ஆபிரிக்கா ஆசியாவுக்கு பொரவு இவ்வளவு பொய் பிரட்டு பித்தலாட்டம் செய்து போட்டும் பதவிய உடமாட்டன் எண்டு அடம்பிடிச்ச இப்பிடி ஒரு மானங்கெட்ட தலைவனை ஜரோப்பா பாக்குறது இதுதான் முதல் தடவை.. இப்பிடி ஒருத்தன பிதமரா தேர்வு செய்து எப்பிடி இருந்த வெள்ளயளிண்ட டேஸ்ட் இப்பிடியா போயிடுச்சே.. எல்லாம் பிரிக்சிட் ஓட புடிச்ச சனிதான்.. அமெரிக்காவுல அப்புடி ஒருத்தன்(ட்ரெம்ப்) இங்க இப்பிடி ஒருத்தன்.. இனவாதம் ஆனது ஊழல் இல்லாத நாடுகளில் கூட எப்பிடிப்பட்டவர்களை பதவிக்கு கொண்டுவரும் எண்டதிற்கு இவர்கள் ஒரு உதாரணம்.. மகிந்த கோத்தா குடும்பம் போல இனவாதம் பேசினால் நீங்கள் செய்யும் எல்லா அசிங்கங்களையும் மறைக்கலாம் என்பதை இன்று ஜரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூட உணரத்தொடங்கி விட்டனர்..
 11. களவு மிக மோசமாகிவிட்டது.. மூன்று நாளைக்கு முன்னம் நாங்கள் வெளிநாட்டால் வந்தவர்கள் எண்டு ஆக்கும் எனது மனைவியின் தாயார் வீட்டில் கள்ளர்.. அண்டு நான் அங்கு நிற்கவில்லை.. எனது அம்மா அப்பா வீட்டுக்கு சென்ன்றுவிட்டேன்.. மனைவியும் குழந்தைகளும் அவரது பெற்றோரும்தான் அங்கு இருந்தனர்.. மாமனார் வெளியில் படுத்து இருந்தவர் நாய் குலைத்ததும் எழுந்ததால் அவர் கண்டு திரத்த ஓடிவிட்டார்கள்.. அன்று மட்டும் எமது பிரதேசத்தில் ஜந்து வீடுகளில் திருடர்கள்.. நேற்று நான் காலை சந்தைக்கு போய் வரும்போது ஒரு அம்மா தனது செயினை அப்பதான் அறுத்துகொண்டு ஓடிவிட்டார்கள் என்று அழுதுகொண்டு நிக்கிறா.. தூள் அரைத்துகொண்டு போகிறவர்களிடம் தூளைக்கூட வழிப்பறி செய்கிறார்கள்.. பாணையும் பறிக்கிறார்கள்.. முள்ளி வெளியில் ஒருவரிடம் பணம் எதுவும் இல்லாததால் உடுப்பை கழட்டி எடுத்திருக்கிறார்கள்.. அடுத்த சோமாலியா ஆகிறது என்பது கண்கூடாக தெரிகிறது.. எவ்வளவு காலத்தில் இந்த நிலைமையில் இருந்து மீளப்போகிறமோ தெரியவில்லை..
 12. இனிவரும் சில மாதங்கள் மிகக்கடினமாக இருக்கப்போகுது என்பதை இப்பவே உணர முடிகிறது.. இந்த விலைக்கும் விக்க சாமான் இல்லை.. ஒரு மைக்ரோ அவன் வாங்க நான் திரிஞ்ச கடை யாழ்ப்பாணத்தில்.. யாருமே வியாபாரிகள் வில்லைகூடின இலத்திரனியல் பொருட்களை வாங்கி விற்கிறார்கள்.. உணவுப்பொருட்களே வாங்கி விற்கிறார்கள் இல்லை.. கடைகளில் எதை கேட்டாலும் இல்லை புது ஸ்ரொக் இன்னும் இறக்கேல்ல என்கிறார்கள்.. மக்களிடம் இந்த அதிகரித்த விலைக்கு வாங்கும் சக்தி இல்லை என்பதால் புது ஸ்ரொக்கை புதிய கூடிய விலைக்கு எடுத்து யாருக்கு விக்கமுடியும் என்பதால் இருக்கும் சாமான்களை மட்டுமே வியாபாரிகள் விற்கிறார்கள்..
 13. இல்லை.. பெரிய மீன்ரின் 420 ரூபாய்க்கு இண்டைக்கு வாங்கின்னான்.. புறொய்லர் கோழி இறைச்சி கிலோ ஒரு கிழமைக்கு முன்னம் 1200 ரூபாய்க்கு வாங்கின்னான், நாலு நாளைக்கு முன்னம் 1300 ரூபாய்க்கு வாங்கின்னான் நேத்து 1400 ,இண்டைக்கு 1500 ஆம்.. முதல் நாள் வாங்கினசாமான் அடுத்த நாள் அதே விலைக்கு இல்லை.. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் கூடுது.. முன்னூறு வித்து நானூற்றி இருபது வித்து இண்டைக்கு நள்ளிரவு எழுநூற்றி அம்பதுக்கு வருது பெற்றோல்.. 300 வித்தபோது ஒரு மைல் நீளக்கியூவில நிண்டு பெற்றோல் அடிச்சனான் போன கிழமை வரைக்கும் இப்ப ஒரு மூண்டு நாளைக்கு முன்னம் நானூற்றி இருபது ஆக்கின உடன பெற்றோல் சைற்றில ஒரு சனமும் இல்ல.. பெற்றோல் லைன்ல நிக்காம போன உடனையே அடிச்சுகொண்டு போனன்.. 420 க்கு பெற்றோல் அடிக்க சனத்திட்ட காசு இல்ல போல.. ஆனா இண்டைக்கு மதியம் விலையேற்ற அறிவிப்பு வந்ததும் இண்டைக்கு மறுபடி ஒரு மைல் நீள கியூ.. காய்கறி ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து கொண்டே போகுது.. எந்த விலை உயர்ந்த சாமானும் இதுவரை விலை குறையவில்லை.. றால் கிலோ 1600 கணவாய் 1800 நண்டு 1700 திருக்கை மீன் 1000 கத்தரிக்கா சின்னன் 280 பெரிசு 320, கீரை ஒருகட்டு 120, பயித்தங்கா 400
 14. எனக்கு வயிறு நோவுது சிரிச்சு.. ஆரை சொல்லுறியள்..? அது நடந்து பத்து வருசம் ஆச்சா.. என்னவோ எல்லாம்நேத்துப்போல் இருக்கு.. அந்த நேரமே நிழலி தனக்கு நாப்பது வயசு தொடங்குது நாய்க்குணம் ஆரம்பிக்கபோகுது எண்டவர்.. அப்ப இப்ப அம்பது ஆகி இருக்கும்.. விசுகர் அப்ப எல்லாம் யங் மான்.. இளந்தாரி.: இப்ப பேரப்புள்ளௌயும் கண்டு தாத்தா ஆகிட்டார்.. அப்ப எனக்கும் நல்லா வயசு போயிருக்கும்..இந்த காலத்தை புடிச்சுகட்டிவைக்க ஏதும் வழி இல்லையா..? குசாப்தாத்தா சிறி அண்ணைக்கு எல்லாம் பத்து வயசு கூடி இருக்குமா… அப்ப எங்கட சுவி அண்ணையிண்ட நிலைமை..?
 15. எல்லாம் ஒரே காலப்பகுதியில் நடந்ததுதான்..எல்லாம் சேந்துதான் சிக்கலாகிப்போச்சு..
 16. பாவம் நல்ல மனுசன்... வஞ்சகமில்லாத சீவன்... உண்மையில் எமது கலைஞர்கள் இருக்கும்போதே கவுரவிக்கபட,பேசப்பட வேண்டும்... இழந்த பின் அஞ்சலிக்கூட்டங்கள் வச்சு பலன் இல்ல... கோமகன் கூட அண்மையில் இறந்துவிட்டார்.. இருக்கும்போது அவரைப்போல பலரை பேசாமல் இருந்து விட்டோமோ என்றுநினைக்கிறேன்.. முன்னாடி யாழில் அதிகம் எழுதிய உறவு இவர்.. காதல் என்ற ஜடியின் வருகையின் பின் அந்த ஜடியை வைத்து நடந்த ஓட்டுமாட்டுக்கள் சுட்துமாத்துக்களில் சிக்குண்டு பாவம் இவரும் அதன் பின் வராமல் விட்டார் யாழுக்கு.. இது விசுகு அண்ணை போன்றவர்களுக்குதான் உண்மை தெரியும்... விரும்பினால் சொல்லலாம்.. எல்லாரும் சேர்ந்துதான் அந்த நாடகத்தில் பங்கேற்று இருந்தவை... நன்றி சாந்தி அக்கா அருமையான தொகுப்புக்கு..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.