Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  998
 • Joined

 • Days Won

  2

Posts posted by பாலபத்ர ஓணாண்டி

 1. வெளிநாடெல்லாம் சென்று சம்பாதித்து - பணபலத்தை வைத்து ஒரு  பெண்ணை திருமணம் செய்து - குழந்தைக்கு தகப்பனாகி - சம்பாத்தியம் நோக்கி ஓடி - மனைவி வேறோர் உறவுக்கு செலகிறாள் - விவகாரத்து  - ஜீவனாம்சம் - என்கிற பெயரில் கனவனின் சம்பாத்தியம் சுரண்டப்படுகிறது - 

  சரி, தவறு என்பதற்கப்பால் திருமணம் என்கிற தோற்றுப்போன அமைப்பை நோக்கி ஆண் வர்க்கம் தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதிலிருந்து விடுபட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. 

  ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் குறை சொல்வதனால் எந்த பயனும் இல்லை. 

  ஒருவேளை திருமணம் செய்துகொண்டால், வரதட்சணை வாங்காமல் - எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டு -  எதிர்காலத்தில் இந்த உறவு சலித்து வேறோர் உறவுக்கு செல்வதென்றால் ஜீவனாம்சம் என்கிற பெயரில் சம்பாத்தியத்தை சுரண்டாமல் நேர்மையாக பிரிய வேண்டுமென கையெழுத்து ஒப்பந்தம் செய்து கொண்டுதான் வாழ வேண்டும்.

  எப்படியும் இன்னொருத்தியை/இன்னொருத்தனை வைத்துக்கொள்வார்கள் என அப்பட்டமாக  தெரிந்தும் திருமணம் செய்துகொள்வது நல்லதற்கல்ல. சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்துக்கொண்டு, வலுவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும் சேமித்துக்கொண்டு ஜாலியாக வாழ்வதுதான் சரி...

  - Rama Lingam

  பதிவுத் திருமணம் செய்வது ஆணுக்கு ஆபத்தானது என்பதைத் தவிர ராமலிங்கம் சொல்லும் வேறு கருத்துக்களை ஏற்கிறேன். முதலில் குடும்பநல சட்டம் துவங்கி பெண்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு சட்டம், 498A ஆகியவை ஒழிய வேண்டும் அல்லது பாலின சமத்துவம் கொண்டவையாக மாற வேண்டும். கூடுதலாக, மனைவி கணவனை அடித்தாலோ மனதளவில் துன்புறுத்தினாலோ வழக்குத் தொடுக்க ஒரு சட்டம் வர வேண்டும். வலுவான ஆதாரம் இல்லாமல் வரதட்சிணை தடுப்பு சட்டத்தில் குற்றத்தை பதிவு பண்ணுவதைத் தடுக்கும் சட்டத்திருத்தம் வர வேண்டும்.

  இந்த திருமண சட்டம் வரும் முன்பு நம் உலகம் (ஆண்களின் உலகமே) எவ்வளவோ நியாயமாக அழகாக இருந்தது. இந்த நேரு குடும்பத்தினர் வந்து அதை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டனர்! அதன் பலனையே பய்ஜூ போன்று பலரும் அனுபவித்துள்ளார்கள்!

  - ஆர். அபிலாஷ்

 2. நானும் இண்டைக்குதான் பாத்தன்.. கடுப்பா இருக்கு.. விமர்சனங்கள பாத்து ஓவரா நம்பி போய் பாத்தன்.. ஒன்னும் இல்லை..

  இதைவிட எத்தினையோ நல்ல படங்கள் வந்திருக்கு.,

 3.  

  —————//——

  இதுவொரு தற்காலிகமான நிலைமை. இலங்கையின் நிலைமைகள் வழமையான நிலைக்கு திரும்புகின்ற போது, சில மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. உலக வங்கியினால் வழங்கப்பட்ட இந்த உதவியானது, ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இந்த பணம் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு செல்வதற்கான சாத்தியம் உள்ளது." என அவர் தெரிவிக்கின்றார்.

  இந்த காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டாலர் கடனுதவி கிடைக்கும் பட்சத்தில், இன்று காணப்படுகின்ற நிலைமையையே தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சாத்தியம்உள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர்எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

  ________//_____

   

  சர்வதேச நாணய நிதியம் கடன்வழங்குவதற்கான எல்லா வழிகளும் திறந்துவிட்டன என்று இலங்கை அறிவித்துள்ளது.. சீனாவும் இந்தியாவும் அதற்கு பச்சை கொடிகாட்டிவிட்டன.. இன்னும் சில வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி வந்து சேர உள்ளது.. அநேகமாக இந்த இலங்கை நாணயத்தின் பெறுமதி நல்லநிலைக்கு வந்து நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்..

 4. 24 minutes ago, Kandiah57 said:

  உங்களை மாதிரி தான் நானும் இருந்திருக்கிறேன்.   ...நான் ஊரில் இருந்த காலத்தில் எனது நண்பன்  ஒருவன் இரண்டு தடவையாக பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியும் பெயில்.  எனவே மூன்றாவது தடவையாக   வேறு ஒருவருக்கு பணம் கொடுத்து   தனது பரீட்சையை எழுதிவித்தார்  ...அதில் பாஸ் பண்ணிட்டு....பணம் கொடுத்து ஆசிரியர் வேலையில்.  நியமனம் பெற்று   படிபித்துகொண்டு திரிந்தார்.  இவர் ஆசிரியர் வேலை பெற்றது பற்றி உங்கள் கருத்துகள் என்ன?? இதே போல் பலரும் வேறு வேலைவாய்ப்புகள் பணம் கொடுத்து பெற்றுள்ளார்கள் 

  எவரும் சுயமாக படித்து பட்டம் பெறுவது வரவேற்க கூடியது  நல்ல விடயமும் கூட 

  நான் சொன்னது பணம் கொடுத்து வேறு நபரை தனக்கு பரீட்சை எழுத வைப்பது அல்லது பட்டதை விலைக்கு வேண்டுவது பற்றியாகும்.  காசு கட்டி படிப்பதில் எந்த தவறுமில்லை 

  அதை விளக்கமாக எழுதவேண்டும்.. ஓரிருவர் செய்வதை எல்லோருக்கும் பொதுமைப்படுத்தக்குடாது.. பத்தாம் வகுப்பு படித்தவன் எல்லாம் என்று பொதுமைப்படுத்தி எல்லோரையும் நக்கலாக எழுதினால் தவறாகத்தான் விளங்கிக்கொள்ளப்படும்.. பாரம்பரிய முறை படிப்பில்கூட குதிரை ஓடுவது கொப்பி அடிப்பது எல்லாமே இருக்கு.. ஏன் எனக்கு கூட இன்றுவரை எனது யாழ்ப்பாண டிகிரியில் நிறைவு இல்லை.. ஏனெனில் அது நான் உண்மையாக படித்து எடுத்தது இல்லை.. பொடியன் கம்பஸ் எண்ட மதிப்பில நாலுபக்கத்தாலும் உதவியும் காசும் மதிப்பும் வர நான் அதை பயன்படுத்தி ரூம் பொடியளோட சேந்து பகல் முழுக்க விளையாட்டு படம் கடைகடையா விதம் விதமா சாப்பாடு குடி எண்டு இருந்திட்டு அசைமெண்டு சோதினை எல்லாம் கடைசி நேரத்துல ஆளை ஆள் பிட் அடிச்சு அதில கொஞ்சம் இதில கொஞ்சம் எண்டு கொப்பி பண்ணி பாசனதுதான்.. அதுக்காக அங்கும் உண்மையாக படிப்பவர்கள் இருக்கிறார்கள்.. இங்கும் அப்படித்தான்.. ஒரு சிலதை வைத்து எல்லாரையும் பொதுமைப்படுத்தகூடாது.. எப்படியாவது படிக்கனும் என்று முயற்சி செய்பவர்களை கூட மனம் உடைய செய்துவிடும் இப்படியான பொதுமைப்படுத்தும் நக்கல் நையாண்டிகள்.. எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்று விரும்புபவர்களை நாம் எப்பொழுதும் ஊக்கப்படுத்த வேண்டுமே ஒழிய முதல் படியில் ஏறும்போதே காலை இடறி விழுத்தகூடாது..

  • Like 1
 5. 18 hours ago, Kandiah57 said:

  இனி  பத்தாம் வகுப்பு பெயில். பண்ணியவர்களும்....காசு கொடுத்து பட்டதாரிகள் ஆகலாம்....🤣😂

  ஏதோ பத்தாம் வகுப்பு பாஸ்பண்ணி யாழ்ப்பாணத்தில கம்பஸ் போனதுகள் பூரா வெட்டிகிழிச்ச மாதிரி.. அரைவாசி யாழ்ப்பாண கம்பசில பாத்தடிச்சுதான் பாஸ்பண்ணுறது.. நானும் அதைத்தான் செய்தனான்.. எங்கட பச்சில உண்மையா விளங்கி படிச்சது ஒரு மூண்டுபேர்தான்..

  பத்தாம் வகுப்பு பெயிலானவன் பூரா தெருவில நிக்கோனும் பள்ளிக்கூடத்தில பத்தாம் வகுப்பு பாசனவன் மட்டும்தான் மேற்கொண்டு படிச்சு முன்னேறோனும் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளால பத்தாம் வகுப்பு பெயில் ஆனவன் எல்லாம் காலம் முழுக்க கண்ணீர் விடோனும் படிக்கிறவன பாத்து.. இதைத்தானி யாழ்ப்பாணியின் பனங்கொட்டை மெண்டாலிற்றி எண்டு இணையத்தில் நக்கலடிக்கிறார்கள்.. புலம்பெயர்ந்து வெளிநாடு வந்தவர்களுக்கு கூட பாரம்பரிய முறைகளில் கல்வி பயில முடியாதவர்களுக்கு மாற்று வழிகளில் கல்விபயின்று பல்கலைக்கழகம் போய் கலாநிதிகூட வெளிநாடுகளில் ஆகிறார்கள் என்பது புரியவில்லை.. யூகேயில் இதற்கென்றே BTEC edexcel இருக்கிறது..

  யாழ்ப்பாணிக்கு தெரிஞ்சதெல்லாம் ஓலெவல் ஏலெவல் யாழ்ப்பாணகம்பஸ்( இலங்கையை விட்டு வெளிய வந்து யாழ்ப்பாணகம்பஸ் எண்டா ஒருத்தனுக்கும் தெரியா.. கம்பஸ் வேல்ட் ரேங்கை இணையத்தில் தேடினால் பக் ஆல சிரிப்பானுக)..என்ர பெற்றோர் மற்றும் நான்கூட வெளிநாடு வரும்வரை இப்படித்தான் இருந்தேன்.. காசுகட்டி கம்பஸ் படிக்கலாம் எண்டெல்லாம் தெரியா… பிரைவேட் கம்பஸ் எண்டா என்னெண்டே தெரியா அப்பிடி ஒண்டு இருக்கெண்டும் தெரியா.. இஞ்ச வந்தா பூரா பிறைவெட்தான் காசுகட்டித்தான் படிக்கோனும்.. அங்க படிச்சவன் எழுதின புத்தகத்தைதான் நாங்கள் ஊர் யூனில படிக்கிறம்.. ஆகையால் இன்னமும் யாழ்ப்பாணி மனநிலையில் இருப்பவர்கள் இப்பிடியே குண்டுசட்டிக்க குதிரை ஓட்டி காலத்தை முடிக்கவேண்டியதுதான்.. இனிவரும் யாழ்ப்பாண தலைமுறை குண்டுசட்டி பனங்கொட்டைகளாக இருக்க மாட்டாது என்று நம்புகிறேன்,.

  • Like 2
  • Thanks 1
 6. சீமான் கட்சி வளர்வது தமிழர்களுக்கு ஒரு நட்டமும் இல்லை என்பதால் மகிழ்ச்சியே…

  • Like 4
 7. நான் கலியாணம்கட்டிய காலத்தில் அபிலாசை எனக்கு தெரியாது மற்றும் அபிலாஷ் இப்படி எழுதி அது என் கண்ணில் படாமல் போய்விட்டதே என்று கவலைப்படுகிறேன்..

 8. On 7/2/2023 at 23:36, goshan_che said:

  நன்றி அண்ணா.

  ஜேர்மன் தம்பி கிட்டதட்ட என்னை போலவே சிந்தித்து இருக்கு.

  ஊருக்கு போகும் எண்ணம் பார்த்திருக்க கரைந்து போகுது.

  இப்போ இருக்கும் பாதுகாப்பின்மை (எல்லா வழியிலும்) யுத்த காலத்தில் கூட இருந்ததாக உணரவில்லை. ஆனால் நான் கொவிட்டுக்கு பிறகு போகவில்லை. போனால் மனம் மாறக்கூடும்.

   

  On 7/2/2023 at 22:03, தமிழ் சிறி said:

  நீங்கள் கேட்ட கேள்வியை, இன்று காலை பெடியனிடம் கேட்ட போது…
  அவன் சிறிதும் யோசிக்காமல், படாரென்று கூறிய மூன்று காரணங்களை கேட்டு எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது.

  ஆறுமாதம் அல்லது ஒரு வருடம் கூட இலங்கையில் வசிப்பாராம், ஆனால்…  நிரந்தரமாக வசிக்க ஜேர்மனிதான் தனது சிறந்த தெரிவு என்றான்.

  1) இலங்கையில்… உறவுகள், நட்புகள், கை நிறைய சம்பளம் இருந்தாலும், தன்னுடைய முதுமை காலத்தில்… அங்கு வாழ்வதற்குரிய பாதுகாப்பு இல்லையாம்.

  2) மருந்து தட்டுப்பாட்டை நேரில் பார்த்து அனுபவித்து இருக்கின்றான். இவன் அங்கு கூடுதலாக உல்லாசப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் குடும்பங்களின் வீடுகளில்தான் தங்கி உள்ளான்.

  ஒரு நாள் அந்த வீட்டில் இருந்த முதியவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாம், அவர்கள் அந்த நகரத்தில் உள்ள எந்த மருந்துக் கடையிலும் அதற்குரிய மருந்து இல்லை. இவனுடைய நண்பி ஜேர்மனியில் உள்ள வைத்தியசாலையில்  அவசரகால மருத்துவ சேவைப் பகுதியில் வேலை செய்யும் நர்ஸ் என்ற படியால் இவர்கள் கொண்டு சென்ற முதலுதவி மருத்துவ பைக்குள், சிறுநீரக தொற்றுக்கான மருந்தும் இருந்துள்ளது. அவர்கள் கொடுத்த நான்கு குளிசைகளில் அந்த முதியவரின் நோய் குணமாகி விட்டதாம்.

  முதலில் அவர்கள் மருந்து இல்லாமல் அவர்கள் கஸ்ரப் பட்டதையும், மருந்து கொடுத்து குணமாகியதன் பின் அவர்களின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியும்… அவர்களை  சிந்திக்கத் தூண்டியுள்ளது. தாங்கள் இங்கு வாங்கிக் கொண்டு போன மருத்துவ பொதியின் விலை 100 € தானாம். அது அங்கு ஒருவரின் நோயை குணப்படுத்த உதவியது மகிழ்ச்சியாக இருந்ததாம்.

  3) முக்கியமானது அங்கு உள்ள அரசியல் பாதுகாப்பற்ற தன்மை. அரசியல்வாதிகள்… நாட்டை சீனா, இந்தியா, அமெரிக்காவுக்கு விற்று விட்டார்களாம். இனி விற்பதற்கு அங்கு ஒன்றும் இல்லையாம். அப்படி உள்ள நாட்டில் எப்படி நிரந்தரமாக வசிப்பது என்று கேட்கிறான். 🙂

  ### அவனது பதிலை பார்த்து உங்களது கருத்தை, அறிய ஆவல். ### 😎

    
   

  இப்பிடியே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்..  ஆடத்தெரியாதவன் மேடை சரி இல்லை எண்டமாதிரிதான் போகவிருப்பமில்லாதவன் கூறும் ஒவ்வொரு சாட்டும்.. ஏதோ அமெரிக்கா ஜரோப்பாவில் வாழுறவன் மட்டும் நூறு இரு நூறு வயசு வரையும் வாழுறாங்கள் சிறிலாங்காவில் இருப்பவன் அஞ்சு வயதில் மருந்து இல்லாமல் சாகிறான்.. இஞ்ச யாழ்ப்பாணத்தில சகல மருந்தும் இருக்கு.. காசிருந்தா சரி.. ஒரே ஒரு காரணத்தை சொல்லுங்கோ எனக்கு பொருளாதாரம் போதுமானதா இல்லை அதால சிறீலங்கா வந்து செற்றிலாக விருப்பமில்லை எண்ட உண்மைக்காரணத்தை.. மற்றதெல்லாம் சும்மா சப்பை கட்டு.. காசு இருந்தா ராஜவாழ்க்கை சிறீலங்காவில.. காசில்லாட்டி பிச்சைக்கார வாழ்க்கை பிரித்தானியா கனடாவிலையும்.. தற்ஸ் ஆல் யுவரானர்.. உதாரணத்துக்கு எவ்வளா காசிருந்தாலும் வெளிநாட்டில் டிறைவர் வீட்டு வேலை சமையலுக்கு ஆள் வைக்கேலா.. தன் வேலைய தான் தான் செய்யோணும்.. சம்பளம் குடுத்து கட்டாது.. ஆனால் இலங்கையிலோ தமிழ் நாட்டிலோ ஒரு வைத்தியர் அல்லது பொலிஸ் அதிகாரி அல்லது பிஸினஸ்மான் வீட்டில் இதுக்கு எல்லாத்துக்கும் ஆள் இருக்கும்.. அதுக்குத்தான் சொன்னன் காசுஇருந்தா இங்கைதான் சொர்க்கம் வெளிநாட்டில் அல்ல.. அங்கு பிச்சைக்கார வாழ்க்கை.. அவசர சிகிச்சைக்கு அப்பலோவுக்கு கூட போகலாம்.. அதால ஊருக்கு போய் இருக்க என்னட்ட காசில்லை எண்டு நேர்மையா சொல்லுங்கோ.. அதவிட்டிட்டு மற்றதெல்லாம் உங்களை நீங்களே ஆறுதல்படுத்த சொல்லிக்கொளவது..

  • Like 2
  • Thanks 1
 9. உண்மையை அருமையாக போட்டு உடைத்து எழுதுகிறார்.. இவர் முகநூலில் முன்னரே படித்து விட்டேன்.. இந்தியா இலங்கை நகர்ப்புற மத்தியவர்க்கம் அல்லது அதற்கு மேல் இருக்கும் குடும்பங்களில் நடக்கும் உண்மைக்கதைகள்.. அங்கு ஆண்கள்தான் பாதிக்கபாடுகிறார்கள்.. ஆனால் கிராமங்களை நோக்கி போனால் அங்கு இருக்கும் ஏழைக்குடும்பங்களில் நிலைமை அப்படியே மாறிவிடுகிறது.. அங்கு பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.. ஆனால் வெளிநாட்டில் கிராமமோ நகரமோ பாதிக்கப்படுவது ஆண்கள்தான்.. இன்னொருவிடயம்.. சம உரிமை பேசும் வெள்ளநாடுகளில் நான் எந்த ஒரு வீதி செப்பனிடும் அல்லது றோட்டில் கிடங்குவெட்டும் வேலைகளில் வெளிநாட்டில் பெண்களை பார்ப்பதே அரிது.. அதுவே அரச அலுவலகங்களிலோ அல்லது வங்கி மற்றும் வணிக நிறுவன ஏசிக்கவுண்டர்களிலோ ஆண்களை பார்ப்பது அரிது.. அதே வணிக நிறுவனங்களின் ஸ்ரோரில் ஆண்கள்தான் லோடுமான்கள்..

 10. 22 minutes ago, goshan_che said:

  கனகாலமாக யாழில் குதியன் குத்தும் எங்கள் குல கொழுந்து @பாலபத்ர ஓணாண்டியை காணவில்லை.

  இந்த வீடியோவாவது இழுத்து வரட்டும்🤣.

   

  நன்றி தலைவரே இந்த கண்கொள்ளா காணொளிக்கு… ஞான் முக்தி அடைஞ்சு..😂

 11. வெற்றி மாறன் போல யாராவது ஒரு இயக்குனர் இதை படமாக எடுத்தால்.. இதே வெள்ளைக்காரன் கையில் இப்படி ஒரு கதை கிடைத்தால் வேறு லெவலில் இருக்கும் படம்..

 12. 1 hour ago, ரதி said:

   

  பண்டைய காலத்தில் இயற்கை வழிபாடு தான்  இருந்தது ஏற்றுக் கொள்கிறேன் .எல்லோருக்கும் தெரிந்தது தான் ...இப்ப நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?...பழைய படி இயற்கை வழிபாட்டுக்கு போக சொல்கிறீர்களா?...அல்லது அவர்கள் சொல்வது மாதிரி வேறு மதத்திற்கு மாற சொல்கிறீர்களா?...மிகப் பெரியளவில் மத மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது ...அதை தடுக்க வக்கில்லை ...பிள்ளையார் எம் கடவுள் இல்லை ,சிவன் எம் கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு? அப்ப யார் உங்கள்  கடவுள்?

  எல்லா சமூகத்தினரும் விரிவாக்கம் அடைந்து கொண்டு போகிறார்கள் நீங்கள் மட்டும் கல் தோன்றி ,மண் தோன்றா காலத்திற்கு போங்கோ...என் தனிப்பட்ட கருத்து உலகத்தில் சமயமே இருக்க கூடாது ...ஒரு தமிழிச்ச்சியாய் இது தான் என் சமயம் 

  தமிழர்களின் அடையாளம் சைவசமயம் என்று குறுக்குவதை நிறுத்துங்கள்.. தமிழர்களின் அடையாளம் அவர்கள் மொழியான தமிழ்…

  • Like 3
 13. இணையவனின் உதவியுடன் ஒரு அக்கவுண்ட் திறந்து இதில ரெண்ட வாங்கிபோட்டன்… இங்க என்ன நடக்கு எண்டு ஒண்டும் விளங்குதில்லை.. யாராவது விளங்கப்படுத்த முடியுமா..? இன்னொரு கேள்வி commodities க்கும் stocks க்கும் இடையில் என்ன வித்தியாசம்..? Stocks அதை விற்கும் நிறுவனத்தால் ஒழுங்கு படுத்தப்படும் commodities யார் ஒழுங்கு படுத்துவது..? நான் பொருளாதாரத்தில் சுத்த சூனியம் என்பதால் பொருத்தருளுக இப்படியான சில்லறை கேள்விகளுக்கு..🙏
   

  large.21812B93-8BDE-4CC2-8FFD-E93BAD357E43.jpeg.0ed70e6be49fa63fd92eb9072512301a.jpeg

 14. ஆதித் தமிழர்களின் வரலாறு நெடுக இடையில் ஆரியர்களால் செருகப்பட்ட பிள்ளையாரோ சரஸ்வதியோ விஸ்ணுவோ கடவுளாக இருந்ததில்லை.. அண்ணமார் கருப்பசாமி எல்லைக்காத்தான் வைரவர் என்று மக்களை காப்பாற்ற மடிந்தவர்களையே கடவுளாக்கிய நன்றிமறவாதவர்கள் அவர்கள்.. அந்த நீட்சிதான் புலிகளும் தமிழ் மக்களும் மாவீரர்களை போற்றுவதும்.. எப்படியும் அந்த ஆதி இரத்தத்தின் ஒரு துளியாவது எமது உடலில் ஓடும் அல்லவா..

  10 minutes ago, பையன்26 said:

  த‌மிழ‌ர்க‌ள் சில‌ர் பிற‌ந்த‌தில் இருந்தே க‌ற்றோலிக் ம‌த‌த்தில் இருக்கின‌ம்.............ஆனால் அவ‌ர்க‌ள் ம‌த‌த்தை ப‌ற்றி பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது................ஆனால் பிராட்டு வேலைக‌ள் ஊத்த‌ செய‌ல்க‌ள் செய்த‌ த‌றுத‌லைக‌ள் ம‌த‌ம் மாறி பாத‌ர் வேச‌ம் போட்டு ஊரை ஏமாத்துக‌ள் அதோடு சிறுவ‌ய‌தில் இருந்து கும்பிட்ட‌ தெய்வ‌ங்க‌ளை அசிங்கப் ப‌டுத்துதூக‌ள்

   

   

  இதைத்தான் இந்துமதத்தில் இருக்கும் பிராட்டு வேலைகள் ஊத்த செயல்கள் செய்த தறுதலைகள் சாமியார் வேசம் போட்டு ஊரை ஏமாத்துதுகள்.. உ+ம் நித்தி, ஜக்கி, கல்கி.. 

 15. இது உறவுகளை கோத்துவிடும் வேலை போல் தெரிகிறது.. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டியது கடற்படையும் போலீசும்தானே.. கடற்படைக்கு மீனவர்கள் தகவல் தந்து அந்த இடத்துக்கு உடனும் கடற்படை வரக்கூடியவாறுதானே ஒரு அமைச்சர் ஒழுங்கு செய்யவேண்டும்… இப்படி மீனவர்கள் செய்ய வெளிக்கிட்டால் அவர்களும் பதிலுக்கு செய்தால் இது தொப்புள்கொடி உறவுகளுக்கிடையில் சிண்டு முடியும் வேலை ஆகிவிடும்..

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.