எல்லாம் கடனில் செல்வது கவலைக்குரிய விடயம். ஆனால் இலங்கை காவல்துறைக்கு அலுவல்களை செய்ய போதிய வாகன வசதி இல்லை என்பதே உண்மை.
காவல்துறைக்கு முறைப்பாடு செய்ய, அலுவலாக வருபவர்கள் தமது வாகனங்களில் ஏற்றி செல்லவேண்டிய தருணங்களும் உள்ளன. அல்லது ஆட்டோ பிடித்து பயணிக்க வேண்டிய தேவை.
குறிப்பாக நகர் புறம் தள்ளியுள்ள ஊர் வாசிகளுக்கு காவல்துறையின் ஏதாவது உதவி தேவைப்பட்டால் வாகன பிரச்சனை உள்ளது.
திருட்டு, கொலை, கொள்ளை குற்றச்செயல்கள் மட்டுமே காவல்துறையுடன் சம்மந்தப்பட்ட கடமைகள் இல்லை. ஊர்வாசிகளுக்க்கு பலவித தேவைகள் உள்ளன அரச நிர்வாக பணிகளின் நிமித்தம்.
வெளிநாடுகளில் காவல்துறை தமது பணிகளை செய்வதற்கு பலவித வசதிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இலங்கையில் அப்படி இல்லை. இதனால் பாதிப்பு சாதாரண குடிமக்களுக்கே.
காவல்துறையிடம் வாகனம் இல்லை எனும் விடயம் தெரிவதே பல குற்றச்செயல்கள் இலகுவாக நடைபெற செய்யும்.