Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1328
  • Joined

  • Days Won

    2

நியாயம் last won the day on January 7

நியாயம் had the most liked content!

Recent Profile Visitors

14637 profile views

நியாயம்'s Achievements

Mentor

Mentor (12/14)

  • Reacting Well Rare
  • Posting Machine Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Conversation Starter

Recent Badges

529

Reputation

  1. உங்கள் மீது தனிப்பட்ட கோபத்தில் சிகப்பு புள்ளி இடவில்லை. நீங்கள் இணைத்த குறிப்பிட்ட காணொளியில் தூசண வார்த்தைகள் உள்ளன.
  2. முன்பு ஒரு காலத்தில் கப்பிட்டல் பனிஸ்மண்ட்/மரண தண்டனை சட்டங்கள் கூடாது என நினைத்தேன். இதேபோல் தனிநபர்கள் சட்டபூர்வமாக ஆயுதங்கள் வைத்திருக்க தேவை இல்லை எனவும் நினைத்தேன். ஆனால், தற்போதைய உலக நடப்புக்களை பார்க்கும்போது அவை அவசியமாக தெரிகின்றன. கனடாவில் சவூதி சட்டங்களை கொண்டு வரலாமோ?
  3. வாகனம் களவு போனால் காப்புறுதி காசு தரமாட்டார்களோ? அதில் இன்னோர் புதிய வாகனத்தை வாங்குங்கோ. வீட்டில் இரண்டு கடி நாயை வளர்க்கலாம். பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருக்கலாமோ? வீட்டை உடைத்து உள்ளே வருபவர் நெற்றியில் ஒரு பொட்டு வைத்து விட்டால் சரி.
  4. இப்போது எமது காலம் மாதிரி இல்லை. தொலைக்காட்சியில் கற்கை ஊடக பிரிவுகள் உள்ளன. நன்றாக கற்பிக்கின்றார்கள். இணையம் மூலம் காணொளிகள் மூலம் கற்றக்கூடிய பல வசதிகள் உள்ளன. ஆகக்குறைந்தது வகுப்பு நேரங்களில் குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும் இந்த காணொளிகளை வகுப்பு நேரங்களில் மாணவர்கள் பார்த்து கல்வி கற்ற ஏற்பாடு செய்யலாம்.
  5. ஆயுதத்துக்கு உள்ள மரியாதை வேறு எதற்கும் இல்லை போல. தொல் பொருள் திணைக்களம் எனும் பெயரில் சனங்கள் கண்களுக்குள் விரலை விட்டு இந்த ஆட்டு ஆட்டுறாங்கள்.
  6. இவர் முன்னர் இருவர் மீது வாள்வெட்டு நடாத்தியதாக போலீசார் கூறுகின்றார்கள் என வீரகேசரி சொல்கின்றது. மேற்படி தகவல்கள் உண்மை எனில், வாள்வெட்டு நடாத்திய இவரை முன்னமே இனம் கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தார்களோ தெரியாது. அப்படி சட்ட நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த கொலை நடைபெறாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது.
  7. இனி கோயில் பக்கம் எவரும் வருவதையோ, பூசை செய்வதையோ கனவிலும் நினைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த காட்சிகள் எல்லாம் அரங்கேறுகின்றதோ என்னவோ. தொல்பொருள் திணைக்களம் தான் நினைப்பதை சாதிக்கின்றது. வேறு என்னதான் கூறுவது.. 😟
  8. மோதி நல்லவரா கெட்டவரா? நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவனா? 😁
  9. பாவம் அந்த மாணவன். ஆழ்ந்த அனுதாபங்கள். மாணவனின் வகுப்பினர், நட்பு வட்டம், பெற்றோர், பாடசாலை சமூகம், ஊரவர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஊட்டும் சம்பவம் இது. இப்போது பல்வேறு பாடசாலைகளில் தட, கள/மெய்வல்லுனர் போட்டி நடைபெறும் காலம். அதேசமயம் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெப்பநிலை/காலநிலை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகின்றது. வெளியில் செல்லும்போது தற்போதைய காலநிலைக்குரிய எடுக்கவேண்டிய பாதுகாப்பு முன் எச்சரிக்கைகள்/நடைமுறைகள் பற்றி சுகாதார/மருத்துவ பிரிவினால் விழிப்புணர்வு கொடுக்கப்படுகின்றது. பொதுவாக காலை எட்டு மணிக்கு முன்னதாக மரதன் ஓட்ட போட்டி நிறைவடையும் வகையில் பாடசாலைகள் நிகழ்ச்சியை ஒழுங்கமைக்கின்றன. அத்துடன் மாணவர் ஒருவர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். முதலில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற பாடசாலை மரதன் ஓட்டப்போட்டியை எப்படி ஒழுங்கமைத்தது என அறியப்பட வேண்டும். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்றும் வரக்கூடாது தானே.
  10. சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி @ஏராளன்
  11. தொல்பொருள் திணைக்களம் மண்ணை தோண்டுகின்றோம் என்று பிரச்சனைகளை தோண்டுகின்றது. இலங்கை தொல்பொருள் திணைக்களத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இனங்களுக்கு இடையில் உள்ள நல்லிணக்கத்தை ஓரளவுக்காவது பேணலாமோ? போலிசார் வெளிவிட்ட அறிக்கையின் பிரகாரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவரே கிடுங்குப்பிடியாக நின்று சிவராத்திரி நிகழ்வு குழப்பம் அடைவதற்கு காரணகர்த்தா என தோன்றுகின்றது.
  12. இந்த இடத்தில் ஏற்கனவே விகாரை உள்ளதோ அல்லது விகாரை கட்டப்படுவதற்கான முஸ்தீபு நடக்கின்றதோ. அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போலத்தான் இதுவும் செல்லுமோ? இப்போது தாயகம் பற்றி கருத்துக்கள் கூறவே தயக்கமாக உள்ளது. ஒவ்வொரு செய்திகள், நடவடிக்கைகள் பின்னாலும் பின்னினாற் போல பல சூக்குமங்கள். வேடன் விரித்த வலையில் அகப்படுவது போன்றதுதான் சமூக ஊடகங்களில் எமது அபிப்பிராயங்களை தெரிவிப்பது என்பதுபோலாகிவிட்டது.
  13. என்ன கொடுமை ஐயா. தமிழ்வின்னில் காணொளி பார்த்தேன். இலங்கையின் போலிஸ் மட்டமான வேலைகள் செய்வதை பதிவு செய்து உள்ளார்கள். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என குரல்கள் ஒலிக்கும்போது சமய வழிபாட்டில் ஈடுபடுவர்களை அடாவடியாக வெளியேற்றுகின்றார்கள். இப்படியான செயல்கள் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துமா? பார்ப்பவர்களுக்கு போலிசாரின் செயல் ஆத்திரத்தையே ஏற்படுத்தும். புத்தபிக்குகள் சமய அனுட்டானங்களில் ஈடுபடும்போது இப்படி யாராவது செய்தால் பார்த்துக்கொண்டு இருப்பார்களா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.