Jump to content

நியாயத்தை கதைப்போம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  171
 • Joined

 • Last visited

Posts posted by நியாயத்தை கதைப்போம்

 1. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  இதன் காணொலி கிடைத்தால் யாராவது இணையுங்கள் பார்ப்போம்.

  யாழ்  பல்கலைக்கழகம் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு இணையாகவும், சர்வதேசமட்டத்தில் முகம் கொடுக்கும் வகையிலும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கட்டும்.

  ஒரு காலத்தில் யாழ் பல்கலை மாணவர்  சோதிலிங்கம் குறுந்தூர வேக ஓட்டத்தில் முன்னணி வகுத்தார்.

  • Like 2
 2. Duolingo எனும் செயலியை பாவித்து கைத்தொலைபேசியில் பிரென்ச் உட்பட  எனக்கு விருப்பமான சில வேற்று மொழிகளை கற்கின்றேன். நல்ல சுவாரசியமாய் உள்ளது கற்பதற்கு.

  • Like 1
 3. ஜனாதிபதி யார் என தெரிவு செய்வது அமெரிக்க குடிமக்களின் தீர்ப்பு. இலங்கையின் பெரும்பான்மை மக்கள்  ராஜபக்சேக்களை தெரிவு செய்வது போல் அமெரிக்காவில் ட்ரம்ப் தெரிவு ஆகினால் நன்மையோ தீமையோ வெளியார் என்ன செய்வது?

  எமக்கு ட்ரம்பை பிடிக்க இல்லை என்பதற்காக ஜனநாயகத்துக்கு விரோதமாக அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்க தேவை இல்லையே. இந்த விடயத்தில் உச்ச நீதிமன்றம் கூறும் தீர்ப்பை ஏற்கவேவேண்டும். நம்பிக்கைத்தன்மை சீர்குலைந்துவிட்டால் அது எதிர்காலத்திற்கு பிழையான வழிகாட்டுதல் ஆகிவிடும். 

  கடந்த தடவையும் அமெரிக்க குடிமக்கள்தானே அத்தனை மில்லியன் வாக்குளை டிரம்புக்கு அளித்தார்கள். அங்குள்ள மக்களின் மனநிலைக்கு ஏற்றவகையில் ஒருவர் தெரிவாகின்றார். இதற்கான பயன்களை அவர்கள் அனுபவிக்கின்றார்கள்.

  • Like 1
 4. கொலைகள், சித்திரவதைகள், மனித அவலங்களை யார் செய்தாலும், ஏற்படுத்தினாலும் அது இலங்கை அரசபடைகளாகட்டும், புலிகளாகட்டும், ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆகட்டும், இந்திய படைகளாகட்டும், இஸ்லாமிய தீவிரவாதிகளாகட்டும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது, ஒதுக்கப்படவேண்டியது. இல்லாதுவிடின் மனிதம் செத்துவிடும். 

  சட்டங்களின் பிடியில் சிக்காமல் குற்றவாளிகள் தப்பக்கூடும். ஆனால் மனச்சாட்சி உள்ளவர்களை அவர்தம் ஆயுள்காலம் முழுதும் புற்றுநோயாக தாம் செய்த பாவங்கள் அரித்து அரித்து மனதை வாட்டி எடுக்கும்.

  வினை விதைத்தவன் வினை அறுப்பான். வரலாறு புகட்டும் பாடம் இது.

 5. எங்கள் பாடசாலை காலங்களில் இவ்வாறான திமிங்கில வருகை எல்லாம் நடந்து நினைவில்லை. இருபது முப்பது வருடங்களில் எவ்வளவு மாற்றங்கள். சூழல் மனிதனால் எவ்வளவு சீர்குலைந்து விட்டது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுக்கள் ஆகலாம். இனி வேறு என்ன எல்லாம் வருமோ.

 6. ஓரு சினிமா நடிகையின் இத்தனைவிதமான, பல்வேறு கோணங்களில், சூழல்களில் எடுக்கப்பட்ட படங்கள் இதுவரை இப்படி யாழ் கருத்துக்களத்தில் ஒரே தலைப்பின் கீழ் பார்த்தது இல்லை. 

 7. பயங்கரவாதிகளும் அரசாங்கமும் ஒரே மாதிரியாக ஏட்டுக்கு போட்டியாக செயல்படமுடியாது.

  தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களை காக்கவேண்டிய பொறுப்பும் பிரான்ஸ் அரசுக்கு உள்ளது.

  அரச அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டிய தேவை உள்ளது. இது நாளைக்கு நாளன்றைக்கு முடிக்கக்கூடிய பிரச்சனை இல்லை.

  உணர்ச்சிபூர்வமாக நாட்டின் சிறுபான்மையினரை சீண்டக்கூடிய அறிக்கைகள், செயல்பாடுகள் தொடர்ந்தும் தீவிரவாத தாக்குதல்கள் உக்கிரம் பெறவே வழிவகுக்கும்.

  காதும் காதும் வைத்தாற்போல் களையெடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது புத்திசாலித்தனம்.

  • Like 1
 8. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக கருத்து கூறுவதை வீடியோ பதிவு செய்துள்ளார்களா? அல்லது அவர் கூறிய கருத்து திரிவுபடுத்தப்பட்டுள்ளதா? 

 9. ஒன்லைனில் மிரட்டல் விட்டவர் கண்டுபிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும், குற்றம் செய்ததாக கண்டறியப்பட்டால் தண்டிக்கப்படவேண்டும்.

  ஐ.பி.சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்றும் கண்டறியப்பட வேண்டும்.

  நீதித்துறை, காவல்துறையை தற்போது ஐ.பி.சி தனது கையில் எடுத்துள்ளதா?

  • Like 2
 10. இலங்கையில் எத்தனை மருத்துவபீடங்கள் உள்ளன? ஒரு கல்வியாண்டில் ஆக 270 மருத்துவத்துறை அனுமதிகள் மட்டும்தானா? இது போதுமா? இங்கு தமிழ் மாணவர்கள் ஒரு ஐம்பது தேறுமா? 

 11. On 24/10/2020 at 10:29, Ellam Theringjavar said:

  திருகோணமலை, திருமங்கலாய் காட்டுப் பகுதியில்  இருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் ஒன்று அழிவடைந்து கொண்டிருப்பதாக கூறும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், அதனைப் ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

  இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும். அம்மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது.

  சமகால இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் புதுப் பொலிவுடன் காணப்படுகின்றன. அவற்றுள் கணிசமான ஆலயங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் சுதேச மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் பழைய ஆலயங்கள் இருந்த இடங்களில் அல்லது பழைய ஆலயங்களின் பெயரை நினைவுபடுத்தி புதிய இடங்களில் கட்டப்பட்டவையாக உள்ளன. போத்துக்கேயர் ஆட்சிக்கு முன்னர் இம்மாகாணங்களில் இருந்த ஆலயங்கள் பற்றி இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுகள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் என்பவற்றில் பல வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

  1708 களில் வேலுநாய்ச்சியாரின் கணவர் முத்துவடுகானந்த பெரிய உதயதேவர் கோவிலில் வைத்து ஆங்கிலேயரால் கொல்லப்பட்டபின், அவரின் உடலை அடங்கம் செய்து அதேஇடத்தில் ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கையை மீட்பேன் என சபதம் செய்துவிட்டு தனது பெணகுழந்தையோடு வெளியேறுகிறார். எட்டு வருடங்கள் மறைந்துவாழ்கிறார். ஆங்கிலேயரிடம் பிடிபடாமலிருக்க அடிக்கடி தன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்வாராம். இப்படியே ௐருமுறை மன்னர் கைதர் அலிடயிடம் உதவிகேட்டு வந்திருக்கிறார்.

  இராணி ஒரு இராசராசேசுவரியின் பக்தை எனவறிந்து கொண்டு, இராணி அங்கிருக்கும் காலங்களில் வழிபடவென ௐரு அம்மன் கோவிலையே மன்னர் கட்டிக்கொடுதாராம். அத்தோடு ஐம்பொன்னாலான ௐரு அம்மன் சிலையோடு ௐரு திருவாசியையும் பரிசாகக் கொடுத்தாராம்.

  இன்னமும் அந்தக்கோயில் அந்தகோயிலிருக்கிறது .ஐம்பொன்னாலா திருவாசி பாதுகாப்பிலிருக்கிறது.

  மீண்டும் ஆட்சியைப் பிடித்து கொஞ்சக்காலம் ஆட்சிசெய்த பின் மருது சகோதரர்களிடம் ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார்.

  மருது சகோதரர்களின் ஆட்சியில் பல  கோயிலகளைக் கட்டினார்கள்.

  அத்தோடு தேவாலயங்களையும் மசூதிகளையும் கட்டிக்கொடுத்தார்கள்.

  அவற்றிற்கு பல மானியங்களையும் கொடுத்துதவினார்களாம்.

  பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம்.

  உண்மைதான். ஏதும் மாறியிருக்கிதா?

  சமய புடுங்குப்பாடுகள் மாறப்போவது இல்லை. ஆனால் விஞ்ஞானம், தொழில்நுட்பம் உலகையே மாற்றிவிட்டதே.

  விஞ்ஞானம், தொழில்நுட்ப அறிவுகளின் முன்னேற்றம் சுய சிந்தனைகளின் தேடல்களில் உருவாகின. இவற்றுக்கு மதங்களின் பங்களிப்பு என்ன?

  மதங்கள் விஞ்ஞானம், தொழில்நுட்ப விருத்திக்கு ஆதரவாக செயற்பட்டதா அல்லது எதிராக செயற்பட்டதா?

  நாளை சவூதி மன்னருக்கு ஹார்ட் அட்டாக் என்றால் அவரை நவீன வைத்தியசாலைக்குத்தான் உடனடியாக எடுத்து செல்வார்கள். பள்ளிவாசலுக்கு அல்ல. 

  தற்போதைய எமது வாழ்க்கையை செளகரியமாக்கியது விஞ்ஞானம், தொழில்நுட்பமா அல்லது மதங்களா?

  பேச்சு சுதந்திரம், தனி மனித சுதந்திரம் எல்லாம் இல்லாமல் இவை சாத்தியம் இல்லையே.

  • Like 1
 12. On 23/9/2020 at 12:09, Maruthankerny said:

  ஆங்கிலம் பிறக்க முன்னரே 
  பல சமூகங்கள் இதற்கு முகம் கொடுக்க தொடங்கிவிட்டன
  ஆகவே ஆங்கில பதம் எல்லா இடத்திலும் அர்த்தம் கொடுக்காது. 

  உதாரணத்துக்கு வெள்ளைக்காரர் முதன் முதலில் இந்தியா வந்த போதுதான் 
  ஆட்கள் குளிப்பதை பார்த்து இருக்கிறார்கள். அத பின்புதான் ஐரோப்பிய மொழிகளில் 
  குளித்ததலுக்கு உரிய சொல் உருவாகி இருக்கிறது.

  "குளித்தல்" என்பதே பிழையானது சரியானது குளிர்த்தல் குளிர்வித்தல் அல்லது முழுக்கு.
  அழுக்கை போக்குவதை   இரண்டாம் பட்ஷமாகத்தான் எமது முன்னோர்கள் 
  பார்த்து இருக்கிறார்கள் உடல் வெப்பத்தை சீராக்குவதுக்குத்தான் நீர் நிலைகளில் மூழ்கி 
  இருக்கிறார்கள். புறநானுற்று புரட்டுகளிலேயே குளிப்பது பற்றி இருக்கிறது 
  எமது சமூகம் 3000 ஆண்டுகளாக நீராடி வருகிறது.

  இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நாம் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்பதை 
  தொலைப்பதால் மறப்பதால்தான் பல இரசாயனங்களால் எமது குளியலறையை சோடித்து 
  வீணான வில்லங்கங்களை விளக்கு வாங்கி கொள்கிறோம்.    

  விலைக்கு  வாங்கி கொள்கிறோம்.   

  உண்மைதான்.

 13. இன்று சரஸ்வதி பூஜை, நாளை விஜயதசமி. வாழ்த்து பகுதியில் இதற்கு வாழ்த்து தெரிவிக்கலாமா? மூட நம்பிக்கைகள் பற்றி இணைக்கப்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டதாக கருத்துக்களில் மாற்றம் பகுதியில் சில தடவைகள் அவதானித்தேன். எனவே சந்தேகம் தோன்றியது.

  4 hours ago, Nathamuni said:

  நியாயமா கதைச்சம் எண்டால், ஒரு 154 பதிவுக்காரான உங்களுக்கே, இப்படி கேள்வி வருகுதெண்டா, 55,541 பதிவுக்காராருக்கு கை, கால் எப்படி உதறும்?

  மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது என்று யாழ் கருத்துக்களத்துக்கு எதிராக ஒரு கேஸை போடலாம் என்று சொல்ல வாறீங்களோ?

  34 minutes ago, குமாரசாமி said:

  சின்னப்பு:- டேய் குமாரசாமி எப்பிடியடா எல்லா விரலுக்கும் மோதிரம் போட ஏலுது? எங்காலையடா காசு?

  குமாரசாமி:- அது வந்து அண்ணை யாழ்களத்திலை மாடாய் உழைச்சு வந்த பச்சை புள்ளியளை வைச்சு வாங்கினது அண்ணை....!

  Bild

  ஒவ்வொரு நாளும் நீங்கள் சிறுக சிறுக கேகரித்து பொக்கிசமாக போற்றும் பச்சை நாளை ஏதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காணாமலும் போகலாம். எனவே ஸ்கிரீன் சொட் எடுத்து வையுங்கள்.

 14. ஒவொருத்தருக்கு வாழ்க்கையில, தலையுக்கை ஒவ்வொரு விதமான பிரச்சனை. கடவுள்தான் காப்பற்றவேண்டும்.

  ஆமா இந்த பச்சை புள்ளிக்கே இவ்வளவு எகிறி குதிக்கிறீங்களே.. நீங்கள் எல்லாம் எப்படி உந்த வைப்பர், பேஸ்புக், வாட்ஸப், இத்தியாதி பாடசாலை குழுக்கள், ஊர் சங்கங்கள், கோயில் சபைகள்.. இன்னோறன்னவற்றை  சமாளிக்கிறீங்களோ!  

   

  அங்கினைக்க எப்படி அலுப்பு கொடுப்பீங்கள் என்று நினைத்து பார்க்கவே இங்கை எனக்கு கை, கால் உதறுது. 

 15. On 22/10/2020 at 02:39, செண்பகம் said:

  பிரான்ஸ்; ஆசிரியரது இறுதி அஞ்சலி வைபவத்தில் மாணவி வாசித்த உணர்ச்சி பூர்வ கடிதம்!

  • பரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன்

  பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் இறுதி அஞ்சலி வைபவம் நேற்று செபோன் (Sorbonne) பல்கலைக்கழக முற்றத்தில் குடியரசுக் காவலர்களது அரச மரியாதையுடன் நடைபெற்றது.

  1-3-13.jpgபிரான்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள் உட்பட, நானூறு பேர் மட்டுமே இறுதி அஞ்சலி வைபவத்தில் நேரடியாகப் பங்கு கொண்டனர். அங்கு அஞ்சலி உரை நிகழ்த்திய அதிபர் மக்ரோன் உரையின் நடுவே அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டதைக் காணமுடிந்தது.

  முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட், மற்றும் முன்னாள் பிரதமர்கள் உட்பட அரசுப் பிரமுகர்கள் பலர் ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சக ஆசிரியர்கள் மாணவர்களது உரைகள், அஞ்சலிக் கவிதைகள் இடம்பெற்றன.

  “ஆசிரியருக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் மாணவி ஒருத்தி வாசித்த வரிகள் உணர்வுபூர்வமாக அமைந்தது.

  “.. நீ இல்லாமல்…. வறிய ஏழைச் சிறுவனான என்னை நோக்கி நீ நீட்டிய அன்புக்கரங்கள் இல்லாமல்… உனது போதனைகள் இல்லாமல்……..

  உன்னுடைய முன்னுதாரணங்கள் இல்லாமல்… ஒன்றுமே சாத்தியமாகி இருக்கமுடியாது…”

  பிரெஞ்சு தத்துவாசிரியர் Albert Camus 1957 நவம்பர் 19 அன்று 44 ஆவது வயதில் தனக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் தனது முதல் ஆசிரியரை நினைவு கூர்ந்து எழுதிய வரிகள் இவை.

  தனது சிறுபராயத்தில் அல்ஜியர்சில் வறுமையின் பிடியில் கல்வி கற்ற சமயத்தில் கடும் போட்டி நிறைந்த பரீட்சைகள், புலமைப் பரிசில்கள் போன்றவற்றை வெற்றி கொள்ளக் காரணமாக விளங்கிய Germain என்ற தனது ஆசிரியரைப் பெருமைப்படுத்தியே இந்த வரிகளை தத்துவாசிரியர் Albert Camus அன்று எழுதியிருந்தார்.

  ” இக் கணத்தில் எனது தாயாருக்கு அடுத்த படியாக எனது எண்ணம் உங்களிடமே இருக்கிறது” என்று தொடங்கி தனது உயர்வுக்குக் காரணமான ஆசிரியரைப் புகழ்ந்து அவர் எழுதிய அந்தக் கடிதத்தின் வரிகளையே இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி வைபவத்தில் ஆசிரியர் சாமுவேல் பட்டி அவர்களது நினைவாக கல்லூரி மாணவி ஒருத்தி வாசித்தார்.

  ஆசிரியர் சாமுவேல் பட்டிக்கு பிரான்ஸின் அதியுயர் விருதான “Légion d’honneur” அஞ்சலி நிகழ்வில் வைத்து அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

  ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் இன்றிரவு அணைக்கப்பட்டன.

   

  https://thinakkural.lk/article/81938

  கூகிழில் தேடினாலே எல்லாம் கிடைக்கின்றன. ஆசிரியர் சமயோசிதமாக நடக்கவில்லை. முஸ்லீம் அமைப்புக்கள் ஆசிரியர் படுகொலை பற்றி என்ன கூறுகின்றன? 

  பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம். பிரான்ஸ் பல விசயங்களில் உலகத்துக்கு முன்னோடியான ஒரு நாடு. இந்த அச்சுறுத்தல் சம்பவத்தை அந்த நாடு ஒரு சவாலாகவே எடுக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவிகளே. 

 16. விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!

  • Like 1
 17. சோசல் மீடியாவுக்கு பிரச்சனைகளை கொண்டு வருவது தீர்வுக்கு பதிலாக மேலதிக பிரச்சனைகளை சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தலாம். இப்போது எல்லார் கையிலும் ஸ்மார்ட் போன். வட்ஸாப் தொடக்கம் பேஸ்புக், யூரியூப் வரை குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இளையவர்கள் குறுக்கு வழிமுறைகளை தேடினாலும் பெரியவர்கள் தீக்குச்சி போல் அல்லாமல் கொஞ்சம் நிதானம் கடைப்பிடிக்கலாம்.  

   

  அண்மையில் பிரான்சில் ஆசிரியர் ஒருவரின் படுகொலையும் சோசல் மீடியாவின் தவறான பாவனையை காண்பிக்கின்றது.

   

  மீடியா என்பது தீயை கொளுத்தி போடும் இடம் அல்ல.

 18. வைத்திய நிபுணருக்கு பாராட்டுக்கள்.

  நான் அறிந்தேன் இப்போது யாழ் போதனா வைத்தியசாலையே நவீன மருததுவ வசதிகள், பொறிமுறைகளுடன் வெளிநாட்டு வைத்தியசாலைகள் போல் முன்னேறிவிட்டது என்று.

 19. பெற்றோரின் சொத்தை எதிர் பார்ப்பவர்கள் நிதானமாய்த்தான் முடிவு எடுப்பார்கள்.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.