Jump to content

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  300
 • Joined

 • Last visited

Everything posted by நியாயத்தை கதைப்போம்

 1. கட்டாயம் தீர்த்து வைப்பார். அதற்குமுன் சீனா இந்தியாவின் தென்கோடியில் காலடிவைத்துவிடும்.
 2. வடகம் செய்வது பற்றி நல்லதொரு விபரண காணொலி; உங்கள் சமையல் கற்பித்தல் தொடரட்டும். நன்றி!
 3. பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்துவதில் வல்லதாம். இதனால்தான் அடுப்பில் சமையல், கையில் போன் சோசல்மீடியா, அருகில் தொலைக்காட்சி, பிள்ளைகளுக்கு அதட்டல் என ஒரே நேரத்தில் பல விசயங்களை ஓடக்கூடியதாய் உள்ளன குடும்ப பெண்களுக்கு. ஆண்கள் மூளை இப்படி மல்ரி டாஸ்கிங்கில் ஈடுகொடுக்க மாட்டாதாம் பெண்கள் மூளை போல்.
 4. சிந்தனையை தூண்டும் அருமையான ஒரு வீடியோ இது. இதை பார்த்தபிறகு இப்படியான பல வீடியோக்களை யூரியூப்பில் தேடல் செய்து அண்மையில் பார்த்தேன். உண்மையில் எமது எண்ணங்கள், சிந்தனையோட்டம், எமது செயற்பாடுகள் - எமது உளவியல் என்பதை ஒப்பிட்டு உற்றுநோக்கினால் நாய்கள் தளவாடியில் தென்படும் தமது பிம்பத்தை கண்ணுற்று எப்படியான பிரமை கொள்கின்றன என்பதற்கும் எங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அதிக வேறுபாடுகள் இல்லை. சற்று ஆழமாக தியானித்து இந்த தளவாடி விம்பத்தையும் எங்கள் மன பிம்பத்தையும் ஒப்பீடு செய்து சிந்தியுங்கள். பல இரகசியங்கள் புதைந்துள்ளன. பகிர்வுக்கு நன்றி நாதமுனி.
 5. விசுகு கூறுவதில் ஒரு நியாயம் உள்ளது. கிருபனாகட்டும் அல்லது இணைப்புக்களை வழங்கும் இதர உறுப்பினர்களாகட்டும் மூலத்தில் உள்ளவற்றில் மாற்றம் செய்வது தவறு. இது ஒருவிதமான கருத்து திணிப்பே. தாம் பார்த்தவற்றை இங்கு பகிர்வதற்கு இணைப்புக்களை வழங்குபவர்களின் சேவையை மெய்ச்ச வேண்டும் . அதேசமயம், இணைப்பு பற்றிய தமது கருத்தை மூலத்தை திரிவுபடுத்தாமல் பிரத்தியேகமாக வழங்குவது சிறப்பு. அல்லது இவை தவறான முன்னுதாரணமாக அமையும். தேவை என்றால் கட்டுரை ஆசிரியரே முக்கியமான விடயங்களை கோடிட்டு காட்டியோ அல்லது நிறவேறுபாடுகள் மூலமோ செய்யலாம். அதுவல்லாமல் அதை பிரதி செய்பவர்கள் உள்ளடக்கத்தின் வெளிப்படுத்தலில் மாற்றம்
 6. மேக்கூரி உணவு சங்கிலியில் செறிவு அடைந்து அதன் உச்சத்தில் உள்ள மீன்கள் உண்ணும் மனிதனை பாதிக்கின்றது ஒரு பிரச்சனை. இங்கு சீ.றீ.பீ பேருந்து, மற்றும் புகையிரத பெட்டிகளில் உள்ள உலோகங்கள், இரசாயனங்கள் மீன்கள், கடல் வாழ் உயிரிகள் மூலம் உணவுச்சங்கிலியினுள் உள் வாங்கப்பட்டு கடைசியில் மனிதனை சென்றடையுமா என்பதுதான் எனது இப்போதைய வினா. இந்த பிரச்சனை பற்றி ஏற்கனவே சிந்தித்து அதன் பாதிப்புக்கள் புறக்கணிக்கப்பட கூடியது என்று நினைத்து முடிவு எடுத்தார்களோ என்னமோ... கடலுக்குள் இறக்கப்படும் பேருந்துகளின், புகையிரத வண்டிகள் அமைவிடங்களை ஜீ.பி.எஸ் டாக்ஸ் மூலம் இணைக்கப்பட/ குறிக்கப்படவேண்டியது அவசியம
 7. வேறு நாடுகளில் இப்படி செய்கின்றார்களா? சூழலியல் நிபுணர்கள்தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். நம்ம ஐங்கரநேசன் ஐயா இதுபற்றி என்ன கூறுகின்றார்?
 8. மக்கள் பாடு பெரும் சோதனைதான். சிங்கள மக்களை கவனிக்க அரசாங்கம் உள்ளது. தமிழ் மக்கள் பாடு.. திண்டாட்டம். போர் ஓய்ந்த பின்னர் இன்னோர் அவலம்.
 9. எனக்கு தமிழ் மக்களின் துரோகியை பற்றி எழுத பல பக்கங்கள், திரிகள் தேவை இல்லை. இந்த ஒரு பதிவே போதும். இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகியாக விளங்குவது ஒரே ஒரு ஆள்தான். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி.. சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சனைகளை வளர்த்து, அந்த சூட்டில் குளிர் காய்ந்து... பன்னெடுங்காலமாக அயோக்கியத்தனங்கள் செய்யும் இந்தியாவே தமிழ் மக்களினது துரோகி. இலங்கையில் சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பிரச்சனைகள் காலம் காலமாக தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் அடிப்படை சித்தாந்தம். தனது அண்டை நாடு இலங்கை தன்னை விட எந்த விதத்திலும், வகையில
 10. ஆமாம்.. இலங்கை அரசிடம் வாங்கும் காசுக்கு விசுவாசமாக வேலை செய்யத்தானே வேணும்.. பிரிதோர் தடவை.. சந்தர்ப்பம் ஏற்பட்டால்.. இதுபற்றி கருத்துக்கள் பகிரலாம். பாடல்:
 11. அப்படியே.. ஒரு நம்பிக்கை இல்லா பேரணை கொண்டு வந்து மகிந்தா குடும்ப அரசை கலைத்துவிடுங்கள் பார்க்கலாம். ஒரு வாழ்நாள் சாதனையாக இது பார்க்கப்படும்.
 12. கவிஞர் புதுவை இரத்தினதுரை பாடிய பால் மணம் மாறாத பிஞ்சுகள், பிரபாகரன் வளர்க்கின்ற குஞ்சுகள்.. படத்தில்.
 13. மீன்கள் நிறைந்துள்ள மூன்றாவது படத்தை Reverse Image Search செய்து பார்த்தேன். இந்தப்படம் 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முதலாக இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 14. வேற லெவல் செயற்பாடு இது. இலங்கை நாடு நல்லாய் உருப்படும்.
 15. ரஞ்சித்தின் இடுகைகள் யாழ் கருத்துக்களத்தின் விதிமுறைகளுக்கு முரணானது. யாழ் நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. நாளை சட்ட ரீதியாக ஏதும் சிக்கல் வராது எனும் துணிவில் தனக்கு பிடித்தமான வகையில் விபரணம் செய்கின்றார். எமது சக உறவு எனும் அடிப்படையில், அது யார் என்றாலும் மனச்சுமைகள் இறங்குவதற்கு, மன ஆற்றுப்படுத்தலுக்கு துணை நிற்கலாம். மற்றும்படி, இலங்கையில் பிறந்து, கல்விகற்று, அகதிகளாக அலைந்து, எல்லா தரப்பினதும் அராஜகங்களை எதிர்கொண்ட சாதாரண மக்களால் யார் யார் என்னென்ன துரோகங்கள் இழைத்தார்கள் என்பதை இலகுவில் மறக்க முடியாது.
 16. தனியொருவன், உங்கள் கருத்துக்கள் யதார்த்தமானவை. ஆனால், எங்களுக்கு எங்கள் மன அழுத்தங்களை குறைக்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் அமையவில்லை. இதனால், உங்கள் கருத்துக்களுக்கு பச்சை குத்தி அழகுபடுத்த முடியவில்லை. பெயருக்கு ஏற்றபடி தனியொருவனாக கருத்துக்களை இடுகை செய்வதற்கு பாராட்டுக்கள்.
 17. நீங்கள் கூறுவது அளவில் மிகவும் சிறியது. 50 சதத்துக்கு வாங்குவது அளவில் பெரிது. புளூட்டோ தவிர.. கச்சான் அல்வா, கோக்கனட் ரொபி, மாஸ்மலோ, ஜுஜூபி, கறுவா, பினாட்டு, பெப்பமின்ட், சுவிங்கம், மோல்டீஸ் இப்படி பல...
 18. நான் அதிகம் சாபிட்ட ரொபி புளூட்டோ. வெள்ளை ரிசு பேப்பரில் சுத்தப்பட்ட மண்ணிறமான கிட்டத்தட்ட ஒரு இஞ்சி நீளமான இனிப்பு. ஒன்று ஐம்பது சதம். கடைகளை பொறுத்து தரம், நிறம்- மென்னிறம், கருநிறம், சுவை எல்லாம் வேறுபடும். இரண்டு ரூபாய்க்கு நாலு புளூட்டோ ரொபி வாங்கினால் ஒரு நாளைக்கு போதும். வாயில் ஒன்றை போட்டு அரை மணித்தியாலம்கூட மினக்கடலாம். ரியூசன் போகும் போதும், வரும்போதும் புளூட்டோ வாங்குவது வழமை.
 19. பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நன்கொடை தரும் பெருந்தகைகளின் நாமங்களை நாங்கள் கல்லில் பொறித்து விமானநிலையத்தில் விளம்பரப்படுத்துவோம் எனக்கேட்டு வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் உண்டியல் குலுக்கி பார்க்கலாம். நல்ல வசூல் சேரும்.
 20. எல்லாம் ஆடி அடங்கும் வயதில் முதியவர்கள் உரையாடல் செய்வதற்கு நல்லதொரு ஆய்வு.
 21. ஒருவர் பொழுதுபோக்குக்காக எழுதுகின்றார். ஒருவர் பெருமை, புகழுக்காக எழுதுகின்றார், ஒருவர் பிரச்சாரத்துக்காக எழுதுகின்றார், ஒருவர் எழுதுவதை தொழிலாக செய்கின்றார். எல்லாரும் ஒரு காரணத்துக்காக எழுதுகின்றர்கள். ஒரு ஊடக சாதனத்தை இன்னொன்றுடன் ஒப்பிடுவதும் கடினம். நேரம், வசதி, வாய்ப்பு எல்லாம் கிடைத்தால் எல்லாரும் நவீன இலக்கியத்தில் மினக்கடலாம். எழுதலாம் வாசிக்கலாம். இந்த நவீன உலகில் மக்களை படைப்புக்கள் சென்றடைவதில் சினிமாவுக்குள்ள வீரியம் அபரிமிதமானது. ஒரு சிறியகூட்டம் தாங்கள் கல்விமான்கள், அதிகம் படித்தவர்கள், தமக்கு தெரிந்ததே இலக்கியம், தாம் கூறுவதே இலக்கியம் என்று நிறுவிக்கொண்டு போவார்கள
 22. மொத்த தமிழ் பேசும் சனத்தொகையில் இலக்கியம் அறிந்த வாசகர்கள், பொதுவாசகர்கள் பரம்பல் பற்றி முதலில் கூறுங்கள். அதன் சதவிகிதம் என்ன? எழுந்தமானமாக தமிழ் பேசும் நூறு பேரை அண்மித்து அவர்களிடம் நீங்கள் குறிப்பிடும் நபர் பெயரையும், வைரமுத்து பெயரையும் குறிப்பிட்டு இருவரையும் யார் என கூறுமாறு கேட்டால்.. பெரும்பாலானோர் எவரை அடையாளம் காட்டுவார்கள்? வைரமுத்துவின் வரிகள் தமிழ் அதிகம் எழுத, வாசிக்க தெரியாத புதிய தலைமுறை குழந்தைகளுக்குகூட பரீட்சயமானவை. நீங்கள் குறிப்பிடும் இலக்கிய கர்த்தாக்களின் படைப்புக்கள் எத்தனைபேருக்கு பரீட்சயம்? சாதாரண பொது சனத்தை சேரமுடியாத படைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட வர்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.