Jump to content

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1339
  • Joined

  • Days Won

    4

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. அமெரிக்கா ஈராக் போன்ற நாடுகளைத் தாக்கும்போது பொய்யான காரணங்களைச் சொன்னது. ரஷ்யா தனதுபக்கமுள்ள நியாயங்களை வெளிப்படையாகச் சொல்கிறது .... ... உக்ரைன் NATOவில் இணைவதை ரஷ்யா ஒருபோதும் அனுமதிக்காது, ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் வெல்லமுடியாது என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் அமெரிக்காவின் சதிவேலைகளில் மாட்டுப்பட்டு... ஷெலன்ஸ்கி உக்ரையினை அவலநிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளார். உக்ரைனை Nato வின் அங்கத்துவநாடாக சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கியது முட்டாள்தனமான முடிவு ..
  2. உண்மை என்னவென்றால், யாரும் போரை விரும்பவில்லை, பூட்டின் உட்பட. ஆனால் அது அமெரிக்காவின் நலனுக்காக மற்றய‌ நாடுகள் மீது திணிக்கப்படுகிறது. அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் நிறுத்த வலுவான எதிரி அவசியம். அமெரிக்காவால் திணிக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கு ஒழிக்கப்பட வேண்டும். இது ஐரோப்பாவில் நிகழ்வது வரவேற்க்கத் தக்கது. அதை பூட்டினால் தான் செய்ய முடியும். இதுவரை சிரியாவிலும், ஈராக்கிலும், லிபியாவிலும் வெனுசுவேலாவிலும் நடக்கும் மோதல்களில் அமெரிக்கா அனுகூலமான நிலையில் இருந்து வந்தது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்காவின் இயலாமை வெளிப்படும். எந்த நாட்டையும் ஆக்கிரமிக்க‌ அமெரிக்கா தயங்கும். அந்த நாடுகளும் அமெரிக்காவை நம்பாது வேறு நட்பு உறவுகளை தேடும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் கூட நீண்ட காலத்திற்கு நிலைக்காது. சர்வதேச சந்தை, திறந்த பொருளாதாரம் எல்லாம் அமெரிக்க நலன் களுக்காக உருவானவை. அந்நிலையில் கியூபா போன்ற சிறிய, வளங்கள் குறைந்த நாடுகள் மீது பிரயோகிக்கும் தடையை வளம் உள்ள பெரிய சந்தை உள்ள நாடுகள் மீது பிரயோகிக்க முடியாது. வேறு வழியான சந்தை பொருளாதாரம் உருவாகும். இதுவே அமெரிக்காவின் அதிகார, பொருளாதார கீழிறங்கும் பாதைக்கு வழி சமைக்கும்.
  3. உக்ரைனின் சுயநிர்ணயத்தை ஆதரித்து அங்கீகாரம் கொடுத்ததே சோவியத் யூனியன் தான். ஜார் காலத்தில் இவர்களுக்கு எந்த உரிமையுமில்லை. இரண்டாம் உலகப்போரில் சோவியத் மீது ஹிட்லர் படையெடுப்பு நடத்தி அழித்த போது நாஜி உடையை அணிந்து கொண்டு சோவியத்துக்கு எதிராக போராடியவர்களும் இவர்கள்தான்.. பனிப்போர் காலத்தில் உருவான ஆக்கிரமிப்பு "நேட்டோ", தற்பாதுகாப்பு "வார்சோ" நாடுகள் தேவை இல்லாமல் போவது என்பது அழிவல்ல. தேவையாற்ற ஆபத்தானவை அழிய வேண்டும். ஆனால் இன்னும் நேட்டோ தொடர்ந்தால் வேறு கூட்டணி உருவாவதையும் உலகை அழிவின் நுனியில் வைத்திருபதையும் தவிர்க முடியாது. அமெரிக்காவும் நேட்டோவும் அல்ல புதிய உலக ஒழுங்கை தீர்மானிப்பதோ பதுகாப்பதோ... பலமானவன் பலமீனமானவனை அழிப்பது இயற்கையின் தேர்வல்ல... மாற்றத்திற்கு ஏற்ப தம்மை மாற்றி அமைத்து கொள்வது தான் தேர்வு. பலமானவர் யார்? அமெரிக்கா Not anymore. உக்ரைனின் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா நேட்டோ தலையிடாமல் தங்கள் படைகளை விலத்தி கொண்டாலே போதும். உக்ரைன் ஊடாக ரஷ்ஷியா மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்ந்து செய்யும் வர்த்தகம் எரிபொருள் என்பது தங்கு தடை இல்லாமல் நடக்குமானால் அதனால் ரஷ்ஷியாவிற்கும் , ஐரோப்பாவிற்கும் உக்ரைனிற்கும் லாபமே. நஷ்டம் அமெரிக்காவிற்கு மட்டுமே. ரஷ்ஷியாவிற்கும் உக்ரைனிற்குமான நட்பால் எந்த ஆன்மாவும் இழக்கப்படமாட்டாது. பனிப்போர் முடிந்த பின்னும் ஏன் நேட்டோ படைகள் ஏன் ஐரோப்பாவில் இருக்க வேணும். கலைத்து விடலாமே. அதை ஏன் ரஷியாவை சினம் மூட்டவும் அச்சுறுத்தவும் உபயோகிக்க வேணும்..? உலகம் முழுவதையும் போர் சூழலில் தக்க வைத்து கொள்ள விரும்பும் நாடு எது…? இதுவரை எந்த நாடுகள் மீது ரஷ்ய படை எடுத்திருக்கிறது அமெரிக்க எத்தனை நாடுகளில் படையெடுத்திருக்கிறது. ?
  4. சிம்பிள் ஈக்குவேசன்… அமெரிக்க கூட்டாளி வெள்ளைத்தோல் நாடுகளுக்கு வந்தா ரத்தம், மற்ற நாடுகளுக்கு வந்தா தக்காளி சட்னி… இதுக்கு ரஞ்சித்தும் கிருபனும் இவ்வளவு பொங்கித்தள்ளவேண்டிய அவசியம் இல்லை… உக்ரைன் உட்பட அமெரிக்ககூட்டாளிகளுக்கு அழ உலகே இருக்கிறது.. யூரியுப் ரீவி ரேடியோ பத்திரிகை உச்சபட்ச ஊடகம்கள் இருக்கின்றன.. உகரைனில் இருக்கும் ரஷ்யமக்களுக்காக அழ ரஷ்யாவைத்தவிர யாரும் இல்லை.. ஒடுக்கப்படுபவர் பக்கம் நிக்கவேண்டிய தார்மீக கடமை ஒடுக்கப்படும் எமக்கு இருக்கிறது.. ஆக நாங்கள் உக்ரைனில் உள்ள குரலற்றவர்களின் குரலாக உள்ள ரஷ்யாபக்கமே நிற்போம்..
  5. இரண்டாம் உலகப்போரின் பின் அமெரிக்கா குண்டுவீசிய மற்றும் ஆக்கிரமித்த நாடுகள்: China 1945-46 Syria 1949 Korea 1950-53 China 1950-53 Iran 1953 Guatemala 1954 Tibet 1955-70s Indonesia 1958 Cuba 1959 D Rep. of Congo 1960-65 Iraq 1960-63 Dominican Republic 1961 Vietnam 1961-73 Brazil 1964 Belgian Congo 1964 Guatemala 1964 Laos 1964-73 Dominican Republic 1965 Peru 1965 Greece 1967 Guatemala 1967-69 Cambodia 1969-70 Chile 1970-73 Argentina 1976 Turkey 1980 Poland 1980-81 El Salvador 1981-92 Nicaragua 1981-1990 Cambodia 1980-95 Grenada 1983-84 Angola 1980 Lebanon 1982-84 Libya 1986 Philippines 1986 Iran 1987-88 Libya 1989 Iran 1998 Panama 1989-90 Iraq 1991 Kuwait 1991 Iraq 1992-1996 Somalia 1992-94 Bosnia 1995 Sudan 1998 Afghanistan 1998 Yugoslavia - Serbia 1999 Afghanistan 2001 Iraq 2002-3 Somalia 2006-2007 Iran 2005 Libya 2013 Yemen 2015
  6. சேம் கியர்… நான் நினைக்குரன் வயசாகுறதால வாற சோர்வோ தெரியலை.. அட இவ்ளா நாளும் இந்த திரி என் கண்ணுல படேல்ல.. நல்ல ஒரு திரி..
  7. ஆப்பி பேர்த்டே ஏராளன் செல்லத்துக்கு.. வாழ்க பல்லாண்டு.. எல்லோரையும் நாபகப்படுத்தும் சுவி அண்ணைக்கும் நன்றிகள்..
  8. அதான.. ஜடியா இல்லாத மோட்டு பொடியனா இருக்கு… ஒரு வேளை எல்லாரும் கைய விட்டுட்டானுவள் பட்டத்த நான்தான் காப்பாத்த போறன் எண்டு நினைச்சிருப்பார் போல…😂
  9. நானா இருந்தா அடம்புடிச்சு இன்னும் கொஞ்ச நாள் ஆஸ்பிட்டல்லயே படுத்திரிந்திருப்பன்.. குடும்பம் குழந்தைக பொண்டாட்டி இருக்கிறத மறந்து இப்படி திரிஞ்சா நம்பள சுளுக்கு நிமித்தி படுக்கவுட்டுறுவாங்கய்யா…😂😂
  10. இவரு பரம்பரபட்டக்காரன் இல்ல போல.. பஞ்சத்துக்கு பட்டம் ஏத்த போய் ஆப்புல அவரே ஏறி உக்காந்து இருக்கார்… பாவத்த..
  11. 2k கிட்ஸ்ன்னா… புள்ள அநேகமா இவுரு ரசிகையா இருக்கும்…👇😂😂
  12. ஆப்பி பேத்டே நிழலி.. காலையில மந்தம்… மாலைல மப்பு.. மனுசன் வாழ்ராருப்பா… ஆனா என்ன இன்னைக்கு நிழலி வீடு வழியா கிராஸ் பன்னவங்க பூரா மூக்க பொத்திகிட்டுதா போயிருப்பானுக..😂😂
  13. மின்மினிப் பூச்சிகள் விளக்கேந்திய கானகம் விருட்சங்களின் உரசலில் தீப்பொறிக்கும் நீலக்கடல் நிமிர்ந்த தென்னை,பனை மரங்கள் உச்சரிக்கும் குடம் குடமாய் இரத்தம் பருகிய நிலம் எதையும் மறவாது நெருப்புப் பூக்கள் பூத்திருக்கின்றன நினைப்பதற்கு காலம் நேரமென்றில்லை சந்ததி சந்ததியாக ஒளி சூடி ஓடிக்கொண்டேயிருப்பதற்காகவே பிறந்தோம்.. -தா.பாலகணேசன்
  14. லவ்யூ.. எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்… எண்பதுகளில் வரவேண்டிய சிந்தனைகளுடன் இருக்கிறேன்.. எல்லாம் பொய் இந்த வாழ்க்கையே சுத்தம் பத்தம் ஏன் நான்கூட ஒருநாள் இல்லாமல் போய்விடுவேன் என்ற உண்மையை முப்பதுகளிலேயே உணர்ந்தபின் இன்றுவரை பிரக்ஞை பிடித்தவன் போல் வாழ்ந்துகொண்டிருக்கும்போது உங்கள் போன்றவர்கள் இருக்கும் வரையும் வாழ்வோம் என்று இந்த வாழ்க்கையின்மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறீர்கள்..
  15. நான் ஊரில் போய் செட்டில் ஆக இருப்பதால் இருக்குற காசபோட்டு சொந்தமா ஒரு வீடுவாங்கி வீட்டு ஏஜென்சிக்காரனிடம் விட்டிட்டு ஊருக்கு போய் செட்டில் ஆகிற ஜடியாவில் இருப்பதால் வீட்டு ஏஜென்ஸிக்காரனிடம் கொடுத்தால் *வாடகைக்கு இருப்பவன் காசு கட்டாமல் பிரச்சினை விட்டால் அவனை எழுப்பவதை அதனால் வரும் பிரச்சினைகளை வீட்டு ஏஜென்சிக்காறன் பாத்துக்கொள்ளுவானா அல்லது ஓனர் நான் தான் வரணுமா? *ஏஜென்சிக்காறன் வீட்டில் வாடகைக்கு இருப்பவனிடம் வாங்கும் காசைவிட எவ்வளவு குறைவா எங்களுக்கு தருவான்..? அதிலும் ஏதும் சுத்துமாத்துவிடுவானோ ஏஜென்சி..? *ஏஜென்சிக்காறன் வாடகைக்கு ஆளை இருத்திவிட்டு எங்களுக்கு யாரையும் இருத்தவில்லை அதனால் காசு இல்லை என்று பொய் சொல்ல சான்ஸ் இருக்கா..? இதெல்லாம் தெரிஞ்ச ஆரும் இருந்தா எனக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பா.. மண்டை சுத்துது யோசிச்சு யோசிச்சு காசை என்னத்தில பாதுகாப்பா முதலிடலாம் வருமானத்தோட எண்டு பாத்ததில கடைசியா தேறின ஒரே ஒப்சன் இதுதான்.. ஆனா அதிலும் இந்த ஏஜென்சி செக்சன் எனக்கு விளங்கேல்ல.. ஆரேன் கெல்ப்பண்ணுங்கப்பா.. கூடவே பங்கு வியாபாரத்தில் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி ரெஸ்ற் பண்ணி பாத்து ஊரிலபோய் சும்மாதான இருப்பன் இதை செய்யலாம் எண்டு பாத்தா முதல் ஸ்டெப் Step 1: find a good online broker இதுலயே ஸ்ரக் ஆகி நிக்குரன்.. ஆரும் நல்ல பாதுகாப்பான நம்பிக்கையான புரோக்கர் லிங் தாங்கப்பா..
  16. ஆப்பி பர்த்டே விசுகண்ணை.. பேரப்பிள்ளையளை சீக்கிரம் கொஞ்சவும்..
  17. ஒருக்கா ஒரு பொடியன் சண்டை கட்டம் வரேக்க எழுப்பி விடு எண்டு பக்கத்த இருந்த பொடியனிட்ட சொல்லீட்டு நித்திரையாபோனான்.. அவன்ர குஞ்சில சணல் நூல கட்டி பக்கத்துல இருந்த தேமாவில சணலின்ர மற்றபக்கத்தை நல்லா இழுத்து கட்டி விட்டுட்டு சண்டை வந்திட்டு எழும்புடா எண்டு கத்தி எழுப்பி அவனுக்கு சூ அறுந்துபோகப்பாத்திச்சு.. 😅 ஓம் பூவரசம் நெட்டும் சொன்ன சாமான்..
  18. உதில மரவள்ளி நெட்டு வச்சு அடிச்சா சுள்ளிடும்… இயக்கம் இருக்கேக்க ஊரில ஆற்றையன் மோழுக்கு சாமத்தியவீடு கலியாண வீடு பொறந்தநாள் எண்டு ஏதும் நல்லது நடந்தா ஜெனரேட்டரில படம் வீடியோ கொப்பி போடுவாங்கள் முதல்ல.. அது முடிய விடிய விடிய படம் ஓடுவாங்கள்.. ஒரு கிழமைக்கு முன்னமே ஊர் புல்லா என்ன என்ன படம் எண்டு போடலாம் எண்டு கேட்டு கொப்பி வாடகைக்கு எடுப்பாங்கள்.. நாங்கள் மரவள்ளி நெட்டு ரப்பர் பாண்டு கல்லுகுறுணி எல்லாம் பொறுக்கி கொண்டு போவம்.. பொடனிக்கு பின்னுக்கு இருந்து வம்பு வேல செய்யுரது.. இருட்டுக்க எங்களுக்கும் ஆரும் செஞ்சு விட்ருவாங்க..
  19. அண்ணை நாலாந்தேதி எனக்கு ஊசி... பயப்பிடுத்தாம சொல்லுங்கோப்பா என்ன வித்தியாசம் இருக்கு? போடலாமா ஊசி?
  20. கோடி நன்றிகள் டாக்டர்.. பெரிய ஒரு மனப்பயம்போனது.. இன்றைக்கு சேவை செய்யும் மருத்துவ உலகம் வியாபார உலகமாகிவிட்ட நிலையில் ஒரு ஆலோசனை பெறக்கூட பணம்கட்டி காத்திருந்து அப்பொயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டி இருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் நேரமொதுக்கி அதுவும் மினக்கெட்டு இருந்து ரைப்பண்ணி அதுவும் எமது தாய்மொழியில் பதில் அளிக்கிறிர்கள்.. இதற்கு ஒரு மனம் வேண்டும்.. உங்களை மட்டும் வளர்த்துகொண்டு உங்கள் வேலையை பார்த்துகொண்டு போகாமல் உண்மையில் நீங்கள் உங்கள் இனத்திற்கு செய்யும் அளப்பரிய சேவை இது.. ஆங்கிலம் பேசாத வேறு மொழிபேசும் வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அந்த நாட்டு மொழி தெரியாவிட்டால் விசா இல்லாதவர்கள் வைத்திய ஆலோசனை சந்தேகம் இருந்தால் இந்த திரியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.. இந்த திரியை யாழ் இணையம் கைலைட் பண்ணி விட்டால் எப்போதும் வேறு திரிகளால் பின்னுக்கு தள்ளப்படாமல் முன்னுக்கே இருக்கும்.. மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம் திரியை தேடித்திரியாமல் உடனே படித்தும் ஆலோசனை கேட்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.. இந்த திரியின் பெறுமதிக்கு ஈடில்லை. யாழ் இணையமும் கள உறவுகள் நாமும் என்ன தவம் செய்தமோ உங்களை இங்கு உறுப்பினராக பெற.. கோடான கோடி நன்றிகள் டாக்டர்.. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லாம் வல்ல இயற்கை காத்து நிக்கும்..
  21. டாக்டர் எனக்கு மூலப்பிரச்சினை இருக்கு. இது வெளிமூலம். கிட்டதட்ட 5mm நீளத்துகு ரெண்டு முளைகள் வந்துவிட்டது.. அதைவிட வேறு சின்னசின்ன முளைகள். நான் ஆப்பரேசன் ஊருக்குபோய் செய்வம் எண்டு பிற்போட்டுகொண்டிருந்ததில் இப்படி ஆகிவிட்டது. ஏனெனில் ஆப்பரேசனின் பின் நீண்ட ரெஸ்ற் தேவை என்பதால் ஊரே எனது தெரிவு. எனக்கு என்ன சந்தேகம்கள் என்றால் 1)இதை நாள்பட விடுவதால் கான்சராக்க சந்தர்ப்பங்கள் உள்ளதா..? 2)இவ்வளவு முற்றிவிட்டதால் இதற்கு ஆப்பரேசந்தான் ஒரே தீர்வா..? மருந்துகள் மூலம் இல்லாமல் செய்யமுடியாதா.!? நன்றி டாக்டர்..._
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.