Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1345
  • Joined

  • Days Won

    2

Posts posted by நியாயம்

  1. வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே. 

    ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 

  2. 2022/2023 கால பகுதியில் உச்சம் தொட்ட வெள்ளிகள் இப்போது இலங்கை ரூபாக்கு இறங்க தொடங்கி உள்ளது. 

    பணவீக்கம் ஒரு புறம் என்றாலும் அனுப்புகின்ற வெள்ளிக்கு அதிக ரூபாய்கள் தேறும்போது ஒரு சந்தோசம்தான் நமக்கு. 

    • Like 1
  3. தான் துவாரகா என்று சொல்லிக்கொண்டு முன்னால வந்த பிள்ளையை விட சுஜி என்கின்ற இந்தப்பிள்ளை பெரிய புரட்சியை ஏற்படுத்த போகுதோ? 😁

  4. 1 hour ago, ஏராளன் said:

    தந்தை பிறந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்க கிடைத்தது பெரும் பாக்கியமாகும் - பிரித்தானிய தமிழ் யுவதி அமுருதா கூறுகிறார்

    Published By: VISHNU    10 APR, 2024 | 08:09 PM

    image

    (நெவில் அன்தனி)

    எனது தந்தை பிறந்த, கிரிக்கெட் விளையாடிய இலங்கை மண்ணில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கக் கிடைத்ததை ஓர் அற்புதமாகவும் பாக்கியமாகவும்  கருதுகிறேன் என வீரகேசரிக்கு 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி வீராங்கனை அமுருதா சுரேன்குமார் தெரிவித்தார்.

    Copy_of_Amu_Surenkumar_Bowling.jpg

    இலங்கையில் இன்னொரு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு தனது தந்தையிடம் கோரவுள்ளதாகவும் சகலதுறை வீராங்கனையான அமுருதா குறிப்பிட்டார்.

    காலி சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (09) நிறைவடைந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் ஒருநாள் மும்முனை கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் வீரகேசரிக்கு அளித்த பேட்டியின்போதே அமு என எல்லோராலும் பாசமாக அழைக்கப்படும் அமுருதா தனது கருத்தை வெளியிட்டார்.

    கேள்வி: தந்தை கிரிக்கெட் விளையாடியதால் நீங்களும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தீர்களா?

    பதில்  (அமுருதா): 'எனது பெற்றோர் இருவருமே கிரிக்கெட்டின்பால் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். எனது தந்தை (சுரேன்குமார்) இலங்கையில் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாடி இருந்தார். எனது தாயார் (லோஜினி) இளம் வயதில் கிரிக்கெட் விளையாடியதுடன் வலைபந்தாட்டத்திலும் ஈடுபட்டார். அவர்கள் அளித்துவரும் ஆக்கமும் ஊக்கமுமே என்னை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வைத்தது.

    'நான் ஆறு வயதாக இருந்தபோது கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். சிறு பராயத்தில் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகளைக் கண்டு களித்தேன். எனக்கு 7 வயதானபோது நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகத்தில் இணைந்தேன். அங்குதான் எனது கிரிக்கெட் வளர்ச்சி அடையத் தொடங்கியது. படிப்படியாக எனது கிரிக்கெட் ஆற்றல் முன்னேற்றம் அடைந்தது. எனக்கு 16 வயதானபோது சன்ரைசர்ஸ் கழகத்தின் சிரேஷ்ட அணியில் விiளாயாட வாய்ப்பு கிடைத்தது.

    அதன் பின்னர் மிட்ல்செக்ஸ் அணிக்காக பிராந்திய கிரிக்கெட் விளையாடியதுடன்  இப்போது இசெக்ஸ்  அணிக்காக   விiளையாடுகிறேன். இவை அனைத்தும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததுடன், என்னிடம் இருந்த கிரிக்கெட் ஆர்வம், பேரார்வமாக மாறியது.'

    கேள்வி: 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்காக விளையாடக் கிடைத்தைப் பற்றி என்ன கூற விரும்பகிறீர்கள்?

    பதில் : 'உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நான் திறமையை வெளிப்படுத்தி வந்ததன் பலனாக 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சிக் குழாத்தில் என்னை இணைத்துக் கொண்டனர். இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தை முன்னிட்டே இந்த குழாம் தெரிவுசெய்யப்பட்டது. அப்போது, இலங்கைக்கு பயணம் செய்து இங்கிலாந்து யுவதிகள் அணியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் என்னில் இயல்பாகவே புகுந்துகொண்டது.

    'ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுடான போட்டியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் எனக்கு விளையாடக் கிடைத்தது. அப்போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஏனேனில் எனது தந்தை பிறந்த, கிரிக்கெட் விளையாடிய இலங்கை மண்ணில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக் கிடைத்ததை நான் ஓர் அற்புதமாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.

    'இங்கிலாந்திலிருந்து வருகை தந்த எனது பெற்றொரும் இளைய சகோதரிகளும் அந்தப் போட்டியை நேரடியாக கண்டு களித்தனர். அத்துடன் இலங்கையில் உள்ள எமது உறவினர்கள் சிலரும் அந்தப் போட்டியைக் கண்டு களித்தனர். காலியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு எனது தந்தையின் சகாக்கள் சிலர் வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தியதை நான் மறக்க மாட்டேன்.'

    கேள்வி: இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச கிரிக்கெட் விளையாடியதன் மூலம் என்ன அனுபவத்தைப் பெற்றுக்கொண்டீர்கள்?

    பதில்: 'இலங்கையில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்குகளில் விளையாடக் கிடைத்தை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கடும் உஷ்ணத்துக்கு மத்தியிலும் வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் கிரிக்கெட் விளையாடுவது பெரும் சவாலாக இருந்தது. இத்தகைய சவால்களுக்கு மத்தியில் விளையாடியதன் மூலம் மறக்க முடியாத சிறந்த அனுவங்களை நானும் எனது சக வீராங்கனைகளும் பெற்றுக்கொண்டோம். போட்டிகளில் பங்குபற்றுவதன் மூலம் எங்களது கிரிக்கெட் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் உருவாகுகிறது. நாங்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். இங்கும் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டோம்  . இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை என்னால் மறக்க முடியாது.'

    கேள்வி: இலங்கையின் இளம் வீராங்கனைகளுக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள்?

    பதில்: 'இலங்கை யுவதிகளிடம் திறமை இருக்கிறது. மனதை தளரவிடாமல் விடா முயற்சியுடன் தொடர்ந்து விளையாடினால் உயரிய நிலையை அடைய முடியும். அவர்கள் ஒருநாள் அதனை நிலைநாட்டுவார்கள் என நம்புகிறேன்.'

    கேள்வி: உங்களது எதிர்கால இலட்சியம் என்ன?

    பதில்: 'எல்லா இளையோரையும் போன்று இங்கிலாந்து தேசிய மகளிர் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த இலக்கை அடைய நான் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும். அத்துடன் எத்தனையோ படிகளைக் கடக்க வேண்டியுள்ளது. எனது பெற்றோர், பயிற்றுநர் ஆகியோரின் ஆசியுடன் அந்த இலக்கை அடைந்தே தீருவேன்.'

    அமுருதாவின் தந்தை எஸ். சுரேன்குமார், வடக்கின் கிரிக்கெட் சமரில் துடுப்பாட்டத்துக்கான சாதனையை நிலைநாட்டியவராவார். 1990இல் நடைபெற்ற யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பரி. யோவான் அணி சார்பாக சுரேன்குமார் குவித்த 145 ஓட்டங்களே வடக்கின் சமரில் தனி நபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இன்றும் இருந்துவருகிறது.

    அமுருதாவின் இளைய சகோதரிகளும் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.

    https://www.virakesari.lk/article/180936

    இலங்கையில் விளையாடிய போட்டியில் பந்துவீச்சு/ஓட்ட விபரங்கள்/காணொளி கிடைத்தால் பகிருங்கள், பார்ப்போம். 

  5. இந்த விடுமுறை கழிய வரும் மாதம் கா.பொ.த சாதாரணம் வரும்போது மீண்டும் விடுமுறை.  மாணவர்களுக்கு ஜாலிதான்.

    இலங்கையில் இந்த வியாழன், வெள்ளி விடுமுறை. சனி, ஞாயிறு வாரவிடுமுறை. இது போதாது என்று ஒரு குரூப் திங்கள் அரசாங்கவிடுமுறை தேவை என போராடுதாம். அவரவர்ட்கு அவரவர் பிரச்சனை. 

    • Sad 1
  6. ஆனந்த சங்கரி, டக்லஸ் இப்படி ஒவ்வொருவராய் ஓய்வு பெற்றால் எங்கள் ஆட்களுக்கு போர் அடிக்கப்போகிறது. 

    சுமந்திரன் அவர்களால் டக்லஸ் தேவானந்தா இடத்தை நிரப்ப முடியுமா. 

    தூற்றுவதற்கு எவரும் இல்லை என்றால் தேசிய அரசியலை எப்படி நகர்த்தப்போகின்றார்கள். 

    • Haha 2
  7. 17 hours ago, Kapithan said:

    ஏன்  -1 போட்டனீயள் ? ஏதும் கோபமோ? 

    உங்கள் மீது தனிப்பட்ட கோபத்தில் சிகப்பு புள்ளி இடவில்லை. நீங்கள் இணைத்த குறிப்பிட்ட காணொளியில் தூசண வார்த்தைகள் உள்ளன. 

  8. முன்பு ஒரு காலத்தில் கப்பிட்டல் பனிஸ்மண்ட்/மரண தண்டனை சட்டங்கள் கூடாது என நினைத்தேன். இதேபோல் தனிநபர்கள் சட்டபூர்வமாக ஆயுதங்கள் வைத்திருக்க தேவை இல்லை எனவும் நினைத்தேன். ஆனால், தற்போதைய உலக நடப்புக்களை பார்க்கும்போது அவை அவசியமாக தெரிகின்றன.

    கனடாவில் சவூதி சட்டங்களை கொண்டு வரலாமோ? 

  9. 21 hours ago, ஈழப்பிரியன் said:

                                                            கனடாவில் கார் களவு.-_
                                                            
             அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன்.

              நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ.

             எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம்.

               சரி என்று கனடா(மிசிசாக்குவா) போனால் ஸ்ரேறிங் லொக் வைத்திருக்கிறீங்களோ?இஞ்சை கார் களவு சரியான மோசம்.

                பொலிஸ்காரனே சொல்லுறான் வீட்டை உடைத்து கார் திறப்பு கேக்கிறாங்கள்.கார் திறப்புகளை முன்னுக்கே வையுங்கோ என்று.

                 இது எப்படியான பாதுகாப்பென்றே விழங்கவில்லை.

                 இதைவிட காருக்குள்ளேயே திறப்பை வைத்துவிட்டே வரலாமே?வீணாக உடைத்த கதவுகளை யன்னல்களையும் திருத்தத் தேவையில்லை.

                  கனடா உறவுகளுக்கும் இதுபோல ஏதாவது நடந்ததோ?
      
                   நடந்தா வெட்கப்படாம சொல்லுங்க.

    வாகனம் களவு போனால் காப்புறுதி காசு தரமாட்டார்களோ? அதில் இன்னோர் புதிய வாகனத்தை வாங்குங்கோ. 

    வீட்டில் இரண்டு கடி நாயை வளர்க்கலாம்.  பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருக்கலாமோ? வீட்டை உடைத்து உள்ளே வருபவர் நெற்றியில் ஒரு பொட்டு வைத்து விட்டால் சரி. 

    • Like 1
  10. இப்போது எமது காலம் மாதிரி இல்லை. தொலைக்காட்சியில் கற்கை ஊடக பிரிவுகள் உள்ளன. நன்றாக கற்பிக்கின்றார்கள். இணையம் மூலம் காணொளிகள் மூலம் கற்றக்கூடிய பல வசதிகள் உள்ளன. ஆகக்குறைந்தது வகுப்பு நேரங்களில் குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும் இந்த காணொளிகளை வகுப்பு நேரங்களில் மாணவர்கள் பார்த்து கல்வி கற்ற ஏற்பாடு செய்யலாம். 

    • Like 3
  11. 6 hours ago, ஏராளன் said:

    இந்த சந்திப்பின்போது அவுஸ்திரேலிய அதிகாரிகள் குழுவில், தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரக் கடல் பிராந்தியப் பாதுகாப்புசார் விற்பன்னரும் அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழக தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளருமான கலாநிதி டேவிற் பிரேஸ்டர், ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியும், புதுதில்லியில் கடமையாற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகருமான கப்டன் சைமன் பேட்மன், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமெண்டா ஜோண்சன் மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அத்தியட்சகர் வனேசா ரஃப் ஆகியோர் அடங்கினர். 

     

     

    உவையள் இடம் மாறி வந்திட்டீனமோ. 

  12. ஆயுதத்துக்கு உள்ள மரியாதை வேறு எதற்கும் இல்லை போல. தொல் பொருள் திணைக்களம் எனும் பெயரில் சனங்கள் கண்களுக்குள் விரலை விட்டு இந்த ஆட்டு ஆட்டுறாங்கள். 

    • Like 1
  13. On 13/3/2024 at 09:05, விசுகு said:

    முதல் தாக்குதல் எதற்காக இவர் செய்தார்.. ??

    (முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல்)

    இவர் முன்னர் இருவர் மீது வாள்வெட்டு நடாத்தியதாக போலீசார் கூறுகின்றார்கள் என வீரகேசரி சொல்கின்றது.

    மேற்படி தகவல்கள் உண்மை எனில்,

    வாள்வெட்டு நடாத்திய இவரை முன்னமே இனம் கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தார்களோ தெரியாது. அப்படி சட்ட நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த கொலை நடைபெறாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது.

    • Like 2
    • Thanks 1
  14. இனி கோயில் பக்கம் எவரும் வருவதையோ, பூசை செய்வதையோ கனவிலும் நினைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த காட்சிகள் எல்லாம் அரங்கேறுகின்றதோ என்னவோ.

    தொல்பொருள் திணைக்களம் தான் நினைப்பதை சாதிக்கின்றது.

    வேறு என்னதான் கூறுவது.. 😟 

  15. பாவம் அந்த மாணவன். ஆழ்ந்த அனுதாபங்கள். மாணவனின் வகுப்பினர், நட்பு வட்டம், பெற்றோர், பாடசாலை சமூகம், ஊரவர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஊட்டும் சம்பவம் இது. 

    இப்போது பல்வேறு பாடசாலைகளில் தட, கள/மெய்வல்லுனர் போட்டி நடைபெறும் காலம். அதேசமயம் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெப்பநிலை/காலநிலை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகின்றது. வெளியில் செல்லும்போது தற்போதைய காலநிலைக்குரிய எடுக்கவேண்டிய பாதுகாப்பு முன் எச்சரிக்கைகள்/நடைமுறைகள் பற்றி சுகாதார/மருத்துவ பிரிவினால் விழிப்புணர்வு கொடுக்கப்படுகின்றது. 

    பொதுவாக காலை எட்டு மணிக்கு முன்னதாக மரதன் ஓட்ட போட்டி நிறைவடையும் வகையில் பாடசாலைகள் நிகழ்ச்சியை ஒழுங்கமைக்கின்றன. அத்துடன் மாணவர் ஒருவர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். 

    முதலில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற பாடசாலை மரதன் ஓட்டப்போட்டியை எப்படி ஒழுங்கமைத்தது என அறியப்பட வேண்டும். 

    பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்றும் வரக்கூடாது தானே. 

  16. 21 hours ago, putthan said:

    எப்படி இருக்க வேணும்? ..பெரும்பான்மையினர் ஆட்சி செய்வதால் சிறுபான்மையினர் அமைதிகாக்க வேணுமா?நில அக்கிரமிப்பு செய்யும் திட்டங்களில் இதுவும் ஒன்று...இதை பெளத்தர்கள் விட்டு கொடுக்க மாட்டார்கள் அதாவது எப்படியோ அதிகாரங்களை பாவித்து விகாரையை கட்டி விடுவார்கள் ...பின்பு குடியேற்றம் ...

    வட மாகாணத்தில விமானப்படை நல்லிணக்க செயலாம் 
    வட மாகாணத்தில் பிக்குமாரும் பொலிசாறும்  துட்ட செயல் 
    மூவரும் அரச இயந்திரம்...

    தொல்பொருள் திணைக்களம் மண்ணை தோண்டுகின்றோம் என்று பிரச்சனைகளை தோண்டுகின்றது. இலங்கை தொல்பொருள் திணைக்களத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இனங்களுக்கு இடையில் உள்ள நல்லிணக்கத்தை ஓரளவுக்காவது பேணலாமோ?

    போலிசார் வெளிவிட்ட அறிக்கையின் பிரகாரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவரே கிடுங்குப்பிடியாக நின்று சிவராத்திரி நிகழ்வு குழப்பம் அடைவதற்கு காரணகர்த்தா என தோன்றுகின்றது.

    • Like 1
    • Thanks 1
  17. இந்த இடத்தில் ஏற்கனவே விகாரை உள்ளதோ அல்லது விகாரை கட்டப்படுவதற்கான முஸ்தீபு நடக்கின்றதோ. 

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போலத்தான் இதுவும் செல்லுமோ?

    இப்போது தாயகம் பற்றி கருத்துக்கள் கூறவே தயக்கமாக உள்ளது. ஒவ்வொரு செய்திகள், நடவடிக்கைகள் பின்னாலும் பின்னினாற் போல பல சூக்குமங்கள். வேடன் விரித்த வலையில் அகப்படுவது போன்றதுதான் சமூக ஊடகங்களில் எமது அபிப்பிராயங்களை தெரிவிப்பது என்பதுபோலாகிவிட்டது.  

  18. என்ன கொடுமை ஐயா. தமிழ்வின்னில் காணொளி பார்த்தேன். இலங்கையின் போலிஸ் மட்டமான வேலைகள் செய்வதை பதிவு செய்து உள்ளார்கள். 

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என குரல்கள் ஒலிக்கும்போது சமய வழிபாட்டில் ஈடுபடுவர்களை அடாவடியாக வெளியேற்றுகின்றார்கள். 

    இப்படியான செயல்கள் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துமா? பார்ப்பவர்களுக்கு போலிசாரின் செயல் ஆத்திரத்தையே ஏற்படுத்தும். 

    புத்தபிக்குகள் சமய அனுட்டானங்களில் ஈடுபடும்போது இப்படி யாராவது செய்தால் பார்த்துக்கொண்டு இருப்பார்களா?

    • Like 2
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.