Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  148
 • Joined

 • Last visited

Everything posted by நியாயத்தை கதைப்போம்

 1. சோசல் மீடியாவுக்கு பிரச்சனைகளை கொண்டு வருவது தீர்வுக்கு பதிலாக மேலதிக பிரச்சனைகளை சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தலாம். இப்போது எல்லார் கையிலும் ஸ்மார்ட் போன். வட்ஸாப் தொடக்கம் பேஸ்புக், யூரியூப் வரை குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இளையவர்கள் குறுக்கு வழிமுறைகளை தேடினாலும் பெரியவர்கள் தீக்குச்சி போல் அல்லாமல் கொஞ்சம் நிதானம் கடைப்பிடிக்கலாம். அண்மையில் பிரான்சில் ஆசிரியர் ஒருவரின் படுகொலையும் சோசல் மீடியாவின் தவறான பாவனையை காண்பிக்கின்றது. மீடியா என்பது தீயை கொளுத்தி போடும் இடம் அல்ல.
 2. வைத்திய நிபுணருக்கு பாராட்டுக்கள். நான் அறிந்தேன் இப்போது யாழ் போதனா வைத்தியசாலையே நவீன மருததுவ வசதிகள், பொறிமுறைகளுடன் வெளிநாட்டு வைத்தியசாலைகள் போல் முன்னேறிவிட்டது என்று.
 3. இலவச கல்வியை உதாசீனம் செய்து மற்றைய மாணவர்களின் கற்றலுக்கும் இடையூறு விளைவிப்பவர்களுக்கு துணைவேந்தர் தனது கையால் அவர்கள் செவிட்டை பொத்தி இரண்டு கொடுத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.
 4. கட்டுரையாளர் சமகால சமூகவெளியை முழுமையாக இன்னும் மேயவில்லை போல் தெரிகின்றது. பெண்கள் செய்யும் அட்டகாசத்தில் எத்தனை ஆண்கள் தற்கொலை செய்கின்றார்கள், மன உளைச்சலில் தவிக்கின்றார்கள், வாழ்க்க்கையை தொலைத்துவிட்டு மெண்டலாக சுத்தி திரிகின்றார்கள் என்று சோசல் மீடியாவுக்கு சற்று வெளியில் வந்து எட்டிப்பார்த்தால் தெரியும்.
 5. இலங்கை அகில இலங்கை கம்பன் விழாவை கவிஞரின் கவிதைகள் பல அலங்கரித்தன. சிறந்த ஒரு கவிஞர்.
 6. இலவச கல்வி என்பதால் மாணவர்களுக்கு சிலவற்றின் பெறுமதி உணரமுடியாது போகலாம். பகிடிவதை செய்யும் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவர்களுக்கு செலவளிக்கும் காசை பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போன waiting list மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கு செலவளிக்கலாம்.
 7. கோப்பாய் போலீசார் அங்குள்ள வாள்வெட்டு, திருட்டு கும்பல்களை கண்டுபிடித்து கைதுசெய்தால் பாராட்டலாம்.
 8. மிகவும் துயரமான செய்தி. எம்மை அதிகம் சிரிக்கவைப்பவர். அது இது எது தொடரில் சிரிச்சா போச்சு பகுதி இவருக்காகவே பார்க்கலாம். மிக சிறந்த நகைச்சுவை கலைஞர். ஆழ்ந்த அனுதாபங்கள்!
 9. இவருக்கு வாக்கு அளித்து வெற்றியீட்ட வைத்த இரத்தினபுரி பிரதேசத்து மக்கள் இவரைவிட வேறு ஒரு யோக்கியனை இனம்காணவில்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாது. அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் இவர் வெற்றி பெற்றால் ஒரு சாதனைதான்.
 10. மரண தண்டனை கைதி தேர்தலில் போட்டியிடலாம் என்றால் பிறகு ஏன் பாராளுமன்றம் செல்லமுடியாது என்று தடை தேவை? குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது என்று எதுவித விதிமுறைகளும் தேவை இல்லை போல
 11. நல்ல விடயம். இந்தியா வீடு கட்டி கொடுக்கின்றது என்று காலத்துக்கு காலம் சொல்லி ஆசை காட்டினார்கள். வெளிநாட்டு உதவி இல்லாமல் அல்லது நல்ல வரும்படி இல்லாமல் சாதாரண நிலை குடும்பங்கள் வீடு கட்டுவது பெரும்பாடு. அனைத்தையும் அடகு வைத்தும், கடன்வாங்கியும் வீடு கட்ட தொடங்கி கடைசியில் வட்டியும் கட்டமுடியாமல் நாளாந்த வாழ்க்கையையும் ஓட்ட முடியாமல் அல்லலுறும் குடும்பங்கள் பல. அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட பெரிய திட்டங்களை அரசு பாகுபாடின்றி செயல்படுத்துமா பார்ப்போம்.
 12. எமது இழப்புக்குரிய உறவின் விருப்பங்களை முன்கூட்டியே அறிந்து அதன் பிரகாரம் நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் நிறுத்தி இறுதி நிகழ்வை செய்வது சிறப்பானது. முன்கூட்டிய விருப்பம் அறிதல் சாத்தியம் இல்லை என்றால் மிகவும் நெருங்கிய உறவு அல்லது உறவுகளின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுத்து (எதிர்காலத்தில் சட்டசிக்கல்களும் வராத வகையில்) இறுதி நிகழ்வை செய்யலாம். சாத்திரம், சம்பிரதாயம், இதர ஒழுங்குகள் எல்லாம் இதன் பின்னால் வரட்டும். மற்றும்படி எப்படி செய்யலாம் என்று கேட்டால் ஆளாளுக்கு தங்கள் நம்பிக்கைகள், சுய விருப்பங்கள், தேவைகள், திருப்தியின் அடிப்படையில் ஆயிரத்து எட்டு வழிவகைகள் கூ
 13. நல்ல விடயம். எங்கோ உள்ள கமலா ஹரிஸ் அக்கா என்று சொந்தம் கொண்டாடி அருகில் உள்ள எமது உறவை கேவலப்படுத்தும் ஊடக வியாபாரிகள் திருந்துவார்களா?
 14. எல்லாருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் மக்கள் தெரிவு செய்து பாராளுமன்றம் வரை அனுப்பப்பட்டவர் என்றவகையில் விரைவில் விடுதலையாவார்?
 15. இரவு பதினோரு மணிக்கு கட்டட வேலையில் ஈடுபடலாமா? உள்ளூர் ஆள் கிடைக்கவில்லை போல வேலைக்கு.
 16. மக்களுக்கு நல்லது நடந்தால் சரி. இப்போதே நான்கு பக்கமும் கமெராவும் பூட்டிவிட்டால் நல்லது.
 17. நேற்று சிலை விழுத்தப்படும் காணொலி பார்த்தேன். ரவுடீசம் மூலம் எதை சாதிக்கப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.