Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1349
  • Joined

  • Days Won

    2

Everything posted by நியாயம்

  1. 17 வயதில் படிப்பு முடியும் என்றால் நேசரி ஐந்து வயது முதலாம் வகுப்பு ஆறு வயது, ஓ.எல் பதினைந்து வயது, ஏ.எல் பதினேழு வயது? பொருளாதார நெருக்கடி காரணமாக வகுப்புகளையும், பாடங்களையும் குறைக்கின்றார்களோ? இலவச கல்வி என்றால் வளங்களை வழங்குவது ரொம்ப கஸ்டம் தான். இனி கொஞ்சம் வேளைக்கே பல பெண்கள் திருமணம் செய்வார்கள். கொஞ்சம் வேளைக்கே பிள்ளையை வீட்டில் நிப்பாட்டி வைப்பார்கள். பலர் இனி வெட்டியாக ஒரு வருடம் முன்னரே வீட்டில் நிற்கலாம். பெற்றோருக்குத்தான் தலையிடி. இலங்கையின் கல்வி தரம் வெளிநாட்டி அளவுகோலின் நிமித்தம் குறைக்கப்படலாம். ஒன்பது பாடங்களை எட்டாக குறைக்கலாம். ஏழாக குறைப்பது பல பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். ஏழு இலங்கைக்கு அதிர்ஷ்ட எண்ணோ? அது சரி.. இப்படி மாற்றங்கள் எல்லாம் செய்யப்படும் முன் பாராளுமன்றத்தில் இந்த விடயங்கள் விவாதிக்கப்பட்டு மற்றவர்கள் ஆலோசனை பெறப்படுமா அல்லது இவை ஒரு தலைப்பட்சமான முடிவுகளா?
  2. சிறீதரன் முன்பு பாடசாலை அதிபராக கிளிநொச்சியில் பணியாறினாராம். பாடசாலை அதிபர் என்றால் கிஞ்சித்தாவது இங்கிலீசு பரீட்சயம் ஆகத்தானே வேண்டும்? சிறீதரன் இந்தியாவின் பிரதிநிதியா? அப்படி என்றால் றோவின் விளையாட்டுக்களை சிறீதரன் தலைமை ஏற்றால் தாராளமாக காணலாம்?
  3. ஆர்யனுக்கும், பெற்றோர், உறவுகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஆர்யன் என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் ஒரு தமிழ் பழம். பேரனின் பெயர் சூட்டலில் உங்கள் பங்களிப்பு உள்ளதோ.
  4. பிச்சைக்கார காசு போல் உள்ளதே. தேவையில்லாத/முக்கியத்துவம் அற்ற விடயங்களுக்கு பெருமளவு செலவளிக்கின்றார்கள். ஜனாதிபதியின் முடிவுகள் அனைவரையும் பாதிக்கும்/செல்வாக்கு செலுத்தும். சரியான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு சரியான தகவல்கள், தரவுகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் கொடுப்பனவுகள் தாராளமாக கொடுக்கப்பட வேண்டும். ஆலோசகர்களால் எழுந்து, நிமிர்ந்து நடமாட முடியாவிட்டால் நாட்டு மக்கள் நடைப்பிணம் தான்.
  5. இலங்கையில் முதலாம் இடம் பெற்ற சிங்கள மாணவி, மற்றும் இரண்டாம் இடம் பெற்ற வேம்படி மகளிர் தமிழ் மாணவி இருவருமே தங்கள் இலட்சியம் மருத்துவராக வந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என கூறுகின்றார்கள். இந்த மருத்துவராக வரவேண்டும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனும் இலட்சியங்களை ஒவ்வொரு வருடமும் கேட்டு காது புளித்துவிட்டது. உலகம் எவ்வளவு மாறிவிட்டது. எத்தனை புதிய தொழில்நுட்பங்கள், வழிமுறைகள், ஒழுங்குகள் வந்துவிட்டன. எங்கள் ஆட்களுக்கு டொக்டர், என் ஜினியரை விட்டால் வேறு மார்க்கம் இல்லை.
  6. வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகள் இப்படி யோசிப்பது இல்லை. நல்லதொரு தொழில் உழைப்பு தேவை காசு பண்ணுவதற்கு.
  7. இதுகள் பெரிய பொலிஸ் பிரச்சனையாக வருமே. அதுவும் சுவிஸ் பொலிஸ் பொல்லாதது என அறிந்தேன். அந்தந்த நாட்டில் உள்ளவர்கள் சட்டத்தை தம் கையில் எடுக்காமல் தத்தம் நாட்டு ஒழுங்குகளுக்கு அமைய செயற்படுவது எல்லோருக்கும் நல்லது.
  8. யாழ் இந்து எழுபத்து நான்கு, வேம்படி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அனைத்தும் அதிவிசேட சித்தியாம். பாராட்டுக்கள் எல்லோருக்கும். என்னைய்யா எங்கட காலத்தில் ஒரு ஐந்து ஆறு பேருக்கு அல்லது ஒரு பத்து பேருக்கு இப்படி பெறுபேறு கிடைக்கும். இது என்ன ஊருக்கே இப்படி சித்திகள் கொட்டிக்கிடக்கிது? இப்போது அதி விசேட சித்தி எடுப்பது இலகோ அல்லது நவீன தொழில்நுட்ப வசதிகள் காரணமாக இலகுவாக, வினைத்திறனாக கற்கமுடிகின்றதா? அல்லது வேறு என்னதான் காரணங்கள்?
  9. இந்த காணொளியில் கூறப்படுவது என்ன?
  10. நீங்கள் இறுதியாக எப்போது இலங்கை சென்றீர்கள். ஒரு இலட்சம் பெறுமதி குறைந்து ஐம்பதாயிரம் ஆகும் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. தங்கம் விலையை கவனித்தால் இந்த விடயத்தை கொஞ்சம் துல்லியமாக மட்டுக்கட்டலாம். பிறப்பு சான்றிதழை வைத்துக்கொண்டே வங்கி கணக்கு ஆரம்பிக்கலாம். இலங்கை தொழில்நுட்பம், நிர்வாக விடயங்களில் பல முன்னேற்றங்களை கண்டுஉள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாகவே இலங்கையை மட்டம் தட்டி நினைக்கின்றார்கள். தவிர, உள்ளூர் ஆட்கள் வெளிநாட்டு ஆக்களுக்கு அதிகம் தகவல்கள் கொடுக்காத நிலையும் உள்ளது. ஏன் என்றால் இவர்கள் அவர்களை வைத்து காசும் புடுங்க வேண்டும் அல்லவா (முக்கியமாக சொந்தக்காரர்கள். நண்பர்களும் விதிவிலக்கு இல்லை).
  11. வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் வெளிநாட்டவர்களுக்கான சேமிப்பு கணக்கை இலங்கை குடியுரிமை இல்லாத ஒருவர் ஆரம்பிக்க/பேண முடியும். மக்கள் வங்கியில் செய்து தருவார்கள். ஏ ரி எம் கார்ட் மற்றும் மக்கள் வங்கி அப் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம். கணக்கை இலங்கை ரூபாயிலோ அல்லது டொலரிலோ வைக்கலாம். ஒரு ஐந்தோ பத்தோ இலட்சங்களை வைப்பிலிட்டு இலங்கை செல்லும் சமயங்களில் அல்லது ஏதாவது சில்லறை கொடுக்கல் வாங்கல்களை இந்த கணக்கின் மூலம் செய்வது உசிதமானது. மற்றும்படி பெரிய தொகைகளை வைப்பிலிட்டு பெரிய கொடுக்கல் வாங்கல்கள் செய்தால் அது நிச்சயம் வங்கியின் கண்காணிப்பிற்கு ஆளாகலாம். எனவே பெரிய அலுவல்கள் அல்லது நீண்டகால சேமிப்பு கணக்கு என்றால் வங்கி முகாமையாளருடன் உரையாடி ஆரம்பத்திலேயே சந்தேகங்களை போக்குவது நல்லது. தவிர இலங்கை அரசு நேரத்துக்கு நேரம் நடைமுறைகளை மாற்றும் என்பதும் நாம் அறியாதது அல்ல. நீண்டகால/பெரிய முதலீடு/வியாபார நோக்கு போன்றவை என்றால் வங்கியில் தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம்.
  12. இந்தியா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் வேலையை பல தசாப்தங்களாக செய்து வருகின்றது. இலங்கையை சுரண்டோ சுரண்டு என்று சுரண்டி பிச்சைக்கார நாடாக தங்களுக்கு கீழ் கட்டுப்பாட்டில் வைப்பதே இந்தியாவின் கொள்கை. இந்தியா சிதறுண்டு பிரிவினை ஏற்படும்போது இலங்கைக்கு விமோசனம் கிடைக்கலாம்?
  13. மேற்கண்ட மாவீரர் தின உரையை நானும் கேட்டேன். நீங்கள் விசயம் அறிந்தவர்கள் தான் எனக்கு அறிவூட்ட வேண்டும். நேற்று ஓர் பாடல் கேட்டேன். பாடுபவரும் ஒரு தலைவரின் புதல்விதான். இவர் ஏதாவது திட்டங்கள் முன்னெடுத்தால் பங்களிப்பது பற்றி பரிசீலிக்கலாம். https://youtu.be/r-Nw7HbaeWY?si=GJOVTNgjYzdhDaHD தலைவர் தமையன் புதல்வனின் பேட்டி அவர் கதைத்த விதம் மனதை ஈர்த்துள்ளது. எவ்வளவு பொறுப்பாக, பணிவுடன், அழகு தமிழில் பேசுகின்றார்!
  14. அந்தப்பிள்ளை வேலுப்பிள்ளை பிரபாகரனை எப்படி உச்சரிக்கின்றது என கேட்கும் முன்னரே காணொளி காணாமல் போய்விட்டதே. அந்தக்குரலை மீண்டும் கேட்க இனி ஒரு வருடம் பொறுக்க வேண்டுமா?
  15. இவர் தலைவர் தமையனது புதல்வரா? சார்ஸ் அன்ரனியின் சாயல் உள்ளது. அருமையான காணொளி. நேரக்கரம் மீடியா/சாந்தி அக்காவிற்கு நன்றி!
  16. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் பையன்! 🎂🎈
  17. தமிழ் பிரதேசங்களில்/தமிழர் செறிவாக உள்ள இடங்களில் ஏறக்குறைய எத்தனை வெற்றிடங்கள் உள்ளன? இது நல்லதொரு வேலைவாய்ப்பு. ஊருக்குள் நாட்டாண்மையாக வாழ ஒரு வாய்ப்பு.
  18. உரை கேட்க நல்லாய்த்தான் உள்ளது. சீமானின் பேச்சில் அதிக முன்னேற்றம் இப்போது உள்ளது. வள்ளலாரின் சன்மார்க்க வழியை பின்பற்றுகின்றாரோ? அவர் விபரிக்கும் கொள்கை அவரை பின்பற்றும் எத்தனை பேருக்கு விளங்கும், அதில் எத்தனைபேர் பின்பற்றுவார்கள் என்பதுதான் சந்தேகம். பொலிஸ் மாமா வர முன் வெடி கொளுத்தி இனிப்பு பரிமாறி உள்ளார்களோ. சிவாஜிலிங்கம் நோய்வாய்ப்பட்டார் முன்பு என ஒரு செய்தி வாசிச்ச ஞாபகம். இப்போது ஏன் என விளங்குகின்றது. மனுசன் கேக் வெட்ட முன்னரே புண்ணாக்கை போட்டு தாக்குது. வழமையாக கேக் வெட்டிய பின்புதானே இனிப்பு கொடுப்பார்கள்.
  19. கொஞ்சம் யோசித்து பார்த்தால் இதை நிறுத்துவதும் பிழையாக தெரியவில்லை. இலங்கையில் எல்லாமே வாங்கக்கூடியதாக உள்ளது. தவிர பொருட்களை அனுப்பினாலும் உறவினர்கள்/வேண்டப்பட்டவர்கள் முறைப்பாடு சொல்வார்கள். போதைப்பொருள் பொதிகளில் அனுப்பப்படுவதே இந்த தடைக்கான உண்மையான காரணமா என்பதை நம்பமுடியவில்லை.
  20. கோழி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனத்தை செலுத்தி ஓய்வு பெற முன் 50 செஞ்சரிகள் அடிக்க வேண்டும்.
  21. சுற்றுப்போட்டி தென் ஆபிரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இலங்கை அணி சர்வதேச/பிராந்திய போட்டிகளில் விளையாடுவதற்கு தடை இல்லை என்பது ஆறுதல் தரும் விடயம்.
  22. இலங்கையர்கள் இந்திய சினிமா, தொலைக்காட்சிகளில் வாய்ப்பு தேடி நாயாய் அலைகின்றார்கள். இது யதார்த்தம். குஷ்பு அவர்கட்கு ஏற்கனவே தொலைக்காட்சி/சினிமா பின்புலம்/பலம் உள்ளது. குஷ்பு இலங்கை வந்து நிகழ்ச்சியில் பங்குபற்றாவிட்டால் அவரது குடிமூழ்கி போகும் எனும் அளவில் பில்டப்/அலப்பறை செய்யப்படுவது காமெடி. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று உலகம் சொல்லாத ஒரு விசயத்தையா கண்டுபிடிப்பையா குஷ்பு சொன்னார்? இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தால் வேறு மாதிரியான கருத்துக்கள் வராதா பின்ன?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.