Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1328
  • Joined

  • Days Won

    2

Everything posted by நியாயம்

  1. டீ ஜே நைட் என்றால் என்ன? அங்கே என்ன செய்கின்றார்கள் என்பதை ஒருக்கால் சொல்லுங்கோ பார்க்கலாம்.
  2. மாகோ - அநுராதபுரம் 68 கிலோமீற்றர், கிட்டத்தட்ட ஒன்று அரை மணித்தியால பேருந்து பயணம். இடையில் ஆட்களை இறக்கி ஏற்றினால் இரண்டு மணித்தியாலங்கள். ரயில்வே திணைக்களம் இலாபத்தில்தானே ஓடுகின்றது? பயணிகள் கட்டணம் செலுத்துகின்றார்கள் தானே. காங்கேசந்துறை கொழும்பு ரூபா 3000-4000 கட்டணம் என நினைக்கின்றேன். அதிக லாபத்திற்காக அல்லது வேறு வகையான வருமானத்திற்காக பயணிகள் சிரமத்தை கண்டுகொள்ளாவிட்டால் என்ன செய்வது?
  3. வெளிநாடுகளில் இப்படியான திருத்த வேலைகள் வழமை. ஆனால், அழகாக ஒரு பயணச்சீட்டில் பயணம் செய்யும் வகையில் பயணிகளின் வசதி கருதி மாற்று ஏற்பாடுகள் செய்வார்கள். இலங்கையிலும் இந்த ஏற்பாடு வர வேண்டும். புகையிரதங்கள், இடைவழியை ஒன்றுசேர்க்கும் பேருந்து தொடரும் மற்றைய புகையிரதம் ஆகியவற்றை நேரங்கள் பொருந்தும் வகையில் திட்டமிட்டு இயங்கவைக்கலாம். பயணிகளை அலைக்கழியவிட்டு உதாசீனம் செய்வது தவறு. கொழும்பில் ஏறி மாகோவில் புகையிரதத்தால் இறங்குவோரை அநுராதபுரம் கொண்டு செல்லும் பேருந்துகள் தயாராக நிற்கவேண்டும். அநுராதபுரம் செல்வோர் பயணத்தை தொடர புகையிரதம் தயாராக நிற்கவேண்டும். இவ்வாறே காங்கேசன்துறை - அநுராதபுரம் - மாகோ - கொழும்பு பயண வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதை செய்வதற்குரிய வளங்கள் இல்லையா? போக்குவரத்து துறைக்கு என அமைச்சர் உள்ளார்களா? மனம் உண்டானால் இடம் உண்டு.
  4. இப்படியான பெயரில் ஆறு/ஏழு வயதில் எனக்கு தெரிந்த ஒருத்தரும் உள்ளார். நான் நினைக்கின்றேன் இந்த பெயர் கடந்த பல ஆண்டுகளாக பிரபலம் போலும்.
  5. இடையில் உள்ள தூரத்தை எப்படி கடப்பது? ரெயில்வே திணைக்களம் இடைபிரயாயணத்துக்கான போக்குவரத்து வசதிகளை பயணிகளுக்கு வழங்குகின்றதா? ஒரு ரிக்கெட்டில் முழு தூரத்தையும் பயணிக்க முடியுமா?
  6. தமிழில் பல நன்னூல்கள் உள்ளன. யாராவது இப்போதும் படிக்கின்றார்களா/பின்பற்றுகின்றார்களா தெரியவில்லை. பிறன்மனை நோக்காமை, அடுத்தவன் பெண்டாட்டிக்கு ஆசைப்படாமல் வாழ்வது தமிழ் நன்னூல்கள் போதிக்கும் அடிப்படை ஒழுக்கம்.
  7. நீங்கள் கேட்பது/சொல்வது புரியவில்லை. நால்வர் என சமய குரவர்களை கூறினேன். சரி கோயில் நிருவாகம் எடுத்த முடிவுக்கு நாம் என்ன செய்யமுடியும். வெளிவீதியிலும் சுவாமி விக்கிரகங்கள் உள்ளன. சுவாமி வெளிவீதி சுத்தும்போது விவேகானந்தரின் பார்வை ஐயர்/கோயில் நிருவாகிகளுக்கு நெருடலை ஏற்படுத்துகின்றதோ என்னமோ. பல கோயில்களில் சாய்பாபா சிலை/படம், அத்துடன் வேறு பல சாமியார்கள், அம்மாக்கள், ஐயாக்கள் படங்கள் கண்டுள்ளேன். சில இடங்களில் அவற்றுக்கு பூஜையும் நடக்கின்றது. அவரவர் நம்பிக்கைகள். ஆகம விதிமுறைகள் என்று பார்த்தால் பல கோணங்களில் பார்க்கலாம். பொன்னம்பலவாணேஸ்வரம் வெளிவீதியில் மண்டபம் உள்ளது. இது சிவாகம விதிகளுக்கு உட்பட்டதா? சரி என்னவோ… கோயில் தரிசனம் மன நிறைவை தருகின்றது. அது போதும்.
  8. நான் அண்மையில் கோயிலை தரிசிக்க சென்றபோது சிலையை பார்த்தேன். யார் சிலையோ என நினைத்தேன். கோயிலின் உள்ளே நால்வரின் சிலைகள் உள்ளன. வெளியில் சுவாமி விவேகானந்தர் சிலையை வைத்தால் கோயிலுக்கு இழுக்கா. இவ்வளவு காலமும் சிலையை ஏன் விட்டு வைத்தார்கள். புதிய நிர்வாகம் பதவி ஏற்று உள்ளதோ அல்லது புதிய தலைமுறை புதுசாய் சிந்திக்கின்றதோ!
  9. ஏதோ ஒரு புள்ளியில் எல்லா தரப்பினரும் சந்திக்கத்தானே வேணும். அது சரி இலங்கை ஜனாதிபதியுடன் உலகையே ஆளும் இந்த யாழ் கருத்துக்களத்தினர் ஒரு சந்திப்பை மேற்கொண்டால் என்ன?
  10. இப்ப பரீட்சைகள் எல்லாம் தள்ளித்தானே போகுது. 17 வயதில் ஏ.எல் என்று மாற்றம் கொண்டு வந்தால்தான் பிள்ளை 20 வயசிலாவது பல்கலைக்கழகம் போகலாம். தேவை இல்லாத பாடங்களில் சமய பாடத்தை அகற்றலாம். தேவையான பாடங்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சுகாதாரம், சமூகக்கல்வி (இப்போது வேறோர் பெயர் போல), அத்துடன் சிங்களம் (சிங்கள மாணவர்கட்கு தமிழ்) உள்ளடக்கப்பட வேண்டும்.
  11. 17 வயதில் படிப்பு முடியும் என்றால் நேசரி ஐந்து வயது முதலாம் வகுப்பு ஆறு வயது, ஓ.எல் பதினைந்து வயது, ஏ.எல் பதினேழு வயது? பொருளாதார நெருக்கடி காரணமாக வகுப்புகளையும், பாடங்களையும் குறைக்கின்றார்களோ? இலவச கல்வி என்றால் வளங்களை வழங்குவது ரொம்ப கஸ்டம் தான். இனி கொஞ்சம் வேளைக்கே பல பெண்கள் திருமணம் செய்வார்கள். கொஞ்சம் வேளைக்கே பிள்ளையை வீட்டில் நிப்பாட்டி வைப்பார்கள். பலர் இனி வெட்டியாக ஒரு வருடம் முன்னரே வீட்டில் நிற்கலாம். பெற்றோருக்குத்தான் தலையிடி. இலங்கையின் கல்வி தரம் வெளிநாட்டி அளவுகோலின் நிமித்தம் குறைக்கப்படலாம். ஒன்பது பாடங்களை எட்டாக குறைக்கலாம். ஏழாக குறைப்பது பல பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். ஏழு இலங்கைக்கு அதிர்ஷ்ட எண்ணோ? அது சரி.. இப்படி மாற்றங்கள் எல்லாம் செய்யப்படும் முன் பாராளுமன்றத்தில் இந்த விடயங்கள் விவாதிக்கப்பட்டு மற்றவர்கள் ஆலோசனை பெறப்படுமா அல்லது இவை ஒரு தலைப்பட்சமான முடிவுகளா?
  12. சிறீதரன் முன்பு பாடசாலை அதிபராக கிளிநொச்சியில் பணியாறினாராம். பாடசாலை அதிபர் என்றால் கிஞ்சித்தாவது இங்கிலீசு பரீட்சயம் ஆகத்தானே வேண்டும்? சிறீதரன் இந்தியாவின் பிரதிநிதியா? அப்படி என்றால் றோவின் விளையாட்டுக்களை சிறீதரன் தலைமை ஏற்றால் தாராளமாக காணலாம்?
  13. ஆர்யனுக்கும், பெற்றோர், உறவுகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஆர்யன் என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் ஒரு தமிழ் பழம். பேரனின் பெயர் சூட்டலில் உங்கள் பங்களிப்பு உள்ளதோ.
  14. பிச்சைக்கார காசு போல் உள்ளதே. தேவையில்லாத/முக்கியத்துவம் அற்ற விடயங்களுக்கு பெருமளவு செலவளிக்கின்றார்கள். ஜனாதிபதியின் முடிவுகள் அனைவரையும் பாதிக்கும்/செல்வாக்கு செலுத்தும். சரியான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு சரியான தகவல்கள், தரவுகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் கொடுப்பனவுகள் தாராளமாக கொடுக்கப்பட வேண்டும். ஆலோசகர்களால் எழுந்து, நிமிர்ந்து நடமாட முடியாவிட்டால் நாட்டு மக்கள் நடைப்பிணம் தான்.
  15. இலங்கையில் முதலாம் இடம் பெற்ற சிங்கள மாணவி, மற்றும் இரண்டாம் இடம் பெற்ற வேம்படி மகளிர் தமிழ் மாணவி இருவருமே தங்கள் இலட்சியம் மருத்துவராக வந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என கூறுகின்றார்கள். இந்த மருத்துவராக வரவேண்டும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனும் இலட்சியங்களை ஒவ்வொரு வருடமும் கேட்டு காது புளித்துவிட்டது. உலகம் எவ்வளவு மாறிவிட்டது. எத்தனை புதிய தொழில்நுட்பங்கள், வழிமுறைகள், ஒழுங்குகள் வந்துவிட்டன. எங்கள் ஆட்களுக்கு டொக்டர், என் ஜினியரை விட்டால் வேறு மார்க்கம் இல்லை.
  16. வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகள் இப்படி யோசிப்பது இல்லை. நல்லதொரு தொழில் உழைப்பு தேவை காசு பண்ணுவதற்கு.
  17. இதுகள் பெரிய பொலிஸ் பிரச்சனையாக வருமே. அதுவும் சுவிஸ் பொலிஸ் பொல்லாதது என அறிந்தேன். அந்தந்த நாட்டில் உள்ளவர்கள் சட்டத்தை தம் கையில் எடுக்காமல் தத்தம் நாட்டு ஒழுங்குகளுக்கு அமைய செயற்படுவது எல்லோருக்கும் நல்லது.
  18. யாழ் இந்து எழுபத்து நான்கு, வேம்படி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அனைத்தும் அதிவிசேட சித்தியாம். பாராட்டுக்கள் எல்லோருக்கும். என்னைய்யா எங்கட காலத்தில் ஒரு ஐந்து ஆறு பேருக்கு அல்லது ஒரு பத்து பேருக்கு இப்படி பெறுபேறு கிடைக்கும். இது என்ன ஊருக்கே இப்படி சித்திகள் கொட்டிக்கிடக்கிது? இப்போது அதி விசேட சித்தி எடுப்பது இலகோ அல்லது நவீன தொழில்நுட்ப வசதிகள் காரணமாக இலகுவாக, வினைத்திறனாக கற்கமுடிகின்றதா? அல்லது வேறு என்னதான் காரணங்கள்?
  19. இந்த காணொளியில் கூறப்படுவது என்ன?
  20. நீங்கள் இறுதியாக எப்போது இலங்கை சென்றீர்கள். ஒரு இலட்சம் பெறுமதி குறைந்து ஐம்பதாயிரம் ஆகும் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. தங்கம் விலையை கவனித்தால் இந்த விடயத்தை கொஞ்சம் துல்லியமாக மட்டுக்கட்டலாம். பிறப்பு சான்றிதழை வைத்துக்கொண்டே வங்கி கணக்கு ஆரம்பிக்கலாம். இலங்கை தொழில்நுட்பம், நிர்வாக விடயங்களில் பல முன்னேற்றங்களை கண்டுஉள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாகவே இலங்கையை மட்டம் தட்டி நினைக்கின்றார்கள். தவிர, உள்ளூர் ஆட்கள் வெளிநாட்டு ஆக்களுக்கு அதிகம் தகவல்கள் கொடுக்காத நிலையும் உள்ளது. ஏன் என்றால் இவர்கள் அவர்களை வைத்து காசும் புடுங்க வேண்டும் அல்லவா (முக்கியமாக சொந்தக்காரர்கள். நண்பர்களும் விதிவிலக்கு இல்லை).
  21. வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் வெளிநாட்டவர்களுக்கான சேமிப்பு கணக்கை இலங்கை குடியுரிமை இல்லாத ஒருவர் ஆரம்பிக்க/பேண முடியும். மக்கள் வங்கியில் செய்து தருவார்கள். ஏ ரி எம் கார்ட் மற்றும் மக்கள் வங்கி அப் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம். கணக்கை இலங்கை ரூபாயிலோ அல்லது டொலரிலோ வைக்கலாம். ஒரு ஐந்தோ பத்தோ இலட்சங்களை வைப்பிலிட்டு இலங்கை செல்லும் சமயங்களில் அல்லது ஏதாவது சில்லறை கொடுக்கல் வாங்கல்களை இந்த கணக்கின் மூலம் செய்வது உசிதமானது. மற்றும்படி பெரிய தொகைகளை வைப்பிலிட்டு பெரிய கொடுக்கல் வாங்கல்கள் செய்தால் அது நிச்சயம் வங்கியின் கண்காணிப்பிற்கு ஆளாகலாம். எனவே பெரிய அலுவல்கள் அல்லது நீண்டகால சேமிப்பு கணக்கு என்றால் வங்கி முகாமையாளருடன் உரையாடி ஆரம்பத்திலேயே சந்தேகங்களை போக்குவது நல்லது. தவிர இலங்கை அரசு நேரத்துக்கு நேரம் நடைமுறைகளை மாற்றும் என்பதும் நாம் அறியாதது அல்ல. நீண்டகால/பெரிய முதலீடு/வியாபார நோக்கு போன்றவை என்றால் வங்கியில் தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.