Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  419
 • Joined

 • Last visited

Everything posted by நியாயத்தை கதைப்போம்

 1. பூவரசு வலைப்பூ கிருபனுடையதோ? இலங்கை அரசு தனியார் விற்பனைக்கு விடவுள்ளதென கூறப்படும் மேற்கண்ட விடயங்கள் பெறப்பட்ட மூலம் எது?
 2. விவசாயம் நிலமை கவலைக்கிடம். விவசாயிகள் பலரும் பயிர்களை வளர்க்கவும், பாதுகாக்கவும், லாபம் அடையவும் என்ன எல்லாம் செய்கின்றார்கள் என அறிந்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் மரக்கறி, தானியங்கள், உணவு பொருட்களை வாங்கவே மனம் வராது.
 3. இறந்தவர் மனைவியின் இன்னொரு வருடனான கள்ளத்தொடர்பே கொலைக்கு காரணம் என ஐபிசி சொல்லியுள்ளது. நீங்கள் ஒருவரும் தேவை இல்லாமல் பயம் கொள்ள வேண்டாம்.
 4. வணக்கம் ம.தி. சுதா, உங்கள் திரைப்பட தயாரிப்பு திட்டத்திற்கு எமது உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் ஊடகங்கள் எப்படியான ஆதரவை இதுவரை தந்துள்ளன? அண்மைக்காலமாக யூரியூப் தளத்தில் மிகவும் தரமான பல்வேறு நகைச்சுவை மற்றும் பொதுவிடயங்கள் பற்றிய வீடியோக்களை இலங்கையில் உள்ளவர்கள் தயாரித்து வெளியீடு செய்கின்றார்கள். சிமார்ட் போன் வருகை உள்ளூர் மக்களின் திறமைகளை வெளியில் கொண்டு செல்வதற்கு நல்லதோர் தளத்தை கொடுத்து உள்ளது. இவர்களுக்கு நாம் ஆதரவு கொடுத்தாலே பல முன்னேற்றங்களை காணமுடியும் என நான் நினைக்கின்றேன். இருபத்து நான்கு சொச்சம் உங்களைப்போன்ற பல சினிமா தயாரிப்பு கலைஞர்கள் உள்ளார்கள் என தெரிவித்தீர்கள். எல்லாரையும் இணைத்து ஏதாவது அமைப்பு உள்ளதா? இது அனைவரினதும் பொதுவான நலன்களை கவனிக்கவும், தயாரிப்பு, வெளியீடுகளை இலகுபடுத்தவும் எதிர்காலத்தில் உதவலாம்.
 5. யாழ் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில்தானே உள்ளது? பட்டமளிப்பு விழாவை எங்கு நடத்தப்போகின்றீர்கள்?
 6. கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விருப்பு புள்ளிகள் இடுபவர் விபரத்தை காணலாம் என்றால் கருத்துக்களையும் கருத்துக்கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கலாம் என்று கொண்டுவரலாமே? ஏன் பொதுவெளியில் கருத்துக்கள் காண்பிக்கப்படுகின்றன? இதை ஒரு மூடிய களமாக கொண்டுவரலாமே? கருத்துக்களுக்கு பொறுப்பு கருத்து சொல்பவர்களே ஒழிய யாழ் இணையம் அதற்கு பொறுப்பு எடுக்காது என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையை மீறும் கருத்தை எழுதிய உறுப்பினருக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கும்போது விதிமுறையை மீறும் கருத்துக்கு விருப்பு புள்ளி இடுகின்ற உறுப்பினருக்கும் எச்சரிக்கை புள்ளி வழங்கலாமே? விருப்புப்புள்ளிகள் கருத்துக்கள உறவுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் என்றால் அதை கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கும்படி செய்துவிடுங்கள். அதை ஏன் பொதுவெளியில் அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்?
 7. விருப்பு புள்ளிகளை யார் யாருக்கு வழங்குகின்றார்கள் என்பதை எல்லோரும் பார்க்கக்கூடிய மாதிரி காண்பிக்கலாம். இப்போது வெளியில் நின்று பார்க்க அவை தென்படவில்லை. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போது உள்ள கருத்துக்கள பார்வையாளர்கள் நடைமுறை விருப்பு புள்ளிகளுக்கு அப்பாலும் பொருத்தமான செயற்பாடாகவே தோன்றுகின்றது.
 8. பூச்சு வர்ணம் அழகாகதான் உள்ளது. பூச்சுக்கு Googleம் சொந்தம் கொண்டாடலாம்? பிள்ளையார் கோயில் LGBT friendly என்றும் எடுத்து கொள்ளலாம்?
 9. மிகவும் துயரமான செய்தி, ஆழ்ந்த அனுதாபங்கள். பிள்ளைகளை போட்டி பரீட்சைக்கு தயார்படுத்தி பல்கலைக்கழகத்துக்கு அனுப்பும் எங்கள் கல்விமுறை மனித வாழ்வின் அடிப்படை விடயங்கள் மற்றும் இயற்கையின் நியதிகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும் சிறிதளவு மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் இப்படியான இழப்புக்கள் ஏற்படாது.
 10. மனித குலத்தின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு உழைத்த எத்தனையோ பெரியவர்கள் திருமணமே செய்யவில்லை, குழந்தைகளும் இல்லை. உலக சனத்தொகை பெருக்கம் பூமியை அழிவு பாதையில் கொண்டு செல்கின்றது.
 11. யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நியமனத்தை அங்கீகரிக்காமைக்கு காரணம் யாதோ? தனிப்பட்ட செல்வாக்கை பாவித்து தமக்கு விருப்பமான இடத்தில் சேவை செய்ய அரச ஊழியர்கள் விரும்புவது வழமை. இதற்கு வைத்தியர்களும் விதி விலக்கு இல்லை. பலர் அரச வைத்தியசாலைக்கு என நியமனம் பெற்றுவிட்டு பின்னர் அரைவாசி நேரம் தமது தனிப்பட்ட மருத்துவ சேவையில் கவனம் செலுத்துவதும் வழமை. அரச நியமனம் தனியார் சேவையை விஸ்தாரணம் செய்யவும் பயன்படும். பெரும் பணத்தை தனியார் சேவையிலேயே சம்பாதிக்கின்றார்கள். பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை தனிப்பட்ட சேவை கோடிக்கணக்கான பணத்தை வசூலிக்க வல்லது. அதுவும், யாழ்பாணத்தில் என்றால் சொல்லவா வேண்டும். இந்த நியமன இழுபறிகள் பின்னால் உள்ள சூக்குமத்தை, குத்துபாடுகள், அரசியலை சாதாரண மக்கள் அறிய முடியுமா?
 12. ஆழ்ந்த அனுதாபங்கள். கொத்தமல்லியின் மகிமையை கூறும் நகைச்சுவையான பாடலை சிங்களத்திலும், தமிழிலும் பாடியுள்ளார். குடிப்போம் கொத்தமல்லி எதுக்கு விஸ்கி பிராண்டி.
 13. கனம் யாழ் நிர்வாகத்தினருக்கு, எனது பட்டியலில் உள்ள Ignored Users கருத்துக்கள் திண்ணையில் காண்பிக்கப்படுவதை தவிர்க்க வழி உள்ளதா? நன்றி.
 14. படத்தை ஐபோனில் எடுப்பதாய் ஏதோ செய்தி பார்த்தேன். மொபைல் படத்தை தென்னிந்திய திரை அரங்கில் காண்பிக்கவோ அல்லது சந்தைப்படுத்தவோ முடியுமா? உண்மையில் இவருக்கு இதே பெயரில் தமிழ் சினிமா படம் வருவது தனது வெளியீட்டை பிரபலப்படுத்த நல்லதொரு வாய்ப்பு. வெந்து தணிந்தது காடு என பலரும் யூரியூப், கூகிழில் தேடல் செய்யும்போது மதிசுதாவின் படைப்பும் வெளிக்காட்டப்படவும், சிறிய துண்டு பட்ஜெட் மெகா பட்ஜெட் திரைப்படம் ஆகியவற்றுக்கான பாரிய இடைவெளியை, அவற்றின் தரத்தை, கூறப்படும் செய்தியை, வேறுபாட்டை ரசிகர் பார்க்கவும் வாய்ப்பு ஏற்படும். நான் மதிசுதா நிலையில் நின்றால், சட்ட சிக்கல் ஏற்படாத பட்சத்தில் வெந்து தணிந்தது காடு எனும் அதே திரை தலைப்பிலேயே படத்தை வெளியீடு செய்வேன். ஒரே தலைப்பில் வெவ்வேறு விடயங்கள் வருவது எல்லாம் புதிது இல்லை. பல தமிழ் சினிமா படங்களின் தலைப்புக்களில் பல குறும்படங்கள், சின்னத்திரை சீரியல்கள் எல்லாம் உள்ளன.
 15. டாக்டர் தம்பியின் சுளகு மான்மியம் மிகவும் சிறப்பாக உள்ளது. இவர் டாக்டர் முருகானந்தத்தை நினைவுபடுத்துகின்றார். சுளகின் பயன்பாடுகள் எமக்கு பல. அடுப்பில் தீயை வரவைக்க சுளகால் விசுக்குவோம். இளையான், கொசு, நுளம்பை சுளகால் விசுக்கி விரட்டுவோம். வடகம், தானியங்கள் பரவி காயப்போடுவதற்கு சுளகு பாவிப்போம். கோதுமை மாவினுள் உள்ள கறுப்பு வண்டை பொறுக்கி அப்புறப்படுத்துவதற்கு சுளகு உதவியது. சுளகை பாவித்து புட்டு கொத்துவார்கள். சமையலில் பல்வேறு கட்டங்களில் ஒரு பாத்திரம் போல சுளகு பயன்படுத்தப்படும். சுளகின் பெருமை அறிந்தபடியால் எங்கள் நடன ஆசிரியைகள் சிறுமியரை சுளகு நடனம் ஆட வைத்தார்கள். தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம் இது பழமொழி.
 16. உண்மைதான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கனடா அகதிகள் விவகாரம், மற்றும் பல்லின மக்களின் அரசியல் பங்களிப்பு பற்றி வேறோர் உரையாடலில் வறுத்து எடுக்கலாம்.
 17. அகதி கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார் என செய்தியில் உள்ளது. அவர் தன்னை நியூசிலாந்து அரசுக்கு எப்படி அறிமுகம் செய்தார் என்று யாருக்கு தெரியும்? நீதிமன்ற தடை நீக்கப்பட்டு அவர் விபரம் பகிரங்கப்படுத்தப்பட்டால் உண்மை அறியவரும். அப்படித்தான் நானும் நம்பிக்கொண்டு உள்ளேன்.
 18. மேலைத்தேய நாடுகள் போல் பெருன்ப்பான்மையோருக்கு வேகப்படுத்தி தடுப்பூசி வழங்கிவிட்டு தடைகளை எடுத்துவிட வேண்டியதுதான். ஊசிக்கும் மேல் நின்றுபிடிக்காவிட்டால் அவரவர் கடவுள் காப்பாற்றட்டும். பல்வேறு பின்விளைவுகள் வருகின்றன என்று மக்களிடையே தடுப்பூசி பற்றி பீதி நிலவுகின்றது. இதனால், ஒவ்வொரு வகை தடுப்பூசி பற்றிய அறிவூட்டலை மக்களுக்கு வழங்கவேண்டியது சுகாதார துறை, மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிர்வாகத்தின் கடமை. ஒவ்வொரு பிரதேசத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், இதர மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் தத்தம் பிரதேசத்து மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கலாம். தத்தம் பிரதேசத்து மக்கள் தடுப்பூசி பெறும் வீதத்தை அதிகரிப்பது இவர்கள் கடமை. சமூக வலைத்தளத்தின் அதி உச்ச பயன்பாட்டை தடுப்பூசி பற்றிய அறிவூட்டலுக்கு பயன்படுத்தலாம். மற்றும், வழமையான ஊடகங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், மற்றும் விளம்பர பதாதைகளின் அதி உச்ச பயன்பாடு பெறப்படுகின்றதா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் கவனிக்கவேண்டும். தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் விடயத்தில் மக்களின் பூரண ஒத்துழைப்பு இல்லாமல், கிடைக்காமல் நாட்டில் இயல்பு நிலையை வழமைக்கு கொண்டுவரமுடியாது.
 19. இலங்கையில் வாழ்ந்தவர்களுக்கு, வாழ்பவர்களுக்கு தெரியும் சிங்கள மொழி தெரிந்தால் வேலைகளை எவ்வளவு இலகுவாக செய்யலாம் என்று அந்த மொழி தெரியாமல் இருப்பதை விட. அதேசமயம், சிங்கள மொழி தெரியாவிட்டால் எத்தனை பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் என்பதும் தெரியும். அரசாங்கம் நியாமாக செயற்படுகின்றதா, படைகள் நியாயமாக செயற்படுகின்றனவா என்பது வேறு பிரச்சனை. ஆனால், ஒரு பொதுமகன் தமிழ் மட்டுமே தெரிந்தவர் சிங்களம் தெரியாதவர் என்றால் சிங்கள மொழியை கற்றுக்கொண்டால் இலங்கையில் வாழும் வரை அவருக்கு பல நன்மைகள் உள்ளன. இல்லை இல்லை சிங்களம் கற்கக்கூடாது என்ன நடந்தாலும் தமிழிலேயே உரையாடுவோம் என நீங்கள் விடாப்பிடியாய் நின்றால், உங்கள் மீது பரிதாபப்படவே முடியும். இதற்கு மேல் முட்டையில் மயிரை புடுங்குபவர்கள் தொடர்ந்து புடுங்கலாம். வணக்கம்!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.